கருப்பு மஞ்சளின் அற்புத பலன்கள்
கருப்பு மஞ்சள் நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய பிரதேசத்தில் கிடைக்கும் அற்புதமான தாந்த்ரீக மஞ்சள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட ஒன்று. கிடைப்பது கொஞ்சம் அரிது. இதை தாந்த்ரீக வழிமுறைகளில் பல விஷயங்களுக்கு உபயோகப்படுத்துவதுண்டு. மேலும், இதை காளியின் அம்சம் கொண்டதாக கூறுவது வழக்கம். மேலும் இதை காளி மற்றும் பைரவர் உபாசணைக்கும் பயன்படுத்தலாம். இதை வைத்திருப்போருக்கு செய்வினை, எதிர் மறை சக்திகளின் தீண்டல் அறவே இருக்காது. கோர்ட்டுகளில் வழக்குகளை சந்தித்து வருவோருக்கு மிக முக்கியமான பாதுகாவலாகவும் வெற்றியை தேடி தரும் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. வீட்டில் சதா சண்டை சச்சரவு தம்பதிகளுக்குள் நிகழ்ந்து வந்தால், இருவரும் இதை முகத்தில் அரைத்து தேய்த்து வந்தால், சச்சரவுகள் தீரும்-அதாவது மிக முக்கியமாக இது ஜன வசியம் செய்யக்கூடியது ஆகும். முத்தாய்ப்பாக இதை மேலே கொடுக்கும் எதற்கும் அல்லாமல் பலர் இதை தன வசியத்திற்காகவே உபயோகப்படுத்துகின்றனர். பணத்தை வசீகரிக்கும் தன்மையை உடைய இதை வட மாநிலங்களில் தினமும் நெற்றியில் இட்டு செல்வர்-பண தேவைகளுக்கு செல்லும் பொழுது. மேலும் இதை ஆட்காட்டி விரலில் ஊசியால் சிறிது குத்தி குருதி எடுத்து அத்துடன் குழைத்து நெற்றியில் இட எப்பேர்ப்பட்ட வராத பணமும் வந்து சேரும் என்பதாகவும் கூறப்படுகிறது. எம் அனுபவ ஆராய்ச்சியை பொருத்த வரை இது மிகுந்த நல்ல விஷயங்களை இதை அணிபவருக்கு அளித்து வருகிறது என்பதே உண்மை-மேலும் ராகு,குரு ஜாதகத்தில் அல்லது நடப்பு திசையில் அல்லது கோட்சாரத்தில் பலவீனமாக இருந்தால் இதை தினசரி நெற்றியில் இட்டு வர, மற்றும் தன்னுடன் வைத்து கொண்டு வெளியே செல்ல பலவீனங்கள் குறைந்து நன்மைகள் பெருகும் என்பது கண்கூடு.
No comments:
Post a Comment