நீர் மேல் நடந்தாலும்....
.
.
நமக்கு ஒருவரைப் பிடித்துவிட்டால் அவர்கள் செய்யும் சாதாரணமான செயல்களும் செயற்கரிய செயல்களாகத் தோன்றுவதும் அவற்றை நாம் விழுந்து விழுந்து பாராட்டுவதும் நடக்கிறது. நம் வாழ்க்கையிலும் அதனைப் பார்க்கலாம்; அதே நேரத்தில் நமக்கு ஒருவரைப் பிடிக்காவிட்டால் அவர்கள் செயற்கரிய செய்தாலும் அந்தச் செயல்களிலும் ஏதேனும் குறை கண்டுபிடித்து அதனைப் பெரிதாகச் சொல்கிறோம். இதனையும் நம் வாழ்க்கையிலும் பார்க்கலாம்.
.
ஒரு ஊரில் ஒரு குரு ஒருவர் இருந்தார். எண்பெரும் சித்திகளையும் அடைந்து எல்லா வல்லமையும் கொண்டவராக இருந்தார். அவரிடம் ஐந்து சீடர்கள் இருந்தார்கள். அந்த குரு ஒரே நேரத்தில் ஐவருக்கு மேல் சீடராகக் கொள்வதில்லை என்று இருப்பவர். ஒரு சீடர் எல்லா கல்விகளிலும் தேர்ந்து குருவிடம் இருந்து விடை பெற்றுச் சென்று விட்டார். அவர் சென்ற சிறிது நாட்களிலேயே ஒரு பெண் வந்து குருவை வணங்கி அவருடைய சீடராக இருக்க வேண்டினார். குருவும் அந்தப் பெண்ணைத் தகுந்த சோதனைகள் எல்லாம் செய்து பின்னர் சீடராக ஏற்றுக் கொண்டார்.
.
முன்பிருந்த நான்கு ஆண் சீடர்களுக்கும் இது பிடிக்கவில்லை. 'ஒரு பெண் நம் குருவிடம் சீடராக இருப்பதா? இவளுக்கு ஆன்மிகத்தைப் பற்றி என்ன தெரியும்? சாஸ்திரம் இதனை ஒப்புக் கொள்ளுமா?' என்றெல்லாம் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். ஆனால் குருவின் முடிவை மீற முடியாமல் அதே நேரத்தில் அந்தப் பெண்ணை எல்லா விதத்திலும் ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள்.
.
ஒரு முறை பக்கத்து ஊரில் ஒரு ஆன்மிகத் திருவிழா நடந்தது. அதற்கு குரு தன் சீடர்களுடன் செல்ல முடிவு செய்தார். பெண் சீடரிடம் சொல்லாமல் மற்ற நான்கு சீடர்களும் குருவுடன் சென்றனர். அந்த ஊருக்குச் செல்ல ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும். ஆற்றங்கரையை அடைந்தால் பெண் சீடர் எல்லோருக்கும் முன்னால் வந்து அங்கே படகில் ஏறி அமர்ந்திருக்கிறார். வேண்டா வெறுப்பாக எல்லா சீடர்களும் அந்தப் படகில் ஏறினார்கள்.
.
படகு பாதி தூரம் சென்ற பிறகு நின்று விட்டது. என்ன காரணம் என்று படகுக் காரரைக் கேட்டபோது எரிபொருள் (டீசல்) தீர்ந்துவிட்டது என்றார். உடனே பெண் 'இதோ நான் போய் வாங்கி வருகிறேன்' என்று சொல்லி ஆற்றின் மேல் நடந்து செல்லத் தொடங்கினார்.
.
அதனைக் கண்டு திகைத்தார்கள் நான்கு சீடர்களும். இவ்வளவு காலம் குருவிடம் கற்றும் இந்த வித்தையை நமக்கு குரு இன்னும் சொல்லித் தரவில்லையே. இந்தப் பெண் மட்டும் இவ்வளவு விரைவில் கற்றுக் கொண்டாளே என்று. ஆனால் சில வினாடிகளில் சுதாரித்துக் கொண்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?
.
'பார்த்தீர்களா இந்தப் பெண்ணை? தண்ணீரில் நடக்கிறாள். ஹும். இவளுக்கு நீச்சல் கூட தெரியவில்லையே'

No comments:
Post a Comment