Thursday, June 4, 2015

ஆலயம் என்றால் என்ன?

ஆலயம் என்றால் என்ன? என்பதைப் பற்றிப் பார்ப்போம்
ஆ + லயம்
ஆ - ஆணவமலர் ( எ) ஆன்மா ( அ) உயிர் ஆகும்
லயம் - அடங்கி இருப்பது ஆகும்
ஆண்டவன் திருவடி இன்பத்தில் ஆன்மா எப்போதும் லயிப்பதற்குரிய இடம் ஆகும்
உலகம் எங்கும் உள்ள தெய்வம் மானிட சரீரத்திலும் உள்ளார் என காட்டும் புற சின்னமே ஆலயம் ஆகும்
உலகிலும் ( அண்டத்திலும்) உடலிலும் ( பிண்டத்திலும்) உள்ள தத்துவத்தை விளக்கும் ஆலயத்தின் மூல அமைப்பு சரீரத்தின் தத்துவங்களுக்கு ஒத்து இருத்தல் வேண்டும்
இதய அமைப்பு உடம்பு அமைப்பு போல் திருக்கோவில்கள் ஆகமங்களை ஒட்டியே நிர்மானம் செய்பவை ஆகும்
திருக்கோவிலுக்குள் நாம் செல்ல காரணம் யாது? என்பதைப் பற்றிப் பார்ப்போம்
மிருகத் தன்மையை ( விலங்குத் தன்மையை) ஒழித்து மனிதத்தன்மையை அடக்கி தெய்வத்தன்மையை ஓங்கச் செய்வதே கோவிலுக்கு செல்வதின் முக்கிய நோக்கம் ஆகும்
கோவில்
கோ + இல்
கோ - கடவுள் ( இறைவன்)
இல் - தங்கும் இடம் ( அ) குடியிருக்கும் இடம் ( அ) வீடு ஆகும்
திருச்சிற்றம்பலம்.

www.v4all.org

No comments:

Post a Comment