Showing posts with label MLM Sales training company in coimbatore. Show all posts
Showing posts with label MLM Sales training company in coimbatore. Show all posts

Thursday, March 10, 2016

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில்ஒருவரான "வாரன் பபேட்" நமக்கு கூறும்அறிவுரை.....*1. ஒரு சம்பாத்தியம் மட்டும் போதாது. இரண்டாவது வருமானம் வரும் வகையில் ஏதாவது ஏற்பாடு செய்து கொள்.*(ஒன்று நஷ்டமானாலும், மற்றொன்று நம்மை காப்பாற்றும்.)*2. தேவையில்லாத பொருள்களை வாங்கினால், விரைவிலேயே தேவையுள்ள அனைத்தையும் விற்க நேரிடும்.*(ஆடம்பரத்தை தவிர்த்திடுங்கள். தேவையில்லாத ஆடம்பரம் நமது சந்ததியைதெருவில் நிறுத்திவிடும்.)*3.சேமித்த பிறகு இருக்கும் மீதத்தை தான் செலவு செய்ய வேண்டும். செலவு செய்த பிறகு இருக்கும் மீதத்தை சேமிக்கக்கூடாது.*(சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானது.)*4. ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது....*(எதிலும் முன்னெச்சரிக்கைஅவசியம்.)*5. அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே...*(நஷ்டம் ஏற்பட்டாலும், வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு இருக்ககூடாது என்பதற்கான சிந்தனை.)*6. நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்....*(மிக அவசியமான ஒன்று. எல்லோரையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது.)-------------------------இவர்களிடம் கேட்டுப் பாருங்கள்... நேரத்தின் மதிப்பை சொல்வார்கள்...!► ஒரு மில்லி செகண்டின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வாங்கியவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு செகண்டின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு நிமிடத்தின் மதிப்பை தூக்கிலடப் படும் கைதியைக் கேட்டால்தெரியும்...!► ஒரு மணி நேரத்தின் மதிப்பை உயிர் காக்க போராடும் மருத்துவரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு நாளின் மதிப்பை அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிளாலரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு வாரத்தின் மதிப்பை வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியரைக் கேட்டால் தெரியும்...!► ஒரு மாதத்தின் மதிப்பை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயைக் கேட்டால் தெரியும்...!► ஒரு வருடத்தின் மதிப்பை தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைக் கேட்டால் தெரியும்...!>>நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்.. ஓடுவது முள் அல்ல..! உன் வாழ்க்கை....

Monday, December 28, 2015

Awesomee ......A story in one of the schools in Chennai where admission is considered impossible!!!

Awesomee ......A story in one of the schools in Chennai where admission is considered impossible!!!

To get UKG admission 

The child could not understand why they brought her there..

When we all were standing, the school principal started to converse with the child....yes...in English only! This is one of the most memorable interview I have ever witnessed in my life..
Here goes..

"What's your name?"

"Sarithra"

"Good. Tell me something you know"

"I know many things. Tell me what you want...!"

Alas, there is no better point for not getting the admission!

Sarithra's mother was trying to make up the situation but the principal stopped her..

Turning to child, she said.. "Tell any rhyme or story which you know.."

Again,"Which one you want.. Rhyme or Story!?"

"Ok. Plz tell me a story.."

"Do uou want to hear what I studied or what I wrote..!?"

Taken to surprise, she asked "Oh! you write stories...???"

"Why should I not write..?"

Now even I was taken aback But she was impressed with the answer. She ( including us) would have not heard such a story in our life...

Ok, tell me story which you have written-?

Sarithra said "Ravanan kidnapped Sita & took her to Srilanka"

The opening scene failed to impress but still she encouraged the child to continue..

"Rama asked Hanumans help to rescue Sita. Hanuman too agreed to help Rama ..."

"Then?"

"Now, Hanuman called his friend Spider man." No one expected this twist in the story!!

"Why?"

"Because there are lot of mountains between India and Srilanka.. but if we have Spiderman we can go easily with his rope..."

"But Hanuman can fly isn't it.. ?"

"Yes. But he is having Sanjeevi Mountain on one hand so he cannot fly very fast.!"

All is quiet, after a while Sarithra asked "Should I continue or not?.".

"Ok plz continue!"

"Hanuman and Spiderman flew to Srilanka and rescued Sita. Sita said Thanks to both!"

"Why"

"When you are helped you should say Thanks!" So "Hanuman is now called Hulk..."

All were surprised.She realized our curiosity and said " Now Sita is there, so to take her safely back to Rama she called Hulk"

"What??? "Hanuman can carry Sita right?"

"Yes. But he has Sanjeevi Mountain in one hand and has to hold spider man on the other"

No one could control thier smiles. " So when they all started to India they met my friend Akshay! "

"How come Akshay there now?"

"Because its my story and I can bring any one there!"

The principal didn't get angry but waited for the next twist

Then all started to India and landed at Chennai Velechery bus stop! 

Now I asked,"Why they have landed In Velechery bus stop?

"Because they forgot the way..& Hulk got an idea and called Dora!"

I came to know about Dora only there...!

"Dora came and she took Sita to Velechery Venus Colony...that's all!" 

She finished the story with a smile.. 😀

The principal asks "Why venus Colony...?"

"Because sita is there & iam Sita!!!"

The principal was impressed and embraced the child. She has been admitted in UKG & was gifted with a Dora doll...
😂😂😂

Kids can really amaze... but we clip their wings (creativity) expecting them to do things as we see it right & not from their viewpoint..

Let's give every child freedom to do their own thing & watch their dreams come true..

Saturday, July 18, 2015

ஒரு கேள்வி ஏற்படுத்தும் மாற்றம்

நம் இன்றைய வாழ்க்கை நேற்றைய சிந்தனை மற்றும் செயல்களின் விளைவு. நேற்று என்ன விதைத்தோம் என்பதை விவரிக்கும் அறுவடையே இன்றைய வாழ்க்கை. எப்படி இருந்திருக்கிறோம், எப்படி வாழ்ந்திருக்கிறோம் என்பதை நாம் சொல்லாமலேயே நம் வாழ்க்கை உரத்துச் சொல்லும்.
ஒரு கேள்வி ஏற்படுத்தும் மாற்றம்
விதைப்பவன் யார் கண்ணிற்கும் தெரிவதில்லை என்று நினைத்து கோணல் மாணலாக இன்று விதைத்துச் செல்லலாம். ஆனால் நாளை வளரும் பயிர் அதைக் கண்டிப்பாகக் காண்பித்துக் கொடுக்கும்.
நம் வாழ்க்கைக்கு நாமே பிரம்மாக்கள். நமக்கு அதை எப்படியும் உருவாக்கும் சக்தி இருக்கிறது. ஆனால் உருவாக்கிய பின் அதை நாமே சந்தித்தாக வேண்டும். நாமே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். நாம் உருவாக்கியவைகளிடமிருந்து ஓடி ஒளியும் வசதி நமக்கு அளிக்கப்படவில்லை. எனவே நாம் நம் வாழ்க்கையை எப்படி உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதில் மிக அதிகக் கவனம் வேண்டும்.
நம் நாட்டில் ‘கர்மா’ என்ற வார்த்தை மிகப் பிரபலம். அந்த வார்த்தையை இப்போதெல்லாம் மேலை நாடுகளிலும் அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கர்மா என்பது செயல் என்பது மட்டுமல்ல. விளைவைத் தரும் செயல் என்று அதற்கு விளக்கம் தருவது மிகவும் பொருத்தமாக இருக்கும். எந்த செயலும் விளைவைத் தராமல் இருப்பதில்லை என்பதை நினைவு படுத்தும் சொல்லாக ‘கர்மா’வைச் சொல்லலாம்.
ஒருவன் இன்று தீய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சிலர் ‘எல்லாம் அவன் கர்மா’ என்று சொல்வதுண்டு. நேற்றைய செயலின் விளைவை இன்று அனுபவிக்கிறான் என்பது பொருள்.
என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் நேற்றைய கர்மாவை இன்று அனுபவிக்காமல் தடுத்து விட முடியாது என்பது மாபெரும் உண்மை. இது சிலருக்கு வருத்தத்தை அளித்தாலும் இதில் மறைந்திருக்கும் இன்னொரு உண்மை எவரையும் ஆசுவாசப்படுத்தும். நாளை நன்மையைப் பெற வேண்டுமென்றால் அதற்கேற்ப நல்ல செயல்களை நல்ல முறையில் இன்று செய்தால் போதும் என்பது தான் அது. நாளை எந்த விதமான பலன்கள் நம் வாழ்க்கையில் வர வேண்டும் என்று நினைக்கிறோமோ அதற்கேற்ப இன்றைய செயல்கள் அமைய வேண்டும்.
உங்களது இன்றைய வாழ்க்கை முறை, சிந்தனை, செயல்கள் எல்லாவற்றையும் அமைதியாக அலசுங்கள். இதே போல் தொடர்ந்து அவை இருந்தால் இனி ஐந்து வருடம் கழித்து நீங்கள் எப்படியிருப்பீர்கள் என்று என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சாதாரண அறிவுத்திறன் இருக்கும் மனிதர்களுக்கு இப்படியே போகும் வாழ்க்கை ஓட்டம் எங்கு போய் முடியும் என்ற கேள்விக்குப் பதிலைப் பெறுவது கஷ்டமல்ல. கிடைக்கும் பதில் உங்களுக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறதாக இருந்தால் மிக நல்லது. இப்படியே வாழ்க்கையைத் தொடருங்கள். (இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படிக்க வேண்டிய அவசியம் இனி உங்களுக்கு இல்லை.)
ஆனால் பெரும்பாலானோருக்குக் கிடைக்கிற பதில் திருப்திகரமாக இருக்காது. இந்தக் கேள்வி பலரை ஆழ்ந்த உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பக் கூடும். பலரும் வாழ்க்கை ஒரு நாள் திருப்திகரமாக மாறும் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார்களே ஒழிய அது எப்படி நடக்கும் என்கிற ஞானமோ, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையோ அவர்களிடம் இருப்பதில்லை. யாராவது மாற்றினால் ஒழியத் தானாக எதுவும் மாறுவதில்லை என்கிற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. மற்றவர்களாகப் பார்த்து மாற்றப்படும் வாழ்க்கை நம் வாழ்க்கை நாம் நினைத்தபடி இருக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம்.
இப்போதைய போக்கிலேயே உங்கள் எதிர்காலமும் இருக்கப் போவது உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் நீங்கள் இன்றே மாற ஆரம்பிப்பது நல்லது. உங்களுக்குப் பிடித்த நிலைமைக்கு உங்களைக் கூட்டிக் கொண்டு போகும் கர்மாக்களில் ஈடுபடுவது அவசியம்.
உடல்நிலை, மனநிலை, பொருளாதாரநிலை இம்மூன்றிலும் நீங்கள் இனி ஐந்து வருடங்கள் கழித்து எப்படி இருந்தால் நிறைவாக இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அந்த மூன்றிலும் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதை உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுங்கள். இனி அந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கத் தேவையான செயல்களைப் புரிவதில் முழுமனதோடு ஈடுபடுங்கள்.
நீங்கள் நினைத்தபடி உங்கள் வாழ்க்கை முழுவதுமாக மாறும் நாள் வரை நீங்கள் தினமும் ஒரு கேள்வியை உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். “நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையும், நான் செய்து கொண்டிருக்கும் செயல்களும் என்னை என் இலக்குகள் நோக்கி அழைத்துச் செல்பவையாக இருக்கின்றனவா?” மாற வேண்டும் என்ற எண்ணம் ஆழமாகவும், உண்மையாகவும் இருக்கும் வரை இந்த ஒரு கேள்வி தேவையான சிறு சிறு மாற்றங்களை உங்கள் வாழ்வில் ஏற்படுத்தி பொறுப்புடன் வாழ வைக்கும். சிறப்பாகச் செயல்பட வைக்கும். கடைசியில் நீங்கள் ஆசைப்பட்ட பெரும் மாற்றத்தை வாழ்வில் ஏற்படுத்திக் கொடுக்கும்.

அதுவரை இந்தக் கேள்வியை தினமும் கேட்டுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள்.

Thursday, July 16, 2015

பொய் அறிவுஇன்றி மெய் அறிவால் ஈசனை வெகுவிரைவில் அடைந்த கண்ணப்ப நாயனார்

பொய் அறிவுஇன்றி மெய் அறிவால் ஈசனை வெகுவிரைவில் அடைந்த கண்ணப்ப நாயனார் ( கொஞ்சம் பெரிய பதிவு, படித்து இன்புற விண்ணப்பம் )
திண்ணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாட சென்றபோது, காளத்தி மலையில் குடுமித் தேவர் என்ற சிவலிங்கத்தினை கண்டார். அந்நாள் முதல் வாயில் நீர்சுமந்து வந்து அபிசேகம் செய்தும், தலையில் சொருகி வந்த மலர், இலைகளால் அர்சனை செய்தும், பக்குவப்பட்ட பன்றி இறைச்சியை படைத்தும் வந்தார். இதைக்கண்டு ஆகமவிதிப்படி குடுமித்தேவரை வணங்கும் சிவ கோசரியார் எனும் பிராமணர் மனம் வருந்தி இறைவனிடம் முறையிட்டார். கண்ணப்பரின் அன்பினை சிவகோசரியாருக்கு உணர்த்த திண்ணார் வரும் வேளையில் சிவலிங்கத்தின் வலக்கண்ணில் குருதி வருமாறு செய்தார் சிவபெருமான். அதைக் வருவதைக் கண்ட திண்ணனார், பச்சிலை இட்டு மருத்துவம் பார்த்தார். அதன்பொழுதும் அடங்காத குருதியினை நிறுத்த, தன் கண்களில் ஒன்றினை அம்பினால் அகழ்ந்து இலிங்கத்தின் கண்ணிருக்கும் இடத்தில் இட்டார். இலிங்கத்தின் வலக்கண்ணில் வரும் குருதி நின்று, இடக்கண்ணில் குருதி வழியத்தொடங்கியது, திண்ணனார் தனது இடக்கண்ணையும் அகழ்ந்தெடுக்க திட்டமிட்டு, லிங்கத்தின் இடக்கண் இருக்கும் இடத்தினை தன்காலொன்றால் அடையாளம் செய்தார். பின் இடக்கண்ணை அகழ்ந்தெடுக்க எத்தனித்தபொழுது சிவபெருமான் நில்லு கண்ணப்ப என மும்முறை கூறி தடுத்தருளினார். கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர். வேடுவ குல மைந்தன் பொதப்பி நாட்டிலுள்ள ஓர் ஊர் உடுப்பூர். இவ்வூரில் வேடுவ சாதியினர் வாழ்வர். இவர்களுள் அதிபதியாக நாகனார் என்பவர் இருந்தார். நாகனாரின் மனைவியார் தத்தையார். இவ்விருவரும் முருகப் பெருமானைக் கும்பிட்டு ஓர் திண்ணிய ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்குத் திண்ணனார் என்ற நாமஞ் சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். திண்ணனார் வளர்பிறைபோல் வளர்ந்து பதினாறு வயதுப் பருவத்தை அடைந்தார். அவ்வேளை நாகனாரும் முதுமையுற்று முன்புப்போல் வேட்டைத் தொழிலாற்றும் வலிமையற்றவரானார். ஆதலால் தன் மைந்தனுக்கு உடைத்தோலும் சுரிகையும் அளித்து வேடுவ குல முதலியாக்கினார். முன்னைத்தவத்தின் பயன் குலமுதலியாகிய திண்ணனார் வேட்டைத் தொழில் தாழ்த்தியமையால் காட்டிற் பெருகிய கொடிய மிருகங்களை அழித்தற் பொருட்டு "கன்னி வேட்டை"க்குச் செல்ல ஆயத்தமானார். அவருடன் வேட்டுவ மறவரெல்லாம் திரண்டனர். கடி நாய்கள் முன்னே பாய்ந்து சென்றன. வேட்டுவரோடி வேட்டைக் காட்டை வளைத்து உட்புகுந்து பல்வேறு ஓசைகளை எழுப்பி வேட்டையாடலாயினர். கரடி, புலி, சிங்கம் ஆகியன தாளறுவனவும், தலைதுணிவனவும், குடர்சரிவனவுமாயின. அவ்வேளையில் கடியதோர் பன்றி வேட்டைக் காட்டினின்றும் வெளியேறி ஓடலாயிற்று. அதனைக் கண்ணுற்ற திண்ணனார் தன் அடிவழியே முடுக்கிய கடுவிசையில் ஓடலாயினார். நாணன், காடன் என்போர் அவரைப் பிந்தொடர்ந்து சென்றனர். ஓடி இளைத்து ஒரு மரச் சூழலில் ஒதுங்கி நின்ற பன்றியைத் திண்ணனார் தம் சுரிகையைச் சேர்ந்த நாணனும் காடனும் இப்பன்றியைத் தின்று பசியாறி நீரும் குடிப்போம் என்றனர். திண்ணனார் "இக்காட்டில் நீர் எங்கே உள்ளது? எனக் கேட்டார். நாணன் ஒரு தேக்குமரத்தைக் காட்டி அம்மரத்துக்கப்பால் ஒரு குன்றின் அயலில் குளிர்ந்த பொன்முகலி ஆறு பாய்கின்றது எனக் கூறினான். பன்றியைக் காவிக்கொண்டு அவ்விடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். வழியில் திருக்காளத்தி மலை திண்ணனார் கண்ணில் பட்டது. பட்டதும் அம்மலைக்குச் செல்வோம் என்றார். 'மலைக்குச் சென்றால் நல்ல காட்சி காணலாம்; அங்கே குடுமித்தேவர் இருப்பார்; கும்பிடலாம்' என நாணன் சொன்னான். மலையை நெருங்கிச் செல்ல திண்ணாருக்கு இனம்புரியாததோர் சுக உணர்வு தோன்றியது. அவருக்குத் தன்மேலிருந்து பாரம் போவது போன்ற உணர்ச்சி பெருகியது. மனதில் புதிரானதோர் உணர்வு அரும்பலாயிற்று. தேவர் இருக்கும் இடம் செல்வோம் என விரைந்து நடந்தார். பொன்முகலி ஆற்றை அடைந்ததும், காடனிடன் தீ உண்டுபண்ணுமாறு கூறித் தாம் நாணனுடன் சென்றார். ஆற்றில் தெளிந்த தீர்த்த நீர் அவர் சிந்தை தெளியச் செய்தது. குடுமித்தேவரிடம் பெருகும் அன்பின் சுகமே தனக்கேற்பட்ட 'புதிரான' சுக உணர்வு என்ற விளக்கம் ஏற்படலாயிற்று. மலைச்சாரலை அடைந்த போது உச்சிக்காலமாயிருந்தது. அவ்வேளையில் தேவர்கள் வந்து காளத்திநாதரை வழிபடுவர். அவ்வாறு வழிபடும்போது தேவதுந்துபி எழுதும். அவ்வாத்திய ஓசை திண்ணனாருக்குக் கேட்டது. "இது என்ன இசை" என்று கேட்டார். நாணனுக்கோ அது மலைப்பெருந்தேன்வண்டின் இரைச்சலாகவே தோன்றியது. திண்ணனாரது முன்னைத் தவத்தின்பயன் முன்னி எழ முடிவிலா அன்பு பெருகலாயிற்று. அவ்வன்பும் நாணனும் முன்பு செல்லத் தான் மலை ஏறிச் சென்றார். தத்துவப் படிகளைத் தாண்டி சிவதத்துவத்தைச் சாரும் சிவஞானியாரைப்போலச் சென்றுகொண்டுருந்தார். இவ்வண்ணம் சென்றுகொண்டிருந்த அன்பாளர் காண்பதற்கு முன்னமே காளத்திநாதரின் அருள் திருநோக்கம் திண்ணனார் மேற் பதிந்தது. திண்ணனார் முன்னைச் சார்பு முற்றாய் நீங்கியது. அவர் ஒப்பற்ற அன்புருவானார். அன்புருவான திண்ணனார் மலைக்கொழுந்தாயுள்ள தேவரைக் கண்டார். அன்பின் வேகத்தால் விரைந்து ஓடிச் சென்று தழுவினார். மோந்தார், ஐயர் அகப்பட்டுக்கொண்டார் என ஆனந்தப்பட்டார். "கரடி, சிங்கம், திரியும் காட்டில் இப்படித் தனியாக இருப்பதோ" என்று இரங்கினார். இரங்கி நின்ற திண்ணனார் கண்ணில் தேவரின் உச்சியில் பச்சிலை, பூ என்பன தெரிந்தன. "நான் இது அறிவேன்; முன்னர் உன் தந்தையாரோடு வந்த ஒருநாள் பார்ப்பான் ஒருவன் குளிர் நீராட்டி" இலையும் பூவும் இட்டு உணவு படைத்து, சில சொற்களும் சொல்லி நின்றான்; இன்றும் அவனே இச்செய்கை செய்தான்" என நாணன் கூறினான். "இதுவே திருக்காளத்தி நாயனாருக்கு இனிய செய்கை" என்று அதைக் கடைப்பிடிக்கத் திண்ணப்பர் ஆசை கொண்டார். நாயனார் பசியோடிருக்கின்றாரே; இவரிற்கு இறைச்சி கொண்டுவரவேண்டுமென விரும்பினார். ஆனால் அவரைத் தனியே விட்டுச் செல்லவும் மனம் ஏவவில்லை. சற்றுநேரம் சஞ்சலப் பட்டபின் துணிவுகொண்டு கைகூப் ப்பித் தொழுதுவிட்டு வில்லெடுத்து விரைவுடன் இறங்கிச் சென்றார். பன்றி கிடைக்கும் இடத்தை அடைந்து உறுப்பரிந்து வைத்திருந்த இறைச்சியை தீயில் வதக்கி, வாயில் சுவை பார்த்து இனியனவெல்லாம் கல்லையிற் சேர்த்தார். இடையில் காடன் ஏதேதோ வினவினான். அவையெல்லாம் திண்ணனார் காதில் விழவேயில்லை. நாணன், "குடுமித் தேவரிடத்து வங்கினைப் பற்றி மீளாவல்லுடும்பென்ன நின்ற" அவர்தம் நிலையை காடனுக்கு எடுத்துக் கூறினான். இருவரும் இனிச் செயலில்லை; நாகனாரிடம் செல்வோம் எனச் சென்றனர். திண்ணப்பார் கல்லையிற் சேர்த்த ஊனமுது ஓர் கையிலும், வாயில் பொன்முகலி ஆற்று மஞ்சன நீரும், தலையிற் பள்ளித் தாமமும் (பூக்கொத்து) ஆக நாயனார் மிக்க பசியோடிருப்பாரென இரங்கியவராய் விரைந்து வந்தார். வந்து குடுமித்தேவரின் குடுமியில் இருந்த பூக்களைத் தம் செருப்பணிந்த காலினால் துடைத்தார். வாயின் நீரினால் அன்பு உமிழ்வார் போல் அபிடேகமாடினார். தலையிலிருந்த பூங்கொத்துக்களை தேவர் குடுமியில் சூட்டினார். கல்லையிலிருந்து ஊனமுதைத் தேவரின் முன்பு வைத்து "இனிய ஊன் நாயனீரே; நானும் சுவை கண்டேன்; அமுது செய்தருளும்" என்று இவ்வாறான மொழிகள் சொல்லி அமுது செய்வித்தார். அந்தி மாலையானதும் இரவில் கொடிய விலங்குகள் வரும் என்று அஞ்சி வில்லுடான் நின்றார். இரவெல்லாம் கண்துயிலாது நின்ற வீரர் விடியற் சாமமானபோது "இன்று நாயனாருக்கு இனிய ஊனமுது படைக்க வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார்". இருள் பிரியாத வேளையிலே காட்டினுள் புகுந்தார். அவரின் முன்னே அவரைப் பிரியாது திரியும் நாயும் சென்றது.
அந்தணரின் அவதி
அன்று பகற்போதில் காளத்தி நாதரை அர்ச்சித்து வழிபட சிவகோசரியார் எனும் அந்தணர் பூசைத் திரவியங்களுடன் வந்தார். சாத்திரங் கற்ற ஆசாரசீலரான அவ்வந்தணர் நித்தமும் சிவலிங்கத்திற்கு ஆகமவிதிப்படி பசும் நெய்பூசி, மணமிகு பூக்களோடு வில்வம் தூவி, தூயாடைக் கட்டி, எங்கும் மணங்கமழும் வண்ணம் வாசனை திரவியமிட்டு, நேரந் தவறாமற் பூசை செய்பவராக சிவனுக்கேத் தன்னையர்பணித்துக் கொண்டவராக திகழ்ந்தார். சிவனாரின் சிறப்புகளுள் மெய்சிலிற்க வைப்பது யாதெனில், குணங்களில் இருவேறு துருவங்களாக யிருப்பவருங் சிவனாரால் ஆட்கொள்ளப்படுவதே. வந்தவர் காளத்தியப்பர் முன்னிலையில் கிடக்கும் இறைச்சி, எலும்பு என்பனவற்றைக் கண்டு திகைத்து கால்களை அகலமிதித்தபடியே நின்றார். மூன்றுகால பூசைகாணுஞ் சிவலிங்கத்திற் இரத்த நெடி கமகமக்க மாமிசத்துண்டுகள் வில்வத்துடனிணைந்து விரவிக் கிடப்பதைக் கண்ட அவர் கடுஞ்சினங் கொண்டார். வேட்டுவச் சாதியினரே இவ்வேலையைச் செய்தனராதல் வேண்டும் எனச் சோர்ந்தார். பூசைக்கு நேரம் தாழ்கின்றதென்ற உணர்வு எழுந்ததும் இறைச்சி, எலும்பு என்பனவற்றை எடுத்து எறிந்து திருவலகு கொண்டு செருப்பு அடி, நாயடி என்பனவற்றையெல்லாம் மாற்றியபின் பொன்முகலி சென்று நீராடினார். மீண்டு வந்து பழுது புகுந்து தீரப் பவித்திரமாம் செய்கை (பிராச்சித்தம்) செய்து ஆகமவிதி முறைப்படியான பூசனை செய்து சென்றார். குடுமித்தேவருக்கு அன்பர் சுவை கண்ட ஊனமுது இருள் பிரியாப் போதில் காட்டினுள் புகுந்த திண்ணனார் தாமறிந்த வேட்டைத் திறத்தால் வேறுவேறு மிருகமெல்லாம் கொன்று ஓரிடத்தில் சேர்த்து, வக்குவன வக்குவித்து, கோலினிற் கோர்த்து, தீயினிற் காய்ச்சி, தேக்கிலைக் கல்லையிற் சேர்த்தார். அதிற் தேனும் பிழிந்து கலந்தார். முன்போன்றே பள்ளித் தாமமும் வாய்க்கலசத்து மஞ்சனமும், ஊனமுதமுமாய் காளத்தியப்பரிடம் விரைந்து வந்தார். 'இது முன்னையிலும் நன்று; நானும் சுவை கண்டேன்; தேனும் கலந்தது; தித்திக்கும்' என மொழிந்து திருவமுது செய்வித்தார். இவ்வண்ணம் பகல் வேட்டையாடி இனிய செய்கை செய்வதும் இரவில் கண்ணுறங்காது காவல் புரிவதுமாகத் திண்ணப்பர் இருந்தனர். ஆகம முறைப்படி பூசனை புரிந்து சிவகோசாரியார் ஒழுகினார். நாணன், காடன் என்போர் சென்று சொன்ன சொற்கேட்டு ஆறாக் கவலையுடன் வந்த நாகனாரும், கிளையினரும் முயலும் வகையெல்லாம் முயன்றும் தம் கருத்து வாராமற் கைவிட்டுச் சென்றனர். "அவன் நமக்கினியன்" - காளத்திநாதர் சிவகோசாரியார் நாளும் நாளும் நிகழும் அநுசிதம் குறித்து மிகவும் மனம் நொந்தார். இத்தீச்செயல் செய்தவன் எவனேனுங் கழுவேற்றிவிட யெண்ணினார். அவலஞ் செய்வது யாரென்றறிய ஈசனிடமே முறையிட்டார். அவர் பெருமானை வேண்டிய வண்ணம் துயின்ற வேளையிற் பெருமான் கனவில் தோன்றி 'இச்செய்கை செய்பவனை நீ இகழவேண்டாம். அவனுடைய வடிவெல்லாம் நம்மிடத்தில் கொண்ட அன்பாயமைவது; அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவு; அவனுடைய செயலெலாம் நமக்கினியன். இதனை நாளை உமக்குக் காட்டுவோம். நாளை யிரவு தான் கொழுவிட்டிற்கும் யிடத்தினருகே யொருமரத்தின் மறவிலிருந்து நடப்பனக் கண்டு மனந்தெளிவாயென வாய்மொழிந்தார். சிவகோசாரியார் பெருமானது அருளிப் பாட்டை நினைந்து உருகிய சிந்தையராய் அற்புதம் அறியும் ஆர்வத்தோடு வந்து பூசனையாற்றி ஒளிந்திடவே திருவிளையாடற் காட்சியினிதே அரங்கேறியது. அப்பர் கண்ணை நிரப்ப தன் கண்ணை அப்பி கண்ணப்பரானார் திண்ணப்பர் திருக்காளத்தி அப்பரைச் சேர்ந்து ஐந்து பகலும் ஐந்து இரவும் கழிந்தன. ஆறாம் நாள் விடியற் பொழுதில் கண் துயிலாது நின்ற கண்ணப்பர் வழமைபோன்று காட்டினுள் சென்று வேட்டையாடி ஊனமுது ஆதியனவற்றுடன் வந்துகொண்டிருந்தார்.அவருக்குத் தோன்றிய சகுனங்கள் சஞ்சலம் தருவனவாய் இருந்தன. தீய பறவைகளின் ஒலி கொண்டு 'இது இரத்தப் பெருக்கிற்கான துர்க்குறி' எனத் துணுக்குற்றார். நாயனாருக்கு ஏது நேர்ந்ததோ என எண்ணியவராய் விரைந்து வந்தார். வந்தவர் பெருமானது கண்ணிற் பெருகும் இரத்ததைக் கண்டார். கண்டதும் பதைபதைத்து மயக்கமெய்தினார். அவரது வாயினீர் சிந்தியது. கைசோர்ந்து இறைச்சி சிதறியது. தலையின் பள்ளித்தாமம் சோர்ந்தது. நிலத்தில் துடித்து வீழ்ந்தார். விழுந்தவர் மயக்கம் தெளிந்து எழுந்து சென்று இரத்ததைத் துடைத்துப் பார்த்தார். இரத்தம் நிற்காமல் பெருகிக்கொண்டே இருந்தது. செய்வதறியாது பெருமூச்சுவிட்டு மீளவும் சோர்ந்து விழுந்தார். வீழ்ந்தவர் எழுந்து வில்லும் அம்பும் கொண்டு இத்தீச்செயல் செய்த விலங்குகளுடன் வேடர்கள் உளரோ? என்று எங்கும் தேடிச்சென்றார். எவரையும் காணாது வந்து பெருமானின் பாதங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுது புலம்பினார். ஓர் எண்ணம் எழுந்ததும் வெருண்டதோர் எருதுபோல் காடெங்கும் திரிந்து பச்சிலைகளைப் பறித்துவந்து கண்ணுட் பிழிந்து பார்த்தார். மருந்து பலன் தராமையால் நொந்தார். "ஊனுக்கு ஊன்" என்றோர் மருந்து நினைவு வரவே கண்ணுக்குக் கண் என்றோர் புத்தி புகுந்தது. ஆதலால் தமது ஒரு கண்ணை தோண்டி இரத்தம் பெருகும் பெருமானின் கண்ணில் அப்பினார். நின்ற செங்குருதி கண்டார். நிலத்தினின்றும் எறப் பாய்ந்தார். தோள் கொட்டினார். நன்று நான் செய்த இந்த மதி என மகிழ்ந்தார். மகிழ்ந்த அன்பாளர் மற்றைக் கண்ணினின்றும் குருதி பெருகுவதைக் கண்டார். கண்டதும் ஒரு கணம் கவலையுற்றார். மறுகணமே இதற்கோர் அச்சம் கொளேன்; மருந்து கண்டேன் என்றவராய் தம் மற்றைக் கண்ணைத் தோண்டமுனைந்தார். கண் அடையாளம் காண்பதற்காகத் தன் இடதுகாலைப் பெருமானின் கண்ணில் ஊன்றினார். உள் நிறைந்த விருப்போடு அம்பினை ஊன்றினார். இச்செய்கை கண்டு தேவதேவர் தரித்திலர். தம் திருக்கையாற் தடுத்தனர். "கண்ணப்ப நிற்க என் வலத்தினில் என்றும் நிற்க"என்று அமுத வாக்கு அருளினார். இதனை ஞானமா முனிவர் கண்டனர்; கேட்டனர். தேவர்கள் பூமழை பொழிந்து வாழ்த்தினர். இதனிலும் பெரிய பேறுண்டோ. "இதுவோ கடவுட்பற்று"
ஆதி சங்கரர்
சிவபெருமான் பெருமையை 100 சுலோகங்களில் பறை சாற்றும் சிவானந்தலஹரி என்ற தன்னுடைய (வடமொழி) நூலில் ஆதி சங்கரர் 61 வது சுலோகத்தில் கடவுட்பற்று என்பதற்கு உயர்ந்த இலக்கணம் சொல்கிறார். அவ்விலக்கணத்திற்குச் சிகரம் வைத்தாற்போல் 63 வது சுலோகத்தில் கண்ணப்பரின் உள்நிறைந்த அன்பின் மூன்று செய்கைகளையும் குறிப்பிட்டுவிட்டு இதுவன்றோ பக்தி , கடவுளன்பர் என்பதற்கு இவ்வேடுவனே இலக்கணம் என்கிறார். அச்சுலோகத்தின் உரை கீழ்வருமாறு: வழிநடைநடந்த மிதியடி பசுபதியின் அங்கத்திற்கு குறிகாட்டியாகிறது; வாயிலிருந்து உமிழ்ந்த நீர் புரங்கள் எரித்தவனுக்கு நீராடலாகிறது; சிறிதுண்டு சுவைகண்ட ஊனமுது தேவனுக்கும் படையலாகிறது; பக்தி என்னதான் செய்யமாட்டாது? அன்பரென்போர் வேடுவனன்றி வேறு எவர்? இந்த சுலோகத்திற்கு உரையாசிரியர்கள் உரை எழுதும்போது, இதனில் தீவிர பக்தியின் மூன்று படிகள் சித்தரிக்கப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். சுலோகத்தின் மூன்றாவது வரி முதல் படி. தான் சிறிது சுவைத்துவிட்டு மீதமுள்ளதும் அதே விதத்தில் தேனொழுக இனிக்கும் என்று சொல்வதில் ஒருவித நம்பிக்கைதான் இருக்கிறதே தவிர முழுமையாக அறுதிப்படுவது இயலாது. அதனால் இது தீவிர பக்தியில் ஒரு சாமானியப்படிதான். சுலோகத்தின் இரண்டாவது வரி அடுத்த படி. வாயிலிருந்து உமிழ்ந்த நீர் ஆண்டவனுக்கு அபிஷேகமாகிறது. ஆனால் 'அது' என்னும் ஆண்டவனின் ஆனந்தத்தில் சங்கமமாகும் 'இது' என்னும் இந்த ஜீவனின் உமிழ்நீர் இன்னும் 'அது', 'இது' என்ற இரட்டையின் மயக்கத்தில்தான் இருக்கிறது. அதனால், இது தீவிரபக்தியின் அடுத்த மேல் படி என்று சொல்லலாமே தவிர தீவிரபக்தியின் உச்சகட்டமாகச்சொல்லமுடியாது. சுலோகத்தின் முதல் வரியை தீவிரபக்தியின் உச்சநிலையாகச் சொல்லலாம். ஏனென்றால், பக்தன் தன் மிதியடியையே தேவனின் கண்ணில் வைக்கும்போது, அங்கு தேவன் வேறு தான் வேறு என்ற பாகுபாடெல்லாம் பறந்து போய்விட்டது. 'தத் த்வம் அஸி' (அதுவே நீ) என்ற உபநிஷத்து மகாவாக்கியப்படி, அந்தப் பரம்பொருளே இந்த ஜீவன் என்ற இலக்கணம் ருசுவாகிறது!
மாணிக்கவாசகர்
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை "வா" என்ற வான் கருணை சுண்ணப்பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்துபி கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லாவிட்டாலும் கூட இறைவர் என்னையும் ஆட்கொண்டருளியதாகத் திருகோத்தும்பியில் குறிப்பிடுகின்றார்.


Ankhamuthu Kumar's photo.

Wednesday, July 8, 2015

எதையும் அழிப்பது எளிது: உருவாக்குவதோ, கடினமோ கடினம்

எதையும் அழிப்பது எளிது: உருவாக்குவதோ, கடினமோ கடினம். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்துவது நல்லது என்றே நினைக்கின்றேன். நீங்கள் தொலைக் காட்சியில் ஒரு பெரிய கட்டடம் எப்படி ஒரு நொடியில் தரை மட்டமாகிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள். அழிப்பது எவ்வளவு எளிது என்பது அதைப் பார்த்தாலே புரிந்து விடும் நமக்கு.
15 வருடங்கள் கண் கொத்திப் பாம்பாய் வளர்த்த பையன் கல்லுரி விடுதியில் ஒரே நாளில் கெட்டுப் போய் விடுவதைப் பார்க்கிறோம். 20 வருடங்கள் பார்த்து பார்த்து சேமித்த பணம் நோய் வந்தால் இரண்டே நாளில் காலியாகி விடுவதையும் நாம் பார்க்கின்றோம்.
10 ஆண்டுகள் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த நல்ல பெயர் சில சாமியார்களுக்கு ஒரே நாளில் பறந்து போவதையும் நாம் பார்த்து இருக்கிறோம். பல நூற்றாண்டுகளாக விரிக்கப்பட்ட சாம்ராஜ்ஜியங்கள் ஒரே இரவில் வீழ்ந்ததையும் நாம் படித்து இருக்கிறோம்.
ஆக அழித்தல் எளிது. உருவாக்குவது தான் மிகவும் கடினம். நாம் பணம் சம்பாதித்து சேமிப்பது மட்டும்,பத்தாது. அது அழிய விடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். நல்ல பெயர் எடுத்து விட்டால் மட்டும் போதாது.அந்த நல்ல பெயரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை நன்கு பாதுகாக்க வேண்டும். உயர் பதவி பெற்றால், அது போய் விடாத அளவுக்கு மேலும் உழைக்க வேண்டும். புகழ் பெற்று விட்டால் அப கீர்த்தி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பூர்வீக சொத்து இருந்தால் அது கரைந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒழுக்கம் உடையவர் என்று பெயர் வாங்குவது கடினம். அந்த நல்ல பெயரை ஒரே நாளில் நாம் இழந்து விடலாம்.
நினைவில் கொள்ளுங்கள். எதையும் அழிப்பது எளிது. உருவாக்குவதோ, கடினமோ கடினம்.
எதையும் அழித்து விடாதீர்கள். அழிய விடாதீர்கள். வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Monday, June 15, 2015

பஞ்சபூதங்களின் ஆளுமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலமாக நமக்கு வரும்

பஞ்சபூதங்களின் ஆளுமை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காலமாக நமக்கு வரும். அதனை தெரிந்துக்கொண்டு நாம் பல்வேறு விசயங்களுக்கு பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு நாளும் பஞ்சபூத ஆளுமை பகல் நேரத்தில்
காலை 6 - 8:24 ஆகாயம்
காலை 8:25 - 10.48 வாயு
காலை 10:49 - 1:12 நெருப்பு
பிற்பகல் 1:13 - 3:36 நீர்
பிற்பகல் 3:37 - 6:00 நிலம்
ஒவ்வொரு நாளும் பஞ்சபூத ஆளுமை இரவு நேரத்தில்
மாலை 6.00 - 8:24 நிலம்
இரவு 8:25 - 10:48 நீர்
இரவு 10:49 - 1:12 நெருப்பு
நள்ளிரவு 1:13 - 3:36 வாயு
நள்ளிரவு 3:37 - 6:00 ஆகாயம்
இந்த நேரத்தை எப்படி பயன்படுத்தலாம்?
------------------------------------------------------------------------
தினமும் ஒவ்வொரு நேரத்தையும் இது தான் செய்ய வேண்டும் என்று நமது முன்னோர்கள் பட்டியல் இட்டு வைத்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் நீங்கள் அதனை கடைபிடிக்கும்பொழுது உங்களின் வாழ்க்கை உயரும்.
அதிகாலை 3:37 மணி முதல் 6:00 மணி வரை
-----------------------------------------------------------------------------
இது மிகவும் சாத்வீகமான நேரம். யாகம் செய்வதற்க்கு மற்றும் காயத்ரி மந்திரம் செய்வதற்க்கு உகந்த நேரம். பஞ்சபூதத்தில் ஆகாயத்தை குறிக்கும் நேரம் இது. ஆகாயம் என்பது வெட்டவெளி. இந்த வெட்டவெளியைப் பற்றி சிவமே பகுதியல் நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அமுதம் போன்ற நேரம் இது. ஆத்மாவிற்க்கு பலத்தை அதிகப்படுத்தும் நேரம் இது. கண்டிப்பாக இந்த நேரத்தில் நீங்கள் தூங்ககூடாது. தியானம செய்வதற்க்கு நல்ல நேரம் இதுதான். உங்களுக்கு நல்ல குழந்தைகள் கிடைக்க வேண்டும் என்றால் இந்த நேரத்தில் உடல்உறவை வைத்துக்கொண்டால் நல்லது.
காலை 6:01 மணி முதல் 8:24 மணி வரை
--------------------------------------------------------------------
காலை 6:00 மணிக்கு குளிர்ச்சியான நேரம். அஸ்திவாரக்கல் நாட்ட சிறப்பான நேரம். வீடு கட்ட அடிக்கல் நாட்டினால் குடியிருப்பவரின் மனம் குளிர்ந்து இருக்கும். இந்த நேரத்தில் நட்சத்திர தோஷம், திதி தோஷம், கிழமை தோஷம் எதுவும் கிடையாது, தியானம் ,காயத்ரி ஜபம், ஆசனம், பிரணாயாமம் ஆகியன செய்ய உத்தம நேரம்.
காலை 8:25 மணி முதல் 10:48 மணி வரை
-----------------------------------------------------------------------
தான தர்மம் செய்வதற்க்கு இந்த நேரம் உகந்தது. இந்த நேரத்தில் தானதர்மம் செய்யும்பொழுது உங்களுக்கு புண்ணியம் அதிகமாக வரும். இந்த நேரத்தில் நீங்கள் எப்படியாவது பிறர்க்கு தானம் செய்திடவேண்டும். இந்த நேரத்தில் தானம் செய்யும்பொழுது புண்ணியம் இருமடங்காக உயரும்.
காலை 10:49 மணி முதல் மதியம் 1:12 மணி வரை
-------------------------------------------------------------------------------------
இந்த நேரத்தில் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் உழைக்க வேண்டிய நேரம் இது. உழைத்து அதில் இருந்து வரும் வருமானத்தில் சாப்பிடவேண்டும். முதியோர் கூட இந்த நேரத்தில் சின்ன வேலையாவது செய்ய வேண்டும். வேலை செய்யாமல் இருத்தல் கூடாது.
மதியம் 1:13 மணி முதல் மாலை 3:36 மணி வரை
-----------------------------------------------------------------------------------
இறந்துபோனவர்கள் மூதாதையர் பூமியில் உலவும் நேரம். இந்த நேரத்தில் பித்ருக்களுக்குத் திவசம் திதி தர்ப்பணம் முதலியவைகளைச் செய்தல் வேண்டும். இறந்துபோன ஆத்மாக்கள் உலவும் நேரம் என்பதால் அதிகப்பட்சமாக வெளியில் செல்லகூடாது என்பார்கள். அவசர உலகத்தில் யார் இது எல்லாம் பார்க்கிறார்கள். இந்த நேரத்தில் இறந்தவர்களை வீட்டில் இருந்து எடுக்ககூடாது. அப்படி எடுத்துச்சென்று எரித்தல் அல்லது புதைத்தல் செய்தால் அந்த வீட்டில் மீண்டும் மரணம் ஏற்படும்.
3:37 மணி முதல் மாலை 6:00 மணி வரை
----------------------------------------------------------------
இந்த நேரத்தில் நீங்கள் ஆன்மீக விசயங்களை பற்றி சொற்பொழிவை கேட்கலாம். இந்த நேரத்தில் ஞானத்தைப்பற்றி பேச்சை கேட்டால் உங்களுக்கு நல்ல ஆன்மீக அனுபவங்கள் ஏற்படும்.
மாலை 6:00 மணி முதல் இரவு 8:24 மணி வரை
-------------------------------------------------------------------------------
இந்த நேரத்தில் எல்லாக் கோயில்களிலும் வழிபாடு நடக்கும். பிரம்மமுகூர்த்த நேரம் என்றும் இதனை சொல்லுவார்கள். தியானம் செய்ய இந்த நேரத்தை பயன்படுத்தலாம். உங்களின் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
இரவு 8:25 மணி முதல் 1:12 மணி வரை
------------------------------------------------------------------
வடநாட்டில் இந்த நேரத்தில் திருமணம் செய்வார்கள். மந்திரத்தை கற்றுக்கொள்ள உகந்த நேரம். கூடுவிட்டுக் கூடு பாய்தல் போன்ற வித்தைகளை செய்யகூடிய நேரம் இது.
இரவு 10:49 மணி முதல் 1:12 மணி வரை
-------------------------------------------------------------------
சித்து விளையாட்டுக்களை கற்றுக்கொள்ள கூடிய நேரம் இது. மாந்தீரிக மந்திரங்கள் செய்யகூடிய நேரம் இது. தொலைவில் உள்ள பொருட்களை அருகில் வரச்செய்தல். விரும்புகிற போகங்களை இருக்கும் இடத்திற்கே வரவழைத்து அனுபவித்தல் ஆகிய சித்துகளை கற்றுக்கொள்ளவும் இந்த நேரத்தில் செய்யலாம். பகைவர்களை தன் வசப்படுத்துதல் வயது ஏறாமல் எப்பொழுதும் இளமையாக இருக்குமாறு செய்தல் போன்றவற்றிற்க்கு இந்த நேரம் உகந்தது.
நள்ளிரவு 1:13 மணி முதல் 3:36 மணி வரை
------------------------------------------------------------------------
மனிதன் பலவீனமாக இருக்கின்ற நேரம் இது. துர்சக்திகள் அதிகமாக நடமாட்டம் உள்ள நேரம் இது. இந்த நேரத்தில் நாய்கள் குழைத்தால் அது துர்சக்திகள் வருகின்றன என்று அர்த்தம்.


Saturday, June 6, 2015

நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன்.

நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன்.
நிற்காத கடிகாரமாயிருப்போமா
காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான். அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. “”இது என்ன வாழ்க்கை! காலை முதல் மாலை வரை கண்மூடிக்கொண்டே இருப்பது!
இரவானாலும் தூங்குவது! அதிகாலையில் கொட்டும் பனியில் குளத்திற்குப் போய் நீராடுவது! பூ பறிப்பது! சுவாமியை வணங்குவது! போதாக்குறைக்கு தனிமை வேறு! பேச்சுத்துணைக்கு ஆளில்லையே! ஏன் இங்கு வந்தோம்! இது வேண்டாமென்று ஊருக்குத் திரும்பிப் போனால் “இவ்வளவுதானா உன் வைராக்கியம்?’ என ஊரே கேலி பேசுமே! என்ன செய்வது?” என யோசித்தபடியே உறங்கி விட்டான்.
அன்று கனவில் ஒரு தேவன் வந்தான்.
“”அன்பனே! நாளை முதல் இந்த தவத்தையெல்லாம் விட்டு விடு. பக்கத்து ஊருக்குப் போ. அங்கே உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. அங்கு வசிக்கும் பண்ணையாரின் நிலத்தில் வேலை செய். நிம்மதி உன்னைத் தேடி வரும்,” என்றான்.
இவனும் மறுநாள் பக்கத்து ஊருக்குப் போனான். பண்ணையாரும் வேலை கொடுத்தார்.
உழுதான், உரமிட்டான், நாற்று நட்டான், களையெடுத்தான், அறுவடைப் பணிக்குச் சென்றான். அந்த உழைப்பின் பலன் இரவில் நிம்மதியாகத் தூக்கம் வந்தது. கையில் போதுமான அளவு பணம்…சிறிது காலத்தில் அவனே நிலம் வாங்கினான். கடுமையாக உழைத்தான். துறவு வாழ்வை விட உழைத்து வாழும் வாழ்வே உயர்தரமானது என்பதைப் புரிந்து கொண்டான். அது மட்டுமல்ல! தன் நிலத்தில் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களது குடும்பமும் வாழ வழி செய்தான்.
வேலை செய்யும்போது மனம் பக்குவப்படுகிறது. பணமும் கிடைக்கிறது. உடலுக்கு வலிமையும், ஆத்மாவுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால் துருப்பிடிக்காது. அதுபோல், உழைத்துக்கொண்டே இருந்தால் தான் சலிப்பு ஏற்படாது.
கடிகாரத்தின் முள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால் தான் அது சரியான நேரத்தைக் காட்டும். நீங்களும் நிற்காத கடிகாரமாயிருங்கள்.

Wednesday, June 3, 2015

தோல்வியாளர்கள்!! வெற்றியாளர்கள்!! :நாலு வித்தியாசங்கள்

தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒருகட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும்இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர்,இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?
தோல்வியாளர்கள்
இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது.
சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல்லை. அப்படிமுயன்றாலும் எதிர்மறைக் காட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு மனச்சோர்வைவளர்த்துக் கொள்கிறார்கள்.
தங்கள் இலக்குகளை நோக்கித் தீவிரமாக எண்ணங்களைக் குவிக்க இவர்களுக்குத்தெரியாது. “ஏதோ செய்யறோம்! பார்க்கலாம்” என்பார்கள். “உங்கள் கனவுகள் என்ன?”என்று திரும்பத் திரும்பக் கேட்டால் ஒரு கொட்டாவியைத் தான் பதிலாகத்தருவார்கள். தங்கள் முயற்சிகளை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னால்,எழுதுவார்கள். வரிசைப் படுத்துவார்கள். முதல் அடிகள் சிலவற்றை எடுத்து வைப்பார்கள். போகப் போகக் கைவிடுவார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.
வெற்றியாளர்கள்
இவர்கள் துணிச்சல் காரர்களாய் இருக்கிறார்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட திறமை,திறமை மீது நம்பிக்கை இரண்டும் இருக்கிறது. சில விஷயங்களுக்கு பயந்தாலும் உலகம் ஓர் அற்புதமான இடமாக இவர்களுக்குத் தெரிகிறது.
எதிர்காலம் பற்றிய தெளிவான காட்சிகளைக் கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதை,சுயகௌரவம் கொண்டு வாழ்கிறார்கள். தங்கள் இலட்சியங்களை மதிக்கிறார்கள். அவை நிச்சயம் வெல்லும் என்று மனதார நம்புகிறார்கள். அதைக் குறித்து உற்சாகமாய்ப் பேசுகிறார்கள்.
தங்கள் வாழ்க்கைப் பயணத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் உண்டு. கனவுகளை அடைவதற்கான நடைமுறைகள் பற்றிய தெளிவும் உண்டு. பல மகத்தான இலட்சியங்களை எளிய மனிதர்களால் எட்ட முடியும் என்கிற உறுதி கொண்டு வாழ்கிறார்கள்.
தங்கள் கடமைகளைக் காகிதத்தில் நிரல்பட எழுதுவதோடு நடைமுறைப்படுத்தவும்தெரிந்து வைத்திருக்கிறார்கள். முதல்படியில் இருந்த உற்சாகம், முழுமையானஅளவில் வளரும்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள்இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

வெல்ல முடியாததை வெல்வது எப்படி?

வெல்ல முடியாததை வெல்வது எப்படி?

பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர்.
பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும். விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரணே. தோன்றியபடியெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்துவதால் பயம் நமக்கு நன்மையை செய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையை விட அதிக தீமையையே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமைச்சங்கிலியாக மாறி நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.
நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய காரணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீதக் கற்பனைகளே. என்ன எல்லாம் நேரக் கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவுகளை எல்லாம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. இப்படி எல்லாம் ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் அவன் ஸ்தம்பித்துப் போகிறான்.
அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங்கும் முன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம், குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம், தோற்று விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.
உலகில் மிக உயர்ந்த வெற்றிகளைக் குவித்த வெற்றியாளர்களை ஆராய்ந்தவர்கள் அவர்கள் கூட 60 சதவீத முயற்சிகளில் தான் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அதாவது நாம் போற்றும் பெரிய வெற்றியாளர்களே பத்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளில் தோற்றுப் போகிறார்கள் என்றால் தோல்வி சாதாரணமான ஒன்று தானே. அதில் வெட்கித் தலைகுனிய என்ன இருக்கிறது?
இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதார நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது. வேலையில்லா திண்டாட்டம், வங்கிகளில் பணமில்லாமை எல்லாம் மக்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெரியதொரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ”இப்படிப்பட்டவராலேயே நம் நாட்டின் இன்றைய நிலையைத் தவிர்க்க முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன?” என்ற பயம் மக்களிடம் பரவி இருந்தது.
அந்த சமயத்தில் தான் ஃப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர் தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் சொன்ன செய்தி வரலாற்று சிறப்பு மிக்கது. “நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. ஏனெனில் அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையைச் சார்ந்திராத பயம் நம் பின்னடைவை மீறி முன்னேற விடாமல் நம்மை செயலிழக்க வைப்பதில் வல்லதாக இருக்கிறது”
அவர் அதிபராக இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போரையும் மீறி அமெரிக்கா பொருளாதாரத்தில் முன்னேறியதோடு வல்லரசு நாடாகவும் உருமாறியது. அதற்கு மிக முக்கிய காரணம் பயத்தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை அந்த நாட்டிற்கு இருந்தது தான் என்பதில் சந்தேகம் இல்லை.
அதெல்லாம் சரி, பயம் இயல்பாகவே வந்து விடுகிறதே, அதை விலக்கி வெற்றி பெறுவது எப்படி என்று கேட்போருக்கு சில ஆலோசனைகள்-
முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண்மை தானா
என்று அலசுங்கள். அந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பான அனுமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டவையாக இருந்தால் உறுதியான மனத்தோடு புறக்கணியுங்கள். அந்த கற்பனை காரணங்களிலும், அனுமானங்களிலும் அதிக நேரம் எண்ணங்களைத் தங்க விடாதீர்கள். ஏனென்றால் அதிக காலம் அந்த எண்ணங்களிலேயே இருந்தால் அதையே உண்மை என மனம் நம்ப ஆரம்பித்து விடும். பின் பயம் நம்மை ஆட்கொள்ளவும் ஆரம்பித்து விடும்.
ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்களை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்திலும் நல்லதல்ல. ஆனால் பயத்தினால் செயலிழப்பதும் புத்திசாலித்தனமல்ல என்பதை மறந்து விடாதீர்கள். பயப்படும் படியான விளைவுகளையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.
மனம் உடனடியாக அந்த செயலை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்று உடனடியாகச் சொல்லும். அந்த செயல் தேவையற்றதாகவும், எவ்விதத்திலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாததாகவும் இருந்தால் இரண்டாவது சிந்தனையே தேவையில்லை. அச்செயலைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த செயல் நம்மை நல்ல சூழலுக்கு மாற்ற உதவுவதாகவும், உண்மையான முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாகவும் இருந்தால் செயல்படாமல் இருப்பது
ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் அல்ல என்பதை உணருங்கள். அதிகம் பாதிக்கப்படாமல் செயலைச் செய்து முடிக்கும் வழிகளை சிந்தியுங்கள். இந்த சூழ்நிலைகளை சமாளித்து வென்றவர்கள் என்ன செய்தார்கள், எப்படி சமாளித்தார்கள் என்றும் கவனியுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் பயத்தையே அறியாதவனாக படைக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது? இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்தமல்லவா?
நீங்கள் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். கடவுள் துணையாக இருக்கையில் எது தவறாகப் போக முடியும்? தன்னம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம்.
அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல் புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டு தானாக அகல ஆரம்பிக்கின்றன. சூரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன.
மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள். - www.v4all.org

Monday, April 20, 2015

தன்னம்பிக்கை -போராட்டம்- மனோசக்தி– மனோதிடம்- அஞ்சாமை — கொள்கை

தன்னம்பிக்கை -போராட்டம்- மனோசக்தி– மனோதிடம்- அஞ்சாமை — கொள்கை

தன்னம்பிக்கை

  • உன்னை அறிவில்லாதவன் என்று நீ எண்ணுவது தவறு
  • உன்னை அறிவில்லாதவன் என்று பிறர் சொல்வதை நம்புவது பெரும் தவறு
  • தன்னை நம்புபவர் அதிட்டத்தை நம்புவதில்லை
  • தன்னையே நம்பாதவர் அதையும் நம்புவதில்லை
  • விழவது நம் வாடிக்கை
  • வெம்பி நீ அழவதுதான் வேடிக்கை
  • தொழுவது நம் நம்பிக்கை
  • நம்பி நீ எழுவதுதான் தன்னம்பிக்கை
  • மூடனோ முடியாததை முடியும் என்று நினைந்து தோற்கிறான்
  • முடவனோ முடிந்ததை முடியாது எனப் பயந்தே தோற்கிறான்
  • கண்ணிலே நம்பிக்கை இருந்தால் கல்லீலே  தெய்வம் உண்டு
  • கையிலே நம்பிக்கை இருந்தால் வரலாற்றிலே பெயர் உண்டு
  • வெற்றி நிச்சயம் என்ற எண்ணமே வெற்றிக்கு முதல் இரகசியம்
  • தோல்வி நிச்சயம் என்ற அச்சமே தோல்விக்கு மூல காரணம்
  • உங்களது சந்தேகங்களையே சந்தேகித்து விரட்டுங்கள்
  • உங்களின் நம்பிக்கைகளின் மீதே நம்பிக்கை வையுங்கள்
  • என்னாலும் செய்ய முடியும் என்பது நம்பிக்கை
  • என்னால்தான் செய்யமுடியும் என்பது அகந்தை
  • பறக்கத் துணிந்தவருக்கு இறகுகள் பாரமில்லை
  • இறக்கத் துணிந்தவருக்கு மரணம் ஒரு பயமில்லை.                                 

போராட்டம்

  • விமர்சனம் என்பது கடல் பயணத்தின் தடை கல் விலகிச்செல்ல முடியும்
  • வீண்பகை என்பது சாலை பயணத்தின் தடை கல் தகர்த்தே செல்ல முடியும்
  • உரிமை மேல் ஆண்மை பாராட்டாதவர் சாந்தம்
  • பெருமை இல்லாத பிணத்தில் பிறந்ததோர் சாந்தக்குளிரே
  • உன் சுயசக்தியே உனது ஆயுதம் துஞ்சாமல் போராடு
  • உன் சுயபுத்தியே உனது ஆசான் அஞ்சாமல் போராடு
  • மயங்குபவர் மன்னராக முடிவதில்லை
  • தயங்குபவர் தலைவராக இருப்பதில்லை
  • கலங்குபவர் கலைகளில் சிறப்பதில்லை
  • கசங்குபவர் முண்ணனியில் வருவதில்லை
  • எடை இல்லாது விலையில்லை
  • நடை இல்லாது நாட்டியமில்லை
  • படை இல்லாது போருமில்லை
  • தடை இல்லாது வெற்றியுமில்லை
  • காவியினால் மட்டுமே வறுமைக்கு சாவி கிடைக்காது
  • கருணையினால் மட்டுமே ஏழ்மைக்கு தீர்வு கிடைக்காது
  • துடுப்பு இலொலாமல் தோனியில்லை
  • துணை இல்லாமல் பயணமில்லை
  • படி இல்லாமல் ஏணியில்லை
  • அடி வாங்காது ஏற்றமில்லை
  • கடல்கள் மையத்திலிருந்து பல புயல்கள் புறப்படுகின்றன‌
  • இதயத்திலிருந்து பல புரட்சிகள் புறப்படுகின்றன,

மனோசக்தி
  • தண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட வறட்சி வரும்
  • கண்ணீரை வீணாக்காமல் சேமியுங்கள் நாளை இதை விட துயரம் வரும்
  • ஒரு நொடி அழும் போது மரணம் ஓரடி முன்னோறுகிறது
  • ஒரு நொடி சிரிக்கும் போது மரணம் ஒரடி பின்னேறுகிறது
  • கவ்விய கவலையும் துயரும் விட்டு விட்டால்
  • உலகு எல்லாம் சேரினும் நம் முன் தீயிலிட்ட பங்சே
  • சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
  • புதைப்படும் கணைக்கும் புறம் கொடாது யாணை
  • அண்டத்தையே பிண்டமாக்கும் அழிவு சக்தி அனுவுக்குள்ளே
  • பிண்டத்தையே அண்டமாக்கும் ஆக்க சக்தி ஆன்மாவுக்குள்ளே
  • உள்ளத்திலே உறுதியிருந்தால் கை தொட்ட கல்லும் பொன்னாகும்
  • உடலிலே உழைப்பிருந்தால் காலன் பயமும் மறைந்து போய்விடும்
  • வீரமுள்ள மனிதனை கொல்ல முடியும் தோற்கடிக்க முடியாது
  • விவேகமுள் அறிஞனை விரட்ட முடியும் வீழ்த்த முடியாது
  • நல்ல தொழிலாளியிடம் கடின வேலை தருகிறார் முதலாளி
  • நல்ல இருதயத்திடம் தனது வேலையைத்தருகிறான் இறைவன்
  • தீராத பசியை விட ஒயாத உணவால் மாண்டவர் பலர்
  • ஒயாத உழைப்பை விட தீராத உறக்கத்தில் அழிந்தவர் பலர்
  • துயரத்தின் தீயில் இருந்தே பல மாமேதைகள் கருவானர்கள்
  • துன்பத்தின் சாம்பலில் இருந்தே பல மாமனிதர்கள் உருவானர்கள்

மனோதிடம்

  • குளிரிலும் கோடையிலும் சமமாக இருப்பது உடலின் வெப்பம்
  • குறையிலும் நிறையினும் சமமாக வாழ்வது மனிதின் நுட்பம்
  • துயரங்கள் சிலரை சுட்ட எஃகு போல உறுதியாக்குகிறது
  • தோல்விகள் சிலரை சுட்ட கடுகு போல சிதைத்து விடுகிறது
  • உடல் தளர்வது தோலில் ஏற்படும் காயம் போல‌
  • உளம் தளர்வது எலும்பில் ஏற்படும் முறிவு போல‌
  • பலமில்லாதவர்கள் பாதையின் கற்கள் தடைக்கற்கள்
  • பலமுள்ளவர்கள் பாதையின் தடைகள் படிக்கற்கள்
  • இத்தனி உலகிலே எத்தனை துயர் கண்டாலும் அத்தனையும்
  • நம் அழுக்கையெரித்து நல் சுவர்ணமாக சோதிக்கத்தானே
  • பிறவிக்குருடனின் பால் நிறம் கொக்கு போல என்றாணம் ஒரு மூடன்
  • சற்றே பாதையாதிருந்து பாரும் எதிலும் பேரின்பமே திகழும்
  • துயரென்பது நரி போல ஒடதுடத்துரத்தும் நின்றதும் நின்று விடும்
  • துன்பமென்பது நிழழ்போல ஒட ஒடத் தொடரும் நின்றதும் நின்று விடும்
  • கையகலமே அவன் கொடை
  • கருணை மனத்தின் அகலமே மாண்பு
  • கண்ண கலமே அவள் கல்வி
  • கலங்காத இதயத்தின் அகலமே அவன் வாழ்வு
  • திறமையான வாளுக்குத் தேவை உறுதியான கைப்பிடி
  • வலிமையான கைகளுக்குத் தேவை உறுதியான இருதயம்

அஞ்சாமை
  • தங்கத்தை தீயிட்டாலும் அதன் தரம் குணம் மாறுவதில்லை
  • அங்கத்தை தீயிட்டாலும் ஆன்றோர் பொய் பேசுவதில்லை
  • இழப்பு இல்லாமல் ஒரு லாபம் அடைய முடியாது
  • ஆபத்து இல்லாமல் ஒரு வெற்றி அடைய முடியாது
  • அஞ்சாமை என்பது தெளிந்த அறிவின் விளைவாகும்
  • துஞ்சாமை என்பது துணிந்த துணிவின் விளைவாகும்
  • அஞ்சாமையுடன் நெஞ்சிலிருந்து வீரத்திருமகள் கட்டியனைப்பான்
  • துஞ்சாமையுன் விழியிலிருந்தால் வெற்றித்திருமகள் வீட்டிலிருப்பான்
  • உழைப்பதற்கு முதுகு வளை
  • எதிர்ப்பவர்க்கு முதுகு வளைக்காதே
  • அறிஞருக்கு தலை வணங்கு
  • அறிவானுக்கு தலை குணியாதே
  • வளைந்து நெளிந்து குழைந்து தளர்ந்து வாழ்வது புழுவின் வாழ்க்கை
  • நிமிர்ந்து துணிந்து பாய்ந்து வளர்ந்து வெல்வது புலியின் வாழ்க்கை
  • கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாத கால்கள் ஊர் போய்ச் சேரும்
  • வில்லுக்கும் சொல்லுக்கு அஞ்சாத காதுக்கு புகழ் வந்து சேரும்
  • வளைந்து கொடுப்பவர் எந்தக் கதவுக்குள்ளும் நுழைந்து விடுவார்
  • நிமிர்ந்து நடப்பவர் எந்தத் தடையையும் தாண்டிவிடுவார்
  • அஞ்சாமை என்பது ஆண் முகத்தில் மீசை
  • ஆணவம் என்பது பெண் முகத்தில் மீசை

கொள்கை
  • பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொள்கை வைக்கிறான்
  • பிறக்கும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஒரு செய்தி அனுப்புகிறான்
  • அற்புதமான இலட்சியத்திற்காக உதவியை உதறி விடு
  • அற்பனுன இலட்சியத்துக்காக இலட்சியத்தை உதறி விடாதே
  • அற்ப தூசுகள் காற்று வரும் போது பறக்கலாம் என காத்திருப்பார்கள்
  • அற்ப மனிதரும் அதிட்டம் வரும் போது ஆடலாம் என காத்திருப்பார்கள்
  • ஆடையை விட்டபின் கிடைத்தது வெற்றியுமல்ல‌
  • கொள்கையை விட்ட பின் அடைந்தது கோட்டையுமல்ல‌
  • கொள்கை என்பது பழமைக்கும் புதுமைக்கும் இடையே தடையாகக் கூடாது
  • குறிக்கொள் என்பது பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக வேண்டும்
  • துக்கத்துக்கு அழுவது முகம் துடைப்பது போல ஒரு பழக்கமாகி விட்டது
  • கொள்கையை பேசுவது மூக்கு சிந்துவது போல ஒரு வழக்கமாகி விட்டது
  • வெற்றி தொடர்ந்த போது பாதை மாறாதே
  • தோல்வி தொடர்ந்த போதும் கொள்கை மாறாதே
  • கொள்கை பிடிப்புள்ளவர் வாழ்வு நெடும் பயணத்தின் நீளம்
  • குரங்கு பிடிப்புள்ளவர் வாழ்வு செக்கு மாட்டின் வட்டம்
  • ஆடையை அவிழ்த்தவருக்கு பரிசு என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • கொள்கையை விட்டவருக்கு பதவி என்றால் யார் வெல்லுவார் தெரியாதா
  • இலக்கு இல்லாத கப்பல்கள் கரை சேர்வதில்லை
  • இலட்சியம் இல்லாத மனிதர்கள் வெற்றி காண்பதில்லை

Sunday, April 19, 2015

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலும் உள்ளொளியாக இருந்து பிரகாசிக்கிறது. அந்த ஆற்றலை அவரவர் சூழ்நிலை, சக்தி, அறிவு போன்ற அம்சங்களுக்கேற்ப, அவரவர் மட்டுமே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் தங்கள் இயல்பான திறமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். திறமையை மதிப்பிடும் போது நமக்குள் இருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகளையும் திறமை தான் என்று அதனுடன் சேர்த்துவிடக் கூடாது.

உதாரணமாக, சர்க்கஸ், சினிமா, நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்க்கும் போது, அதில் வரும் கதாநாயகர்களை போல நாமும் செய்து பார்க்க ஆசைபடுவதுண்டு. இந்த மாதிரி ஆசைபடும் ஒரு சிலர் வேண்டுமானால், பிற்காலத்தில் சினிமா நட்சத்திரங்களாகலாம். அல்லது சர்க்கஸ் வீரர்களாகலாம். அல்லது சந்தர்ப்பமும், சுயமுயற்சியும் சேர்ந்து அவர்கள் விரும்பும் எதிர்காலம் அமைய உதவுகிறது. ஆனால், சினிமா நடிகர்களாக வரவேண்டும் என ஆசைபடும் அனைவருக்குமே எதிர்காலத்தில் அவர்கள் ஆசை நிறைவேறுவது இல்லை. காரணம், நடிப்புத்திறமை அவர்களுக்கு இயல்பான ஆற்றலாக இல்லாமல் இருப்பது தான் காரணம்.

இதே போல் பல துறைகளிலும் நமது ஆசையும் கனவும் விரிந்து பரந்திருந்தாலும், எதிர்காலத்தில் அவரவர் திறமை, ஆற்றலுக்கு ஏற்பதான் அவை நிறைவேறும். அதனால், நமது திறமையை மதிப்பிடும்போது அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பொறியியல் துறையில் மாணவன் அடிப்படை பயிற்சிகளை பெற்று வருகிறான். உண்மையில் அவனுக்கு அதில் ஆர்வம் இருந்தால், அந்த ஆர்வம் பயிற்சியின் போதே தெளிவாகத் தெரிந்துவிடும். ஒரு துறையில் சிறிதும் ஆர்வமில்லாதவர்களுக்கு அந்த துறையானது, அவர்கள் வேலைசெய்யும் போதே, தெரிந்து விடும். அவர்களுக்கு அந்த வேலை பெரிய சுமையாகத் தோன்றும்.

குறிப்பாக, எந்த துறையில் நமக்கு நீடித்த ஆர்வமும், உற்சாகமும் தொடர்ந்து இருக்கிறதோ அதில் தான் நமது திறமை உள்ளது என்பதை உணர்ந்து அந்த வழியில் முயற்சி செய்ய வேண்டும். திறமைக்கான தேடல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இருக்க வேண்டும். அதுவே வாழ்நாள் முழுவதும் நீடித்து விடக்கூடாது. திறமையை கண்டுபிடித்தவுடன் அதை வளர்ப்பது எப்படி என்பது குறித்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இரண்டு முறையான பயிற்சிகளின் முலம் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். அவற்றில் ஒன்று நேரடிபயிற்சி முறை. மற்றொன்று சுயமுயற்சி. நேரடிபயிற்சி முறைபடி கற்க வசதி மற்றும் வாய்ப்புகள் இல்லாதவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளலாம். `சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’, `கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்’ போன்ற பழமொழிகள் பயிற்சியின் அடிப்படையை நமக்குக் கற்றுத்தருகிறது. விடாபிடியாகத் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடும்போது எவருக்கும் எந்தக்கலையிலும் தானாகவே சரியான பயிற்சி கிடைத்துவிடும் என்பதே பழமொழிகள் உணர்த்தும் உண்மை. குறிப்பாக, கலைத்துறையினருக்கு இது பொருத்தமாக இருக்கும். சரியான வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், முறையான முயற்சியிருப்பின் பயிற்சி உங்களுக்கு எளிமையாகவே இருக்கும்.