Sunday, June 14, 2015

காவடி வகைகள்

காவடியாட்டம் என்பது முருக வழிபாட்டுடன் தொடர்புடைய ஒரு ஆட்டம் ஆகும். இந்த ஆட்டத்தில் ஆடுபவர் காவடி எனப்படும் பொருளைத் தோளில் வைத்துக்கொண்டு ஆடுவார். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. முருகன் கோவிலுக்குச் சென்று காவடி எடுப்பதாக பக்தர்கள் நேர்த்தி வைப்பது உண்டு. கோவில்களில் காவடி எடுப்பதில் இளவயதினரிலிருந்து பெரியவர் வரையிலான பலரும், பங்கேற்பர். வழிபாட்டின் கூறாகத் தோன்றிய காவடியாட்டம் பிற்காலத்தில் தொழில்முறை ஆட்டமாகவும் வளர்ச்சி பெற்றது. எனினும் வழிபாட்டுத் தொடர்பான காவடியாட்டம் அல்லது காவடியெடுத்தல் இன்னும் பரவலாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. தொழில்முறைக் காவடியாட்டம் பொதுவாகக் கரகாட்டத்தின் ஒரு துணை ஆட்டமாக இடம் பெற்று வருகின்றது

காவடி வகைகள்

ஆறுமுக காவடி
பால் காவடி
பன்னீர்க் காவடி
மச்சக் காவடி
சர்ப்பக் காவடி
பறவைக் காவடி
தூக்குக் காவடி

அருள் மிகு பழனி முருகன் சன்னதிக்கு பல்வேறு வகையான காவடி எடுத்து வருவதை நம் பார்த்திருப்போம் . ஆன்னல் சர்ப்ப காவடி என்னும் நாக பாம்பினை வைத்து எடுக்க படும் சர்ப்ப காவடி பார்ப்பது அரிது. சர்பா காவடி எடுக்கும் திரு. துரைராஜ் வீடியோ இது. கடந்த 5 வருடங்களாக சார்பா காவடி எடுத்து வருகிறார்.
சார்பா காவடி என்பது மற்ற காவடி போல அல்லாமல் அதிக விரதம் மற்றும் முருகன் உத்தரவு இருந்தால் மட்டுமே எடுக்க முடியும். சப்ப காவடிக்கான பாம்பை நம் தேர்வு செய்ய முடியாது. விரதம் இருந்து குறிபிட்ட காட்டில் நம் வேண்டி அழைத்தால் தானாக வரும் . அதன் வாயினை தைக்காமல் அதன் போக்கிலே எடுக்க வேண்டும். அவ்வாறு சர்ப்ப காவடி எடுக்கும் பொது நாக தோஷம் உள்ளவர்கள் கழுத்தில் அணிந்து எடுத்தல் தோஷம் விலகிடும். சகலவிதமான முன்னோர் சாபங்களும் நீங்கிவிடும் என்பது ஐதீகம் .

1 comment: