மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. - விவேகானந்தர்.- www.v4all.org
1,இறைவனின் தரிசனத்திற்காக முயற்சிக்கும் ஒருவனுக்கு தெய்வீக நாமமே புகலிடம் ஆகும். (சுவாமி ராமதாஸ்)
2, நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு முன்னேறுகிறார்கள்.(ஓர் அறிஞர்)
3 மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும் தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்.(மு.வ.)
4 நம்பிக்கை இல்லாத இடத்தில் முயற்சியும் இருக்க முடியாது. (ஜான்ஸன்)
5 ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். (வில்லியம் ஹாஸ்விட்)
6 ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவன் வாழ்வு சிறக்காது. (ஷாம்பர்ட்)
7 நீ பேசும் வார்த்தைகளின் மீது உனக்குள் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.அரவிந்தர்)
8 உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்.(சுவாமி விவேகானந்தர்)
9 உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது(எமர்சன்)
10 கட்டாயப்படுத்திப் புகுத்தப்படும் அறிவு மனதில் பதியாது. (பிளேட்டோ)
11 காலத்தில் செய்வதைத் தள்ளிப்போட வேண்டாம். தாமதத்தால் தீய முடிவுகள் ஏற்படும். (ஹேக்ஸ்பியர்)
12 நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும் அற்புதத்தை ஒவ்வொரு நாளும் நாம் கண்டு வருகிறோம். (மகாத்மா காந்தி)
13 அசுத்தங்களுள் மோசமான அசுத்தம் கோபம்தான்.
14 வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் முழுக்க முழுக்க பயன் உள்ளதாக ஆக்கிவிட வேண்டும்.(மாரியோ போஜியோ)
15 துயரத்திற்கு ஒரே மாற்றுமருந்து சாதனைதான். (ஹென்றி லீவ்ஸ்)
16 கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்.(ராபர்ட் பிராஸ்ட்)
17 வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினால் எல்லோரும் சூரியனைப் போல் பிரகாசிக்க முடியும். இல்லையேல் மெழுகுவர்த்திதான். - நெப்போலியன்.
18 உன்னுடைய சக்திக்கேற்ற வேலை கிடைத்தால் போதும் என்று ஆசைப்படாதே; உன்னுடைய வேலைக்கேற்ற சக்தி கிடைக்க வேண்டும் என்று விரும்பு. - ஆல்டர்.
19 நாட்கள் கற்றுத் தராததை வருடங்கள் கற்றுக் கொடுக்கின்றன. - எமர்சன்
20 மனநிம்மதி, ஆனந்தம், அன்பு, தியாகம், அடக்கம் என்ற ஐம்பெரும் குணங்கள் பணத்தால் வருவதில்லை. - விவேகானந்தர்.
No comments:
Post a Comment