Saturday, March 21, 2015

குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள் - ரவீந்திரநாத் தாகூர்



இறைவனை மனக்கண்ணில் காணும் போது என்னிடமுள்ள தீமைகள் யாவும் நெஞ்சத்திலிருந்து விலகி விடுகின்றன.
எப்போதும் மனதை எளிமையாகவும்தூய்மையாகவும்அமைதியாகவும் வைத்திருக்கவிரும்புங்கள். நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால்நம் மனப்போக்கினைஆளக்கற்றுக் கொள்ள வேண்டும்.
மனிதனுக்கு நேய உணர்வு அவசியம். எப்படி தன்னிடம் உள்ள பழுத்த பழங்களை மரம் பிறருக்காக கொடுக்கிறதோஅதுபோல ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுக்கும் குணமுடையவர்களாக இருக்க வேண்டும்.
குழந்தைகளைப் போன்று இருக்க கற்றுக் கொள்ளுங்கள். குழந்தைகள் பயன் இல்லாத விளையாட்டுப் பொருள்களை வைத்துக் கொண்டு உள்ளம் மகிழ்ச்சி கொள்கின்றனர். மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல. மனம் சார்ந்ததே.
சிரத்தை இல்லாமல் வழிபாடு செய்வதால் பயன் ஏதும் இருக்காது. தெய்வம் நம்முன்னே உறைந்து இருக்கிறது என்ற எண்ணமுடன் வழிபட வேண்டும்.
ரவீந்திரநாத் தாகூர்

No comments:

Post a Comment