ஜோதிடக்கலையில் புகழ் பெற ஸ்ரீ வாக்வாதினி மந்திரப் பிரயோகம்
ஜோதிடம் ஒரு கடல்.பல்வேறு ரிஷிமார்களும்,சித்தர்பெருமக்களும் இயற்றிய பல்வேறு ஜோதிட நூல்கள் போக அவ்வப்போது தோன்றிய பல அறிஞர் பெருமக்களும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்த கருத்துக்களைப் பகிர்ந்து ஜோதிடக் கலைக்குப் பலம் சேர்த்து வருகின்றனர். நினைவாற்றல், சமயோசித புத்தி,மந்திரசித்தி இருந்தாலும் வாக்குப்பலிதம் இல்லையென்றால் ஜோதிடக்கலையில் சிறக்க முடியாது.
சிலருக்கு ஜோதிடம் கற்க விருப்பம் இருக்கும் அதில் உள்ள பல்வேறு சூத்திரங்கள் ,கணிதங்களை மனதில் இருத்திக்கொள்ள முடியாமல் இருப்பார்கள். அவர்கள் இம்மந்திரத்தை ஜபித்து வர ஜோதிடம் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும்.
சரஸ்வதி மந்திரங்கள் பல இருந்தாலும் இந்த வாக்வாதினி மந்திரம் குறிப்பாக ஜோதிடக் கலையில் சிறந்து,புகழுடன் விளங்கப் பேருதவியாக இருக்கும்.
ஜோதிடம் சொல்லும் போது, அதிகப்பணம் சம்பாதிக்க்கும் நோக்கில் பொய் சொல்வதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்து அறவே நிறுத்திவிட வேண்டும். ஏனென்றால் மந்திரம் சித்தியாக ஆக படிப்படியாகப் புகழ்,தேஜஸ், வாக்பலிதம்,கௌரவம் எல்லாம் கூடிய வளவாழ்வு அமையும்.எனவே,பொய்களைத் தவிர்த்து ஜோதிடம் சொல்லி வர மந்திரசித்தியின் காரணமாக ஜோதிடத்தில் நிறைந்த புகழுடன் விளங்கலாம்.
ஜெப விதிமுறைகள்:-
ஸ்ரீ வாக்வாதினி மந்திரம்:-
ஓம் ஐம் நமோ பிரம்மாணி பிரம்மபுத்ரி|
வத வத வாசா சித்திம் குரு குரு ஸ்வாஹா ||
குறிப்பு:- மந்திரத்தில் வரும் வாசா என்ற இடத்தில் உள்ள சா என்பதை சந்துரு (CHA) என்ற பெயரில் வரும் உச்சரிப்பில் உச்சரிக்கவும்.அதாவது சா என்ற எழுத்தை அழுத்தமாக உச்சரிக்கவும்.
வளர்பிறையில் உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகப் பார்த்து மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.அதிகாலை 3:50 முதல் 5:50 க்குள் ஜெபிக்க நிறைவான பலன் உண்டாகும்.கிழக்கு நோக்கி அமர்ந்து 1008 தடவை ஜெபிக்கவும்.90 நாட்கள் ஜெபத்தில் மந்திரத்தில் சம்பூர்ண சித்தி உண்டாகும். 18 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக முகத்தில் தேஜசும்,வாக்கு பலிதம் உண்டாகத் துவங்கும்.
1008 உரு ஜெபிக்க முடியாதவர்கள் குறைந்தது 508 அல்லது 108 தடவையாவது ஜெபித்து வரவும்.
வாக்தேவதை மந்திரங்களைச் சித்தி செய்ய விரும்புவோர் வெண்ணிற ஆடைகளை அணியவேண்டும்.வெண்ணிறப் பட்டு அல்லது காட்டன் துணியில் அமர்ந்து ஜெபிக்கவேண்டும்.பலகையில் அமர்ந்து ஜெபித்தால் அதன் மீது வெண்ணிறத் துணி போர்த்தி அதன் மேல் அமர்ந்து ஜெபிக்க வேண்டும். ஸ்படிகம் அல்லது வெண்தாமரைக் கொட்டை மாலையை ஜெபத்திற்குப் பயன்படுத்தலாம்.அந்த மாலையை அணிந்தும் வரலாம். பௌர்ணமி அன்று இரவில் 9 மணிக்குள் நிலவைப் பார்த்தபடி மந்திரம் ஜெபித்து கற்கண்டுப்பாயசம் படைத்து ,ஜபம் முடிந்தபின் மொட்டை மாடியில் நிலவொளியில் சுத்தமான நீரில் செம்புப் பாத்திரத்தில் ஜபத்திற்குப் பயன்படுத்திய ஸ்படிக மாலையைப் போட்டு வைத்து அதிகாலையில் பிரம்ம முஹூர்த்ததில் எழுந்து குளித்து விட்டு அந்த நீரை அருந்தி வர விரைவில் மந்திரம் சித்தியாகும்.
முக்கியக் குறிப்பு:-
யாரையும் சபிக்கக்கூடாது.வாக்கு பலித சக்தியால் அவை பலித்துவிடும். நமக்கு வெற்றி கிடைத்தாலும் சாபத்தினால் பாதிக்கப்படுபவரின் துன்பச்சுமை நம்மைப் பிற்காலத்தில் துன்பத்திற்கு ஆளாக்கும்.நானும் வாழவேண்டும் யாவரும் வாழட்டும் என்று நல்ல எண்ணத்தோடு இருக்க முயற்சியுங்கள்.
ஸ்ரீ வாக்வாதினி தேவி உங்கள் யாவருக்கும் வாக்பலிதத்தோடு ஜோதிஷ தெய்வக்ஞராக விளங்க அருள் செய்ய வேண்டுகிறேன்.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||
www.v4all.org
No comments:
Post a Comment