எங்கள் ஊரில் வீடு கட்டும் போதே, வீட்டிற்கு வெளியில் இடதுபக்கம், ஒரு சின்ன சாமி சிலையை வைத்து விடுவர்.
சகல அலங்காரத்துடன் உட்கார்ந்து இருக்கும் அவரை பார்த்து வணங்கி விட்டு தான், வீட்டின் உள்ளே வர இயலும். தானாகவே, ஒரு விதமான அமைதியும், நிதானமும் நமக்கு வந்துவிடும். ஏதாவது கோபமோ, எதிர்மறையான எண்ணங்களோ மனதில் இருந்தால் கூட,
நம் வீட்டுக்குள் வருபவரிடமிருந்து, அது காணாமல் போய்விடும்.
'என்னங்க... இது, ஆன்மிகக் கட்டுரையா...' என்று, தாண்டிப் போய்விடாதீர்கள்;
ஒரு வகையில், இது தெய்வீகமானது; தெய்வம் சம்பந்தப்பட்டது என்பதையும் தாண்டி, நம் மனதிற்கு தொடர்புடையது என்பதையும் நம்புங்கள். ஒரு வேலையை துவக்குவதற்கு முன், மனதார தியானித்து, பின் துவக்கினால் தெளிவு, நிதானம் நமக்கு வரும் என்பது,
நம் மனம் தொடர்புடையது தானே!
கடமையை செய்; பலன் கிடைக்கும்
சமீபத்தில், உறவினர்கள் அனைவரும், ஒரு மலைக்கோவிலுக்கு போயிருந்தோம். மலை அடிவாரத்தில், எங்களின் காலணிகளை ஒரு இடத்தில் மொத்தமாக விட்டுவிட்டு போக ஆயத்தமானோம்.
என் உறவினர் பெண் ஒருவர், 'கவலைப்படாதீர்கள்; இது சாமியோட இடம், யாரும் களவாடிக்கிட்டு போயிடமாட்டாங்க... நாமெல்லாம், அந்த அம்மனை பார்க்கத்தானே கஷ்டப்பட்டு மலை ஏறி போகிறோம். அதனால, நம்ம பொருளை, அந்த அம்மன் பார்த்துப்பா...' என்று வேடிக்கையாக கூறினார். நாங்களும், 'அட... அதுவும் சரி தான்' என்று நினைத்தோம்.
ஆனால், எங்களுடன் வந்த ஒரு பெரியம்மா, 'நீ சொல்றது, நம்பறது எல்லாம் சரி தான். ஆனால், சாமி பார்த்துப்பார் என்று நீ அஜாக்கிரதையாக இருந்தால் எப்படி? உன் கடமை என்னவோ, அதை நீ ஒழுங்காக செய்துவிடு; அதற்கான பலனை, கடவுள் சரியாக தருவார். அதனால், உங்கள் பொருட்களையெல்லாம் ஒரு ஓரமாக, அந்த செடிகளுக்கு மத்தியில், மறைவாக வைத்துவிட்டு மலையேறுங்கள்' என்று கூறியதும், ஒரு கணம் யோசிக்க வைத்தது.
கடவுள் என்கிற ஏதாவது ஒரு உருவத்தை மட்டும் மனதில், நினைவில் நிறுத்தி வழிபாடு செய்யாமல், 'நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது' என்று நம்பி, வாழ்க்கையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து நடக்க, நாம் கற்றுக் கொண்டாலே போதும்.
கடவுள் நம்பிக்கை அவசியம்
உண்மையும், உழைப்பும், அர்ப்பணிப்பும் ஒன்று தான்; அதன் பலன் தான், பல வடிவங்களில், பல வழிபாட்டு முறைகளில் பார்க்கப்படுகிறது. நம் முன்னோர், ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு வழிபாடு முறை வைத்திருப்பது போல், ஒவ்வொரு காரியத்திற்கும் பலன் நிர்ணயித்திருப்பர். வாழ்க்கை ஏற்றம், இறக்கம் கொண்டது என்பதை உணர்த்தும் நோக்கில் தான், மலையுச்சியிலும், மலையடிவாரங்களிலும் நிறைய கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விசேஷம், விரதம், வழிபாடு முறை என, நாம் நிறைய ஆன்மிக செயல்களில் ஈடுபட்டாலும், கடவுளையே நினைத்து உருகினாலும், இந்த நம்பிக்கை என்பது நம் உற்சாகத்தை, உழைப்பை, சுறுசுறுப்பை தூண்டிவிடும் தீக்குச்சியாக இருக்க வேண்டும்; நம் வேலை, தானாகவே நடக்கும்.
'ஏற்றப்பட்ட விளக்கை விட, ஏற்றி வைத்த தீக்குச்சியே உயர்வானது' என, கவிக்கோ அப்துல் ரகுமான் கூறி இருக்கிறார். இங்கு நம் வாழ்க்கை, ஒளி வீசும் விளக்காக இருக்கட்டும்; கடவுள் நம்பிக்கை என்பது, அந்த ஒளியை ஏற்றி வைத்த தீக்குச்சியாக இருக்கட்டும்!
Yours happily
Dr.Star Anand ram
www.v4all.org

No comments:
Post a Comment