தலைமைத் திறன்
தன்னளவில் ஒரு திறமை கொண்டு அதில் சாதனைகள் கண்டு வாழ்வில் வெற்றி காண்பது ஒரு வகை மற்றவர்களின் பலம் பலவீனம் உணர்ந்து அவர்களின் பலத்தை (அல்லது அவர்களுள் புதைந்துள்ள திறமையை அறிந்து வெளிக் கொணர்ந்து) இலட்சியத்தை அடைந்து வெற்றி காண்பது இன்னொரு வகை
தனக்கு பாதை வகுத்துக் கொள்ள தெரிந்தவனே மற்றவருக்கு பாதை வகுத்து கொடுக்க முடியும் அதைப் போல தன்னை கையாளத் தெரிந்தவனாலேயே பிறரைக் கையாள முடியும் மற்றவர்களை திறமையாக ஆக்கபூர்வமாக கையாளத் தெரிந்தவர்களே தலைவர்களாக அவர்களை ஒரு இலட்சியப் பாதையில் அல்லது ஒரு இலக்கை நோக்கி வழி நடத்தி செல்ல கூடியவர்களாகின்றனர்
தலைமைத் திறன் என்பது ஒரு தனித் திறமையானாலும் அதை அடைய பல தனித் திறமைகள் அவசியமாகின்றன முதலில்; தன்னை உணரும் திறன் பிறரை உணரும் திறன் தன்னை பிறருக்கு உணர்த்தும் திறன் மற்றவர்களுடன் ஆக்கபூர்வமான முறையில் தொடர்பு கொள்ளக் கூடிய திறன் மற்றவர் மனதில் ஆக்க பூர்வமான நேர்;மறையான பாதிப்புகளை ஏற்படுத்தும்; திறன் மற்றவர் மீது சரியான முறையில் ஆக்கபூர்வமான முறையில் அதிகாரம் செலுத்தும் திறன்
இத் திறன்கள் மட்டுமே ஒருவனைத் தலைவனாக வழிநடத்தும் தகுதியுடையவனாக ஆக்கிவிடாது அதற்கு சில மிக முக்கியமான தகுதிகளும் விசேட குண நலன்களும் அவசியமாகின்றது சுய ஒழுக்கம் சுய கட்டுப்பாடு நேர்மை நாணயம் தியாக மனப்பான்மை அவற்றுள் முக்கியமானது
ஒரு இலக்கை அடைவதற்கு தேவையான வழி முறைகளை திட்டமிட்டு அதற்கு தேவையான கொள்கைகளை வகுத்துக் கொண்டு குறித்த நேரத்தில் குறித்த முறையில் இலக்குகளை அடைய செய்யுமாறு மற்றவர்களை கையாளும் திறமையும்; தலைமை நிலையில் நின்று செயலாற்ற தேவையான தகுதியாகின்றது
மற்றவர்களிடமிருந்து தலைமைத் திறனுடையவர்கள் எவ்வகையில் மாறுபடுகின்றார்கள் என்பதை ஆராய்ந்தால்; தலமைத் திறன் பெற என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விடை கிடைத்து விடும் இங்கே தலமைத் திறனுடையவர்கள் விசேட குணங்கள் விசேட பழக்க வழக்கங்;கள் கொள்கை மேன்மை போன்றவற்றைப் பாhக்கப் போகின்றோம் அவர்களுடைய தனிக் குணங்களை ஆராயும் போது அதை மற்றவர்கள் எப்படி வளர்த்துக் கொள்வது என்பதற்காக சில யோசனைகளும் வழி முறைகளும் தரப்பட்டுள்ளன
தலைமை திறனுடையவர்களின் விசேட குண நலன்கள்
1. தொடர்ந்து கற்றபடி இருத்தல்
அனுபவங்களே அவர்களுக்கு முதற் பாடம் அதிலிருந்து எப்போதும் அவர்கள் கற்றபடியே இருப்பர் காதுகளையும் கண்களையும் நன்கு பயன்படுத்தக் கூடியவர்கள் தெரியாத விடயங்களை எப்படியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வமுடையவர்கள் அடுத்தவர் பேச வருவதை செவி கொடுத்து கேட்கும் பழக்க முடையவர்கள் எதையும் தெளிவாக புரிந்து கொள்ளும் வரையில் ஆர்வத்துடன் சந்தேகங்களை கேள்விகளை எழுப்பி தெளிவு பெற விளைவர் தங்கள் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே இருப்பர் (இந்த திமையை போதும் என்று சமாதானமடைய மாட்டார்கள் ) புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதில் பெறும் அர்வம் காட்டுவர் தான் எல்லாம் அறிந்தவர் என்ற மமதை கொள்ளாதவர்
இத் தகுதியை வளர்த்துக் கொள்ள நாம் செய்ய வேண்டியது மனம் எப்போதும் தன் போக்கிலே போய்க் கொண்டிருப்பதினாலே நாம் உபயோகமற்ற விடயங்களுக்கு அதிக நேரத்தை செலவழித்து தேவையான விடயங்களுக்கு நேரமில்லை என்று புலம்புகிறோம் முதலில் உங்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் முதலில் ஒரு செயலை தேர்ந்தெடுத்து (ஒரு புத்தகம் படிப்பதையோ ஒரு விடயம் பற்றி தகவல் சேகரிப்பதையோ ) அதை இந்த காலத்தினுள் முடிப்பது என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள் (முதலில் சின்ன சின்ன விடயங்களாக தேர்ந்தெடுப்பது பின் கடினமான விடயங்களுக்கு மாறலாம்) உங்களால் எடுத்துக் கொண்ட உறுதியை எடுத்துக் கொள்ளும் போது உங்கள் மீதான கட்டுப்பாடு வளரும் உங்களுக்கு தேவையானவற்றை கற்கவும் ஆர்வம் வளரும்
நேர்மயைனான அணுகு முறை இவர்களின் எந்தவொரு அணுகு முறையும் உற்சாகமானதாக மகிழ்;சியானதாக இனிமையானதாக இருக்கும் நேர்மையானதாக நம்பிக்கை மிகுந்தனவாக இருக்கும் இவர்களின் நேர்மையான அணுகுமுறை மற்றவர்களையும் உற்சாகப்படுத்துகிறது இவர்களுடைய ஆர்வம் நம்பிக்கை மகிழ்ச்சி அவர்களையும்; தொற்றிக் கொள்கிறது அதனாலேயே மற்றவர்களுக்கு இவர்கள் மீது ஒரு வித ஈர்ப்பும் நம்பிக்கைத் தன்மையும் ஏற்படுகின்றது
இத் தகுதியை வளர்த்துக் கொள்ள நாம் செய்ய வேண்டியது உங்கள் அணுகு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் ஒன்றை செய்யும் முன்னர் அதைப் பற்றி மனதில் நன்றாக யோசித்து எந்த முறையில் எண்ணங்களை வெளிப்படுத்துவது செயலைச் செய்வது அறிவுரை வழங்குவது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் நேர் மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் அதன் அடிப்படையில் உங்கள் சிந்தனையில்;;;;;;;; செயல் இருக்க வேண்டும் என்று உயுதியெடுத்துக் கொள்ள வேண்டும்
மற்றவர் மீது நம்பிக்கை வைத்தல் எல்லேர்ருக்கும் பலவீனம் என்பது பொதுவான ஒரு விடயம் அந்த பலவீனத்தின் பாதிப்பால் முட்டாள் தனமாக செயல்களை செய்யக் கூடும் வார்தைகளை கொட்டக் கூடும் அதே நேரத்தில் ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்கும் திறமையும் அவர்களுக்குள் புதைந்து இருக்கும் தலமைத் திறனுடையவர்கள் அவர்களுடைய பலவீனங்களை பெரிதாக மதிக்காமல் அவர்களுடைய திறமையை மதிப்பவர்களாக இருப்பார்கள் அவர்களுடைய அத் திறiயை அவர்களே உணருமாறு செய்து அவர்கள் மீதே நம்பிக்கையும்; உறுதியும்; உண்டாகுமாறு செய்யக் கூடியவர்கள்
வாழ்கையை ஆர்வத்துடன் எதிர் கொள்ளல் வாழ்கை அவர்களுக்கு ஒரு சாகசம் எதையும் அப்போதுதான் பார்ப்பது போல் புதிதாக பார்ப்பவர்கள் புதிய புதிய உலகங்களை எல்லைகளை தேடித் திரியும் கண்டுபிடிப்பாளர்கள் போல் வாழ்கையை அணுகுபவர்கள் நாளை என்ன நடக்க கூடும் என்பது நம்மைப் போலவே அவர்களுக்கும் தெரியாது ஆனால் சுவாரசியமான ஆரோக்கியமான ஒன்றாக ஆக்கபூர்வமாக ஒன்றாக அது இருக்கும் என்று நம்புவார்கள் தங்கள் அறிவு ஆக்கத்திறன் உறுதி தைரியம் இவற்றை பாதுகாப்பு அரணாக கருதுபவர்கள் அவர்கள் மக்களைப் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடமிருந்து நல்ல விடயங்களை தெரிந்து கொள்ள கற்க தயங்காதவர்கள் தங்கள் வெற்றி தோல்விகளைப் பெரிது படுத்தி பிரச்சாரம் செய்ய மாட்டார்கள் அத்தனை சுலபமாக அதிகாரத்திற்கும் ஆணவ ஆணைகளுக்கும் அடி பணிய மாட்டார்கள் எதிலும் விலகி நிற்க தெரிந்தவர்களல்ல எதனோடும் தன்னை பொருத்திக் கொள்ளவும் முடிந்தவர்கள்
தம்மைப் புதுப்பித்துக் கொள்ளல் வாழ்கையில் எதிலும் ஒரு சமநிலையை காண்பவர்கள் மிதமான வாழ்கையை ஆரோக்கியமான வாழ்iகையை வாழ்பவர்கள் தங்கள் உடலைப்போலவே மனதையும் ஆரோக்கியமானதாக ஆக்;கபூர்வமானதாக வைத்துக் கொள்ள பல வித பயிற்சிகளை செய்பவர்கள்
தங்கள் பழக்க வழக்கங்களை உணர்;சியை வெளிப்படுத்தும் முறைகளை அணுகு முறைகளை எப்போதுமு; கூர்ந்து கவனிப்பர் அதிலேதும் குற்றம் குறை கண்டாலோ மற்றவர்கள் சுட்டிக் காட்டினாலோ அவற்றை மாற்றிக் கொள்ள சிறிதும் தயங்காதவர்கள் ஒவ்வொரு நாளும் தங்களை புதியவர்களாக பாவிப்பவர்கள் ஒரே செயலை பல முறை எந்தச் சோர்வுமின்றி திரும்பத் திரும்ப செய்ய முடியும்;
தலைமைத் திறனுடையவர்களின் விசேட பழக்கவழக்கங்கள்
விழிப்புணர்வு சுய அறிவுடன் இருத்தல் ஒரு செயல் தோல்வியில் முடிந்து விட்டால் நம்மில் பெருமு;பாலானோர் அந்தத் தோல்விக்கான காரணம் வேறு நபர் அல்லது நிகழ்வு சூழ்நிலை இப்படி வேறு ஏதாவது ஒன்றின் மீது சுமத்திவிட்டு தான் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே பார்ப்பார் அதற்கு பதில் இந்தக் தவறின் காரணம் என்னுள் இருந்து வந்தது ஆனால் என் திறமை எனக்கு தெரியும் இந்த தவறை என்னால் திருத்திவிட முடியும் என்ற சிந்தனையை உங்களின் செயல்பாட்டை மேன்படுத்தி அது தோல்வியடையும் வாய்ப்பை குறைக்கிறது இது உங்களை அதிக பொறுப்புடையவர்களாக ஆக்கத்தோடு மற்றவர்களை சிறப்பாக செயல்பட வைக்கும் திறமையும் தருகின்றது
உறுதி எந்த விடயம் முக்கியமானது எது முதலில் செயற்படுத்த வேண்டியது என்பதை அறிந்து அதை வேறெந்த காரணத்திற்காகவும் மாற்றாமல் அதற்கு முன்னுரிமைக் கொடுத்து செயல்படுத்தும்; உறுதி நம்முடைய பிறருடைய அர்த்தமற்ற சந்தோசங்களுக்கு அடி பணிந்து அது தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் தராதிரிப்பதற்கு நிச்சயம் தீவிரமான உறுதி வேண்டும்
தான் புரிந்து கொள்ளப்பட பிறரைப் புரிந்து கொள்வது மற்றவர்களை ஆழமாக கவனித்து அதன் மூலம் அவர்களைப் புரிந்து கொள்ளல் இது மிக முக்கிய பழக்கமாகும் நீங்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்ளாமல் அடுத்தவர்களை உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பாhக்கக் கூடாது புரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்கள் சொல்வதை முழு மனதுடன் கேட்க வேண்டும் அவ்வாறு கேட்கும் போதே மற்றவர்க்கு உங்கள் மீது நல்ல அபிப்பிராயம் மதிப்பும் ஏற்படும் பிறகு அவர் உங்களை புரிந்து கொள்ள எந்த தடையும் இருக்காது
அடுத்தவரை மதித்தல் தான் தான் பெரியவன் எந்த செயலும் தன்னால்தான் தன் மூலமாகத்தான் நடைபெற வேண்டும் என்று எண்ணாமல் அடுத்தவர் திறமைகளை மதிக்க வேண்டும் அவர்களிடம் பொறுப்பகளை நம்பிக்கையுடன் பகிர்ந்தளிக்க வேண்டும் அவருடைய யோசனைகளுக்கு அபிப்பிராயங்களுக்கு மதிப்பளித்து பேச அனுமதிக்க வேண்டும்
ஒருவரின் முதுகிற்குப் பின்னால் தவறாக பேசுதலை தவிர்க்க வேண்டும் எவரோடும் முரண்பாடு தோன்றும் பட்சத்தில் அவரை நேரில் சந்தித்து தங்கள் முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் பழக்கம் வேண்டும்
கடைசியாக எப்போதும் தங்கள் திறமைகளை வளாத்துக் கொள்ளும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும் இது தான் நம் எல்லை இவ்வளவுதான் நமக்கு என்று ஒரு குறுகிய வட்டத்துள் அடங்கி விடக் கூடாது இதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் அதற்கான திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் புதிய விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் திருத்திக் கொள்ள வேண்டும் எப்போதும் உங்களை புதுப்பித்துக் கொள்ளும் பழக்கம் மிகவும் அவசியமானகின்றது இந்த பழக்கம் இல்லாது போனால் இங்கே பேசப்படும் வேறேந்த விடயமும் அர்த்தமற்றது இங்கே சொல்லப்பட்டவை சொல்லப் போகும் விடயங்கள் உங்களை மேன்படுத்திக் கொள்ள உதவும் அதே வேளையில் அடுத்தவரை மேன்;படுத்தி அவர்கள் சிறப்பாக செயலாற்ற உதவும் படியாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
மற்றவர் மதிப்பைப் பெற சில யோசனைகள் மற்றவரிடம் ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டுமானால் அவர் உங்களுக்கு சாதகமான முறையில் வினையாற்ற வேண்டும் அது உங்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டுமெனில் உங்கள் மீது அந்த நபருக்கு மதிப்பு இருக்க்க வேண்டும் அவர் மனதில் மதிப்பேற்க வேண்டுமாயின் அவர் மனதில் நேர்மையான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் இது மற்றவர்கள் உங்களை எப்படிப் பார்கிறார்கள் மற்றவர்கள் உங்களை எப்படி உணர்கிறார்கள் மற்றவர்கள் எப்படி உங்களை அறிகிறார்கள் என்ற 3 விடயங்களை அடிப்படையாகக் கொண்டது இவை உங்களை தலமைத்திறமைக்கு தேவையான அடிப்படை விடயங்கள் என்று சொல்லலாம் சரி மற்றவர் மனதில் நேர்மையான பாதிப்பை ஏற்படுத்த என்ன செய்வது என்று பார்ப்போம்
1) இனிமையற்ற அல்லது எதிர்மறையான வர்தைகளை தவிர்த்தல் :-
மற்றவர் உங்களை ஆத்திரமூட்டும் போதும் சரி கோபமூட்டும் படியும் சரி அதே வேகத்தில் கடுமையான வார்தைகளை அல்லது உணர்ச்சிகளை கொட்டாமலும் அவர் மனம் குறுகி விடும் படியாக பதிலளிப்பதையும் தவிர்த்து விட்டாலே போதும்; அது மற்றவர் தன் கோபத்தின் நியாய நியாயமின்னைப் பற்றி யோசிக்க வைத்து விடும் அவர் தன் தவறை உணர சந்தர்ப்பம் தருவதாக அமையும் உங்களின் நடவடிக்;கைகள் உங்களுக்கு மதிப்பை ஈட்டித் தரும்
2) பொறுமையுடன் அணுகுதல் :-
சூழ் நிலை உங்களை பொறுமை இழக்க வைக்கலாம் அந் நிலையில் என்ன செய்கின்றோம் என்ன சொல்லியிருக்கின்றோம் என்று தெரியாமலே வார்தைகளையும் உணர்ச்சிகளையும் கொட்டி விட்டு பிறகு அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாதே என்று வருந்தும் படி நடப்பதை தவிர்க்க வேண்டும் பொறுமை என்றால் சூழ் நிலைக்கு அடி பணிவதில்லை அடுத்தவர் தவறை கண்டு கொள்ளாதது அல்லது சூழ்நிலையை படிப்படியாக அணுகுவது அதை நன்கு புரிந்து கொண்டு எங்கே என்ன திருத்தப்பட வேண்டும் என்று ஆராய்தறிவது தவறு செய்தவரே தன் தவறை உணர்ந்து அவன் அதை திருத்தி கொள்ள வாய்ப்பளிக்கிறது
3) சேவை மனப்பான்மை
மற்;றவருக்கு எந்த பிரதிபலனும் பராமல் உதவும் மனப்பான்மையை நீங்கள் செய்யவும் உதவிகள் அவர் மனதிலே மதிப்பை விதைப்பதோடு உங்களுக்காக பணி செய்யும் போது மனமுவந்து முழு ஈடுபாடுடன் அதில் பங்கு கொள்வர்
4) கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுதுல்
கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவது மற்றவர்க்கும் உங்கள் மீதான நம்பிக்;கையை வளர்க்கிறது உங்கள் செயல் மீதும் கருத்துகள் மீதும் நம்பிக்;கை கொள்ள வைக்கிறது அது உங்களால் நிறைவேற்ற முடிந்த வாக்குறுதி என்பதை தேர்ந்தெடுக்கும் அறிவு நிச்சயம் இங்கே தேவைப்படுகின்றது அதற்கு நீங்கள் உங்களைப் பற்றி தெளிவாக புரிந்திருக்க வேண்டும் இது முடியும்; இது முடியாது என்ற விடயங்களை தெரிவிக்க வேண்டும்
5) உங்களைப் பாதிக்கும் விடயங்களில் கவனம் செலுத்துக
என் நிலமையைப் புரியாமல் அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருக்கின்றோம் இப்படி புலம்பும் நேரத்தில்; உங்கள் நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வைக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும் யார் அல்லது என்ன விடயங்கள் உங்களை எப்படி பாதிக்க கூடும் என்பதை உங்களால் அறிய முடியும் பட்சத்தில் அவர்களை அல்லது அந்த சூழ் நிலையை அதற்கு தக்கபடி எதிர் கொள்ள உங்களை தயார் செய்து கொள்ளவும்
6) பிரதிபலன் பாராது நேசிப்பது
ஒரு மலர் மற்றவர் யார் என்ன என்று விமர்சிக்காமல் தன் வாசம் வீசுவது போல ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரிடம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நேசம் செலுத்துவது பல அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தும் அது நீங்கள் எதிர்பாராத விதத்தில் உங்களுக்கு சாதகமான நன்மைகளை ஏற்ப்படுத்தும்;
7) மற்றவர் மீது நம்பிக்கை வைத்தல்
எல்லோரிடத்திலும் குறைகளும்; நிறைகளும் இருக்கும் ஒருவருடைய குறையை மட்டுமே பார்க்கும்; பட்சத்தில் அவரின் நிறைகளை பார்க்க தவறி விடுகின்றோம் அந் நிலையை வெளிக் கொணர்வதன் மூலம் அவருக்கும் அதன் மூலம் நமக்கும் நன்மை செய்கின்றோம் என்பதை மறந்து விடக்கூடாது மற்றவர்களுக்குள் புதைந்துள்ள திறமையை அறிவது என்பதே மற்றவர்களுக்குள் புதைந்துள்ள திறமையை அறிவது என்பதே ஒரு தனித்திமை இது போதும் பிற தனிக் திறமைகளை வளர்த்துக் கொள்ள ஒரு போதும் தயங்கக் கூடாது இது போன்ற தனித் திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்ளாத பட்சத்தில் தலமைத் திறனை வளர்த்துக் கொள்ளவதும் சிரமமானதாகவே இருக்கும்
8) மற்றவர்களை புரிந்து கொள்ளுதல்
மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும்; திறமை இதற்கு முக்கியம் மற்றவர்கள் சொல்வதை ஆழமாக கவனிக்கும் உங்களுடைய ஆர்வமே அவர்கள் முழுமையாக நம்பிக்கை வைக்க உதவும் நீங்கள் முழுமையாக அவர்களை புரிந்து கொண்டீர்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டால்தான் உங்களால் அவர் மனதில் நேர்மையான பாதிப்பை ஏற்படுத்த முடியும்
9) மற்றவர் மனம் திறந்து பாராட்டுதல்
மற்றவர்களின் நியாயமான கேள்விகள் உணர்வுகள் அபிப்பிராயங்கள் பெரும்பாலும் அவமானப்படுதத்ப்பட்டு விடுகின்றன ஆனால் பெரும்பாலும் மற்றவர்கள் மனதை உறுத்துவதால் எதிர்மறையான விளைவுகளையே சிந்திக்கின்றது அப்படியெல்லாம் நீங்கள் அவர்களை ஊக்குவிக்கும்; வகையில் உற்சாகப்படுத்தும் வகையில் பாராட்டும் போது பலர் நேர்மையான முறையில் தங்களை முன் வைக்க முன் வருவர்
10) காயப்படுத்துபவரை காயப்படுத்தாதீர்கள்
காரணம் அது பிரச்சனையை வளர்க்குமே ஒழிய தீர்காது யாரேனும்; உங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காயப்படுத்தும் வகையில் நடந்து கொள்கிறார்கள் என்று உங்களுக்கு தெரிய வரும் போது பழிவாங்கும் விதத்தி;ல் நடந்து கொள்ளாமல் முதலில் அந்த நபரை அழைத்து அவர் நடத்தையால் காயப்பட்டதை உணர்த்துங்கள் (இது அடுத்தவர் மீது குற்றம் சாட்டுவதைப் போல் இல்லாமல் விடயத்தை அப்படியே சொல்வதன் மூலம் அவரின் தன் மானம் பாதி;க்கப்படுவதாக அவர் உணர மாட்டார்; அது பிரச்சனையை தீர்க்க உதவியாக இருக்கும்; ) அவரின் செயலுக்காக காரணத்தை அறிந்து தீர்வு காண முயலுங்கள்
11) தவறுகளுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேளுங்கள்
ஒரு தவறு நேர்ந்து விட்டால் அதற்கு தானும் ஓர் முக்கிய காரணம் என்று அறிந்திருந்தால் ஒரேயடியாக அடுத்தவர் மீது பழி போட்டு விடாமல் உங்கள் தவறை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளுங்கள் அதற்காக மன்னிப்பு கேளுங்கள் இதனால் நீங்கள் இழக்கப் போவது எதுவுமில்லை மாறாக மற்றவர் பாதிப்பை பரிசாகப் பெறுகிறீர்கள்
தவிர்க்க வேண்டிய விடயங்கள்
நீங்கள் ஒரு செயலை முயற்சியை இயக்கத்தை நிறுவனத்தை வழி நடாத்திச் செல்லும் போது கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய விடயங்கள் சில வருமாறு
� உங்களுடைய பங்களிப்பு எதுவுமில்லாமல் ஒரு முயற்சியின் பலனை மட்டும் அனுபவிக்க நினைப்பது
� மற்றவர் மீது எந்த அக்கறையும் இன்றி உங்கள் சந்தோசத்தை மட்டும் பிரதானமாக கருதுவது
� நல்ல ஒழுக்கம் நடத்தையின்றி அறிவை மட்டும் அடிப்படையாக கொண்டு தான் ஒன்றை வழி நடாத்த தகுதியுடையவன் என்று நினைப்பது
� ஒரு ஓழக்கக் கொள்கை பண்பாடு இல்;லாமல் ஒரு இயக்கத்தை நிறுவனத்தை உருவாக்குவது
� மனதிற்கு மதிப்பளிக்காத விஞ்ஞானத்தை ஆதரிப்பது அதன் படி மற்றவர்களை வழி நடாத்தில் செல்வது
� தியாக மனப்பான்மை இன்றி மற்றவருக்கு சேவை செய்வதாக கூறிக் கொள்வது
� கொள்கை இன்றி ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்குவது
12 அர்த்தமற்ற விவாதங்களைத் தவிர்த்தல்
அர்த்தமற்ற விவாதங்கள் குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்க முயலாதீர்கள் அது தேவையற்ற வாக்குவாதமாகி மேலும் பல தேவையற்ற பிரச்சனைகள் உண்டாக காரணமாகி விடுமே ஒழிய எந்த வித ஆரோக்கியமான உறவிற்கும் வலி வகுக்காது
13 எல்லோரையும் சமமாக அணுகுவது
அவரவர்க்கு உரிய நேரத்தை செலவிடுங்கள் நேரமில்லை என்று சொல்லி யாரையும் நிராகரிக்காதீர்கள் உங்கள் முயற்சிகளில் யாருடைய பங்களிப்பெல்லாம் முக்கியமானது என்று உணர்கிறீhர்களோ அவர்களுடனான உறவை மேன்படுத்திக் கொள்;ள அவர்களை தனித்தனியாக சந்தித்து பேசுங்கள் அவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள் இந்த தனியக்கறை ஒரு தனி மதிப்பை உங்கள் மீது ஏற்படுத்திவிடும்
14. எது முக்கியம் என்று பாருங்கள்
உங்களுக்கும் மற்றவருக்கும் ஒரு முரண்பாடு ஏற்படும் பட்சத்தில் அங்கே எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று யோசியுங்கள் உங்கள் உறவுக்கா? அல்லது முரண்பாட்டை ஏற்படுத்திய விடயத்திற்கா என்பதை பார்க்க வேண்டும்;
15. மற்றவர்களை அவர்களாக பார்க்கப் பாருங்கள்
ஒருவர் மீது நாம் எதிர்பார்ப்புகளை திணிக்காமல் நம் கற்பனையில்; அவர் இப்படித்தான் என்று உருவகிக்காமல் அவரை அவராக பார்க்க வேண்டும் மற்றவர்களை வேறெவரோடும் ஒப்பீட்டுப் பார்க்கும் பழக்கத்தினை கைவிட வேண்டும்
16. வார்தைகளை தயாராக்குவதற்கு முன் மனதால் தயாராகுங்கள்
சில வேளைகளில் நாம் என்ன சொல்கின்றோம் என்பது கவனிக்கப்;படுவதில்லை அதை எப்படி சொல்கிறோம் என்பதை முக்கியத்துவம் பெற்று விடுகிறது எந்தெந்த சூழ் நிலையை எவ்வகையில் எதிர் கொள்வது என்பதற்கு முதலில் தயார்படுத்திக் கொள்ளுங்கள் இந்த சூழ் நிலையை என்ன இனிமையாக்கலாம் என்ற முடிவிற்கு வரும் முன் உங்கள் மனதை உற்சாகமானதாகவும் முகத்தை இனிமையானதாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள தயாராகுங்கள்
17. சண்டையிடுவது � தப்பித்துக் கொள்ள முயல்வது
இரண்டையும் தவிர்;க்க வேண்டும் சண்டையிடுவது கோபமாக விவாதிப்பது பிரச்சனையை மேலும் பெரிதாக்கிவிடும் அது வன்முறையாகவோ பெரும் பகையுணர்வாகவோ பரிணமித்து விடக் கூடும் அதே போல ஒரு குழு நிலையில் இருந்து தப்பித்து ஒட முயற்சிப்பது எந்த விதத்திலும் பயனளிக்காது மாறாக மற்றவர்களுக்கு உங்கள் மீதுள்ள மதிப்பை நம்பிக்கைகயை குறைத்து விடும் உங்கள் ஒரு காரியத்தில் பங்கு கொள்ள தயங்க வைக்கும் அதே போல பொறுப்புகளையும் தட்டிக் கழிப்பது மிகப் பெரிய தவறாகும் அது எத்தனை கடினமானதாக ஆனபோதும் பொறுப்பென்று ஆன பிறகு அதற்கான முயற்சியில் தீவிரத்துடன் ஈடுபட வேண்டும் அதன் வெற்றி தோல்விகள் இங்கு முக்கியமல்ல் முயற்சியே முக்கியம்
18. மற்றவருக்கு கற்பிக்க தெரிந்த சூழலைத்; தேர்ந்தெடுத்தல்
ஒரு விடயத்தை மற்றவருக்கு கற்பிக்க வேண்டுமாயின் அதை நீங்கள் நினைத்த மாத்திரத்தில் செய்து விட முடியாது அதற்கான தகுந்த கால நேரம் பார்க்க வேண்டும் மற்றவர்கள் மனதில் அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் அவர்களுக்கு புரிய வைக்க முயல்வது தவறு அதை தவிர்க்கவே அவர்கள் முனைவார்கள் அது போல நீங்;கள் கோபமாக பதற்றமாக இல்லாத நேரத்தில் நீங்கள் உங்களை இனிமையாக உற்சாகமாக உணரும் போதே கற்பிக்க முயல வேண்டுமே ஒழிய அவனுக்கு நீச்சல் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது ஒருவுர் தனக்கு உதவி ஆதரவு வேண்டும் என்று முன் வரும் போது அவர்களுக்கு உதவுவதே சிறந்த பலனை அளிக்கும்
19. எதை ஏற்பது எதை தவிர்ப்பது
இதில் தெளிவாய் இருங்கள் பொறுப்பற்ற நடத்தைகளை மன்னிப்பது அல்லது அனுதாபம் தெரிவிப்பது மற்றவர்;களை மேலும் பலவீனப்படுத்தி விடுமே ஒழிய அவர்களுக்கு எந்த நன்மையும் செய்யாது அதே நேரத்தில் அவர்கள் நடத்தைக்காக ஒரேயடியாக தண்டிப்பதை தடுப்பதும் எந்தப் பயனும் அளிக்காது மாறாக அவரது தவறான நடத்தையை மாற்றிக் கொண்டு அவருக்கு உதவ வேண்டும்
20. உங்களுக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்
பெரும்பாலும் நாம் நம்முடைய தனித்திறமைகளை சில முக்கிய விடயங்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதில்லை காரணம் அதை மற்றவர் அறிவதன் மூலம் இப்போதிருக்கும் நிலையை அல்லது நம்முடைய தனித் தன்மையை இழந்து விடக் கூடும் என்ற அச்சமே மற்றவர் நம்மை சுலபமாக வென்றுவிடக் கூடும் என்ற அச்சம் உங்களை தனித்திருக்கவே வைக்கும்; மற்றவர்கள் உங்களை நாடி வர வேண்டும் எனில் அவர்கள் மனதில் நீங்கள் இடம் பிடிக்க வேண்டும் எனில் மதிப்பில் உயர வேண்டும் எனில் நல்ல விடயங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
அதிகாரத்தை கையாளும் திறன் ஒருவர் எத்தனை துரம் மற்றவர்களால் நம்பப்படுகின்றாரோ மதிக்;கப்படுகின்றாரோ அத்தனைதூரம் அவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் உரிமை அவருக்கு கிடைக்கிறது அத் தகு அதிகாரம் செலுத்தும் உரிமையுள்ளவர்கள் மற்றவர்களை எப்படி கையாளுகின்றார்கள்; என்பதைப் பொறுத்தே மற்றவர்களுக்கு அவர்கள் மீதான மதிப்பு கூடவோ குறையவோ செய்யும் அவ்வாறு உயரும் அல்லது தாழும் மதிப்பை பொறுத்து அவருடைய அதிகாரம் உரிமை உயரவோ தாழவோ செய்யும்
எனவே அத்தகு அதிகாரத்தை அதற்கான மதிப்பை கையாள தனித்திறமை தேவைப்;படுகின்றது சில பிரத்தியே அணுகுமுறை கொள்கைளை கடைப்பிடிப்பதன் மூலம் இத்திறமைகளை கைவரப் பெற முடியும்; அதற்கான சில யோசனைகள் இனி இங்கே காண்போம்
நம்பிக்கையைத் தூண்டுதல் உங்கள் எண்ணம் கோணம் கொள்கை சரியானதே என்று நீங்கள் முழுமையாக உணரும் பட்சத்தில் உறுதியாக உங்கள் நிலைப்பாட்டை மற்றவருக்கு எடுத்துச் சொல்லுங்கள் அதே நேரத்தில் மற்றவரின் எண்ணங்களை கோணங்களை உதாசீனப்படுத்தாமல் அதற்கு மதிப்பு கொடுங்கள் நீங்கள் ஏன் எதற்கு இந்த நிலைப்பாட்டை எடுத்தீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள்
பொறுமை
ஒரு செயலை அல்லது நபரை அணுகும் போது நிதானமும் பொறுமையும் மிக அவசியம் உங்களுக்கு கீழு; உள்ளவர்கள் எத்தனை இடைஞ்சல் ஏற்படுத்தினாலும் சின்ன சின்ன தோல்விகளுக்கு காரணமாகினாலும் பொறுமை இழந்து செயற்படாதீர்கள் உங்கள் இலக்கு இலட்சியம் இதனால் பாதிக்கப்பட்டாலும்; கூட ஒரு தொலை நோக்கு பார்வையுடன் இந்த தடைகளை பொறுமையாக அணுகி அவற்றக்கு தீர்வு காண முயலுங்கள்
மென்மை :-
மென்மையான அணுகு முறை வேண்டும் கடுமையான கடினமான வலுக்கட்டாயமான முறைகளில் எதையும் சாதிக்க நினைக்கக்;; கூடாது
மற்றவர்களிடமிருந்து கற்றல் நீங்கள் தான் வழி நடத்துகீர்கள் உங்களிடம்தான் அதிகாரம் உள்ளது ஆனால் அதனாலேயே நீங்கள் எல்லாம் தெரிந்தவர் ஆகிவிட மாட்டீர்கள் இதனை மனதில் கொண்டு மற்றவர் கருத்தை நியாயத்தை தீர்வுகளை மதிப்பிட வேண்டும் மற்றவர்களின் அனுபவத்தை உணர்ந்து அவர்களிடமிருந்து கற்கத் தயாராக இருக்க வேண்டும் அதிகாரம் என்பது மற்றவர்களிடம் இருந்து பெறும் உரிமையே அதைக் கொண்டு அவர்களை ஆட்டிப் படைக்க நினைக்காமல் இலட்சியப் பாதையில் வெற்றிப் பாதையில் வழி நடத்த மட்டும் முயல வேண்டும்
நேயம் எதையும் யாரையும் நேயத்துடன் அணுகுதல் சின்னச் சின்ன பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் நீங்கள் பகிரும் உறவை உங்கள் உறவின் அவசியத்தை மனதில் கொள்ள வேண்டும் உணர்வு பூர்வமானதாகவும் அதே நேரத்தில் அறிவுபூர்வமாகவும் சூழலை கையாள வேண்டும் ஒரு தவறு நிகழும் பட்சத்தில் அங்கே கோபத்தை விட கருணையே முன் நிற்க வேண்டும்
ஆழ்ந்து புரிதல் ஒருவனுடைய உண்மையான நோக்கம் ஆசை இலக்கு மதிப்புகள் பற்றி ஆழ்ந்து புரிதல் அவசியம் அவரின் சின்ன சின்ன பிழைகள் பிறர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் இவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு அவரை எடை போட்டு விடக் கூடாது ஒருவர் பற்றிய உண்மையான தகவலும் சரியான பார்வையும் இருந்தால்தான் அவருடைய திறமையை முழுமையாக சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியும்;
தவறுகளை நிறுத்தல் தெரிந்தும் தெரியாமலும்;; நிகழும் பிழைகள் ஒரு செயற்பாட்டில் சாதாரணமாக நிகழக் கூடியவை தான் அவை கட்டாயமாக சுட்டிக் காட்டப்;பட Nவுண்டியவை ஆனால் அதில் அடுத்தவரை தண்டிப்பதென்றே நோக்கமாக இருந்து விடக் கூடாது அங்கே அதிகார ஆணவத்துடன் நடந்து கொள்ளக் கூடாது ஒரு போதும் பிழை செய்தவர் மனதில் அச்சத்தை குற்றவுணர்வை அவமான உணர்வை ஏற்படுத்திவிட கூடாது
உங்கள் நிலையை நன்றாக உணர்ந்திருத்தல்; நீங்கள் ஏதேனும் ஒரு தவறு செய்து வீடும் போது அல்லது உங்கள் இலட்சியத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் நீங்கள் காரணமாகி விடும் போது அதிகாரம் கையில் இருப்பதால் தவறை பூசி மெழுகவோ ஆணவத்துடன் சில செயற்பாடுகளில் ஈடுபடுவது அடுத்தவர் மனதிலே உங்கள் மீதான மதிப்பை நம்பிக்கையை மலை உச்சியிலிருந்து தள்ளிவிடும் நீங்கள் மற்றவருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் மற்றவர் ஒரு பிழை செய்து விட்டால் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பாக்கின்ற்Pர்களோ அதன்படி நீங்கள் முதலில் நடந்து காட்ட வேண்டும் எல்லோருக்கும் எது நியாயமோ எது சட்டமோ முறையோ அவையெல்லாம் உங்களுக்கு பொருத்தும்; என்பதை மனதில் வைக்க வேண்டும்
எதை மனதில் உணர்கின்றீர்களோ அதையே வார்தையிலும் கொண்டு வர வேண்டும் உங்கள் நோக்கம் செயல் மற்றவர்களின் நலனை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டுமே ஒழிய அவர்கள் மூலமாக சுயலாபங்கள் அடையவோ அவர்கள் ஏமாற்றவோ அல்லது அதிகாரத்தின் மூலம் அடிமை போல நடத்துவதே உங்கள் நோக்கமாக இருக்கக் கூடாது
No comments:
Post a Comment