அடியெடுத்து வைக்க ஒரு நொடி!
ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதற்குச் சாக்குபோக்கு தேடுபவன் அவற்றைக் கண்டறிந்துவிடுவான். உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு உங்கள் இறந்தகாலத்தை அனுமதிக்காதீர்கள். உயிர்த்திருத்தல் பற்றிப் பேசுங்கள். மரணத்தைப் பற்றிப் பேசாதீர்கள்.
நீங்கள் என்ன சொன்னாலும் மரணம் வந்தே தீரும். நண்பர் களும் எதிரிகளும் இருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு பேரையும் பிரித்துணர்வது உங்களுடைய பொறுப்பு. எதிரிகள் உங்களைப் பின்னடைவு அடையச் செய்யாமல் அவர்களிடமிருந்து துண்டித்துக்கொள்வதும் உங்களுடைய பொறுப்பே.
நீங்கள் வெளிப்படுத்தும் செயல் மூலம் உங்கள் விதியைத் தேர்வு செய்யும் கடவுள் கொடுத்த மனோ வலிமை உங்களிடம் உள்ளது. நாளை உங்களை உச்சத்தில் பார்க்க இன்று நீங்கள் வெற்றியைத் தேர்ந்தெடுப்பது அவசியம். வெற்றியாளர் போன்றே யோசியுங்கள். நீங்கள் வெற்றியாளர் என்று நம்புங்கள். நீங்கள் வெற்றியாளர் என்று உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவீர்கள்! நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒவ்வொரு நாளும் சாதிப்பதற்கான இன்னொரு நாள்!
புதியதொரு எதிர்காலத்தை உருவாக்குவதில் கால தாமதம் ஒன்றும் ஆகிவிடவில்லை. எனது இறந்த காலத்தின் சுமைகள் அதிகமாகிவிட்டதால் இனியும் என்னைப் பெரிதாக மாற்ற முடியாது என்று ஒரு காலத்தில் யோசித்திருக்கிறேன். அதற்குப் பிறகுதான் இறந்த காலம் என்று ஏன் அதை அழைக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. ஏனெனில் அது உங்கள் பின்னால் உள்ளது.
ஒரு முடிவை எடுக்க ஒரு நொடிதான் ஆகிறது. ஆயிரம் மைல்கள் பயணத்தைத் தொடங்க ஒரு அடிதான் முதலில் தேவைப்படுகிறது. இன்று என்பது உங்களின் முதல் நாள். நீங்கள் முதல் அடியைத் தற்போது எடுத்து வைக்கிறீர்கள். அதை முதலில் நிகழ்த்துங்கள்!
வாழ்வின் அடித்தளத்திலிருந்து நான் உயர்ந்துள்ளேன்.
என்னால் முடியும் என்றால் யாராலும் முடியும்.
அமெரிக்கத் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான் வெளியிட்டுள்ள From the HOOD to doing GOOD எனும் நூலிலிருந்து
No comments:
Post a Comment