Showing posts with label stress managements. Show all posts
Showing posts with label stress managements. Show all posts

Saturday, July 18, 2015

மந்திர தந்திர ரகசியங்கள்

மந்திர தந்திர ரகசியங்கள் 
ஏதேனும் ஒரு முக்கியமான வேலையாக அல்லது தொலைதூர வெளியூர் பயணம் கிளம்பினாலும் காராமணிப் பயிர் கொஞ்சம் வலது கையில் வைத்து வாசலுக்கு அருகில் நின்று கொண்டு விநாயகரை வேண்டிக் கீழே உள்ள மந்திரத்தை 7 தடவை ஜெபித்து
அந்தக் காராமணிப் பயிரில் ஊதி பின்னர் வாசலைத் தாண்டி வெளியே வந்து காராமணிப் பயிரை எறிந்து விடவும்.பின்னர் விநாயகரை வேண்டிகே கிளம்பிச் செல்ல காரியத்தடைகள் நீங்கி வெற்றியுண்டாகும்.ஒரு குறிப்பிட்ட நல்ல காரியம் செய்யும் போது பலரின் எதிர்ப்பு,பொறாமை,திருஷ்டி இருந்தால் அந்த மாதிரி நேரங்களில் இந்தப் பிரயோகத்தை உபயோகிக்க நிச்சயம் வெற்றி கிட்டும்.
இதை செய்த வெளியூர்,வெளிநாடு பயணம் கிளம்ப வெற்றியுடனும் பாதுகாப்புடன் திரும்பலாம்.
மந்திரம்:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சர்வ விக்ன வினாசாய, சர்வ கார்ய சித்திம் நமஹ ||
----------------------------------------------------------------------
:2. செல்வவளம் பெற ஸ்ரீ புவனேஸ்வரி வித்யா பிரயோகம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூர்ய உதயத்திற்கு முன் குளித்து வெண்ணிற ஆடை அணிந்து சூரியனைப் பார்த்தபடியே ஹ்ரீம் என்று 108 தடவை ஜெபிக்கவேண்டும்.ஜெபத்திற்கு மாலைகள் அவசியம் இல்லை.
பயன்படுத்த வேண்டும் என்றால் ஸ்படிகம் அல்லது ருத்ராக்ஷ மாலை பயன்படுத்தவும்.
ஜெபித்து முடித்த பின் வெண்சந்தனப் பொடி அல்லது வெண்சந்தனக் கட்டையை அரைத்து ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் அணிந்து கொள்ளவும்.பின் மற்ற நாட்களில் ஹ்ரீம் என்று 11 தடவை ஜெபித்து நெற்றில் வெண்சந்தனம் அணிந்து வரவும்.இதை எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்து வர செல்வம், புகழ் இவற்றில் படிப்படியாக உயர்ந்த அந்தஸ்தை அடையலாம்
-------------------------------------------------------
அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம்
ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமன வேளையில் ஊருக்கு வெளியில்,காட்டில், அல்லது மயானத்தில் உள்ள ஒரு அரசமரத்தடியில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி, விளக்கிற்கு குங்குமம்,மஞ்சள் வைத்து பாயசம் படைத்து வழிபடவும்.பின்னர் பிரதட்சிணமாக அதாவது இடமிருந்து வலமாக 11 தடவை வலம் வரவும்.வலம் வந்து முடிந்தவுடன் விளக்கின் முன் நின்று கவலை, பிரச்சனை என உங்கள் மனக்குறை என்னவோ அது விரைவில் தீர வேண்டிக்கொள்ளவும்.பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடவும்.இதைக் குறைந்தது 3 வாரம் செய்யவும்.துன்பங்கள் நீங்கும்,சுபகாரியத்தடைகள் தீரும்.தொழில் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ,பணப்பற்றாக்குறை என வேண்டிக்கொண்ட பிரச்சனை என்னவோ அது தீரும் அல்லது அதைத் தீர்க்கும் வழி மனதில் தோன்றும்.
-------------------------------------------------------------------------
சர்வ க்ரஹ தோஷ நிவாரண பரிகாரம்!!!
செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர் அல்லது 1 மீட்டர் நீளமுள்ள சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும்.சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை) ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக்
கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும்.
பின்னர் அந்தச் சிகப்பு முடியை அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும்.இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
மந்திரம் :-
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் ப்ரம்மசாரிணம்|
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||
----------------------------------------------------------------------
.வீட்டில் நிம்மதி நிலவ துரதிர்ஷ்டம் நீங்க
ஒரு பௌர்ணமி அன்று நல்ல தேங்காய் ஒன்றை எடுத்துக் கொண்டு சிறிது குங்குமத்தைப் பன்னீரால் கரைத்து அதை வலது கை மோதிர விரலால் தொட்டு தேங்காயில் ஸ்வஸ்திக் வரையவும்.பின்னர் அந்தத் தேங்காயின் மேல் ஒரு சிகப்புத்துணியைச் சுற்றவும்.பின்னர் அதைக் கொண்டு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தையும் வீட்டில் உள்ளவர்களையும் (தலையையும்) சுற்றவும்.முடித்தபின் ஆறு அல்லது கடலுக்குச் சென்று செருப்பைக் கழற்றிவிட்டுவெறும்
காலுடன்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்று 11 தடவை ஜெபித்து
மஹாவிஷ்ணுவிடம் இல்லத்தில் துரதிர்ஷ்டம்,துன்பங்கள் நீங்கி அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக அருள் செய்ய வேண்டிக் கொண்டு அந்தத் தேங்காயை நீரில் போட்டு விடவும். இதன் மூலம் வீட்டில் வளமும்,நலமும்,மகிழ்ச்சியும் உண்டாகும்
Mantric   மாந்திரீகம்'s photo.

DrStar Anand

Thursday, July 16, 2015

கோபம் ஒரு எதிர்மறையான உணர்ச்சி

கோபம் ஒரு எதிர்மறையான உணர்ச்சி என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இருந்தாலும் நிறைய பேர் அடிக்கடி கோபப்படுகிறார்கள். அவர்களால் கோபத்தைக் கட்டுப்படுத்தமுடிவதில்லை.
அது சரி, கோபம் ஏன் வருகிறது?
எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் விரும்பியது உங்களுக்குக் கிடைக்கவில்லையென்றால் உங்களுக்கு கோபம் வரும். நீங்கள் விரும்பாதது உங்களுக்குக் கிடைத்தாலும் உங்களுக்கு கோபம் வரும். நீங்கள் விரும்பிய விஷயம் நடக்காமல் போனால் அல்லது விரும்பாத விஷயம் நடந்தால் உங்களுக்குக் கோபம் நிச்சயம் வரும்.
நீங்கள் ஒருவரைக் காதலிக்கிறீர்கள். ஆனால் அவர் உங்களைக் காதலிக்கா விட்டால் உங்களுக்குக் கோபம் வரும். கோபம் மட்டும் அல்ல, மனம் வெகுவாகக் காயப்படும். துன்பத்தில் நரக வேதனை அனுபவிப்பீர்கள். பொறாமையினால் கூட கோபம் வரும். நீங்கள் பாதுகாப்பற்று உணரும்போதும் கோபம் வரும்.
நீங்கள் வசதியாக பிரயாணம் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது கோபம் வருகிறது. ஏன், ஒரு முக்கிய விஷயமாக வெளியே செல்லும்போது மழை வந்தால் இயற்கையின் மீது கூட நமக்கு கோபம் வரும்.
சில நியாயமான விஷயங்களுக்காக சில சமயங்களில் கோபம் வரலாம். அது தப்பில்லை. ஆனால் அடிக்கடி கோபப்படுவது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் கெடுதல் ஆகும்.
கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற உறுதி முதலில் வர வேண்டும். நம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களுக்காக கோபப்படுவது தவறு என்று உணர வேண்டும். உதாரணமாக மழை மற்றும் போக்குவரத்து நெரிசல் இவற்றிற்கு கோபப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்று உணர்ந்தால் கோபம் வராது.
கோபம் உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்தால் கோபம் வராது. எல்லாவற்றிற்கும் மேலாக யோகா மற்றும் தியானம் தவறாமல் செய்தால் கோபம் நிச்சயம் குறையும்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Sunday, May 3, 2015

ரிலாக்ஸ் டெக்னிக்!

ரிலாக்ஸ் டெக்னிக்! - www.v4all.org 

நீங்கள் இருக்கும் சூழலை பிடித்தமானதாக மாற்றிக் கொள்ளுங்கள். தோழியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்லலாம். குழந்தைகள் நிறைந்த இல்லங்களுக்கு சென்று சிறு உதவிகள் செய்யலாம். இயற்கையான சூழலில் பேசியபடியை காலாற நடக்கலாம். பசுமையும், அழகும் டென்சன் குறைக்கும். வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் நேரம் செலவளித்தால் மனதில் மகிழ்ச்சி ததும்பும். * வீட்டில் நீண்ட நாள் அடுக்கப்படாத அலமாரியை சுத்தம் செய்தல், தோட்ட வேலைகள், வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி தோற்றத்தை புதிதாக்குவது என உடலுக்கு வேலை கொடுக்கும் போது மனம் அமைதி அடைகிறது. வீட்டின் அல்லது தோட்டத்தின் புதிய தோற்றம் மனதை அழகாக்கும். * இசைப்பிரியர்கள் பிடித்த பாடல்களை ஓட விட்டு கண்களை மூடியபடி இசையில் கரையலாம். மாற்றுச் சிந்தனை உள்ள புத்தகங்கள் படிக்கலாம். இதன் மூலம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பிரச்னையின் தீவிரம் குறையும். * எந்த ஒரு பிரச்னையையும் நேர்மறையாக அணுகுவது கூடுதல் பலன் தரும். அப்போது தான் பிரச்னையை முழுமையாகப் புரிந்து கொண்டு அதனை

தீர்ப்பதற்கான வழி வகைகளை உருவாக்க முடியும். பிரச்னை என்பது இயல்பானது என்ற புரிதல் தைரியத்தை அளிக்கும். பிரச்னைகளே நம்மை அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றன என்ற பார்வை நம்மை வெற்றியை நோக்கி நகர்த்தும். பிரச்னைகள் வேலையில் அல்லது நமது திறமையில் நம்மை ஒரு படி அதிகமாக வளர வைக்கின்றன. பிரச்னையை சமாளிப்பதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள் முன்னோக்கித் தள்ளுகின்றன. தான் என்கிற எண்ணம் மனிதர்கள் மத்தியில் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. தன்னை மிகச்சாதாரணமான விஷயத்துக்காக யாராவது குறை கூறினாலும் அதை அவமானமாகக் கருதி கோபம் கொள்ள இந்த எண்ணம் வழிவகுக்கிறது. இன்றைய குட்டிச் செல்லங்களிடம் இந்தப் போக்கைக் காணலாம். இதுவே மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்களை உருவாக்குகிறது. இந்த மன அழுத்தம் மூளையின் ரசாயன சுரப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் உடலைத் தாக்கும் நோய்களுக்கு அடித்தளம் இடுகிறது. மன அழுத்தம் ரத்த அழுத்தத்துக்கு காரணம் ஆவதுடன் மாரடைப்பு போன்ற பாதிப்புகளை உருவாக்கும் அளவுக்கு கொடுமையானது. இந்த மன அழுத்தம் எனும் வில்லனை ரிலாக்ஸ் டெக்னிக் மூலம் கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்க வைக்கலாம். தான் என்ற எண்ணத்தை விட்டு கீழே இறங்கி வாருங்கள். ஆம் நீங்கள் இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களில் ஒருவர். இந்த உலகம் தோன்றியதில் இருந்து உருவான புல், பூண்டு, பூச்சிகள் வரிசையில் நீங்கள் எத்தனையாவது பிறப்பு என்று யோசித்திருக்கிறீர்களா? நாம் அவ்வளவு சாதாரணமானவர்களே. எதற்கு இவ்வளவு ஈகோ! உங்கள் முன் நடக்கும் எந்த விஷயத்தையும் எளிமையாக எடுத்துக் கொள்ளுங்கள். * ஓரளவுக்கு மனம் சமாதானப்படுவதற்கான இது போன்ற செயல்முறைகளை பின்பற்றலாம். பிரச்னையின் விளைவாக உடலில் உண்டான சோர்வினைப் போக்க தரையில் மல்லாந்து படுத்து கைகளை விரித்தும் சேர்த்தும் எளிய பயிற்சிகள் செய்யலாம். மன உளைச்சல் ஏற்படும் போது கழுத்து, மேல்முதுகு ஆகியவற்றின் தசைகள் மன அழுத்தத்தின் காரணமாக இறுகி விடுகிறது. கழுத்துப் பகுதி தசைகளைப் பிடித்து விடுவதன் மூலம் மன அழுத்தம் குறைந்து இதமாக உணரலாம். * யோக பயிற்சிகள் மூலம் உடலில் சேர்ந்த சோர்வை விரட்டலாம். தியானப் பயிற்சி செய்து மனதை ஒருநிலைப் படுத்தலாம். மனம் சிறகடிப்பதன் மூலம் மீண்டும் உற்சாகத்துடன் நம் செயல்களைத் துவங்கலாம். இப்போது திரும்பிப் பாருங்கள் பிரச்னை துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓட்டம் எடுத்திருக்கும். புன்முறுவலுடன் அதனை எதிர்கொள்ளுங்கள். மிகப்பெரிய பிரச்னைகள் கூட உங்களைப் பார்த்து பயப்பட ஆரம்பிக்கும். எல்லாம் புரிகிறது. என்னால் கோபத்தை கட்டுப்படுத்த முடியலையே என்று தவிப்பவர்களுக்கு இருக்கவே இருக்கு ரிலாக்ஸ் டெக்னிக். * மனசு குழப்பமா இருக்கா? உங்களுக்கு நம்பிக்கையான நண்பர் மற்றும் மனதுக்கு நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். இப்போது மனதின் பாரம் கொஞ்சம் குறைந்த மாதிரித் தோன்றும். அவர்கள் அளிக்கும் யோசனை பிரச்னையின் இறுக்கமான பிடியில் இருந்து உங்களை தளர்த்திக் கொள்ள உதவும். * நீங்கள் இருக்கும் சூழலை பிடித்தமானதாக மாற்றிக் கொள்ளுங்கள். தோழியை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்லலாம். குழந்தைகள் நிறைந்த இல்லங்களுக்கு சென்று சிறு உதவிகள் செய்யலாம். இயற்கையான சூழலில் பேசியபடியை காலாற நடக்கலாம். பசுமையும், அழகும் டென்சன் குறைக்கும். வீட்டில் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் நேரம் செலவளித்தால் மனதில் மகிழ்ச்சி ததும்பும்.


Wednesday, April 15, 2015

Stress Management class

This is for you..........A Psychologist walked
around a room while
teaching Stress Management to an
audience.
As she raised a
glass of water, everyone expected they'd be asked
the
"Half empty or Half full" question.
Instead, with a
smile on her face, she
inquired:
"How heavy is this glass of water?"
Answers called out ranged from 8 oz. to 20 oz.
She replied,
"The absolute weight doesn't matter.
It depends on how long I hold it.
If I hold it for a
minute,
it's not a problem.
If I hold it for an hour,
I'll have an ache in my arm.
If I hold it for a day,
my arm will feel numb and paralyzed.
In each case,
the weight of the glass
doesn't change,
But
The longer I hold it,
the heavier it becomes.
She continued,
"The Stresses and Worries in Life , are like that Glass of Water...
Think about them for
a while and nothing
happens.
Think about them
a bit longer and they begin to hurt.
And
If you think
about them all day long,
you will feel paralysed –
incapable of doing
anything."
Remember to put the Glass Down   

our services  - www.v4all.org

Friday, March 20, 2015

மன அழுத்தம்

மன அழுத்தம்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன அழுத்தம் என்பது மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும்[1]. இந்த மன அழுத்தம் என்ற பதம் உயிரியல் மற்றும் உளவியல் அடிப்படையில் முதலில் 1930 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் அண்மைக் காலங்களில் இதுபற்றி மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், மன, பழக்கவழக்கம் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக எச்சரிக்கை உணர்வு, அதிகரிக்கும் அதிரினலின் சுரப்பு, அதிகரிக்கும் சோர்வு, எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல்தசைகளில் ஏற்படும் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், அதிகரிக்கும் இதயத் துடிப்புதலைவலி போன்ற சில உடலியங்கியல்பிரச்சனைகளும் காணப்படும்[2].

சொல்லியல் ஆரம்பம்[தொகு]

Hans Selye என்ற உட்சுரப்பியியலாளரால் முதன் முதலில் உயிரியலில் இந்த மன அழுத்தம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது[3]. பின்னர் எந்தவொரு தாக்கத்திற்கும் தவறான ஒரு உடற்றொழிலியல் எதிர் விளைவு கொடுக்கப்படும் நிலையை காட்டுவதாக இந்த பதத்தை விரிவுபடுத்தினார். மன அழுத்தத்தைத் தூண்டக்கூடிய காரணியினால், மிதமான எரிச்சல் அல்லது கோபம் கொள்ளும் நிலை தொடங்கி, மிகவும் தீவிரமான தொழிற்பட முடியாத நிலை வரையான பாதிப்பு ஏற்படுவதால், மன, உடல் நலத்தில் செயல் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறினார்.

அறிகுறிகள்[தொகு]

மன அழுத்தமானது வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதுடன், அறிகுறிகளும் வேறுபடும். இந்த அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நலம் பாதிப்படைவதுடன், மனச்சோர்வும் ஏற்படும்.
  • மனக்கவலை
  • அதிகாலை தூக்கமின்மை
  • மிகுந்த சோர்வு
  • பசியின்மை
  • எடை குறைவு
  • அடிக்கடி அழுதல்
  • தன்னம்பிக்கையின்மை
  • எதிலும் ஆர்வமின்மை
  • அதிகமான குற்ற உணர்வு
  • அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்
மனச்சிதைவு நோய் (Schizophrenia)
  • தொடர் துக்கமின்மை
  • தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்
  • தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுதல்
  • காதில் மாயக்குரல்கள் கேட்டல்
  • அதிகமாக சந்தேகப்படுதல்
  • அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
  • சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
  • உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்
மனப்பதட்ட நோய் - (Anxiety Disorder)
  • நெஞ்சுப் படபடப்பு
  • கை நடுக்கம்
  • அதிகமாக வியர்த்தல்
  • நெஞ்சுவலி
  • எதிலும் கவனம் செலுத்த இயலாமை
  • தூக்கக் குறைவு
  • அடிக்கடி எரிச்சல் அடைதல்
  • எதிர்மறையான எண்ணங்கள்
பய நோய் (Phobia)
  • தனிமையில் இருக்க பயம்
  • கூட்டத்தினைக் கண்டுபயம்
  • புதிய நபர்களை எதிர்கொள்ளப் பயம்
  • உயரமான இடங்களுக்குச் சென்றால் பயம்
  • மூடிய இடங்களைக் கண்டு பயம்
  • இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க்க நினைத்தும் இயலாத நிலை
  • எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய்
  • திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும், அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.
  • ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது
  • திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது
உதாரணமாக:
  • திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்
  • பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது
  • பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது
  • ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது.
  • தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனப்பதற்றமும் ஏற்படுவது.
  • குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.
ஆளுமை கோளாறுகள் (Personality Disorders)
  • அடிக்கடி கோபம் கொள்ளுதல்
  • குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்
  • மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்
  • உடல் உறுப்புகளைத் தானே காயப்படுத்திக் கொள்ளல்
  • கலவரங்களில் ஈடுபடுதல்
  • சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்
  • மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்
  • பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமை
  • எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்
  • எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்
பெண்களும் மன அழுத்தங்களும்
மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக
  • அதிக எரிச்சல்
  • கோபம்
  • சோர்வு
  • பதற்றம்
  • இவை, மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும்.
கர்பிணி பெண்களும் மனநோய்களும்
  • குழந்தைகளுக்கு பால் ஊட்டாமை
  • அடிக்கடி அழுதல்
  • தூக்கமின்மை
  • பசியின்மை
  • தற்கொலை எண்ணங்கள்
  • தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல்
முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்
  • தொடர் தூக்கமின்மை
  • மறதி
  • பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்
  • நாள், கிழமை மறந்து விடுவது
  • உறவினர், நண்பர்களை மறந்து விடுவது
  • அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது
  • பசியின்மை
இதர மனநோய்கள்
  • சாமியாட்டம்
  • புகை பிடித்தல்
  • மது அருந்துதல்
  • கணவன் மனைவி பிரச்சனைகள்
  • மனரீதியான பாலியல் பிரச்சினைகள்
குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்
  • குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்
  • படிப்பில் கவனம் குறைதல்
  • அதிக கோபம் கொள்ளுதல்
  • அடிக்கடி எரிச்சல் அடைதல்
  • படுக்கையில் சிறுநீர் கழித்தல்
  • மிக மிக அதிக சுறுசுறுப்போடு, ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)
  • கீழ்படியாமை
  • அடிக்கடி பொய் சொல்வது
  • திருடுவது
  • குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell)
  • 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)
  • மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)
  • நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)
  • குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Seperation anxiety disorder)

Wednesday, August 20, 2014

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்பு குறித்து அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர். இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 3 மடங்கு அதிகமாகும். அவர்களில் நகர்ப்புறங்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் மிக இளம் வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Beer
மனநல பாதிப்பு இந்த ஆய்விற்காக வடக்கு கோவாவை சேர்ந்த 20-49 வயது உடைய 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் அடங்குவர். அவர்களிடம், மதுபானத்தை எந்த வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?, எவ்வளவு மதுபானம் எடுத்து கொண்டீர்கள்? மற்றும் குடிப்பதால் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களின் மனநல பாதிப்பு குறித்தும் தகுதி வாய்ந்த நபரால் ஆய்வின்போது கணிக்கப்பட்டன. இளம் வயதில் குடிக்க தொடங்காதவர்களை காட்டிலும், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு மற்றும் மதுபானத்திற்கு அடிமையாவது என்பது இளைஞர்களிடையே இரு மடங்காக உள்ளது. அவர்கள் குடிப்பதன் காரணமாக 3 மடங்கு காயம் அடைந்து உள்ளனர்.
இளம் வயதில் குடிக்க தொடங்குவதால் வாழ்நாளில் அது தொடர்பான காயங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இருந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட இந்தியா போன்ற நாடுகளிலும் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஆய்வு குறித்து அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவின்படி, இளம் வயதில் மதுபானம் குடிக்க தொடங்குவதால் வாழ்நாள் முழுவதும் அதனை சார்ந்து இருக்கும் சூழல் அதிகமாக உருவாகிறது. குடிப்பதால் ஏற்படும் துன்பம், மதுபானம் தொடர்பால் ஏற்படும் காயங்கள் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் வயதான காலத்தில் அதிகரிக்கின்றன என்பதும் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மதுபான நுகர்வு ம்ற்றும் அதனால் ஏற்படும் தீங்கு தரும் விளைவுகள் ஆகியவை இந்தியாவில் மிக பெரும் பொது சுகாதார பிரச்சனையாக விளங்குவதுடன் இந்த கலாசாரம் ஆபத்தை உணர்த்துவதாகவும் உள்ளது என ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வு முடிவுகள், இளம் வயதில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது. மேலும், இளம் வயதில் மதுபானம் குடிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும் வலியுறுத்துகிறது.

Thursday, July 17, 2014

குட் டச்... பேட் டச்...தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!

கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே
பூத்த புதுமலரே பொக்கிஷமே கண்மணியே
யார் அடித்து நீ அழுதாய் அழுத கண்ணில் நீர் ததும்ப
பேர் உரைத்தால் நான் பெருவிலங்கு பூட்டிடுவேன்
அத்தை அடித்தாளோ அரளிப்பூ செண்டாலே
மாமன் அடித்தானோ மல்லிக்கைப்பூ பந்தாலே...


குழந்தைகளின் ஒரு சொட்டு கண்ணீருக்கு தாய் இத்தனை விளக்கம் கேட்கிறாள். நாம் நம் குழந்தைகளுக்காக காது கொடுக்கிறோமா? இத்தனை நாள்  இல்லாவிட்டால் போகட்டும்... இனியாவது அவர்களுக்காக நேரம் ஒதுக்கி கேட்க வேண்டியது நம் கடமை. பள்ளி, ட்யூஷன், கோச்சிங் கிளாஸ், வார  இறுதி வகுப்புகள், மற்ற பள்ளிகளுக்கு சென்று பங்கேற்கும் போட்டிகள், ட்ரெயினிங் சென்டர், இன்னும் என்னென்ன இடங்களுக்கு யாருடன் சென்று  வந்தாலும், விசாரணை போல இல்லாமல் தோழமையுடன் நடந்ததை கேட்டறிய வேண்டும். 

எப்போதுமே குழந்தைகளுக்கு வீட்டுக்கு வந்ததும் யாரிடமேனும் பகிர வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நாமோ வேலைச்சுமையில்  நிராகரித்திருப்போம்... அதை மனதில் கொண்டே அவர்களும் தவிர்க்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.முடிந்த வரை குழந்தைகளின்  நண்பர்கள், அவர்களின் பெற்றோரிடம் அறிமுகம் இருப்பது நன்று. ட்யூஷன் போன்ற மற்ற வகுப்புகளுக்கும் ஒரு முறையேனும் பெற்றோர் இருவரும்  சென்று அறிமுகம் தருவதும் அவசியம். 

எந்த வயதிலிருந்து ‘குட் டச்... பேட் டச்...’ சொல்லித் தரலாம்? எப்படிச் சொல்லித் தருவது? 
இதெல்லாம் நமக்கு நம் பெற்றோர் சொல்லித் தரவில்லையே? நாமெல்லாம் வளரவில்லையா? இதுபோன்ற கேள்விகள் எழுவது வழக்கம்தான். சில  ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் தென்கோடி நகரில் பள்ளி மாணவர்களுக்கு இதை அறிமுகப்படுத்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  நிகழ்ச்சி தொடங்கும் முன், அந்த மாணவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியர்களிடம், ‘குட் டச்... பேட் டச்... என்றால் என்ன’ என்று கேட்ட போது,  அவர்களுக்கு அது பற்றி எந்த அறிமுகமும் இல்லை என்பது தெரிய வந்தது. எங்கள் உரையை அவர்களிடமிருந்தே தொடங்க வேண்டியதாயிற்று.  பெற்றோரைத் தாண்டி ஒரு குழந்தை சட்டென ஒரு விஷயத்தை புரிந்துகொள்வது ஆசிரியர்களிடமிருந்துதான். சரி... இப்போது நீங்கள்  சொல்லுங்களேன்... உங்கள் குழந்தைகளுக்கு  குட் டச்... பேட் டச்... என்றால் என்னவென்று எப்படி சொல்வீர்கள்?

குட் டச்...

இந்த விஷயத்தை டெக்னிகலாக கூறி குழந்தைகளை குழப்ப வேண்டாம்... மிக மிக எளிதாக, அவர்கள் வழியிலேயே சொல்லி புரியவைப்பதுதான்  நல்லது. எந்த ஒரு டச் அவர்களை ‘ரொம்பவே கம்ஃபர்டபிளாக’ உணர செய் கிறதோ அது குட் டச். உதாரணமாக... அம்மாவோ அப்பாவோ  ‘குட்மார்னிங்’ சொல்லி அணைப்பது, ஆசிரியர்கள் பிள்ளைகளின் முதுகில் தட்டிக் கொடுப்பது, நண்பர்களுடன் செய்யும் ஹை ஃபைவ், ஷேக்  ஹேண்ட்ஸ், செல்லமாக மாமாவோ, சித்தப்பாவோ, அக்காவோ தலையில் கொட்டுவது, தடவுவது என்று எந்த ஒரு தொடுதல் அவர்களை அன்பாகவும்  பாதுகாப்பாகவும் உணரச் செய்கிறதோ, அது குட் டச்... ‘அவர்கள் சம்திங் ஸ்பெஷல்’ எனத் தொடுதலில் உணர்தலும் குட் டச்... தொடுதல்,  முத்தமிடுதல் கூட சில நேரம் பாதுகாப்பாக உணரச் செய்யும். 

பேட் டச்...

அறிமுகமானவர்களோ, அறிமுகமற்றவர்களோ தேவையற்ற வேளையில் தேவையற்ற உடல் பகுதிகளில் தொடுவதும், அத்தொடுதலை மனதும்  உடலும் விரும்பாததுமே பேட் டச். அப்படித் தொடுபவர் களை பார்த்தாலே குழந்தைகள் பதற்றம் அடைவார்கள், அவர்களிடமிருந்து மறைமுகமாக  விலகி இருக்க விரும்புவார்கள். அது அவர் களையும் அறியாமல் வெளிப்படும். இதை அவர்கள் சில நேரம் சொல்லி யும்  உணர்த்துவார்கள். அந்தத்  தொடுதல் அவர்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கும்...  மூட் அவுட் செய்யும்... கவனமின்மையை உண்டாக்கும்.  குழந்தைகளுக்கு சொல்லித்தர  வேண்டியவற்றில்  முக்கியமானது எப்படி ‘நோ’ சொல்லுவது என்பதே. அவர்களின் உடல் குறித்த தெளிவான அறிமுகம், செல்ஃப் சேஃப்டி, சேஃப் பாடி  ரூல், ரகசியம் என்றால் என்ன? வெளியிடங்களில் பாதுகாப்பு, இன்டர்நெட் பாதுகாப்பு, அறிமுகமற்றவர்களிடம் எப்படிப் பழகுவது, பணிபுரியும்  பெற்றோர் எனில் வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு இவை அனைத்தையும் இங்கு விவாதிக்கலாம். முதலில் குழந்தைகளின்  உடலமைப்பு பற்றிய அறிமுகம். ஏற்கனவே கூறியதுபோல, இக்கால குழந்தைகள் மிக புத்திசாலிகள்... நீங்கள் அவர்கள் பேசத் தொடங்கும்  காலகட்டத்திலிருந்தே இந்த அறிமுகத்தை ஆரம்பிக்கலாம். 

தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு...
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே..


எந்தச் சூழலில் வளரும் குழந்தையையும் பெற்றோர் இப்படித்தானே ஆசையாகக் கொஞ்சுவார்கள்? கண்ணுக்குள் வைத்துக் காக்க நினைக்கும் குழந்தை  கண்ணை கசக்கி வரும் வரை காத்திருப்பானேன்? குழந்தைகளின் சேஃப் ரூல், பாடி ரூல் ஆகியவற்றோடு இன்னும் சில அடிப்படை விஷயங்களையும்  விவாதிக்கலாம். குழந்தைகளுக்கும் ரகசியம், தனிமை, முடிவுகள், தீர்மானங்கள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் உண்டு. அது பற்றி...

பச்சைக் குழந்தைக்கும் பள்ளி செல்லும் குழந்தைக்கும் என்ன ப்ரைவசி என்கிறீர்களா? தனிமை அல்லது ப்ரைவசி என்பது அனைவருக்கும் அவசியம்.  குழந்தையை பாயிலோ தொட்டிலிலோ விட்டு, அவர்கள் தூங்காத நேரம் கவனியுங்கள். தனக்குத் தானே பேசிக்கொண்டு ஆனந்தமாக மறுத்தும்  சிரித்தும் அழுதும் கோபித்தும் சமாளிக்கும். பார்க்கும்போதே அழகு அள்ளும். அதுபோலவே பள்ளி செல்லும் உங்கள் குழந்தை தனக்குத் தானே  பேசிக்கொள்வதை கவனியுங்கள். அதெல்லாம் அவர்களின் ப்ரைவேட் டைம். இந்தத் தனிமையும் சில நேரம் இனிமையாக இருக்கும். உங்கள்  குழந்தைகளுக்கும் அவர்களின் தனிப்பட்ட நேரங்களை அனுமதியுங்கள். அதை அவர்கள் ரசிக்கும்போதே அவர்களுடைய இன்பமும் துன்பமும்  வெளிவரும்.

தனிமை அவசியம் என்றாலும், எவ்வளவு என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு எல்லாம்  புரிந்துவிடும். அதுவரை உங்கள் கவனிப்பு  மிகவும் அவசியம். டி.வி. பார்க்கிறார்கள்... கம்ப்யூட்டரில் விளையாடுகிறார்கள்... இன்டர்நெட் பார்க்கிறார்கள்  என்றால் சிறிது நேரம் அவர்கள் விருப்பத்துக்கு விடுங்கள். ‘அதிக நேர தனிமை தேவையில்லை... டி.வி., கம்ப்யூட்டரில் அவர்கள் செலவிடும் நேரம்  முடிந்தது’ என்று நீங்கள் நினைக்கும்போது, அதிலிருந்து வெளியில் வர அவர்களை வற்புறுத்தாமல், அவர்களிடம் பேச்சு கொடுங்கள். ‘டி.வி.யில் என்ன  புரோக்ராம்?’, ‘கம்ப்யூட்டரில் அது என்ன டெக்னாலஜி’ போன்ற கேள்விகளைக் கேட்டு மெதுவாக வெளியேற்றி விடுங்கள். ஒன்றை அதிகமாக   தடுக்கும்போது அதை நோக்கி மனம் செல்வது இயற்கையே. ‘டி.வி. பார்க்கலாம்...

உனக்கு விருப்பமான நிகழ்ச்சியை இத்தனை மணி நேரம் பார்த்துவிட்டு அடுத்த வேலைக்கு போய்விட வேண்டும்’ என்று சிறிது அழுத்தமாகச் சொல்லி  புரிய வைத்தல் அவசியம். பெற்றோரின் பிம்பம் அல்லது பிரதிபலிப்புதானே குழந்தைகள்? அவர்களை டி.வி. பார்க்க வேண்டாம் என்று தடுத்துவிட்டு,  நீங்கள் நாள் முழுதும் டி.வி.யில் மூழ்குவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
ரகசியம்...

இது மிக முக்கியமானது. குழந்தைகள் உங்களிடம் ரகசியம் காக்க தேவையில்லை. குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துபவர்கள், ‘யாருகிட்டயும்  சொல்லக் கூடாது... சொன்னா அடிவிழும்’ என்றோ, வேறுவிதமாகவோ பயமுறுத்தி வைத்திருப்பார்கள். ‘அந்த ரகசியம் தேவையற்றது... அம்மாவிடம்  அல்லது அப்பாவிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்ற நம்பிக்கையை விதைப்பது நம் கடமை. குழந்தைகள் எங்கு சென்று வந்தாலும்  விசாரியுங்கள். விசாரணை என்பது கடினமாக இல்லாமல் மிக இயல்பாக இருத்தல் அவசியம். இல்லாவிடில், ‘போனதும் விசாரிப்பாங்க’ என எரிச்சல்  அடைந்து உங்களிடம் கண்டிப்பாக மறைப்பார்கள். உதாரணமாக... குழந்தைகள் சண்டையிட்டு லேசாக அடிபட்டிருப்பார்கள்...

அதை நீங்கள் விசாரித்துக் கோபமடைந்து, அடுத்த நாள் பள்ளியில் புகார் வரை சென்றால் அது அந்தக் குழந்தைகளின் மனநலனை பாதிக்கும். இன்று  சண்டையிடுபவர்கள் நாளை சேர்ந்துவிடுவார்கள். தேவையற்ற பதற்ற விசாரணை ஒரு நல்ல மனநிலையை சிதைக்கக் காரணமாகும். அதற்குப் பதில்,  தினப்படி இதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டால் அவர்களே உங்களிடம் சொல்வார்கள். இது போன்ற நேரங்களில், ‘சரிடா கண்ணு... நாளைக்கு  சரியாயிடும்... அவனும் குழந்தைதானே? நீயே மிஸ்கிட்ட சொல்லு...’ என்று ஆறுதலளிப்பதே போதும். அவர்களுக்கு உங்களிடம் என்ன  வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கை வர வேண்டும். அது மட்டுமே முக்கியம்!

முடிவுகள் அல்லது தீர்மானங்கள் பிறந்த குழந்தைக்கு கூட முடிவுகளும் தீர்மானங்களும் இருக்கும். சின்னக் குழந்தைக்கு விருப்பமில்லாததை  ஊட்டினால் கூட, நம் மீதே துப்புவதும், இஷ்டமில்லாதவர்கள் தூக்கினால் கை காலை உதறி அழுது எதிர்ப்பை தெரிவிப்பதும் அதனுடைய முடிவும்  தீர்மானமும்தான். சிறுவயதில் இப்படி விளையாட்டாக முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் பழகுவது பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கே உதவும். 

‘பள்ளியில் ஒரு விழா...

அதில் கலந்து கொள்ளவேண்டும்’ என்று அடம்பிடிக்கும் குழந்தை எனில், அதிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொண்டு, உங்கள் கருத்தையும் சொல்லி,  முடிவை அவர்களையே எடுக்கச் சொல்லலாம். ஏதாவது ஒரு பொருள் தேவைப்படும்போது, அதனுடைய அவசியத் தேவைகளை விவாதித்து புரிய  வைக்கலாம். ஒரு வேளை இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் எனில், இன்னும் கொஞ்சம் விரிவாகவே விவாதித்து சொல்லித் தரலாம். எதுவுமே  ஆரம்பிக்கும்போது மட்டுமே கடினம்... பழகிவிட்டால் தானாகவே அவசியத்தையும் காரண காரியங்களையும் யோசிப்பார்கள். கொஞ்சம் பணம்  கொடுத்து அவர்களையே கடைக்குச் சென்று பழக்கலாம். ‘தேவை - தேவையில்லை’யை தானாகவே புரிய வைப்பது எளிது, சொல்லி புரியவைப்பதை  காட்டிலும்! 

விருப்பு வெறுப்புகள்...

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் சிறிய பிரச்சனை முதல் பெரிய விவாதம் வரை நிகழக் காரணம் இந்த விருப்பு வெறுப்புகளே. நமக்குப் பிடித்தது  குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினால்தான் பிரச்னையே ஆரம்பிக்கும். நம் குழந்தைகள் நம்முடையவை அல்ல... கலீல் ஜிப்ரான்  கருத்துப்படி, ‘அவர்கள் நம் மூலம் இந்த உலகத்துக்கு வந்தவர்கள்’... தனிமனித உரிமைகளை அவர்கள் இந்த பூமியை தொட்ட நொடியில்  பெறுகிறார்கள்.

ஆகவே, அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும், குறைந்தபட்சம் காதுகொடுத்தேனும் கேட்கலாம். நம்மால் முடியக்கூடிய விஷயம்  எனில் சந்தோஷமாக அனுமதிக்கலாம். இல்லையெனில், ஏன் முடியாது என்று அவர்களிடம் தெளிவுபடுத்துவதும் நம் கடமைதான். மிகச் சிறிய  வயதிலிருந்தே இப்படி பழக்கினால் பிற்காலத்தில் பெரும் விவாதம் வருவதை தவிர்க்கலாம்.

Sunday, July 13, 2014

எது சரியான உணவு - சரியான உணவு பற்றி குறிப்புகள்

எது சரியான உணவு - www.v4all.org 


நாம் வாழும் வாழ்க்கையின் முழுப் பலனைப் பெற, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சுவரில்லாமல் சித்திரமில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தேவை உணவு. அதாவது தேவையான எல்லா சத்துக்களும் சேர்ந்த நல் உணவு. உணவே கடவுள். உணவே மருந்து. உணவை சீர்திருத்தினால், ஆரோக்கியம் பெருகும். ஆயுள் உயரும். பெட்ரோல் போடாத வண்டி ஒடாது. காருக்கு எப்படி பெட்ரோலோ, உடலுக்கு உணவு. உணவை கண்டபடி உண்ணமால் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும். வயதிற்கேற்ப உணவு கட்டுப்பாடுகள் அவச¤யம¢. ஆரோக்கியத்திற்கு தேவை சத்துள்ள, ருசிமிக்க, சரிசம விகித உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்
புரதம்,  மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், உப்பு, உலோக தாதுப் பொருட்கள் இவை உடலுக்கு தேவையான சத்துப் பொருள்கள். உடலுக்கு தேவையான எரிசக்தியை கலோரி என்று கணக்கிடுகிறோம். ஒரு மனிதனுக்கு தேவையான கலோரிகள் எவ்வளவு என்று நிர்ணயிப்பது அவன் செய்யும் வேலையைப் பொருத்தது.
இவை கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு இன்னும் அதிக கலோரிகள் தேவை.
சரியான உணவு பற்றி குறிப்புகள்
நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சராசரி மனிதனுக்கும் உணவுக்கட்டுப்பாடு தேவை. கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான உணவு 60 வயதுள்ளவர்களுக்கு ஒத்து வராது. வயது ஏற ஏற உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம். 60 வயதானவர்களின் அன்றாட வேலை குறைவு. அவர்களுக்கு 1550 கலோரி போதுமானது.
பசிக்கும் போது உண்ண வேண்டும். வயிறு புடைக்க அளவில்லாமல் உண்ணுவது கூடாது. அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. நன்கு மென்று உண்ண வேண்டும்.
நல்ல தரம் உடைய, இயற்கையான, முழுமையான உணவுப் பதார்த்தங்களை தேர்ந்தெடுத்து உண்ணவும்.
சமையல் விஸ்தாரமாக செய்யாமல், குறைவான நேரத்தில் சமையலை முடியுங்கள். அதிக நேரம் அடுப்பில் சுட வைத்தால் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் இவை அழிந்து விடும்.
பழரசமாக மாற்றுவதை விட, பழங்களை நேரடியாக சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும்.
பல தரப்பட்ட உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
பூரித (Saturated) கொழுப்பை தவிர்க்கவும்.
புகையிலை, சிகரெட், மது வேண்டாம்.
தினமும் 6 - 8 டம்ளர் தண்ணீர் பருகவும்.
உண்ணும் போது பாதி வயிற்றில் காய்கறிகள், பழங்கள் தெளிவான ரசம், வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர் இவற்றால் நிரப்பி, கால் வயிற்றில் அரிசி அல்லது கோதுமை பண்டங்களால் நிரப்பி பாக்கியை காலியாக வைக்கவும்.
எந்த வேளை உணவையும் முழுமையாக தவிர்க்க வேண்டாம். காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம்.
அதிகமாக எப்போதாவது சாப்பிட்டால், அதிகப்படி கலோரிகளை எரிக்க அதிக உடல் உழைப்பு தேவை.

முதுகு லியை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்பதற்கு சில டிப்ஸ் .....




முதுகு வலியை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்பதற்கு சில டிப்ஸ் ..... 





1. நாற்காலியில் அமரும்போது, நன்றாக சாய்ந்து, உங்கள் முதுகுப் பகுதி நாற்காலியோடு ஒட்டி இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது, கால்களை கீழே தரையில் வைக்காமல், ஏதாவது பலகை அல்லது பெட்டியின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.

2.கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஏதாவது ஒரு பேடை எடுத்துவைத்து, அதில் கீபேடை வைத்து டைப் செய்யுங்கள். அதேபோல், உங்கள் கண்ணும் கம்ப்யூட்டர் திரையும் இணைகோட்டில் இருப்பதுபோல பார்த்துக் கொள்ளுங்கள். கழுத்தை நிமிர்த்தியோ, அல்லது குனிந்தோ திரையை பார்க்க வேண்டாம் (பார்க்க: படம் 3).

3.அமர்ந்திருக்கும் சேரில் இருந்தபடி கழுத்தைத் திருப்பி ஏதாவது பொருட்களை எடுப்பது, இடுப்பை மட்டும் திருப்பி டெலிபோன் எடுப்பது போன்ற செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள். எந்தப் பொருளை எடுப்பதாக இருந்தாலும் மொத்த உடம்பையும் திருப்பி எடுங்கள் (பார்க்க: படம் 2).

4.படுத்துக்கொண்டு படிப்பது, சேரில் உட்கார்ந்து கொண்டே டேபிளில் கவிழ்ந்தபடி படிப்பது.. இவை எல்லாம் அப்போதைக்கு வசதியாகத் தோன்றினாலும் வயதாகும்போது முதுகுவலியில் கொண்டு போய் விட்டுவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

5.ஒரே இடத்திலோ... அல்லது ஒரே நாற்காலியிலோ நீண்டநேரம் உட்கார்ந்திருந்தால், முதுகு வலி வரலாம். எனவே, அவ்வப்போது எழுந்து ஒரு ‘வாக்’ போய் வாருங்கள்.

6. அதிக எடை உள்ள பொருட்களை தூக்கும்போது, சரியான முறையில் தூக்காவிட்டால், நிச்சயம் முதுகு வலி ஏற்படும். அவற்றைத் தூக்கும்போது இடுப்பை வளைக்காமல், முழங்கால்களை மட்டும் வளைத்துத் தூக்குங்கள் (பார்க்க: படம் 4). பொருளை மார்புக்குக் கீழே, உடம்புக்கு நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். பொதுவாகவே, கனமான பொருட்களை, தூக்குவதைவிட இழுத்துச் செல்லுவது நல்லது.

7. நிமிர்ந்து நேராக நிற்கும்போது, ஒரு பாதம் முன்னேயும், அந்தப் பாதத்தின் முட்டுப் பகுதி சிறிது வளைந்தும் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். அதிக நேரம் நிற்க வேண்டியிருந்தால், பாதங்களில் ஒன்றைவிட மற்றதை உயரமாக ஒரு பலகையின் மேல் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள் (பார்க்க: படம் 1). நீங்கள் நின்றுகொண்டிருக்கும் நிலையை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது.

8.பொதுவாக, நம் எடையை உடல் முழுவதுமே சேர்ந்து சமமாகத் தாங்குகிறது. ஹை ஹீல்ஸ் அணியும்போது விரல் மட்டும்தான் மொத்த பாரத்தையும் சுமக்க வேண்டியதாகிறது. அதனால், முதுகுக்கு அழுத்தம் அதிகரித்து முதுகு வலி ஏற்படுகிறது. ஆகவே, முதுகு வலி வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் ஹை ஹீல்ஸ் செருப்புகளுக்கும் ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும்

Saturday, July 5, 2014

உதறிவிட்டு பார் - உன் துன்பம் மாறும் . உன்னுள் அமைதி வரும் .. உன்னுள் மகிழ்ச்சி வரும் . -ஓஷோ-

உதறிவிட்டு பார்
எப்போதெல்லாம் நீ சிரமப்படுகிறாயோ அப்போதெல்லாம் அதற்காக யாரையும் குற்றம் சொல்லாதே.
அதன்மூலம் எந்த வேதனையும் படாதே. அதற்கு பதிலாக அதை பார், உணர்ந்து பார், கவனி, அதை எத்தனை கோணங்கள் உண்டோ அத்தனை கோணங்களிலும் பார்.
அதை ஒரு தியானமாக மாற்று,
என்ன நிகழ்கிறதென்று பார். நோய்க்குள் நகரும் அந்த சக்தி, சிரமத்தை உண்டாக்கும் அந்த சக்தி, மாறுதலடையும். குணம் மாறும்.
அதே சக்தி உனது விழிப்புணர்வாக மாறிவிடுகிறது.
ஏனெனில் உன்னுள் இரண்டு விதமான சக்திகள் இல்லை, இருப்பது ஒரே சக்திதான்.
எப்போதெல்லாம் சிரமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் உடனே உன்னை உதறி கொள்.
கண்களை மூடி அந்த சிரமத்தினுள் பார்.
அது என்னவாக இருந்தாலும் சரி – மனேரீதியாக, உடல் ரீதியாக, வெளிப்புறத்திலிருந்து – அது எதுவாக இருந்தாலும் அதனுள் பார்,
பறவை தன்மீதுள்ள நீரை உதறிவிடுவதைப் போல அதை உன்னிலிருந்து உதறி விடு.
அதை தியானமாக மாற்று. அதை ஒரு பொருளை பார்ப்பது
போல பார்.
உன் துன்பம் மாறும் . உன்னுள் அமைதி வரும் ..
உன்னுள் மகிழ்ச்சி வரும் .
-ஓஷோ-www.v4all.org

Tuesday, July 1, 2014

ரத்த அழுத்தம் கட்டுப்பட பிராணயாமம் பயிற்சி!


ரத்த அழுத்தம் கட்டுப்பட பிராணயாமம் பயிற்சி!


From - HAPPY Welnes Center , Coimbatore - www.v4all.org 

வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய் முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது. 
அமெரிக்க மருத்துவத்துறையால் வெளியிடப்படும் ஹைப்பர் டென்ஷன் என்ற
மருத்துவ இதழ் இரத்த அழுத்தம் குறித்த கடந்த 1976ம் ஆண்டு முதல்
அவ்வப்போது விரிவான அறிக்கையினை வெளியிட்டு வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு
கடைசியாக இந்த இதழில் வெளியிட்டுள்ள உயர் ரத்த அழுத்த நோய் தடுப்பு,
ஆய்வு, பரிணாமம் மற்றும் சிகிச்சை குறித்து வெளியிடப்பட்ட 7 வது
அறிக்கையில் (The seventh report of the Joint National Committee on
prevention, detection, evaluation and treatment of high blood pressure
- JNC) மருந்தை விட, அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக்
கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடல் எடையைக் குறைப்பது, உணவுக் கட்டுப்பாடு, தேவையான கலோரிகளை
உட்கொள்வது போன்ற நடைமுறைகளையே, ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான
முக்கிய வழி முறைகளாக இந்த அறிக்கை பரிந்துரை செய்கிறது.
இவற்றுடன் சீரான உடல் இயக்கத்தையும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
அதாவது ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் உடலுக்கு அவ்வப்போது
அசைவும், வேலையும் கொடுத்து வந்தால், ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு
மிகவும் குறைவு என்பதை இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதேபோன்று
பிரிட்டிஷ் உயர் ரத்த அழுத்த கழகமும், சில ஆலோசனைகளை வழங்கி உள்ளது. ரத்த
அழுத்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இந்த
அறிக்கைகள் தெரிவிக்கும் வழிமுறைகள் குறித்து இங்கே பார்ப்போம். ரத்த
அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும், தங்களது முன்னோர்களுக்கு ரத்த
அழுத்த நோய் உள்ளவர்களும் இந்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.
அவ்வப்போது குறித்த கால இடைவெளியில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்து
கொள்வது மிக முக்கியம். இதன் மூலம் உடலில் ரத்த அழுத்தத்தின் நிலையை
அறிந்துகொள்ள இயலும்.
உடல் எடைக்கும், ரத்த அழுத்த நோய்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே
உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான உடல்
எடையைக் குறைப்பதில் கவனம் தேவை. தேவையான எடையைக் குறைத்துவிடக் கூடாது.
சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய உப்புக்கும், உடல்
பருமனடைவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உடல் பருமனடைந்தால் ரத்த
அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் உப்பின்
அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 6 கிராம் அளவுக்கும்
குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.
ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுக்கட்டுப்பாடு ஆய்வில்
(Dietary Approach to Stop Hypertension study - DASH)
கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக உட்கொள்ளும் கொழுப்புச் சத்தைவிட 35
சதவீதம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வேகவைக்கப்படாத
காய்கறிகளும், பழங்களும் உணவில் அதிகம் இடம்பெற வேண்டும். ரத்த அழுத்த
நோய் உள்ளவர்கள் பால், நெய், தயிர், மோரைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல்
நல்லது. முன்பே தயாரித்து, குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து பின்னர்
எடுத்துச் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
பொருத்தமான, தொடர்ச்சியான உடற்பயிற்சியை செய்துவர வேண்டியது அவசியம்.
பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப்பயிற்சி, ரத்த அழுத்த நோயை
முழுமையாக கட்டுப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது. இந்த எளிய பயிற்சியைச்
செய்து வந்தாலே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் நம்மை அணுகாது.
மது, புகையிலை, கோகெய்ன் போன்ற புகையிலைப் பொருட்களை அறவே ஒதுக்க
வேண்டும். ரத்த அழுத்த நோய்க்கான முழு முதல் காரணிகள் மது உள்ளிட்ட போதைப்
பொருட்கள்தான். எனவே போதைப் பழக்கத்தை வைத்துக்கொண்டு, ரத்த அழுத்த நோயை
நிச்சயமாக குணப்படுத்த முடியாது.
பெண்களைப் பொறுத்தவரையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள்
உணவில் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாலே ரத்த அழுத்த நோயைத்
தவிர்க்க முடியும் என்று பெல்ஜியத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினர்
மக்னீசியம், மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், மற்ற பிரிவினர் அது
இல்லாத உணவினையும் இரண்டு வாரங்கள் உண்ணவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு
வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து பார்க்கும்போது கால்சியம், மக்னீசியம்
சத்துள்ள உணவை உட்கொண்ட பெண்களின் ரத்தழுத்த அளவு மிகவும் சீராக இருந்தது
கண்டறியப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மற்றவற்றை விட ஆலிவ் எண்ணெயே
சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக மீன்
எண்ணெயையும் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரத்த அழுத்த
நோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. இவை இரண்டும் அறவே கொழுப்புச் சத்து
இல்லாதவை என்பதே இதற்குக் காரணம்.
சி வைட்டமின் சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன்
மூலம் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ மற்றும் ஈ
வைட்டமின்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் குணம் இல்லை.
ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளை விட, மனதை இலகுவாக்க உதவும்
தியானப் பயிற்சியே சிறந்த மருந்து என்பதை சர்வதேச மருத்துவ ஆய்வுகள்
உறுதியாகக் கூறுகின்றன.
ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த, அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட
அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக்
கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம் என்பதை, மேலே உள்ள
பரிந்துரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
எனவே, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருந்துகளைத் தேடி ஓடாமல், தங்கள்
மனதையும் உடலையும் செம்மைப்படுத்தும் முயற்சியை முதலில் தொடங்கலாமே.