வீட்டில் குபேர வாசல் திறக்கச் செய்வோம்...
இது என்ன புதிய கதையாக இருக்கிறது. குபேர வாசல் என்று ஒன்று உண்டா? அதைத் திறப்பது எப்படி என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். வீடு என்றால் உயிரை காத்துக் கொள்ள நாம் புகுந்து கொள்கிற சாதாரண கூடு என்று மட்டும் நினைத்துக் கொண்டுள்ளோம்.
வீடு என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் நவக்கிரகங்களும், எண் திசைக் காவலர்களான இந்திரன், நிருதி வாயு, குபேரன் ஆகியோர் சுற்றி வந்து ஆட்சி செய்கின்ற இடம் என்று பொருள். அந்த இடத்தில் தெய்வ அருள்நிலை பெற்றிருக்க வேண்டும் இல்லாவிட்டால் வெற்றிடமாகி (சூன்யம்) விடும் அந்த வீடு.
ஒரு நண்பரின் வீட்டுக்குச் சென்று வந்தால் நல்ல அமைதியான சூழலில் அமைந்து சாந்தமான மனநிலையையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் உருவாக்கித் தர வேண்டும். கிரகம் (வீடு) என்பதற்கு வினைகள் நெருங்காத தெய்வாம்சமும் பாதுகாப்பும் நிறைந்த நல்ல எண்ணங்களை உருவாக்கக் கூடிய கூடம் என்று பொருள்.
கிரகம் என்பதற்கு நவக்கிரகங்கள் ஆட்சிபுரியும் பீடம் என்றும் கூறலாம். எனவே தான் கிரகப்பிரவேச காலங்களில் நவக்கிரக ஹோமம் செய்து வழிபடுகிறோம். வீட்டில் பணம் சேரவில்லை. பதவி உயர்வு தாமதமாகிறது குழந்தைப்பேறு கிடைக்கக் காலம் நெருங்கவில்லை. பெண்ணுக்குத் திருமணமாக நாள் வரவில்லை என்று பல குடும்பங்கள் இன்று புலம்புவதோடு பல பரிகார பூஜைகளைச் செய்கிறார்கள்.
முதலில் குடியிருக்கும் வீட்டில் தோஷங்கள் இருக்கிறதா என்று பாருங்கள். இதை சரிசெய்து விட்டாலே நாம், நம் வீட்டில் குபேர வாசலை திறந்து விட்டதாக அர்த்தம். வீட்டில் குபேரன் அருளால் செல்வம் பெருக, வாஸ்து சாஸ்திரப்படி சங்கு ஸ்தாபனம் செய்து பார்க்க வேண்டும்.
பெரிய கம்பெனி, ïனிட் கட்டுவோர் மட்டுமின்றி கிரகத்தில் சல்லிய, தோஷம், வாஸ்து தோஷம் உள்ளதென்று சொல்வோரும் வலம்புரிச் சங்கை சாஸ்திரப்படி பூஜை செய்தால் வளம் காண முடியும். மனையடி சாஸ்திரத்தின் சூட்சுமங்களாகக் கூறும் ஆதிகால நூலில் இந்த ரகசியம் உள்ளது.
www.v4all.org
www.v4all.org
No comments:
Post a Comment