Showing posts with label Sales skills training company in coimbatore. Show all posts
Showing posts with label Sales skills training company in coimbatore. Show all posts

Monday, December 28, 2015

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்...!

வாழ்வை வளமாக்கும்
சிந்தனைகள்...!
1. நாணயமாக இருப்பவனிடம்
எப்போதும் குழந்தைத்தனம்
காணப்படும்
2. உன் தகுதி பிறருக்குத்
தெரியவேண்டுமானால் பிறர்
தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப்
பொருளை விலைக்கு வாங்குபவன்
திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய
ஆரம்பிக்கிறதோ அப்போதுதான்
வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும்
முதலீடு எப்போதுமே கொழுத்த
வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த
வரமும் இல்லை. கெட்ட
மனைவியை விட மோசமான
சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக்
குடிக்கிறான்.
பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர்
சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக்
கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட
ஒழுக்கமான ஒரு பெண்
வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள
எல்லோரும் நடந்து விடலாம்.
ஆனால் இரண்டு கை உள்ள
எல்லோருமே எழுதிவிட
முடியாது.
10.
உழைப்பு உடலை வலிமையாக்கும்.
துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த
தவறை ஒத்துக்கொள்ள
வெட்கப்படக் கூடாது.
ஒப்புக்கொள்வதன் பொருள்
என்ன? அவன் நேற்றைவிட
இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது.
உங்கள் அறியாமையினால்
அதை நரகமாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள்.
பாராட்டு கிடைக்கும்.
பிறரை மதியுங்கள். மதிப்புக்
கிடைக்கும்.
அன்பு செலுத்துங்கள்.
அன்பு தேடி வரும்.
இவை ஒற்றைவழிப் பாதைகள்
அல்ல. இரட்டை வழிப் பாதைகள்.
அன்பில்
வணிகத்திற்கு இடமில்லை.
வணிகத்தில்
அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன்
தாழ்ந்தவன் ஆகிறான்.
பிறருக்கென வாழ்பவன்
பெருவாழ்வு வாழ்கிறான்.
அடக்கம் அணிகலன் மட்டுமல்ல.
அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின்
ஆடைகள். அவற்றைக்
கந்தல்களாகவும்,
கிழிசல்களாகவும்,
அழுக்காகவும் உடுத்தக்
கூடாது.
16.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத்
தோன்றும். ஊக்கமுள்ளவனுக்க
ு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும்,
நோக்கமும் இல்லாத
வாழ்க்கை திசைகாட்டும்
கருவி இல்லாத கப்பல்
நடுக்கடலில்
நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும்,
திடமாகவும்,
சிந்திக்கிறானோ அந்த
சிந்தனைகளின்
வளர்ச்சி கலையாகும்.
அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன்
ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால்
நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல
பணக்காரர்களுடன் பழகினாலும்
பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில்
அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ
விரும்பியதைச் செய்வதில் அல்ல.
நீ செய்வதை விரும்புவதில்தான்

இனிய காலை வணக்கம்வாழ்வை வளமாக்கும்
சிந்தனைகள்...!
1. நாணயமாக இருப்பவனிடம்
எப்போதும் குழந்தைத்தனம்
காணப்படும்
2. உன் தகுதி பிறருக்குத்
தெரியவேண்டுமானால் பிறர்
தகுதியை நீ தெரிந்துகொள்.
3. திருட்டுப்
பொருளை விலைக்கு வாங்குபவன்
திருடனை விட மோசமானவன்.
4. தூக்கம் எப்போது குறைய
ஆரம்பிக்கிறதோ அப்போதுதான்
வாழ்க்கை ஆரம்பிக்கிறது.
5. அறிவுக்காக செய்யப்படும்
முதலீடு எப்போதுமே கொழுத்த
வட்டியையே தரும்.
6. நல்ல மனைவியை விட உயர்ந்த
வரமும் இல்லை. கெட்ட
மனைவியை விட மோசமான
சாபமும் இல்லை.
7. முதலில் மனிதன் மதுவைக்
குடிக்கிறான்.
பின்பு மது மனிதனை குடிக்கிறது.
8. ஆயிரம் பேர்
சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக்
கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட
ஒழுக்கமான ஒரு பெண்
வேண்டும்.
9. இரண்டு கால் உள்ள
எல்லோரும் நடந்து விடலாம்.
ஆனால் இரண்டு கை உள்ள
எல்லோருமே எழுதிவிட
முடியாது.
10.
உழைப்பு உடலை வலிமையாக்கும்.
துன்பங்களே மனதை வலிமையாக்கும்.
11.ஒருவன் தான் செய்த
தவறை ஒத்துக்கொள்ள
வெட்கப்படக் கூடாது.
ஒப்புக்கொள்வதன் பொருள்
என்ன? அவன் நேற்றைவிட
இன்று அதிக அறிவு
பெற்று விட்டான் என்பதே.
12. வாழ்க்கை சுவையானது.
உங்கள் அறியாமையினால்
அதை நரகமாக்கி விடாதீர்கள்.
13. பிறரைப் பாராட்டுங்கள்.
பாராட்டு கிடைக்கும்.
பிறரை மதியுங்கள். மதிப்புக்
கிடைக்கும்.
அன்பு செலுத்துங்கள்.
அன்பு தேடி வரும்.
இவை ஒற்றைவழிப் பாதைகள்
அல்ல. இரட்டை வழிப் பாதைகள்.
அன்பில்
வணிகத்திற்கு இடமில்லை.
வணிகத்தில்
அன்புக்கு இடமில்லை.
14. தனக்கென வாழ்ந்தவன்
தாழ்ந்தவன் ஆகிறான்.
பிறருக்கென வாழ்பவன்
பெருவாழ்வு வாழ்கிறான்.
அடக்கம் அணிகலன் மட்டுமல்ல.
அறத்தின் காவலன்.
15. சொற்கள் நம் சிந்தனையின்
ஆடைகள். அவற்றைக்
கந்தல்களாகவும்,
கிழிசல்களாகவும்,
அழுக்காகவும் உடுத்தக்
கூடாது.
16.
சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத்
தோன்றும். ஊக்கமுள்ளவனுக்க
ு எல்லாமே எளிதாகத் தோன்றும்.
17. எந்தவிதக் கொள்கையும்,
நோக்கமும் இல்லாத
வாழ்க்கை திசைகாட்டும்
கருவி இல்லாத கப்பல்
நடுக்கடலில்
நிற்பதற்கு ஒப்பாகும்.
18.எந்த மனிதன் தீவிரமாகவும்,
திடமாகவும்,
சிந்திக்கிறானோ அந்த
சிந்தனைகளின்
வளர்ச்சி கலையாகும்.
அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன்
ஆவான்.
19. பல அறிஞர்களுடன் பழகினால்
நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல
பணக்காரர்களுடன் பழகினாலும்
பணக்காரன் ஆக மாட்டாய்.
20. இன்பத்தின் இரகசியம் எதில்
அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ
விரும்பியதைச் செய்வதில் அல்ல.
நீ செய்வதை விரும்புவதில்தான்

இனிய காலை வணக்கம்

Sunday, December 13, 2015

கடவுள் ஒரு நாள் மாறுவேடத்தில்

கடவுள் ஒரு நாள் மாறுவேடத்தில் உலகை வலம் வந்து கொண்டு இருந்த போது தாகம் ஏற்பட்டதாம்.
அப்போ அங்கு அருகில் இருந்த ஒரு பால்காரரின் வீடு கண்ணில் தென்பட்டவுடன் அங்கு சென்று குடிக்க சிறிது தண்ணீர் கேட்டாராம். அதற்கு அந்த பால்காரர் "பாலில் கலக்கவே தண்ணி பத்தல இதுல உமக்கு குடிக்க தண்ணியா"கிடையாது, கிடையாது வேற இடம் பார்த்து கிளம்பு என்றாராம் பால்காரர்.
கடவுள் தாகத்துடன் வேறு எங்கு தண்ணீர் கிடைக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்தபோது அங்கு ஒரு சோமபான கடை தென்பட்டதாம். கடவுள் அங்கே சென்று தண்ணீர் கேட்டபோது, அவர் மூச்சி முட்டும் அளவுக்கு குடிங்க குடிங்க என்று குடுத்தார்களாம்.
அதில் மனம் மகிழ்ந்த கடவுள் "தண்ணீர் கேட்டால் குடிக்க கொடுக்காத பால்காரனை தேடி யாரும் வரமாட்டார்கள் இனி அவன் வீடு வீடாய் போய் தான் பால் ஊற்ற வேண்டும், எனக்கு வயிறு முட்ட குடிக்க கொடுத்த சோமபான கடை எங்கே இருந்தாலும் தாறுமாறாய் கும்பல் கும்பலாய் அவர்களே வந்து குடித்து விட்டு போவார்கள்" என்று சாபம் கொடுத்தாராம்.
இதுதான் டாஸ்மாக்கின் கதை 
🍷🍷🍷🍷🍷🍷🍷🍷🍹

Friday, October 16, 2015

100 MINUTES That’ll change THE WAY YOU LIVE

வாழ்க்கையில் நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதாரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் இல்லை. டாக்டர். எல்.பிரகாஷ் எழுதிய ‘100 MINUTES That’ll change THE WAY YOU LIVE’ புத்தகத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டும் இங்கே…
அந்த 100 நிமிடங்கள்! ஆளுமைத் திறன் !!
எதை மறக்கக் கூடாது என்பதில் கவனம் தேவை!
ஆனந்த் தனது ஐந்தாவது திருமண நாள் கொண்டாட்டங்களுக்குத் தனது நண்பர்கள், உறவினர்களை அழைத்திருந்தான். பெண்கள் டி.வி. அறையில் அரட்டை அடிக்க, ஆண்களின் கச்சேரி ஹாலில் களைகட்டிஇருந்தது. பேச்சுவாக்கில் முந்தைய நாள் ஹோட்டல் டின்னர்பற்றி சிலாகித்த ஆனந்த், ”அந்த ஹோட்டல் இங்கேதான் அண்ணா நகர் ரவுண்டானாகிட்டே… பேருகூட நல்ல பேருப்பா! ஆங்… மறந்துருச்சே. இது இந்த ராக்கெட்ல நிலவுக்குப் போச்சே ஓர் அமெரிக்கப் பொண்ணு… அட ‘கஜினி’ படத்துலகூட அசின் பேருப்பா!” என்று யோசிக்க, ‘கல்பனா கல்பனா!’ என்று எடுத்துக் கொடுத்தார் நண்பர் ஒருவர். ”ஆங்! கல்பனா.” என்று பிரகாசமான ஆனந்த், உள்ளே டி.வி. அறை நோக்கித் திரும்பி, ”கல்பனா… கல்பனா மை டார்லிங். நேத்து நாம சாப்பிட்ட ஹோட்டல் பேர் என்னடா குட்டி? சட்டுனு மறந்துருச்சு!” என்றார்!
எல்லாமே நல்லதாக இருந்தால், எங்கோ… ஏதோ தப்பு!
உலகின் ஐந்தாவது பணக்காரர் அவர். நியூயார்க் ஏர்போர்ட்டில் அவர் நுழைந்தபோது தூக்க முடியாமல் இரண்டு சூட்கேஸ்களைக் கைக்கு ஒன்றாகச் சுமந்தபடி சிரமப்பட்டு நடந்துகொண்டு இருந்த ஒருவனைக் கண்டார். அவனிடம் இவர், ”மணி எத்தனை?” என்று கேட்டார். உடனே அவன், அந்த இரண்டு பெட்டிகளையும் கவனமாகக் கீழேவைத்துவிட்டு, தன் முழுக்கை சட்டைக்குள் ஒளிந்திருந்த டிஜிட்டல் கடிகாரத்தில் இருந்து உலகத்தின் முக்கிய நகரங்களின் நேரங்களைத் துல்லியமாகச் சொன்னான். மில்லியனர் ஆச்சர்யம் காட்டவும், ‘இதில் செய்திகளும் வரும்!’ என்று அதன் சின்ன ஸ்க்ரீனில் லைவ் நியூஸ் காண்பித்தவன், அந்த வாட்ச்சில் இருந்தே தன் மனைவியின் செல்போனுக்கு அழைத்துப் பேசினான். பிறகு, அந்த மில்லியனருடன் அந்த வாட்ச்சிலேயே போட்டோ எடுத்துக்கொண்டு அதை அவருக்கு அந்த வாட்ச்சிலிருந்தே இ-மெயில் செய்தான். அசந்துபோன மில்லியனர் எந்தப் பேரத்துக்கும் இடம் கொடுக்காமல், அவன் சொல்லிய விலையைக்காட்டிலும் இரு மடங்கு கொடுத்து அந்த வாட்ச்சை வாங்கிக்கொண்டார். பெருமையாக அந்த வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டு மில்லியனர் நடக்கத் துவங்க, அவரைத் தடுத்து நிறுத்திய அவன், ”நீங்கள் அந்த வாட்ச்சின் பேட்டரியை மறந்துவிட்டுச் செல்கிறீர்கள்!” என்று அந்தக் கனத்த இரண்டு சூட்கேஸ்களைக் காட்டினான்!
சத்தியம் செய்யும் முன் சகலமும் யோசி!
கண்ணாடிக் கடையில் கண்ணின் பவர் பரிசோதிக்கப்படக் காத்திருந்த பெரியவர், கடைச் சிப்பந்தியிடம், ‘புதுக் கண்ணாடி மாட்ட எவ்வளவு நேரம் ஆகும்?’ என்று கேட்டார். ‘அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகும்!’ ‘நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். ஒரு மணி நேரம்தான் ஆகுமா? ஒரு மணி நேரத்துக்குப் பிறகு நான் இந்தப் புத்தகத்தை எழுத்துக் கூட்டி வாசிக்க முடியும்தானே?’ என்று கையில் இருந்த புத்தகத்தைக் காட்டி உறுதி கேட்டார். ‘ம்ம்… 15 நிமிடம் முன்னே பின்னே இருந்தாலும், அதிகபட்சம் ஒன்றரை மணி நேரத்துக்குள் நீங்கள் கண்ணாடி அணிந்து வாசிக்க முடியும்!’ என்றார் சிப்பந்தி. இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்துகொண்ட அந்தப் பெரியவர் இறுமாப்போடு முணுமுணுத்தார்… ‘யாரை ஏமாத்தாப் பாக்குறாய்ங்க… நான் எழுத்துக் கூட்டி வாசிக்க ஆறுல இருந்து எட்டு மாசம் ஆகும்னு முதியோர் கல்வி வாத்தியார் சொன்னானே. கண்ணாடி கைக்கு வரட்டும். வெச்சுக்குறேன் அவனை!’
எதிர்பார்ப்புகளுக்கும் உண்டு எல்லை!
கசக்கிக் கட்ட கந்தைகூட இல்லாத ஏழை அவன். தன் வறுமையைப் போக்க இறைவனிடம் வரம்வேண்டி இமயமலைக்குச் சென்று தவம் இருந்தான். முழுதாக 36 வருடங் கள் கழித்து அவன் முன் தோன்றி னார் இறைவன். ‘அடக் கடவுளே! 36 வருடங்களுக்குப் பிறகுதான் என் பக்தி உன்னை எட்டியதா?’ என்று அவன் கேட்க, மெலிதாகச் சிரித்தார் இறைவன். ‘பக்தா தேவ லோகத்தில் நாளும், நேரமும் மிக மிக மெதுவாகத்தான் பயணிக்கும். பூலோகத்தின் 36 வருடங்கள் தேவலோகத்தில் ஒரு நொடிக்கும் குறைவான நேரம். என்னைப் பொறுத்தவரை நீ தவத்துக்கு என அமர்ந்ததுமே நான் உன் முன் தோன்றிவிட்டேன்!’ உடனே வியப்படைந்த பக்தன், ‘ஆஹா… அப்போ இதேபோல செல்வத்தின் மதிப்பும் பூலோகத்தைக் காட்டிலும் பெருமளவு வேறுபடுமா?’ என்று ஆர்வமாகக் கேட்டான். ‘நிச்சயம் பக்தா. தேவலோகத்தின் ஒரு தங்கக் காசை வைத்து இந்த பூமியையே விலைக்கு வாங்கிவிடலாம்!’ என்றார். உடனே கண்கள் மின்ன, ‘ஆஹா! சாமி இதற்காகத்தானே காத்திருந்தேன்… எனக்கு இரண்டே இரண்டு தங்கக் காசுகள் மட்டும் கொடுங்களேன்!’ என்றார் அந்த பக்தன். ‘ஒரே ஒரு நிமிஷம் பொறு பக்தனே. இதோ வருகிறேன்!’ என்று விஷ்ஷ்ஷ்க்கென மறைந்தார் கடவுள். காத்திருக்கத் தொடங்கினார் பக்தன்!
கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றாதீர்கள்!
ஆளை மூழ்கடிக்கும் வேகத்துடன் வெள்ளம் பாயும் ஓர் ஆற்றங்கரை. மூன்று ஜென் துறவிகள் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டு இருக்கிறார்கள். மடத்தில் புதிதாகச் சேர்ந்த இளந்துறவியும் அவர்களைப் பார்த்து அங்கேயே அமர்ந்து ஜெபம் செய்கிறார். சீனியர் துறவிகளில் ஒருவர் திடீரென எழுந்து ஆற்றின் மீது நடந்து சென்றார். சிறிது நேரத்தில் மற்ற இருவரும் அப்படியே நடந்து செல்கிறார்கள். அதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட இளந்துறவி, தன்னாலும் அப்படி நடக்க முடியும் என்று முடிவெடுத்து ஆற்றுக்குள் கால்வைக்கிறார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறார். அதைப் பார்த்த சீனியர் துறவி ஒருவர் மெல்லிய குரலில் முணுமுணுக்கிறார், ‘ஆற்றுக் குள் கால்வைத்து நடக்க எங்கெங்கு கற்கள் புதைந்திருக்கின்றன என்பதை நாம் அவருக்குச் சொல்லிஇருக்க வேண்டும்!’
எதிர்மறை விளைவுகளுக்கும் தயாராக இருங்கள்!
அவனுக்கு அன்றுதான் திருமணம் முடிந்தது. தன் மனைவியை உயர் ரக அரபுக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச்சென்றுகொண்டு இருந்தான். பாதையில் ஒரு குழியில் விழுந்து எழுந்தது சாரட் வண்டி. ‘முதல் எச்சரிக்கை!’ என்றவன், குதிரையின் முதுகில் சாட்டையில் ஒரு இழு இழுத்தான். சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்தது வண்டி. ‘இரண்டாவது எச்சரிக்கை!’ என்றவன் மீண்டும் சாட்டையால் குதிரையை அடித்தான். மூன்றாவது முறையும் சாரட் பள்ளத்தில் விழுந்து எழ, கோபத்துடன் சாரட்டை விட்டுக் கீழே இறங்கினான். துப்பாக்கியை எடுத்து குதிரை யைச் சுட்டுக் கொன்றுவிட்டான். அதிர்ச்சியடைந்த மனைவிசாரட்டை விட்டு இறங்கி, ‘உனக்கு அறிவே இல்லையா? அந்தக் குதிரை எத்தனை காஸ்ட்லி தெரியுமா?’ என்று கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன், ‘முதல் எச்சரிக்கை!’ என்றான். அதன்பிறகு 40 வருடங்கள் தங்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லாமல், அந்தத் தம்பதி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினார்கள்!

Saturday, September 12, 2015

கண் ஆளுமை சோதனை

இந்த ஒரு வேடிக்கை கண் ஆளுமை சோதனை ! நீங்கள் என்ன கண் எடுக்கப்பட்ட? 1 , 2 , 3, 4 , 5, 6 , 7, 8 , 9 ? நீங்கள் கவரப்படுவீர்கள் நீங்கள் அதிகமாக 1 தேர்வு செய்யலாம் .
இங்கே எழுத அப்களை உள்ளன ! உங்கள் கண் தேர்வு போகின்றன உள்ளதா? நீங்கள் என்ன கண் (கள்) உள்ளன? இது வேடிக்கையாக இருக்கிறது மற்றும் நான் உங்கள் பதில்களை பார்க்க இனி ! இது அனைவருக்கும் வரையப்பட்ட யார் பார்த்து நன்றாக இருக்கிறது!
நீங்கள் 1 வரையப்பட்ட என்றால், ஆழமான கீழே நீங்கள் திறந்த நிலையில் உள்ளன. நீங்கள் உங்கள் வாழ்க்கை மற்றும் இதய கிட்டத்தட்ட யாரையும் வரவேற்க வேண்டும் நபர் வகை இருக்கிறீர்கள் . நீங்கள் ஒரு ஆபத்து எடுத்து உலக பிரிந்து விட காயம் நல்லது என்று நம்புகிறேன். நீங்கள் உலக உங்கள் அச்சத்தை அல்லது பாதுகாப்பற்ற காட்ட வேண்டாம் . நீங்கள், உங்கள் பிரச்சினைகளை தனிப்பட்ட முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன். நீங்கள் உள்ளே வலிக்கிறது என்றால், அனைவருக்கும் முற்றிலும் இருக்க முயற்சி . மற்றவர்களுக்கு உதவி நீங்கள் ஆற எப்படி இருக்கிறது . ( இது எனக்கு இருந்தது)
நீங்கள் கண் 2 தேர்வு செய்தால் , ஆழமான கீழே நீங்கள் நேர்மையான இருக்கிறீர்கள் . நீங்கள் எப்போதும் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்க மற்றும் சரியானதை செய்ய தேடும் நபர் வகை இருக்கிறீர்கள் . உங்கள் நடவடிக்கைகள் எவ்வளவு பெரிய அல்லது சிறிய , அவர்கள், மற்ற மக்களின் வாழ்வில் ஒரு வித்தியாசம் நம்புகிறேன். நீ எப்படி கவலை மற்றும் சோகமாக உலக காட்ட வேண்டாம் . நீங்கள் உங்களை வைத்து வறுமை மற்றும் அநீதி நிறைய பார்க்க . நீங்கள் எவ்வளவு சிறந்த நபர் அர்ப்பணித்து. அதை நீங்கள் இந்த கிரகத்தில் உங்கள் நேரம் செய்ய குறைந்தது தான் .
நீங்கள் கண் 3 தேர்வு செய்தால் , ஆழமான கீழே நீங்கள் சித்திரவதை . நீ இன்றும் நீங்கள் பாதிக்கிறது என்று ஒரு மிக ஒழுங்கீனமான கடந்த உள்ளது நபர் வகை இருக்கிறீர்கள் . நீங்கள் உதவி ஆனால் வாழ்க்கை உடம்பு அண்ட நகைச்சுவையாக சில வகையான என்று நினைக்க முடியாது . நீங்கள் எங்கு நீங்கள் உங்கள் சமாதான கண்டுபிடிக்க முயற்சி . நீங்கள் உலக உங்கள் இருண்ட எண்ணங்கள் காட்ட வேண்டாம் . நீங்கள் தாங்க நிறைய வேண்டும், மற்றும் உங்கள் உங்களை வைத்து . உங்கள் மேற்பார்வை நேரங்களில் வியக்கத்தக்க சன்னி இருக்க முடியும் . நீங்கள் விழும் போது உங்களை எடுக்கவில்லை ஒரு நிபுணர் .
நீங்கள் கண் 4 தேர்வு செய்தால் , ஆழமான கீழே நீங்கள் தத்துவ இருக்கிறீர்கள் . நீங்கள் வாய்ப்பு நபர் வகை என்றால் எல்லாம் எதுவும் நினைக்கிறது . நீங்கள் எல்லாம் ஆழ்ந்த பொருள் பெற விரும்புகிறேன் . நீங்கள் அதை கீழே இருந்து சொல்ல சில நேரங்களில் கடினமாக இருக்கிறது என்று உங்கள் எண்ணங்கள் தொலையும் . நீங்கள் எல்லாம் பற்றி எவ்வளவு உறுதியாக உலகுக்கு காட்ட வேண்டாம் . நீங்கள் விஷயங்களை கண்டுபிடித்து இருக்கலாம், ஆனால் நீங்கள் இன்னும் நம்பிக்கை இருக்கிறது . நீங்கள் ஒரு புதிர் போல வாழ்க்கை பார்க்கிறீர்கள் , அவர்கள் ஒன்றாக பொருந்தும் வரை நீங்கள் துண்டுகளை எடுத்து விளையாட விரும்புகிறேன் . நீங்கள் எப்போதும் பொருள் அனைத்து கண்டுபிடிக்க முடியாது , நீங்கள் என்று நன்றாக இருக்கும் .
நீங்கள் கண் 5 தேர்வு செய்தால் , ஆழமான கீழே நீங்கள் மர்மமான இருக்கிறீர்கள் . நீங்கள் முயற்சி செய்ய திட்டமிட்டுள்ளது யார் வேறு யாருக்கும் , மிகவும் நல்ல அதிர்ஷ்டம் உங்களை வெளியே வந்தார் நபர் வகை தான்! நீங்கள் பல முரண்பாடுகளை ஒரு மேஷ் வரை, மற்றும் உங்கள் மனநிலை தினசரி மாற்றங்கள் . ஒருமுறை காண்பீர்கள் , நீங்கள் வேறு ஒரு மாறிவிட்டேன் . நீங்கள் உங்களை பற்றி மிகவும் உலகத்திற்கு காட்ட வேண்டாம் . நீங்கள் சில வார்த்தைகள் மற்றும் குழப்பமான செயல்களை ஒரு நபர் இருக்கிறீர்கள் . நீங்கள் மட்டும் நீங்கள் உறுதியாக இருக்க என்று சொல்ல உள்ளே நீங்கள் மணி முன்பு மக்கள் பற்றி கண்காணிக்க அறிய விரும்புகின்றனர்.
நீங்கள் கண் 6 தேர்வு செய்தால் , ஆழமான கீழே நீங்கள் பாதிக்கப்படுகின்றனர். நீங்கள் எல்லாம் கவனிக்கிறார் எதுவும் மறந்து நபர் வகை இருக்கிறீர்கள் . நீங்கள் மிகவும் உலக இசைக்கு இருக்கிறீர்கள் . நீங்கள் ஆழமாக உணர , மற்றும் சில நேரங்களில் கோர்த்துக்குது விஷயங்களை நீங்கள் பாதிக்கும். நீங்கள் எளிதாக சிரிப்பு அல்லது கண்ணீர் கொண்டு இருக்கிறது. நீ எப்படி பலவீனமாக இருக்கும் உலக காட்ட வேண்டாம் . நீங்கள் அதற்கு பதிலாக நீங்கள் எப்படி உள்ளார்ந்த மக்கள் காட்டுகின்றன. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்க போகிறது என்ன எதிர்பார்த்து நல்ல இருக்கும். நீங்கள் அடிக்கடி வந்து என்ன பார்க்க முதல் ஒன்று.
நீங்கள் கண் 7 தேர்வு செய்தால் , ஆழமான கீழே நீங்கள் உமிழும் இருக்கிறீர்கள் .
நீங்கள் எப்போதும் ஆற்றல் அல்லது உணர்ச்சி தான் நபர் வகை இருக்கிறீர்கள் . நீங்கள் பற்றி நுட்பமான எதுவும் இதுவரை ... இல்லை. நீங்கள் அன்பு முனைகிகிறீர்கள் அல்லது எல்லாம் வெறுக்கிறேன் . நீங்கள் கருத்துக்களை ஒரு டன் , மற்றும் நீங்கள் விரைவில் உங்கள் மனதை . நீங்கள் உள்ளன என்பதை உலகுக்கு காட்ட வேண்டாம் . நீங்கள் ஆற்றல் நிறைய வேண்டும், மற்றும் அது மிகவும் நீங்கள் மிகவும் நரம்பு இருக்க முடியும் . எல்லாம் நீங்கள் மிகவும் அதிக பங்குகளை ஆகிறது . நீங்கள் உதவி ஆனால் உங்கள் தலையில் நாடகம் கட்டமைக்க முடியாது .
நீங்கள் கண் 8 தேர்வு செய்தால் , ஆழமான கீழே நீங்கள் விசித்திரமான இருக்கிறீர்கள் .
நீங்கள் அசாதாரண நலன்களை , நம்பிக்கைகள், மற்றும் நடைமுறைகளை கொண்ட நபர் வகை இருக்கிறது. நீங்கள் எப்போதும் ஒரு சும்மாதான் ஒரு பிட் இருந்தது . நீங்கள் விதிகள் அல்லது பாரம்பரியம் மிகவும் கவலை இல்லை . நீங்கள் விஷயங்களை உங்கள் வழி செய்ய மற்றும் அவை சில்லுகள் விழட்டும் . நீங்கள் பற்றி உலக எல்லாம் காட்ட . நீங்கள் மறைக்க எதுவும் இல்லை , மற்றும் நீங்கள் தீர்ப்பு சிரிப்பேன். நீங்கள் எல்லோரும் உன்னை போல் இருந்தது விரும்புகிறேன். ஒரு அல்லாத conformist இருப்பது மகிழ்ச்சி நிறைய இருக்கிறது .
நீங்கள் கண் 9 தேர்வு செய்தால் , ஆழமான கீழே நீங்கள் உள்ளுணர்வு . நீங்கள் நன்றாக மற்ற மக்கள் மற்றும் உலக புரிந்து நபர் வகை இருக்கிறீர்கள் . நீங்கள் எனக்கு எவ்வளவு மீது விட வேண்டாம் . நீங்கள் ஒருவரின் முக பாவனைகளை அல்லது குரல் தொனியில் இருந்து நிறைய சொல்ல முடியும் . நீங்கள் பொய் என்ற போது நீங்கள் எப்போதும் எனக்கு தெரியும் . நீங்கள் காட்ட வேண்டும் என்பதை உலகத்திற்கு காட்ட . மக்கள் படித்து நல்ல தவிர, நீங்கள் படிக்க படுகிறோம் எப்படி தெரியும் . நீங்கள் சூழ்ச்சி போது தெரியும் , மற்றும் நீங்கள் வேண்டும் என்றால் யாராவது கையாள எப்படி தெரியும் . நீங்கள் வழக்கமாக என்றாலும் அது நாட வேண்டாம்! ( இந்த என் இரண்டாவது தேர்வாக இருந்தது )

Monday, August 10, 2015

விரிந்திருக்கின்ற பூமியெங்கும் பாதைகள்...


நடந்தால் பாதை; படுத்தால் படுக்கை!

பாதைகள்... விரிந்திருக்கின்ற பூமியெங்கும் பாதைகள்...www.v4all.org

ஒரு வழிப்பாதை... இருவழிப்பாதை.. நான்கு வழிப்பாதை ... ஆறுவழிப் பாதை என்று பாதைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றிற்கிடையில் அவசர வழிப்பாதைகளும் அங்கங்கே உண்டு.

அனைத்துப் பாதைகளிலும் பயணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஒவ்வொரு பாதையிலும் ஒவ்வொருவிதமான பயணம். பாதைகளில் பயணங்கள் நல்லதுதான். அதுவும் விபத்துகள் இல்லாத பயணங்கள் மிகவும் நல்லதுதான்.

பயணங்களால் தேசங்கள் இணையும். கட்டப்பட்டிருக்கின்ற தடுப்புச் சுவர்கள் உடையும். மனிதநேயம் மலரும். அன்பும் அரவணைப்பும் பெருகும். பண்பாடுகள் பரிமாறப்படும். வாழ்க்கைத் தரம் உயரும்.

ஒரு பயண மொழி "ஒருவன் மரணத்திற்கு முன்னதாக பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும். பத்தாயிரம் மைல்கள் நடந்திருக்க வேண்டும்''. இது சீனநாட்டின் பழமொழி. அவர்களின் வாழ்வியல் பயணமொழி.

இனிய இளைஞனே! இந்த இரண்டும் இப்போது உனக்கு வேண்டும்.

புத்தகங்கள் கலங்கரை விளக்குகள். நல்ல பாதையை நாள்தோறும் காட்டும். நடை நோய்க்குத் தடை. நடைதான் உனக்கான விடையையும் தரும். அதனால் இந்த இரண்டும் இப்போது உனக்குத் தேவை.

மாவீரன் அலெக்சாண்டர் எட்டு ஆண்டுகளில் பதினெட்டாயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளான். நான்கு பெரிய நதிகளைக் கடந்துள்ளான். அப்போது அவன் கண்களுக்குத் தெரிந்திருந்த மொத்த உலகமும் அவனுக்குச் சொந்தமாக இருந்தது. பயணங்கள்தான் அவனது வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளது. அத்துடன் அவன் தேர்ந்தெடுத்த பாதைகளும்தான்.

உனது பயணமும் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பயணமாய் இருக்கட்டும். ஓடிக் கொண்டிருந்தால் தான் நதி. ஓரிடத்தில் தேங்கி விட்டால் அது குளம். குளத்தில் தேங்கிய நீர் நாற்றமெடுக்கும். நோய்களைப் பரப்பும். அது போல்தான் வாழ்க்கைப் பயணத்தில் தேங்கிப் போகிறவர்களும் குளத்தின் நீரைப் போலத்தான் இருப்பார்கள். ஓடிக்கொண்டே இருக்கும் நதிதான் தூய்மையாக இருக்கும். அதுதான் ஊருக்கு உதவும்.

கவிஞர் கல்யாண்ஜியின் ஒரு கவிதைப் பயணம்...

இக்கரைக்கும் அக்கரைக்கும்
பரிசில் ஓட்டிப் பரிசில் ஓட்டி
எக்கரை என்கரை என்று மறக்கும்
இடையோடும் நதி மெல்லச் சிரிக்கும்

இயந்திரமயமாகிப் போன பயணத்தில் எப்படியாவது பொருள் தேடும் அவசரத்தில் மாற்றுப்பாதையில் வாழ்வியல் விழுமியங்களை இழந்து கொண்டிருக்கின்ற சாரமற்ற வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளது இக்கவிதை.

இரவு பகலாக அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் மாறிமாறிப் படகுப் பயணம் செய்வதால் எந்தப் பக்கம் தன்னுடைய சொந்தப் பக்கம் என்ற உணர்வும் இல்லாமல் போகிறது. படகுக்காரனின் பரிதாபத்தைப் பார்த்து இயற்கையின் இளவரசியாய்த் திகழும் நதிப் பெண் தன் இதழ் விரித்து மெல்லச் சிரிப்பதாகக் கவிஞன் பேசுகிறான்.

ஆம்! பணத்தைத் தேடி அலையும் பாதைகளில் அன்பும், பாசமும் இயற்கையின் நேசிப்பும், அனைத்தும் கேள்விக் குறிகளாகிவிட்டன. இதுதான் இன்றைக்குப் பலரின் பயணங்களாகிவிட்டன.

இனிய தோழனே!

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நதியின் பாதையும் பயணமும், ஓடக்காரரின் பாதையும் பயணமும் வெவ்வேறு விதமானவை. நீ போகிற பாதையை நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கனவே பழக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள் வழியே போக நினைத்திருக்கின்றீர்களா? அல்லது தொடக்கத்திலேயே பழக்கப்பட்ட பாதையில் போகாமல் வேறு வழியில் போக நினைக்கிறீர்களா? அல்லது சிறிது தூரம் அந்த வழியே போய்விட்டுப் பிறகு விதிமுறைகளை உடைத்தெறிய நினைக்கின்றீர்களா? அது உங்கள் விருப்பம்.

உங்கள் விருப்பம் எதுவானாலும் பார்த்துப் போவதற்குக் கண்கள் ஒளியுடன் இருக்க வேண்டும். நடந்து போவதற்குக் கால்கள் வலுவுடன் இருக்க வேண்டும்.

நதி நடந்து போவதற்கு யார் பாதையைப் போட்டுக் கொடுத்தார்கள். மலையில் பொழிந்த மழைநீர் ஆறாக ஓடத் தொடங்கியதுடன் தானாக ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டுதான் ஓடுகின்றது. பாறைகளை உடைத்துக் கொண்டும், மண்ணை இருபுறமும் கரை சேர்த்துக் கொண்டும் தன் பாதையில் எதிர்ப்படுகின்ற மரங்கள், செடிகள், விலங்குகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு தனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்துகின்றது. நதிக்குள் இருக்கும் ஒரு சக்தியைப்போல் உனக்குள்ளும் வாழ்வதற்கு ஒரு சக்தி இருக்கின்றது. நதியின் பாதையாய் உனது பாதையை உருவாக்கிக்கொள்.

எளிமையான ஒருவெற்றிப் பாதையை உனது விழிகளுக்குக் காட்டுகின்றேன். மனதில் தோன்றும் எண்ணங்கள்தான் பாதையை தீர்மானிக்கின்றன. தாமஸ்மோர்ட் என்னும் ஆஸ்திரேலியர் குளிர்சாதனப் பெட்டியை முதன் முதலில் கண்டுபிடித்தவர். கண்டு பிடிப்பதற்குக் காரணம் எளிமையான எண்ணம் தான்.

இறந்து போன மிருகம் உறைபனியினுள் புதைந்து போய் கொஞ்சமும் கெடாமல் இருந்தது என்ற செய்திதான். இதனை ஆதாரமாகக் கொண்டு புதுவிதமான முறையில் ஏதாவது கண்டுபிடிக்க இயலுமா? என்று அவர் எண்ணினார். மிருகமே கெடாமல் இருந்தால் அன்றாடப் பொருட்களை குளிர் அறைக்குள் வைத்தால் அவை எப்பொழுதும் போலவே இருக்கும் என்று நம்பினார். அதன் வழியே ஆய்வைத் தொடர்ந்தார். பலரும் நகைத்தார்கள். அவரோ தன்னுடைய எண்ணத்தில் உறுதியாக இருந்தார். இப்படித்தான் `பிரிஜ்ஜைக்` கண்டுபிடித்தார் . இதுவும் நடந்து செல்கையில் கிடைத்த ஒரு பாதைதான்.

சில நேரங்களில் எந்தப் பாதையில் செல்வது என்று குழப்பத்தில் நீந்திக் கொண்டிருப்பதை விட ஏற்கனவே போடப்பட்ட பாதைகளில் பயணிப்பது சுலபம்தானே. அதற்கு வெற்றி பெற்றவர்களின் பாதைகளைப் பின்பற்றுங்கள். அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூர்ந்து கவனியுங்கள். இதுவும் வெற்றிக்கான ஒரு பாதைதான்.

இதோ, கடந்து வந்த ஒரு பாதையின் கதை. கலில்ஜிப்ரானின் உருவகக் கதை. ஒரு பள்ளத்தாக்கில் இரண்டு நீரோடைகள் பேசிக் கொண்டன. ஒரு நீரோடை மற்றொரு நீரோடையைப் பார்த்து "நண்பனே! நீ எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தாய். நீ வந்த பாதை எப்படியிருந்தது'' என்று கேட்டது.

அதற்கு அந்த நீரோடை, "என் வழி மிகவும் கடினமானதாக இருந்தது. நீர் இரைக்கும் இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கினேன். அது பிறகு உடைந்துவிட்டது. வாய்க்கால் வழியாகவே வந்தேன். வயலுக்கு நீர் பாய்ச்சும் விவசாயி இறந்துவிட்டார். வயலுக்குப் பாயவில்லை. வீணாகப் பொழுது போக்கும் மக்கள் வாழும் பகுதி வழியாக எப்படியோ கஷ்டப்பட்டு இங்கு வந்து சேர்ந்தேன்.''

"ஆமாம்! நீ கடந்து வந்த பாதை எப்படி இருந்தது?''

அதற்கு மற்றொரு நீரோடை சொன்னது. "எனது பாதை மிகவும் வித்தியாசமானது. நான் மணம் பரப்பும் மலர்கள் நிறைந்த பாதை வழியாகவும் மெல்லிய செடி கொடிகள் படர்ந்துள்ள தரை வழியாகவும் வந்தேன். பலரும் வழியில் என்னை விரும்பி மொண்டு குடித்தனர். குழந்தைகள் தங்கள் பட்டுப் பாதங்களை என் மீது தொட்டுத் தொட்டு வைத்து மகிழ்ந்தனர். வழியெங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் அது. எப்படி உன் பாதை துன்பமாக இருந்தது கேட்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றது.

இவ்வாறு இந்த நீரோடைகள் பேசிக் கொண்டிருக்கையில் ஆறு உரக்கக் கூறியது.

வாருங்கள், வாருங்கள் நாம் எல்லோரும் கடலுக்குப் போகிறோம். இனிமேல் எதுவும் பேசாதீர்கள். இப்போது என்னுடனே இருங்கள். நீங்கள் வந்த பாதை மகிழ்ச்சியானதா, துன்பமானதா என்ற பாகுபாடு இல்லாமல் நாம் எல்லோரும் கடலுக்குள் போகிறோம். நீங்களும் நானும் நம் அன்னையாம் கடலின் இதயத்தினுள் சேரும்போது கடந்து வந்த பாதையை மறப்போம்'' பயணத்தின் நிறைவு இது தான்.

இலக்கை நோக்கிய பயணத்தில் இடைïறுகளைக் கண்டு அஞ்சாதீர்கள். சேரும் இடத்தைப் பொறுத்துப் பயணம் சிறப்புப் பெறலாம். ஆம். கோயிலுக்குள் போனதும் தண்ணீர் தீர்த்தமாகிறது. சாதம் பிரசாதமாகிறது. சாம்பல் திருநீறாகிறது. இது போல் ஒவ்வொரு பயணத்தின் பாதையும் இருக்கட்டும்.

அந்தப் பயணத்தை நோக்கி நடந்து கொண்டே இருங்கள். வெற்றி தேவதை உங்கள் முகவரியை விசாரிக்கத் தொடங்கும் வரை நடந்து கொண்டே இருங்கள். பாதங்கள் நடக்கத் தயாராக இருந்தால் பாதைகள் மறுப்புச் சொல்லப் போவதில்லை. உழைப்பின் ரதங்கள் ஓடி வரும் பாதையில் தடையாக வைத்திருக்கும் கற்கள் தூள் தூளாகும்.

இந்தப் பயணத்தைப் பற்றி கவிஞர் மு.மேத்தா.

தூங்கி எழுந்தால்
பூமி உனக்குப் படுக்கையாகிறது
விழித்து நடந்தால்
அதுவே உனக்குப் பாதையாகிறது!
ஒளி குறைந்த வீதியில்
நடக்கும் போதும்
உன் விழிகளுக்கு வழி தெரியும்
இதயத்தில் தீபம்
எரிந்து கொண்டிருந்தால்!

ஆம்! இந்த நம்பிக்கை தீபத்தை விழிகளில் ஏற்றுங்கள். இந்தப் பூமியெங்கும் புதையல்கள் புதைந்து கிடக்கின்றன. அதை எடுக்க வேண்டாமா? உருண்டோடிக் கொண்டிருக்கின்ற இந்தப் பூமிப்பந்தில் நீ தான் பூமத்திய ரேகை. இப்பொழுதே பயணத்தைத் தொடங்குங்கள். இந்தப் பூமியில் நீ நடந்தால் பாதை... படுத்தால் படுக்கை. பாதைகளும் பயணங்களும் உங்களுக்குள்தான் இருக்கின்றன.

பேராசிரியர் க.ராமச்சந்திரன்

Friday, August 7, 2015

வராகி மாலை - 32 பாடல்

வராகி மாலை - www.happy4all.org

              வம் வராஹ்யை நமஹ
                 

இந்த வராகி மாலையில் இருக்கும் 32 பாடல்களை தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு ஒருமுறையும்,இரவு ஒருமுறையும் மனதிற்குள் பாடினாலே அன்னை வராகி(அரசாலை)யின் அருள் நமக்கு பூரணமாக கிட்டிவிடும்;அசைவம்,மது இவைகளை நிரந்தரமாக கைவிட்டப்பின்னரே இந்த பாடல் பாடத் துவங்க வேண்டும்;
முதலில் ஒம் (உங்கள் குலதெய்வம்) நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஒம் கணபதி நமஹ என்று ஒருமுறையும்
பிறகு ஒம் (உங்கள் இஷ்ட தெய்வம்) நமஹ என்று ஒருமுறையும் நினைத்து ஜபித்தப் பிறகு பாடத் துவங்க வேண்டும்;

1.வசீகரணம்(தியானம்)
இருகுழை கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்த்ர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறந்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப்புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர் கொண்டு தோள் மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்)
நடுங்காவகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும் காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்டு
ஆடும் பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோண்மணி வராகி நீலி தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண் தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக் காலத்துமே
ஆலயம் எய்தி வராகி தன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசனம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க் காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழித்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப்போக விட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்ம பூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகி என் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மது மாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறை யோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப்பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும் வெம்பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்பீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்( ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்( துட்டபந்தனம்)
பாடச் சீறாடிப்பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர்வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஒலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக்கிரை இடுவாள் கொன்றை வேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகி என் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டுப் பொரித்தத் தலை
நெரிப்பாள்தலை மண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடாகிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக்காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக் கள வாழ்த்து(பத ஞானயோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண்டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே

26.படைநேமி வாழ்த்து(சிந்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவார் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனைநினை யாதவரே

27.அடியார் வாழ்த்து(அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர்நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகி நற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும்
மருப்புக்குநேர்சொலும் கொங்கையும்மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்(கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப்பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட்டவர்க்கு வினைவருமோ? நின் அடியவர் பால்
மாறிட்டவர் தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட்டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்(ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரி அயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம் செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே

31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள் கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவ ஞான யோகம்)
சிவ ஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுரநாயகியே

எந்த ஒரு பில்லி,ஏவல்,சூனியம்,மாந்திரீகம் பாதிப்பிலிருந்து முழுமையாக மற்றும் நிரந்தரமாக மீண்டு நிம்மதியாக வாழ இந்த வராகி மாலையை காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் பாட வேண்டும்;வாலை தரிசனம் செய்ய விரும்புவோர் வாரம் தோறும்/மாதம் தோறும் இந்தப் பாடல் பாடும் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும்;மனதில் யாருக்கும் தீங்கு நினைக்காதவர்களால் மட்டுமே இந்த பாடலை தினமும் பாட முடியும் என்பது அனுபவ உண்மை;


Saturday, July 11, 2015

மூளைக்கு என்னென்ன தேவை


மூளைக்கு என்னென்ன தேவை




**காலை உணவு**


காலை உணவை கண்டிப்பா சாப்பிடணும்... தவிர்க்காதீங்க... இரவு முழுக்க உணவில்லாமல் இருப்பதால் நமது ரத்தத்தில் சக்கரை அளவு குறையும் வாய்ப்பு இருக்கிறது.

காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் நமது மூளைக்கு செல்லும் சத்துக்கள் குறைவதால் மூளை மந்தமாக ஆவது நிச்சயம்!

ஓவரா சாப்பிடாதீங்க! ரொம்ப அதிகமா சாப்பிடறவங்களுக்கு ஒரு முக்கிய அவசர அட்வைஸ்.
உடனடியா ஓவரா சாப்பிடறதை நிறுத்துங்க. ஏன்னா மூளையில இருக்கும் ரத்த குழாய்கள் இறுகிடுமாம். இதனால் ரத்த ஓட்டம் குறைஞ்சு மூளை கொஞ்சம் மெதுவா தான் வேலை செய்யுமாம்!


**புகை பிடிக்காதீங்க**


ஸ்டைலுக்கு என்று ஆரம்பிச்சு வாழ்க்கைய கரியாக்கிற இந்த புகை பழக்கத்தை விட்டிருங்க! பல மூளை குறைபாடுகளை உண்டு பண்ணும். இறுதியில் அல்ஜீமர்ஸ் நோயில் தள்ளிடும்!


**அதிக சர்க்கரை ஆபத்து***



ரொம்ப சக்கரையும் கெடுதல். அதிக இனிப்பு, குறிப்பா சக்கரை இனிப்புகள், புரதங்களையும், சத்துகளையும் நம்ம உடம்பு ஏற்றுக் கொள்வதை குறைச்சிடுமாம். இதனால் மூளை வளர்ச்சி கூட பாதிக்கபடுமாம்!


***அசுத்தமான காற்று***


நமது மூளைக்கு மிக மிக தேவை ஆக்ஸிஜன். 4 நிமிடங்களுக்குள் மூச்சு இல்லை என்றால் நமது மூளை மீட்க முடியாத நிலைக்கு, அதாவது கோமாவிற்கு சென்று விடும்.
நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் பெரும் பகுதி மூளைக்குத் தான் செல்கிறது. அதனால் சுத்தமான காற்றை சுவாசிக்காவிட்டால் மூளை மச்கர் செய்வது நிச்சயம்.

** தூக்கம்***


8 மணி நேர தூக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம் நமது மூளைக்கு. நாம் தூங்கும் போது தான் மூளைக்கும் ஓய்வு. நாம் அதிக நேரம் தூங்காம அதிக நாள் இருந்தா நமது மூளை செல்கள் கொஞ்சம் கொஞ்சமா அழியும் அபாயம் இருக்காம்.
நல்லா தூங்குங்க. மூளைக்கு ஓய்வு கொடுங்க! அப்பத்தான் மூளை சுறுசுறுப்பா இயங்கும்!


**முகத்தை மூட வேண்டாம்**


தூங்கும் போது முகத்தை மூடாதீங்க! சரியான படி தூங்க வேண்டும். நாம முகத்தை இறுக மூடி கொண்டு அல்லது தலை மேல போர்வையை  போர்த்தி கொண்டு தூங்கினால் நாம் அதிக ஆக்ஸிஜனை சுவாசிக்காம கார்பன்டை ஆக்சைட்டை தான் சுவாசிப்போம்.
இதனால் நிச்சயம் மூளை பாதிக்கப்படும்.


***நெக்ஸ்டு...ரெஸ்ட்டு..



உடம்பு சரியில்லைன்னா ரெஸ்ட் எடுங்க! உடம்பு சரியில்லைன்னா அதிக உழைப்பு அல்லது அதிக படிப்பு மூளைய சோர்வடைய செய்யுமாம். மூளைய வீக் ஆகிடுமாம். ஜாக்கிரதை.


**திங்க் பண்ணுங்க***


நிறைய எண்ணங்கள் ரொம்ப முக்கியம். நினைப்பு தான் நம்ப மூளைய சுறுசுறுப்பா வெச்சிருக்குமாம். அதனால் பல விதமா ‘திங்க்! பண்ணுங்க. இல்லைன்னா உங்க மூளை சுருங்கிடுமாம். சிந்தியுங்க மக்களே!


**விவாதிங்க***


பட்டிமன்றம் தேவை. விவாதங்கள் ரொம்ப முக்கியமாம். மூளை சுறுசுறுப்பிற்கும் வளர்ச்சிக்கும். பட்டிமன்றம், திண்ணைபேச்சு, கிசு கிசு பக்கங்கள் இனி தைரியமா பங்கேற்கலாம். படிக்கலாம், ரசிக்கலாம் தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான்!