இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று கடன்!
தனிநபர்களிடம் வாங்கிய கடனில் இருந்து வங்கிக்கடன், லீசிங், கட்டுப்பணம், வாகனக்கடன் என வகைதொகையான கடன்கள் வர்களின் வருமானத்தை விழுங்கிக்கொண்டிருப்பதாக புலம்பி தலைமேல் கைவைத்துக்கொண்டிருப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.

இதை எல்லாம் விலக்கி நம்மிடம் பணம் புரளவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என பல நிபுனர்கள் விளக்கங்களை முன்வைத்துள்ளனர்.
முதலில் எல்லாமாக உங்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது என்பதை பார்த்துக்கொள்ளவேண்டும். கடனிலே மூழ்கி இருக்கும்போது பணத்தை சேர்க்க எங்கே வாய்ப்பு என நீங்கள் கேட்கலாம்! முதற்கட்டமாக கடன்களை எப்படி அடைப்பது என்பது பற்றி திட்டமிட்டு செயல்பட தொடங்கவேண்டும்.
உலகில் நீங்கள் பார்த்து வியக்கும் பெரும் கோடிஸ்வராகள் எல்லாம் ஆரம்ப காலங்களில் பெரிய அளவில் கடன் வர்கியவர்கள்தான். ஆனால அவர்கள தமது கடன்களை அடைக்க புதிய புதிய யுத்திகளை கையாண்டனர். புதிய முயற்சிகளில் ஈடுபட்டவாகள், திட்டமிட்டு செயற்பட்டபோது, கட்டுப்பாடாக பணத்தை கையாண்டு கடன்களை அடைத்து பெரும் பணத்தினை சம்பாதித்துக்கொணடனர்.
கடன்வாங்குவது பெரும் தவறுதான் யாரும் அதை இல்லை என மறுக்கப்போவதில்லை எனினும் கடன் வாங்கியதை ஒரு தீராத சுமையாக நினைத்து தலையில் கைவைத்துக்கொண்டு புலம்புவதால் அடையப்போவது எதுவும் இல்லை.
கடன் வாங்கியது உங்கள் வாழ்க்கைப்பயணத்தில் பெரும் தோல்வி என நினைத்துக்கொள்ளவேண்டும். அதே தோல்வியை விரைவாக திருத்திக்கொண்டு எமக்கு தேவையான பணத்தினை நாமே உழைத்துக்கொள்ளமுடியும் என்பதை எப்போதும் மறந்துவிடக்கூடாது.

முதலில் உங்கள் கடன்களை அடைத்துமுடிந்தபின்னர் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கான பாதுகாப்புக்கான பணத்தினை ஒதுக்கிக்கொள்ளுங்கள். பிள்ளைகளின் கல்விக்கு ஒரு பகுதி பணத்தினை கண்டிப்பாக ஒதுக்குங்கள். அதேபோல எதிர்பாராத மருத்துவ செலவுக்கு என ஒரு பகுதி பணத்தினை எப்போதும் தயாராக வைத்திருங்கள். எப்படி தேவையில்லாத செலவுகளை தவிர்த்துக்கொள்வது என்பதை நிதானமாகச்சிந்தியுங்கள். அவற்றை இனங்கண்டு அந்த செலவுகளை குறைத்தால் பணத்தட்டுப்பாடு மெல்ல மெல்ல நீ;குவதை கண்ணூடாக காண்பீர்கள். கௌரவ, ஆடம்பரச்செலவுகளை ஒரேயடியாக இல்லாது செய்யுங்கள்.
கடன் என்பது தோல்வியின் அடையாளம்! என்றாலும் அதையே ஒரு சவாலாக ஏற்று கடனை அடைக்க விறுவிறுப்பாக முயல்வது நல்ல பலனைத்தரும்.
வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தோல்வி அடையாமல், வெற்றியினை காணமுடியாது. நாம் செய்யும் தவறுகளை திருத்தி அமைக்கும்போது வெற்றியினை அடையமுடியும். ஆனால் ஒரு தடவை செய்த தவறை திரும்பத்திரும்ப செய்யக்கூடாது என்பதை நன்றாக நினைவில் வைத்திருங்கள். கடனில்லா பெருவாழ்வு வாழ திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.

No comments:
Post a Comment