Saturday, May 16, 2015

வெற்றியாளர்களின் மிக முக்கியமான 12 சூத்திரங்கள்

வெற்றியாளர்களின் மிக முக்கியமான 12 சூத்திரங்கள் - www.v4all.org 

1. வெற்றியாளர்கள் உலகின் மிகப்பெரிய, அறிவு சார்ந்த சொத்தான, மூளையை (Intellectual Property Brain) பயன்படுத்தி, அதாவது சிந்தித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்னர்.

2. வெற்றியாளர்கள், கடந்த கால தோல்விகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்காலத்தைப் பற்றி பயப்படுவதும் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் வாழுகிறார்கள். தோல்வியின் மூலம் ‘எதைச் செய்யக்கூடாது’ என்றஅனுபவத்தையும், வெற்றியின் மூலம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்றவெற்றியின் சூத்திரங்களையும் (Success Formulae) கண்டுபிடித்து, பயன்படுத்தி வெற்றி வாகை சூடுகின்றனர்.

3. வெற்றியாளர்கள், தோல்வி அடைந்தால், பிறரை பற்றி குறைகூறுவதில்லை (Finding Fault). நொண்டிச்சாக்கு (Lame Excuse) சொல்வதில்லை. செய்த தவறைநியாயப் படுத்துவதில்லை (Justification) தோல்விக்கு தானே காரணம் என ஒத்துக்கொண்டு, தன்னைத் திருத்தி, சீர்படுத்தி, நேர்மறையாகச் சிந்தித்து, செயலில் ஈடுபட்டு வெற்றி அடைந்துள்ளனர்.

4. வெற்றியாளர்கள், சுயபரிசோதனை (Self Analysis) செய்து அவர்களுடைய பலங்கள் (Strengths), பலவீனங்கள் (Weaknesses), வெற்றி வாய்ப்புக்கள் (Opportunities), எதிர்கால பயங்கள் (Threats) போன்றவற்றைஅலசி ஆராய்ந்து குறிக்கோள் (Goal) நிர்ணயம் செய்கின்றனர். பின்பு திட்டமிட்டு (Plan) குறிக்கோளுக்கு, கால நிர்ணயம் (Target Date) செய்து, தங்களுடைய அறிவைப் (Knowledge) பெருக்கித் திறமையை (நந்ண்ப்ப்) வளர்த்து, நேர்மறைமனோபாவத்துடன் (Positive Attitude), தங்களை உற்சாகப்படுத்தி (Self Motivation) குறிக்கோளை அடைகின்றனர்.

5. வெற்றியாளர்கள், குறிக்கோளை அடைய நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். புதிய மேலாண்மை யுக்திகளை, நவீன தொழில் நுட்பங்களைக் கையாளுபவர்கள். வெற்றியாளர்கள் வெற்றி வாய்ப்புகளை தேடி அல்லது உருவாக்கிப் பயன்படுத்துவார்கள். ஐம்புலன்களையும் (Five Senses) சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக தொடர்பு கொள்ளுதல், வாசித்தல், எழுதுதல், பிறரது உடல்மொழியைக் கண்டுபிடித்து எடை போடுதல், உற்றுக் கவனித்தல், கண்காணித்தல், பிறரிடம் பழகும் தன்மை தலைமைப்பண்பு (Leadership) போன்றவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, வெற்றி அடைந்துள்ளனர்.

6. வெற்றியாளர்கள் நீர்வளம், நிலவளம், எண்ணெய்வளம், கனிமவளம், இயற்கைவளம் (Water, Land, Oil, Mineral, Natural Resources) போன்றவளங்களை பயன்படுத்தி வெற்றி அடைந்துள்ளனர். போட்டி நிறைந்த இந்த பொருளாதார உலகத்தில் மனித வாழ்க்கையைச் (Human Resources) சிறப்பாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

7. வெற்றியாளர்கள் மனிதர்களை நிர்வாகம் (HRM Human Resource Management) செய்வதில் கெட்டிக்காரர்கள். மனிதர்களை முன்னேறச் (HRD Human Resource Development) செய்வதில் நல்லவர்கள். அது தவிர நேரத்தையும், தன்னையும் (Time Management and Self Management) நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள்.

8. வெற்றியாளர்கள் கடினமாக உடல் உழைப்புடன் (Physical Hardwork), புத்திசாலித்தனமான மூளை உழைப்புடன் (Smart Mental Work), தொழிலாளிகள், வாடிக்கையாளர்கள் … ஆகியோர்களின் கூட்டு உழைப்புடன் (Team Work), தங்களை முழுமையாக அர்பணித்து (Commitment) குறிக்கோளை அடையும்வரை, திட்டமிட்டபடி, விடாமுயற்சி (Endurance) செய்து, வெற்றி அடைந்துள்ளனர். தன்னம்பிக்கை அவர்களின் தாரக மந்திரம்.

9. வெற்றியாளர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள், மாற்றம் ஒன்றேநிலையானது என்று நம்புபவர்கள். நேர்மறைமனோபாவத்துடன் (Positive Mental Attitude) பிரச்சனைகளை வெற்றி வாய்ப்புகளாக மாற்றுபவர்கள். தடைக்கற்களை, படிக்கட்டுகளாக மாற்றுபவர்கள். பலவீனங்களை பலமாக மாற்றுபவர்கள். மொத்தத்தில் சோதனையைச் சாதனையாக மாற்றுபவர்கள். துன்பத்தை இன்பமாக மாற்றுபவர்கள்.

10. வெற்றியாளர்கள் செய்யும் தொழிலே தெய்வம் (Work is worship) என போற்றி வழிபடுபவர்கள். வாடிக்கையாளர் களுக்குத் தரமான சேவை செய்து மகிழ்ச்சி அளிப்பவர்கள் மொத்தத்தில் செய்யும் தொழிலை கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு விரும்பி செய்பவர்கள். வெற்றியை அடைய செயலில் ஈடுபடுபவர்கள். வெற்றியாளர்கள் தான் மட்டுமின்றி பிறரும் வெற்றியடைய விரும்பி செயல்படுவார்கள்.

11. வெற்றியாளர்கள், அவர்களுக்கு எது தேவையோ (Need), எது (Want), அதை மற்றவர்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றனர். அன்பை (Love) பொழிகின்றனர். சரியான நபருக்கு சரியான நேரத்தில் உதவி (ஏங்ப்ல்) செய்கின்றனர். தியாகம் செய்கின்றனர். மற்றவர்களுக்கு வழி காட்டுகின்றனர். பிரபஞ்சத்தில், தங்களுக்குத் தேவையானவற்றை கேட்டுப் பெறுகின்றனர்.

12. வெற்றியாளர்கள், மனம் என்னும் மந்திரச் சாவியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். ஆன்மிக முறைப்படி அல்லது விஞ்ஞான முறைப்படி மனத்தை கையாண்டு வெற்றி அடைந்துள்ளனர். வெற்றியாளர்கள் குறிக்கோளை அடைய லட்சியக் கனவை அடிக்கடி (Creative Visualization) காணுபவர்கள். ஆழ்மனத்திற்கு (Sub Conscious Mind) கட்டளையிடுபவர்கள் (Auto Suggestion).

மேற்கண்ட 12 வெற்றி சூத்திரங்களை, வாழ்க்கையில் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்! ஜெயிப்பது நிஜம்.

urs
Dr.Star anand ram 

No comments:

Post a Comment