Friday, March 20, 2015

மன அழுத்தம்

மன அழுத்தம்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன அழுத்தம் என்பது மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும்[1]. இந்த மன அழுத்தம் என்ற பதம் உயிரியல் மற்றும் உளவியல் அடிப்படையில் முதலில் 1930 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் அண்மைக் காலங்களில் இதுபற்றி மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், மன, பழக்கவழக்கம் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக எச்சரிக்கை உணர்வு, அதிகரிக்கும் அதிரினலின் சுரப்பு, அதிகரிக்கும் சோர்வு, எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல்தசைகளில் ஏற்படும் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், அதிகரிக்கும் இதயத் துடிப்புதலைவலி போன்ற சில உடலியங்கியல்பிரச்சனைகளும் காணப்படும்[2].

சொல்லியல் ஆரம்பம்[தொகு]

Hans Selye என்ற உட்சுரப்பியியலாளரால் முதன் முதலில் உயிரியலில் இந்த மன அழுத்தம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது[3]. பின்னர் எந்தவொரு தாக்கத்திற்கும் தவறான ஒரு உடற்றொழிலியல் எதிர் விளைவு கொடுக்கப்படும் நிலையை காட்டுவதாக இந்த பதத்தை விரிவுபடுத்தினார். மன அழுத்தத்தைத் தூண்டக்கூடிய காரணியினால், மிதமான எரிச்சல் அல்லது கோபம் கொள்ளும் நிலை தொடங்கி, மிகவும் தீவிரமான தொழிற்பட முடியாத நிலை வரையான பாதிப்பு ஏற்படுவதால், மன, உடல் நலத்தில் செயல் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறினார்.

அறிகுறிகள்[தொகு]

மன அழுத்தமானது வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதுடன், அறிகுறிகளும் வேறுபடும். இந்த அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நலம் பாதிப்படைவதுடன், மனச்சோர்வும் ஏற்படும்.
  • மனக்கவலை
  • அதிகாலை தூக்கமின்மை
  • மிகுந்த சோர்வு
  • பசியின்மை
  • எடை குறைவு
  • அடிக்கடி அழுதல்
  • தன்னம்பிக்கையின்மை
  • எதிலும் ஆர்வமின்மை
  • அதிகமான குற்ற உணர்வு
  • அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்
மனச்சிதைவு நோய் (Schizophrenia)
  • தொடர் துக்கமின்மை
  • தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்
  • தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுதல்
  • காதில் மாயக்குரல்கள் கேட்டல்
  • அதிகமாக சந்தேகப்படுதல்
  • அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
  • சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
  • உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்
மனப்பதட்ட நோய் - (Anxiety Disorder)
  • நெஞ்சுப் படபடப்பு
  • கை நடுக்கம்
  • அதிகமாக வியர்த்தல்
  • நெஞ்சுவலி
  • எதிலும் கவனம் செலுத்த இயலாமை
  • தூக்கக் குறைவு
  • அடிக்கடி எரிச்சல் அடைதல்
  • எதிர்மறையான எண்ணங்கள்
பய நோய் (Phobia)
  • தனிமையில் இருக்க பயம்
  • கூட்டத்தினைக் கண்டுபயம்
  • புதிய நபர்களை எதிர்கொள்ளப் பயம்
  • உயரமான இடங்களுக்குச் சென்றால் பயம்
  • மூடிய இடங்களைக் கண்டு பயம்
  • இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க்க நினைத்தும் இயலாத நிலை
  • எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய்
  • திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும், அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.
  • ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது
  • திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது
உதாரணமாக:
  • திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்
  • பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது
  • பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது
  • ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது.
  • தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனப்பதற்றமும் ஏற்படுவது.
  • குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.
ஆளுமை கோளாறுகள் (Personality Disorders)
  • அடிக்கடி கோபம் கொள்ளுதல்
  • குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்
  • மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்
  • உடல் உறுப்புகளைத் தானே காயப்படுத்திக் கொள்ளல்
  • கலவரங்களில் ஈடுபடுதல்
  • சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்
  • மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்
  • பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமை
  • எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்
  • எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்
பெண்களும் மன அழுத்தங்களும்
மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக
  • அதிக எரிச்சல்
  • கோபம்
  • சோர்வு
  • பதற்றம்
  • இவை, மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும்.
கர்பிணி பெண்களும் மனநோய்களும்
  • குழந்தைகளுக்கு பால் ஊட்டாமை
  • அடிக்கடி அழுதல்
  • தூக்கமின்மை
  • பசியின்மை
  • தற்கொலை எண்ணங்கள்
  • தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல்
முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்
  • தொடர் தூக்கமின்மை
  • மறதி
  • பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்
  • நாள், கிழமை மறந்து விடுவது
  • உறவினர், நண்பர்களை மறந்து விடுவது
  • அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது
  • பசியின்மை
இதர மனநோய்கள்
  • சாமியாட்டம்
  • புகை பிடித்தல்
  • மது அருந்துதல்
  • கணவன் மனைவி பிரச்சனைகள்
  • மனரீதியான பாலியல் பிரச்சினைகள்
குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்
  • குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்
  • படிப்பில் கவனம் குறைதல்
  • அதிக கோபம் கொள்ளுதல்
  • அடிக்கடி எரிச்சல் அடைதல்
  • படுக்கையில் சிறுநீர் கழித்தல்
  • மிக மிக அதிக சுறுசுறுப்போடு, ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)
  • கீழ்படியாமை
  • அடிக்கடி பொய் சொல்வது
  • திருடுவது
  • குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell)
  • 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)
  • மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)
  • நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)
  • குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Seperation anxiety disorder)

No comments:

Post a Comment