Monday, March 30, 2015

நம் தாய்மொழியாம் தமிழை தவிர

உண்மையான செல்வம் என்பது என்ன ? குறைவிலா உணவு , ஆரோக்கியமான உடல் நலம் , பெரிய வீடு , மகிழுந்து , நகை , கட்டுக்கட்டாய் பணம் , என ஏராளமானவற்றை குறிப்போம் , ஆனால் திருஞானசம்பந்தர் செல்வம் என்பது என்ன என்பதை மிக அழகாக விளக்குகிறார் .
திருஞானசம்பந்தர் தேவாரம்
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
செல்வ வளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச் செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.
இப்பபாடலில் செல்வம் என்ற வார்த்தையை 7 முறை பயன் படுத்தியுள்ளார் . இந்தளவு நுட்பங்கள் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழை தவிர வேறு மொழிகளில் இல்லை . தமிழையும் தமிழ் வேதங்களையும் கொண்டாடுவோம் 

No comments:

Post a Comment