சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோச காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பாலு, இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம். இந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும். மனச்சங்கடங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்காமல் இருப்போருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் விரைவில் ஏற்படும். லட்சுமி நரசிம்மரின் காயத்திரி மந்திரமான, “ஓம் வ்ஜர நாகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ரீய தீமஹி தந்நோ நரசிம்ம ஹ ப்ரசோதயாத்” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லி வந்தால் பதவி உயர்வும், சகல நலன்களும் உண்டாகும்.
"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
No comments:
Post a Comment