Showing posts with label laughter therapy. Show all posts
Showing posts with label laughter therapy. Show all posts

Sunday, February 7, 2016

பத்திரகிரியார்

சித்தர்களில் மிகவும் வசதியான நிலையினில் இருந்து 
ஞான நிலையினை அடைந்தவர்கள் பத்திர கிரியாரும் 
பட்டினத்தாரும் மட்டுமே. 
பத்திரகிரியார் நாட்டின் மன்னனாக இருந்து பட்டினதாரால் 
ஞானத்தை அடைந்தார்.
* பட்டினத்தார் மிக பெரிய வியாபாரியாக இருந்து 
இறைவனின் கருணையினால் ஞானியாக மாறினார். 
பட்டினத்தாரின் சீடனாக இருந்தும் பத்திரகிரியார் 
முக்தியினை பட்டினத்தாருக்கு முன்பே அடைந்து விட்டார். 
காரணம் அவர் நிராசை என்னும் நிலையினை குரு சொன்ன உடன் 
அக்கணமே நிராசை நிலையினை அடைந்தார்.
ஆகவே அவருக்கு முக்தி மிக சீக்கிரமே வாய்த்தது.
* பட்டினத்தாருக்கு இறைவன் அசரீரியாக 
பேய் கரும்பு எங்கு இனிக்கின்றதோ அங்கோ உனக்கு முக்தி கிடைக்கும் 
என்று என்று கூறினார்.
* பேய் கரும்பு என்பது உவர்ப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. 
பேய் கரும்பு என்பது பார்ப்பதற்கு சாதாரண வெள்ளை கரும்பை போல்தான் 
இருக்கும். இருப்பினும் இனிப்பு சுவை இல்லாதது. 
பட்டினத்தார் நடை பயணமாக பல இடங்களுக்கும் சென்று 
பின்னர் திருவொற்றியூர் வந்து சேர்ந்தார் 
அங்கு நிறைய பேய் கரும்பு விளைந்து இருந்தது. 
அவர் அதில் ஒன்றை எடுத்து சுவைத்து பார்த்தார் 
பேய் கரும்பு இனித்தது.
* இந்த இடம் தான் முக்தி அடைவதற்கான இடம் என்பதனை உணர்ந்து 
அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களிடம் 
என்னை குழி தோண்டி புதைத்து விடுங்கள் நான் அதிலிருந்து 
வெளியில் வந்து உங்களுக்கு இனிப்புகள் தருகிறேன் 
என்று கூறினார். அதே போல் சிறுவர்களும் அவரை குழியில் 
புதைத்தார்கள். 
அவரும் சித்தின் மூலம் வெளியில் வந்து 
சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 
அதே போல் மறுமுறையும் செய்தார். 
மூன்றாவது முறையாக உள்ளே சென்றவர் திரும்ப வரவில்லை. 
சிவத்தோடு கலந்து விட்டார்.
* இதில் இறைவன் பேய் கரும்பு இனிப்பு சுவை ஏற்ப்படும் இடத்தில் 
முக்தி அடைவாய் என்று கூறியதற்கு காரணம் 
முக்தி அடைவதற்கு முன்பு நமது அண்டத்திலிருந்து 
வருகின்ற அமுதம் தேனை போல சுவை கொண்டதாக இருக்கும். 
தேனோடு எந்த பொருளை சேர்த்தாலும் அந்த பொருளின் சுவை போய் 
தேனின் சுவையாக மாறி விடும்.
* அதே போல்தான் மேலிருந்து வரும் ஐந்தாவது அமுதம் 
தேனின் சுவையோடு இருக்கும். 
அந்த சுவையோடு பேய் கரும்பை சுவைத்தால் 
உவர்ப்பு சுவை போய் இனிப்பு சுவை மட்டுமே தெரியும். 
இது இறைவனால் பட்டினத்தார்க்கு கொடுக்கப் பட்ட 
முக்திக்கான அடையாளம்.
* நமது வள்ளல் பெருமானும் அமுதத்தை பற்றி
குறிப்பிடும் போது அமுதம் ஐந்து நிலை உடையது என்று கூறி இருக்கிறார்கள். 
ஐந்தாவது வரும் அமுதமானது வரும்போது 
இறைவனோடு ஐக்கியம் ஆகும் தகுதியை நாம் பெற்றிருப்போம்.
* அனைத்து அமுத நிலையினை அடைய வேண்டும் என்றால் 
ஒருமை மற்றும் ஜீவகாருண்ய மயமானால் 
நாமும் இறை நிலையினை அடையலாம்.
#AmmuNisha

Monday, October 5, 2015

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.

ரொட்டிக் கடை வைத்திருந்தார் ஒருவர்.
அவர் கடைக்கு வெண்ணெய் சப்ளை செய்பவர் மீது அவருக்கு வெகுவாக சந்தேகம்.
தன்னை அவர் ஏமாற்றுவதாக வருத்தம் இருந்தது. அரை கிலோ வெண்ணெய் என்று அவர் தருவது அரை கிலோவே இல்லை.
எடை குறைவாக இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
சண்டை முற்றி ஒரு நாள் நீதிபதி முன் வழக்கு வந்தது.
வெண்ணெய் வியாபாரி தன்னிடம் கொடுத்த வெண்ணெய் பொட்டலத்தை நீதிபதி முன் நிறுத்துக் காட்டிய ரொட்டிக் கடைக்காரர்,
"பாருங்கள் 450 கிராம் தான் இருக்கிறது. இப்படித்தான் என்னை பலமுறை ஏமாற்றி இருக்கிறார். இவரை தண்டியுங்கள்" என்று கூச்சலிட்டார்.
நீதிபதி வெண்ணெய் வியாபாரியை பார்த்து "என்ன சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் 50 கிராம் குறைவாகத் தரலாமா? அது குற்றமில்லையா?"என்று கேட்டார்.
"ஐயா.. என்னிடம் எடைக்கல் கிடையாது. அதனால் 500 கிராம் எடையுள்ள பொருள் ஏதேனும் ஒன்றை எடைக் கல்லுக்குப் பதிலாக பயன்படுத்துவது வழக்கம்.
பெரும்பாலும் இவரது கடை ரொட்டியைத் தான் வாங்குகிறேன். அதையே அவ்வாறு பயன்படுதுவேன்.
பாக்கெட் மீது எடை 500கிராம் என்று எழுதப்பட்டிருப்பதை நம்பி இவரது ரொட்டியை எடைக் கல்லுக்குப் பதிலாக தராசில் பயன்படுத்துவேன்.
இப்போது பாருங்கள் என் வெண்ணெயும் அவரது ரொட்டியும் சம எடையாக இருக்கும்." என்று தராசில் இரண்டையும் எதிர் எதிராக வைத்தார். சமமாக இருந்தது.
நீதி: எல்லோரும் பிறர் தன்னை ஏமாற்றக் கூடாது என்று நினைக்கிறார்களே ஒழிய தானும் பிறரை ஏமாற்றக் கூடாது என்று ஏன் நினைப்பதில்லை.

Friday, August 21, 2015

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.

வியாபார காட்சிகள், அரங்குகள், கூட்டங்கள் மற்றும் பிற பொருட்காட்சிகளில் வெளிக்காட்டுவது உங்களுக்கு தனிப்பட்ட விற்பனை வாய்ப்புகளை அளிக்கும், மேலும் இவற்றால் புதிய முதலீடுகள், விநியோகத்தர்கள் ஆகியவற்றை உருவாக்கவும், உங்களுக்கான போட்டியை அறிந்து கொள்ளவும், நெட்வொர்க்கிங் செய்வது போன்றவற்றால் விளம்பரம் பெற முடியும். சுருக்கமாக சொல்வதானால், பல வாரங்கள் அல்லது மாதங்கள் வீட்டிலிருந்து நீங்கள் செய்யக்கூடியவைகளை ஒரே வியாபாரக் காட்சியில் நீங்கள் செய்து முடிக்க முடியும். மேலும் அது உங்கள் பணத்தையும் சேமிக்கும் -- Center for Exhibit Industry Research –இன் ஆய்வின்படி நேரடியாக களச் செயற்பாட்டில் முதலீடு பெற செலவாவதை விட 62% குறைவாக வியாபாரக் காட்சிகளில் செலவாகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் பெறுவதற்கு நீங்கள் கவனமாக திட்டமிட வேண்டும். அதாவது சரியான வியாபாரக் காட்சியைத் தேர்ந்தெடுப்பது, தெளிவான இலக்குகளை அமைப்பது, செயல்திறமிக்க காட்சியை உருவாக்குவது மற்றும் உங்கள் இருப்பை விளம்பரப்படுத்துவது போன்றவையாகும். இவை அனைத்துமே நீங்கள் வியாபாரக் காட்சிக்கு செல்வதற்கு முன்பே செய்யப்பட வேண்டும். உங்கள் வியாபாரக் காட்சியிலிருந்து அதிகமான பயன்களைப் பெறுவது பற்றி அறிய பின்வரும் படங்களை கிளிக் செய்யவும்.
ஆயிரக்கணக்கான வியாபாரக் காட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்படுகின்றன, அதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் முதலீடு, நேரம் மற்றும் பணத்துக்கு சிறந்தப் பயனைப் பெறுதல் மிகவும் கடினமான ஒன்றாகும்.
உங்கள் உற்பத்திப் பொருளுக்கு அல்லது சேவைக்கு பொருந்தும் வியாபாரக் காட்சிகளைத் தெரிவு செய்ய தொடங்குங்கள். இணையத்தளத்தில், பின்வருவதில் ஒன்றைப் போன்ற வியாபாரக் காட்சி தேடல் தளங்களை முயற்சிக்கவும்:
வியாபாரக் காட்சிகளைப் பற்றி அறிவதற்கான மற்றொரு வழி, உங்களுடைய தொழிற்துறையின் வியாபாரச் சங்களாகும், ஏனெனில் பெரும்பாலான காட்சிகள், கூட்டங்கள் தொழிற்துறை குழுக்களால்தான் நடாத்தப்படுகின்றன.
சரியானதைத் தேர்ந்தெடுக்க இதோ மேலும் சில தகவல் குறிப்புகள்:

எண்களின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்காதீர்கள்

உங்கள் உற்பத்தி அல்லது வாடிக்கையாளர்களைச் சேர்க்காத வரை, பெரிய வியாபாரக் க்காட்சிகளுக்கு வரும் மக்கள் உங்கள் வியாபாரத்திற்கு நேர விரயமாக இருக்க வாய்ப்புண்டு. கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களை உன்னிப்பாக நோக்கி, அங்கு வரும் நபர்கள் உங்கள் வாடிக்கையாளர்களாக இருக்க முடியுமா என்பதை மதிப்பிடுங்கள். காட்சி முகாமையாளர் உங்களுக்கு இந்த தரவுகளைத் தரக்கூடும்.

உங்கள் வாடிக்கையாளர்களை உதவும்படி கோருங்கள்

உங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டு அவர்கள் எந்த வியாபாரக் காட்சிகளில் பங்கேற்கிறார்கள் என்று அறியுங்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வியாபாரக் க்காட்சிகளில் பிற வாய்ப்புடைய வாடிக்கையாளர்களும் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. உங்கள் போட்டியாளர்களிடமும் பேசி அவர்களுக்கு எந்தெந்த வியாபாரக் காட்சிகள் அதிக பயன் தந்தது என்று அறியவும்.

அதிக நேரத்துக்கு முன்பே இவற்றை செய்து முடியுங்கள்

ஒரு வியாபாரக் காட்சியை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி, நேரடியாக சென்று பார்ப்பதுதான். நீங்கள் பதிவு செய்வதற்கு முன்பு வியாபாரக் காட்சிக்கு ஒரு பார்வையாளாராக செல்லுங்கள். வியாபாரக் காட்சி செயல்திறமிக்கதாகவும் சிறப்பாகவும் இருக்கிறதா? வியாபாரக் காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் வாடிக்கையாளர்களாகும் வாய்ப்புள்ளவர்களா? பிற வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்கள் யார், மேலும் உங்கள் உற்பத்திகள்/சேவை இதில் எங்கு பொருந்தும்? அங்குள்ள மக்களை அணுகி நுணுக்கமாக கண்காணியுங்கள்.

கவனமாக மதிப்பிடுங்கள்

வியாபாரக் காட்சியின் சாத்தியங்களைப் பட்டியலிட்ட பின்னர், உங்கள் நோக்கங்களுக்கு இந்த வியாபாரக் காட்சி சரியானதா என்பதைத் தீர்மானிக்க பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:
  • அனைத்து வகையான வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை கவரும் அளவுக்கு இது பெரிதான வியாபாரக் காட்சியா – ஆனால் அதே நேரம் உங்கள் தொழிலின் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய அளவுக்கு பெரிதாக இல்லையா?
  • உங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புவியியல் ரீதியாக சரியான இடத்தில்தான் அமைந்துள்ளதா – அவர்கள் உள்ளூரா, வட்டாரம் சார்ந்தவர்களா, தேசிய அளவில் உள்ளவர்களா, அல்லது சர்வதேச அளவில் உள்ளவர்களா?
  • புதிய வியாபாரத்தை ஈர்க்கக்கூடிய மற்றும் புதிய முதலீடுகளைப் பின் தொடரக் கூடிய காலத்தில்தான் அது திட்டமிடப்பட்டுள்ளதா?
  • வியாபாரக் காட்சியின் விளம்பரதாரர்கள் நம்பகமானவர்களா மற்றும் நிர்வாகத்துக்கு வெற்றிகரமான முன்னைய நிகழ்வுகள் உள்ளனவா?
கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீர்கள்

சில பிரபலமான வியாபாரக் காட்சிகள் விரைவில் பூர்த்தியாகிவிடும் நீண்ட நேரம் காத்திருந்தால், காத்திருப்பு பட்டியலில் நீங்கள் இடம்பெறும் வாய்ப்பு அதிகம். மேலும், விரைவில் வியாபாரக் காட்சிக்காகப் பதிவு செய்தால், உங்கள் அரங்கில் நல்ல சிறந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பும் அதிகம்.
தெளிவான இலக்குகளை அமைத்தல்

நீங்கள் முதலீடு செய்யும் நேரம், பணம் மற்றும் திறனுக்கான அதிகமான பயனைப் பெற, அங்கு இருப்பதற்கு உங்களுக்கான நோக்கம் மற்றும் அளவிடக்கூடிய இலக்குகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதே ஆகும். வியாபாரக் காட்சிக்கு முன்னர், அது நிகழும்போது மற்றும் அதற்கு பின்பு நீங்கள் செய்யும் அனைத்தும் இந்த இலக்குகளை அடைவதற்கு எவ்வகையில் பயன்படும் என்ற அடிப்படையில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

வியாபாரக் காட்சிககு சாத்தியமான இலக்குகள்

வியாபாரங்கள் வியாபாரக் காட்சியில் பங்கேற்பதற்கான சில காரணங்கள் பற்றி இங்கு விவரிக்கப்படுகின்றன. இவற்றில் பலவற்றை உங்கள் இலக்குகள் உள்ளடக்கியிருக்கலாம், அல்லது உங்கள் சிறுவியாபாரத்திற்கு முக்கியமான பிறவற்றைக் கொண்டிருக்கலாம்:
  • விற்பனை கட்டளைகளைப் பதியுங்கள்
  • போட்டி பற்றி ஆராயுங்கள்
  • இட மாதிரிகளைக் கண்டறியுங்கள்
  • எதிர்கால விற்பனைக்கான முன்னேற்பாடுகளை உருவாக்குங்கள்
  • சரியான நபர்களின் பெயர்களுடன் மெயிலிங் லிஸ்ட்டை உருவாக்குங்கள்
  • சிறந்த அல்லது மலிவான விநியோகத்தர்களைக் கண்டறியுங்கள்
  • நடைமுறை வாடிக்கையாளர்களுடன் உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள்
  • ஊடகச் செய்திகளைப் பெறுங்கள்
  • புதிய உற்பத்திப் பொருளை நோக்கிய ஆர்வத்தை உருவாக்குங்கள்
  • தொழிற்துறையில் உங்கள் நிறுவனத்தைப் பிரபல்லியப்படுத்துங்கள்
உங்கள் அரங்கின் பணியாளர்கள் போதுமான அளவுக்கும் நேர்த்தியானவர்களாகவும் இருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்

இதை தனியாக செய்ய முடியாது. உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும், நீங்கள் அரங்கை விட்டு வெளியேறும்போது, இடைவேளைக்கு வெளியே செல்லும்போது, அல்லது போட்டியை அவதானிக்க வெளியே செல்லும்போது குறைந்தது ஒரு நபராவது உங்கள் "இடத்தை" நிரப்ப இருக்க வேண்டும். ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் ஒரு நபரை வைத்திருப்பது சிறந்த வழியாகும். சிறந்த தோற்றத்தில், சிறந்த பயிற்சியுடன், சிநேகிதபூர்வமாகவும் அறிவுடனும் உங்கள் பணியாளர்கள் இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவற்றை அடைவதற்கான அவர்களின் பங்கை அறிந்திருக்க வேண்டும். சம்பளம் பெறும் பணியாளர்களாக உங்களிடம் பணியாளர்கள் இல்லையென்றால், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பகுதி நேர ஊழியர்கள் போன்றோரை நாடலாம்.

உங்கள் செய்தியைத் துல்லியமாக வெளிப்படுத்துங்கள்

இரண்டு அல்லது மூன்று முக்கிய யோசனைகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் நீங்களும் உங்கள் பணியாளர்களும் அதிகமான பயிற்சிகளைக் கொண்டிருங்கள், இதனால் "செய்தியில் குறிப்பாக இருக்கலாம்". கிராஃபிக்ஸ், காட்சிக்கு முன்பான விளம்பரம், மற்றும் விபரக்கொத்து விளம்பரம் போன்றவற்றை உங்கள் செய்திச் சுருக்கத்தில் திட்டமிடுங்கள்.

பாதீட்டைத் தயாரியுங்கள்

எந்த வியாபாரக் காட்சியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் மற்றும் உங்கள் இலக்கு ஆகியவற்றைத் தீர்மானித்த பின்னர் ஒரு பாதீட்டைத் தயாரியுங்கள். ஒரு பாதீடு இல்லையெனில் செலவுகள் எளிதாக கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடும் (உதாரணமாக, கடைசி நேர நெருக்கடியான கொள்வனவு செய்யும் கூட்டம்). மேலும் இவை உங்களுடைய சிறந்த திட்டங்களை அழிக்கக் கூடும். உங்களுடைய மொத்த பாதீட்டில் நான்கிலொரு பங்கு இடத்துக்கான செலவில் உள்ளபடி திட்டமிடுவது சிறந்ததாகும். எனவே இடத்துக்கான வாடகையாக நீங்கள் என்ன செலவழிக்கிறீர்கள் என்று தெரியும்போது, அதனை நான்கால் பெருக்கி உங்கள் செலவுகளைப் பற்றி தூர சிந்தனையைப் பெறுங்கள். இதில் உங்கள் தனிப்பட்ட செலவுகளைச் சேர்க்காதீர்கள்.
உங்கள் அரங்கு எங்கு அமைந்துள்ளது என்பதும் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதும் உங்கள் வியாபாரக் காட்சியின் வெற்றியைப் பாதிக்கும். பின்வரும் தகவல் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

அதிக மக்கள் வரும் அமைவிடத்தைக் கண்டறியுங்கள்

உங்களுக்கான இடத்தைத் தரிவு செய்யும் முன்னர் நடைபாதை வழியை கவனிக்கத் தவறாதீர்கள். பொதுவான ஒரு வியாபாரக் காட்சி தளத்தில் சில இடங்களில் அதிக அளவிலான நபர்கள் வருவார்கள். நுழைவாயில்கள். உணவகங்கள், ஓய்வகங்கள், அல்லது பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் உள்ள இடங்களில் அரங்கினை அமைக்க முயற்சியுங்கள். வழிமுடியும் இடங்கள், சரக்கு ஏற்றி இறக்குமிடம், முறையற்ற வழிகள், அல்லது பிற குறைவாக மக்கள் வரக்கூடிய இடங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு அரங்கினைப் பகிர்ந்து கொள்வதை கருத்தில் கொள்ளுங்கள்

புதிதாக வியாபாரக் காட்சியில் பங்கேற்போர் அதிகம் விரும்பாத இடங்களைத்தான் நாடுவார்கள். இதனைத் தவிர்க்க நல்லதொரு வழி இடத்தில் உள்ள ஒரு அரங்கினை தொடர்புடைய ஒரு தொழிலில் இயங்கும் சக நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுவதாகும். உங்கள் விற்பனை பிரதிநிதிகள், அல்லது உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளைப் போல விரிவாக நிலைப்பெற்ற வியாபாரக் காட்சியாளர் ஆகியோரிடம் கதைக்க முயற்சியுங்கள்.

உணர்வுப்பூர்வமாக ஊக்கப்படுத்துங்கள்

உங்கள் அரங்குக்கு வரும் மக்கள் உங்கள் உற்பத்திப் பொருளை அல்லது சேவையை அனுபவித்து பார்க்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அவர்கள் தொட்டு, கண்டு, உணர்ந்து, கேட்டு அல்லது சுவைத்துப் பார்க்க அனுமதியுங்கள். அலங்காரமான தலையணிகளை விற்கிறீர்களா? அதனை முறையான அமைப்பில் காட்சிப்படுத்துங்கள், மேலும் வாங்குபவர்கள் தொட்டு பார்ப்பதற்கான மாதிரிகளையும் வைத்திருங்கள். ஒரு புது மென்பொருள் தொகுப்பை உருவாக்கியிருக்கிறீர்களா? அந்த மென்பொருளை சோதித்து பார்க்க பல கணனிகளை வைத்திருங்கள்.

எளிமையாக வைத்திருங்கள்

அரங்கு அலங்காரத்தில் மிகவும் பகட்டாக காண்பித்து கொள்ளாதீர்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியக்கூடிய ஒரு பெரிய படமானது பல சிறிய படங்களை விட சிறந்தது. பெரிய உரைகளை விடவும், உங்கள் வியாபாரத்தை விவரிக்கும் ஒரு வாசகம் சிறந்ததாகும்.

தந்திரங்கள்

தந்திரங்கள் மற்றும் சிறு பரிசுகள் தந்து உங்கள் அரங்குக்கு மக்களை வரவழைக்கலாம். ஒரு நேர்காணலை நடாத்துங்கள், சத்தமாக உற்பத்திப் பொருளின் விளக்கக்காட்சிகளை மேற்கொள்ளுங்கள், மிட்டாய்களைத் தாருங்கள். இந்த தந்திரம் உங்கள் நிறுவனத்தின் மதிப்பையும், உங்கள் வாடிக்கையாளர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறதா என்பதை மட்டும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்பதை யாருக்கும் தெரிவிக்காவிட்டால் சிறந்த வியாபாரக் காட்சி திட்டமிடல் பயனளிக்காது போகலாம். ஏறத்தாழ மூன்றிலொரு வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் என்ன பார்க்க வேண்டும் என்பது, வியாபாரக் காட்சிக்கு அவர்கள் வருவதற்கு முன்பே தெரிந்திருக்கிறது என்று CEIR அவதானிக்கப்பட்டுள்ளது. உறுதியாக முன்னரே காண்பிக்கப்படும் விளம்பரங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன காண்பிக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றி தெரிவிக்கிறன. இந்த தகவல் குறிப்புகள் உதவக்கூடும்.

தொலைபேசிகளைத் தொழிற்படச் செய்யுங்கள்

வியாபாரக் காட்சிக்கு 6 வாரங்கள் அல்லது ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, உங்களுடைய முதன்மை வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புடைய வாடிக்கையாளர்கள் போன்றோரை அழைத்து சந்திப்புகளைத் திட்டமிடுங்கள். பெரும்பாலான நபர்கள் காட்சிக்கு அதிகமான வேலைகளுக்கு மத்தியில் வருவார்கள், பிற அரங்குகளை காண்பதற்கு அவர்களுக்கு மிக குறைவான நேரம் அல்லது நேரமே இல்லாமல் இருக்கும். அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் ஒரு வாரம் அல்லது காட்சிக்கு முன்பாகவே நிச்சயப்படுத்திக் கொள்ள மறக்காதீர்கள்.

அஞ்சல்களை அனுப்புங்கள்

முன்கூட்டியே பதிவு செய்த பங்கேற்பாளர்களின் அஞ்சல் பட்டியலை வாங்கி வியாபாரக் காட்சியின் நிர்வாகம் வழங்கக்கூடும். உங்கள் அரங்குக்கு வருவதால் உண்டாகக்கூடிய நன்மைகள் இரண்டை விவரிக்கும் எளிமையான அஞ்சலைப் பயன்படுத்த முயற்சியுங்கள். உங்களுடைய அரங்கு இலக்கத்தையும் சேர்த்து சில தொடர்பு விவரங்களும் அதில் இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பத்திரிகைகளைப் பயன்படுத்துங்கள்

வியாபாரப் பத்திரிகைகள் மற்றும் உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் போன்றவற்றில் வியாபாரக் காட்சியை உள்ள்டக்கிய செய்திக்கட்டுரைகளை பிரசுரியுங்கள். உங்கள் செய்திக்குறிப்புகளில் உங்கள் அரங்கைப் பற்றிய மதிப்புடைய செய்திகள் இருக்கலாம் – ஒரு புதிய உற்பத்திப் பொருள் அறிமுகம் அல்லது விசேட விளக்கக்காட்சி போன்றவை. வியாபாரக் காட்சிக்காக பல ஊடகவியலாளர் தொகுப்புகளையும் தயார் செய்து கொள்ள வேண்டும், மேலும் ஊடகவியலாளர்களின் அறைகளுக்கு அனுப்பி வையுங்கள், இதனால் ஊடகவியலாளர்களிடம் அவை எளிதில் சென்றடையும்.

வியாபாரக் காட்சிக்கான வெளியீடுகளை தேடுங்கள்

வியாபாரக் காட்சி மட்டுமே பிரசுரிக்கப்படும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது அதிக செலவாகக்கூடியதாகவும், செயல்திறமற்றதாகவும் இருக்க கூடும். இந்த வெளியீடுகள் குறைவான கவனத்தையே பெறும், மேலும் வியாபாரக் காட்சிக்கு வருகைதரும் மக்கள் வீணாக்கும் காகிதங்களின் அளவில் எளிதில் தொலைந்து போய்விடும்.
உங்கள் பின் தொடர் திறமுறைத் திட்டத்தைத் திட்டமிடுவதற்கான உகந்த நேரம் வியாபாரக் காட்சி தொடங்குவதற்கு முன்புள்ள நேரமாகும். இம்முறையில், உங்களுடைய வாய்ப்புடைய வாடிக்கையாளர்களுக்கு வியாபாரக் காட்சி மறப்பதற்கு முன்பே உங்கள் பின்னூட்டல் செய்தி அவா்களை சென்றடையலாம். பின் தொடருதல் பற்றி நீங்கள் அறியவேண்டிய விடயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

பின் தொடருதலை முதன்மையானதாகக் கருதுங்கள்

Center for Exhibition Industry Research –இன் கருத்துப்படி 80% காட்சி வருகைகள் பின் தொடரப்படுவதில்லை. வருகை தந்தவர்களை பின் தொடருவது வியாபாரக் காட்சிக்கு பின் உங்களுடைய முதல் பணியாக இருக்கும். – நீங்கள் அலுவலகத்துக்கு வராத நாட்களில் என்னென்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வது போன்ற வேறு எந்த பணியை விடவும் இதை முதன்மையானதாக கருதுங்கள்.

பின் தொடருதல் அஞ்சலை வியாபாரக் காட்சிக்கு முன்பாகவே பதியுங்கள்

வியாபாரக் காட்சிக்கு பின்னருள்ள அஞ்சலானது ஒரு நன்றி குறிப்பு அல்லது அட்டைக்குறிப்புடன் கூடிய ஒரு கைந்நூல் போன்றவையாகவும் இருக்கலாம். வியாபாரக் காட்சிக்கு புறப்பட முன்னர் இதனை பதிந்து அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரக் காட்சியிலிருந்து திரும்பிய உடனே அதனை அனுப்பி வைக்க முடியும்.

வியாபாரக் காட்சியின் போதே முதன்மை வாடிக்கையாளர்களை தகுதிப்படுத்துங்கள்

முக்கியத்துவம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் வருகை தந்தவர்களை வரிசைப்படுத்துங்கள், இந்த முக்கியத்துவங்களை காட்சிக்கு பின்னரான செயல்பாடுகளின் அடிப்படையில் நோக்குங்கள் வியாபாரக் காட்சி முடிந்து ஒரு வாரத்துக்குள் உங்களுடைய முதன்மையான வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழையுங்கள் – நீண்ட காலம் கடத்தினால் அவர்கள் வாடிக்கையாளர்களாக மாறும் வாய்ப்புகள் அரிதாக்கூடும். அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையான பின் தொடர் அஞ்சலை அனுப்புங்கள்.

உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்

அரங்கில் நீங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் காப்பாற்றுங்கள். போதுமான அளவு கைந்நூல்களையும், உற்பத்திப் பொருட்கள் பற்றிய தாள்களையும் வைத்திருங்கள், இதன் மூலம் கோரப்படும் தகவல்களை கூறியது போலவே நீங்கள் அனுப்பலாம்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Monday, July 27, 2015

சிரிப்பு யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

சிரிப்பு யோகா பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
www.happy4all.org

சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்வதால் மன ஆரோக்கியமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும். சிரிப்பு யோகா உங்கள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. 

சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என்டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகின்றன. இது உங்கள் மனநிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழுவதும் வழக்கமாக சிரிப்பதை விட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்கள். சிரிப்பு யோகா இதயத்திற்கு பயிற்சி அளித்து அதிக அளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளைக்கும் கொண்டு செல்ல உதவுகிறது. 

இதனால் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்தங்களையும் மாற்றி அமைக்க முடியும். சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. அதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாதவிடாய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமாக்க முடிகின்றது.

Sunday, July 26, 2015

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம்

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம் - www.v4all.org

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும்.

02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம்.

03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

05. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.

 06. நமக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 07. நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

 08. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

 09. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் : அ. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம். ஆ. நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய். இ. உன் உதவி எனக்கு தேவை. ஈ. நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்.

10. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம். 11. மக்கள் எப்போதுமே அரசை குறை சொல்வார்கள் அவர்கள் அரசால் அனுபவிக்கும் இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல காரியங்களுக்காக அரசுக்கு நன்றி கூறுவதில்லை.

12. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.

 13. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.

14. நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன், நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

15. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் இலிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.

16. நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

17. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

18. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

19. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

 20. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

 21. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

22. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

23. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

 24. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

25. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

Sunday, May 17, 2015

சோர்வை போக்க பத்து வழிகள்;

சோர்வை போக்க பத்து வழிகள்;


வெற்றி என்பது எப்போதோ ஏற்படும் ஒன்றாயிருந்தால் போதாது. தொடர்ந்து நடப்பதாய் இருக்க வேண்டும். அத்தகைய வெற்றிக்கு வாழ்வை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் எட்டு வழிகள்


1. எதைப்பற்றி யோசிக்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். துன்பம், உடல்நலக்குறைவு, தோல்வி பற்றிய எண்ணங்கள் வரும்போதெல்லாம், உங்கள் எண்ண ஓட்டங்களை மாற்றுங்கள்.

2. எதிர்பாராமல் ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் அதனைத் தொடர்ந்து பின்பற்றி பயன்படுத்திக்கொள்ளுங்கள் எதேச்சையாக நிகழ்வதை முழுவதும் பயன்படுத்திக் கொள்ளும் புத்திசாலித்தனத்திற்குத்தான் இந்த உலகம் அதிர்ஷ்டம் என்று பெயர் கொடுத்திருக்கிறது.

3. நல்லது நடக்கும் என்று திடமாக நம்புங்கள். தீவிரமான நம்பிக்கைகள் பொய்க்க வழியே இல்லை.

4. தவறுகள் ஏற்பட்டால் அவற்றை சரியான கோணத்தில் பார்த்துப் பழகுங்கள். அதிலிருந்து படித்த பாடமென்ன, அந்தத் தவறு மீண்டும் நேராமல் பார்ப்பது எப்படி என்றெல்லாம் ஆராயுங்கள்.

5. செத்த பாம்பை அடிக்காதீர்கள். மீட்கவே முடியாத திட்டம் என்று ஒன்று முடிவாகிவிட்டால், அதில் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யாதீர்கள்.

6. மகிழ்ச்சி என்பது மனம் சார்ந்தது. உங்களுக்கு வழங்கப்பட்டிக்கும் வாழ்க்கையை முழு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அதனை மேம்படுத்தப் பாருங்கள். தன்னிரக்கம், தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றுக்கு எக்காரணம் கொண்டும் இடம் தராதீர்கள்.

7. தோல்வி என்பது, தங்களைத் தயார் செய்து கொள்ளாதவர்களின் விருப்பத் தேர்வு. திட்டமிடாமை, தயக்கம், செயல்படுவதில் சுணக்கம் எல்லாம் கொண்டவர்களுக்கே தோல்வி வருகிறது.

8. மகிழ்ச்சி – சோர்வு, இரண்டுமே எங்கிருந்தோ வந்து உங்களைத் தொற்றிக் கொள்கிற விஷயமல்ல. இரண்டுமே நீங்களாக உங்கள் வாழ்வில் உருவாக்கிக் கொள்கிற விஷயங்கள்தான். எதைப் படிக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பதையெல்லாம் பொறுத்தே இவை ஏற்படுகின்றன.

9. நல்ல நண்பர்களின் பழக்கம் நல்ல புத்தகம் படிபடர்க்கு சமம் .

10.ஏதேனும் லட்சியம் ஒன்றின் உங்களுக்குள் ஏற்படுத்தி கொள்ளுங்கள் 

Friday, March 20, 2015

மன அழுத்தம்

மன அழுத்தம்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன அழுத்தம் என்பது மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும்[1]. இந்த மன அழுத்தம் என்ற பதம் உயிரியல் மற்றும் உளவியல் அடிப்படையில் முதலில் 1930 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் அண்மைக் காலங்களில் இதுபற்றி மிக அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.
மன அழுத்தத்தின் அறிகுறிகள் உடல், மன, பழக்கவழக்கம் தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளாக எச்சரிக்கை உணர்வு, அதிகரிக்கும் அதிரினலின் சுரப்பு, அதிகரிக்கும் சோர்வு, எளிதில் எரிச்சலடைதல் அல்லது கோபமடைதல்தசைகளில் ஏற்படும் இறுக்கம், எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலைமை போன்றவற்றுடன், அதிகரிக்கும் இதயத் துடிப்புதலைவலி போன்ற சில உடலியங்கியல்பிரச்சனைகளும் காணப்படும்[2].

சொல்லியல் ஆரம்பம்[தொகு]

Hans Selye என்ற உட்சுரப்பியியலாளரால் முதன் முதலில் உயிரியலில் இந்த மன அழுத்தம் என்ற பதம் பயன்படுத்தப்பட்டது[3]. பின்னர் எந்தவொரு தாக்கத்திற்கும் தவறான ஒரு உடற்றொழிலியல் எதிர் விளைவு கொடுக்கப்படும் நிலையை காட்டுவதாக இந்த பதத்தை விரிவுபடுத்தினார். மன அழுத்தத்தைத் தூண்டக்கூடிய காரணியினால், மிதமான எரிச்சல் அல்லது கோபம் கொள்ளும் நிலை தொடங்கி, மிகவும் தீவிரமான தொழிற்பட முடியாத நிலை வரையான பாதிப்பு ஏற்படுவதால், மன, உடல் நலத்தில் செயல் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறினார்.

அறிகுறிகள்[தொகு]

மன அழுத்தமானது வெவ்வேறு நிலைகளில் காணப்படுவதுடன், அறிகுறிகளும் வேறுபடும். இந்த அறிகுறிகள் மனிதருக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, தீவிரத்தின் அளவிற்கேற்ப வேறுபடும். இதனால் உடல் நலம் பாதிப்படைவதுடன், மனச்சோர்வும் ஏற்படும்.
  • மனக்கவலை
  • அதிகாலை தூக்கமின்மை
  • மிகுந்த சோர்வு
  • பசியின்மை
  • எடை குறைவு
  • அடிக்கடி அழுதல்
  • தன்னம்பிக்கையின்மை
  • எதிலும் ஆர்வமின்மை
  • அதிகமான குற்ற உணர்வு
  • அடிக்கடி தற்கொலை எண்ணங்கள்
மனச்சிதைவு நோய் (Schizophrenia)
  • தொடர் துக்கமின்மை
  • தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்
  • தனக்குத்தானே சிரித்துக் கொள்ளுதல்
  • காதில் மாயக்குரல்கள் கேட்டல்
  • அதிகமாக சந்தேகப்படுதல்
  • அனைவரும் தன்னைப் பற்றியே பேசுவதாக உணர்வு
  • சுற்றத்தார்கள் அனைவரும் தனக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற தவறான எண்ணம்
  • உடல் தூய்மை படிப்படியாகக் குறைதல்
மனப்பதட்ட நோய் - (Anxiety Disorder)
  • நெஞ்சுப் படபடப்பு
  • கை நடுக்கம்
  • அதிகமாக வியர்த்தல்
  • நெஞ்சுவலி
  • எதிலும் கவனம் செலுத்த இயலாமை
  • தூக்கக் குறைவு
  • அடிக்கடி எரிச்சல் அடைதல்
  • எதிர்மறையான எண்ணங்கள்
பய நோய் (Phobia)
  • தனிமையில் இருக்க பயம்
  • கூட்டத்தினைக் கண்டுபயம்
  • புதிய நபர்களை எதிர்கொள்ளப் பயம்
  • உயரமான இடங்களுக்குச் சென்றால் பயம்
  • மூடிய இடங்களைக் கண்டு பயம்
  • இந்த பயங்கள் தேவையற்றது என கருதி தவிர்க்க நினைத்தும் இயலாத நிலை
  • எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோய்
  • திரும்ப திரும்ப ஒரே எண்ணங்கள் மனதிற்குள் வந்து தொல்லை தருவதும், அவை தேவையற்றது என தெரிந்து தவிர்க்க முற்பட்டும் முடியாத நிலை.
  • ஒரு நாளின் பெரும் பகுதி இந்த எண்ணங்களோடு போராடுவதிலேயே செலவாகிவிடுவது
  • திரும்ப திரும்ப ஒரே செயலைச் செய்து கொண்டு இருப்பது
உதாரணமாக:
  • திரும்ப திரும்ப கை அழுக்காக இருப்பதாக நினைத்து கை அலம்புதல்
  • பூட்டினை மீண்டும் மீண்டும் இழுத்து சரிபார்ப்பது
  • பணத்தினை மீண்டும் மீண்டும் எண்ணி சரிபார்ப்பது
  • ஒரு செயலை திரும்ப திரும்ப பலமுறை செய்தால் மட்டுமே திருப்தி ஏற்படுவது.
  • தவிர்க்க முற்படும்பொழுது திருப்தியின்னையும், மனப்பதற்றமும் ஏற்படுவது.
  • குளிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வது.
ஆளுமை கோளாறுகள் (Personality Disorders)
  • அடிக்கடி கோபம் கொள்ளுதல்
  • குறுகிய கால குணமாறாட்ட அறிகுறிகள்
  • மற்றவர்களுடன் உள்ள உறவுகளை அடிக்கடி முறித்துக் கொள்ளுதல்
  • உடல் உறுப்புகளைத் தானே காயப்படுத்திக் கொள்ளல்
  • கலவரங்களில் ஈடுபடுதல்
  • சமூகத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுதல்
  • மற்றவர்களுடன் அதிகம் பழகாமல் தனித்து ஒதுங்கி வாழ்தல்
  • பெற்றோர்களுக்குக் கீழ்ப்படியாமை
  • எப்பொழுதும் சோர்வாகவும், மந்தமாகவும் இருத்தல்
  • எப்பொழுதும் பதற்றமாக இருத்தல்
பெண்களும் மன அழுத்தங்களும்
மாதவிடாய் நாட்களுக்கு சிறிது முன்பாக
  • அதிக எரிச்சல்
  • கோபம்
  • சோர்வு
  • பதற்றம்
  • இவை, மாதவிடாய் முடிந்ததும் சரியாகிவிடும்.
கர்பிணி பெண்களும் மனநோய்களும்
  • குழந்தைகளுக்கு பால் ஊட்டாமை
  • அடிக்கடி அழுதல்
  • தூக்கமின்மை
  • பசியின்மை
  • தற்கொலை எண்ணங்கள்
  • தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல், சிரித்துக்கொள்தல்
முதியோர்களை பாதிக்கும் மனநோய்கள்
  • தொடர் தூக்கமின்மை
  • மறதி
  • பொருட்களை வைத்த இடத்தை மறத்தல்
  • நாள், கிழமை மறந்து விடுவது
  • உறவினர், நண்பர்களை மறந்து விடுவது
  • அடிக்கடி எரிச்சல் கோபம் கொள்வது
  • பசியின்மை
இதர மனநோய்கள்
  • சாமியாட்டம்
  • புகை பிடித்தல்
  • மது அருந்துதல்
  • கணவன் மனைவி பிரச்சனைகள்
  • மனரீதியான பாலியல் பிரச்சினைகள்
குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்
  • குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்
  • படிப்பில் கவனம் குறைதல்
  • அதிக கோபம் கொள்ளுதல்
  • அடிக்கடி எரிச்சல் அடைதல்
  • படுக்கையில் சிறுநீர் கழித்தல்
  • மிக மிக அதிக சுறுசுறுப்போடு, ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல் (ADHD)
  • கீழ்படியாமை
  • அடிக்கடி பொய் சொல்வது
  • திருடுவது
  • குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்பவருதல் (Breath holding spell)
  • 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் (PICA) சாப்பாடு அல்லாத மற்ற பொருட்களை உண்ணுதல் (உதரணமாக சாம்பல், மண், பேப்பர், பென்சில் சாப்பிடுவது)
  • மிக பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)
  • நன்றாக படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது (Changes in academic performance)
  • குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது அம்மாவைவிட்டு பிரிதலில் பதட்டம் (Seperation anxiety disorder)

Thursday, March 5, 2015

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான பன்னிரு பெருமாள்

அதிர்ஷ்டம் அளிக்கும் 12 ராசிக்கான
பன்னிரு பெருமாள்
ஒவ்வொருவருக்கும் கஷ்டம் வரும்போது
நினைவுக்கு வருபவர் கடவுள்
அந்த கடவுளுக்கு பல்லாயிரக்கணக்கான நாமங்கள்
பல்லாயிரக்கணக்கான அவதாரம் மற்றும் திருவுருவங்கள் உள்ளன.
கடவுளின்
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்
எனும் பஞ்ச காரியங்களில்
காக்கும் செயலை செய்யும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான பெருமாளின்
அவதாரத்தில் ஏந்த அவதாரம் ஏந்த ராசிக்கு உகந்தது என குறிப்பிடபட்டுள்ளது.
ஆகவே அவரவர் ராசிக்குண்டன அவதார பெருமாளின் கோவிலுக்கு உங்கள் நட்சத்திர நாளில் சென்றோ அல்லது
அந்த அவதார மூர்த்தியின் திருவுருவ படம் வைத்து
அதற்குண்டான மூலமந்திரம் சொல்லிவர
மனமது செம்மையாகி உங்களுக்கு சகல நன்மையும் அளிக்கும்.
முயன்று பாருங்கள் !!!
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!!

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.

"குருவே என்னால் வாழ்கையில் முன்னேற முடியவில்லை.'' என்று சலிப்புடன் சொன்னவனை நிமிர்ந்து பார்த்தார் குரு.
"வருத்தப்படாதே,
என்ன பிரச்சனை?" என்று கேட்டார் குரு.
"என்னைப் பற்றி குறை கூறுபவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்றான் வந்தவன்.
வந்தவனின் பிரச்சனை குருவுக்குப் புரிந்தது.
அவனுக்கு ஒரு சம்பவத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.
"அமெரிக்காவில் பரப்பரப்பான நகரில் ஒரு டாக்ஸியில் இந்தியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். காலை நேரம். நிறைய போக்குவரத்து. சிரமப்பட்டுதான் வண்டி ஓட்ட வேண்டியிருந்தது.
பல இடங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதுவது போல் வந்தன. ஆனால் டாக்சி ஓட்டுனர் கொஞ்சமும் பதட்டப்படவில்லை.
இப்படி சுமூகமாக பயணித்துக் கொண்டிருந்தபோது ஒரு திருப்பத்தில் இன்னொரு கார் ஒன்று குறுக்கே வந்துவிட்டது.
இரு கார்களும் மோதுவது போல் சென்று மெல்லிய இடைவெளியில் இடிக்காமல் தப்பின. தவறு எதிரில் வந்தவனுடையதுதான்.
இருந்தாலும் ஆத்திரத்தில் டாக்சி ஓட்டுநரைத் திட்டினான்.
ஆனால் ஆச்சர்யம்!
பதிலுக்கு டாக்ஸி ஓட்டுனர் அவனை திட்டவில்லை. அவனைப் பொருட்படுத்தாமல் வண்டியை செலுத்தினார்.
இதே போல் இன்னொரு சம்பவம்.
அதிலும் டாக்ஸி ஓட்டுனர்,
பொறுமை இழக்கவில்லை.
ஆத்திரப்படவில்லை. நிதானமாக இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த இந்தியருக்கு வியப்பு.
இறங்க வேண்டிய இடம் வந்தபோது ஓட்டுனரிடம் கேட்டார்.
"எப்படி இவ்வளவு பொறுமையாய்,
யாருடைய திட்டுக்கும் பொருட்படுத்தாமல் வண்டி ஒட்டுகிறீர்கள்?"
அதற்கு அந்த டாக்ஸி ஓட்டுனர்,
"என்னுடைய இலக்கு உங்களை நீங்கள் சேரவேண்டிய இடத்தில் சேர்ப்பது.
வீதியில் போவோர் அள்ளிக் கொட்டும்
குப்பைகளையெல்லாம் என் மனதில்
சேர்த்துக்கொள்ளவில்லை.
அதையெல்லாம் பொருட்படுத்தி ஆத்திரப்பட்டு
பதில் சொல்லிக்கொண்டிருந்தால்
நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய முடியாது."
இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய
வேண்டியது என்ன என்பது வந்தவனுக்கு புரிந்தது.
ஆமாம்,
நண்பர்களே, நமக்கு இலக்குதான் முக்கியமே தவிர
இடையில் வரும், கொஞ்ச நஞ்ச இடைஞ்சல்கள் அல்ல.!
திருச்சிற்றம்பலம்.


Thursday, October 23, 2014

ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர்

ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும் மது அருந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.
மூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
முதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட வேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.
ஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்.. பலமான காயத்துக்கு ஆளானார்.
அடுத்து சீனர்.
“எனக்கும் 50 சவுக்கடிகளை பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார்.
ஒப்புக்கொள்ளப்பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்டச் சொன் னார்.
அவ்வாறே செய்யப்பட்டது.
15 சவுக்கடிகளில் தலையணை கள் கிழிந்து அவரது முதுகு பிளந்தது.
அடுத்து இந்தியர்.
“எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த் துங்கள்..!” என்றார்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச் சியுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
இரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது.
“எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்” என்றார்.

urs - www.v4all.org 

Wednesday, September 3, 2014

டார்ச்சர் பழகுவோம்.- STress Managements

டார்ச்சர் பழகுவோம்.
1.ஒரே டார்ச்சராக போச்சு இவனோட.மனசு ஒரே டார்ச்சரா இருக்கு.எல்லோரும் என்னை டார்ச்சர் செய்கின்றார்கள்.இப்படிப்பட்ட மனநிலையை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது.ஜிவ்வென்ற கண்கள் மனதிற்குள் ஒரு இனம் புரியாத வேதனை ,பயம் ,கலக்கம் இப்படி பல உணர்வுகளும் நம்மை ஆக்கிரமித்து நம்மை இயல்பு நிலையில் இருந்து பிறழச் செய்து ஏதாவது ஒன்றின் மேல் மட்டும் நமது கவணத்தை நாம் வேதனையோடு வைத்திருக்கும் மனநிலை எனலாம்.

2.ஏதோ ஒன்றை ஏற்கப் போகின்றோம் இல்லை மறுக்கப் போகின்றோம் இல்லை உதாசீனப்படுத்தப் போகின்றோம் என்பது தான் டார்ச்சர் எனப்படும் மன வேதனையின் முடிவாக இருக்க முடியும்.நான் சிந்திக்கின்றேன் அதனால் எனக்கு உயிர் இருக்கின்றது.என்னைச் சுற்றி உள்ள எல்லா சோதனைகளும் எனக்குத் தெரிகின்றது என்னை வாழ விடு என்னை வாழ விடு என்று ஒவ்வொரு உயிரும் வாழ்ந்து கொண்டிருகின்றது.

3.
ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் வரப் போவதில்லை.இந்த பிரபஞ்சத்தில் எதற்குமே நீங்கள் பொறுப்புக் கிடையாது ஒரு தூசியைக் கூட நகர்த்துவதற்கு நமக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை.எல்லா இயக்கங்களும் ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு இயங்குகின்றது.அந்த விதிக்குக் கட்டுப்பட்டு இயங்கும் பணி மட்டுமே நம்முடையது.

4.
அந்த விதியின் போக்கைப் புரிந்து கொண்டவர்கள் இயற்கையின் வழியாக தங்களது செய்கைகளைப் படைக்கின்றார்கள்.இயற்கையின் செயலாக தங்களது செயலை மாற்றுகின்றார்கள்.இந்த அளவிற்கு மட்டுமே நமது தனிப்பட்ட திறமையினை நாம் செயல் படுத்தலாம்.இதனை உணரும் போது அப்பாடா நமது செயலால் தான்  விளைவுகள் ஏற்படுகின்றன என்ற பொறுப்பேற்கும் நிலையால் மனதில் ஆறுதல் ஏற்படும் . ஒரு செயலின் முடிவோ ஒரு நபரின்  செயலோ   நம்மை எப்படியெல்லாம் பாதிக்கும் என்ற கற்பனையே மன வேதனைக்கும் கலக்கத்திற்கும் அடித்தளமாக இருக்கின்றன.

5.
நாம் ஒன்றும் சூரியனைத் தினம் தோறும் காலையில் எழுப்பிவிட்டும்  ,காற்றை எங்கும் பரவவிட்டும் ,கடல் அலைகளை கரையை நோக்கித் தவழ விடவும்  தேவையில்லை.அப்படிச் செய்ய இயற்கையைத் தவிர யாருக்கும் அதிகாரம் கிடையாது .அப்புறம் எதற்கு நமக்கு எந்த ஒரு செயலிலும் மன வேதனைகள்.நாம் இந்த உலகம் முழுவதும் ஆண்ட மன்னன் அலெக்சான்டர் போல இருந்தாலும் ,நமது செய்கை ஒன்றும் இயற்கையின் காலடிகளில்  உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்படுவதில்லை.சூரியனின் ஜீவாலைகளில் பதிக்கப்படப் போவதில்லை .அப்புறம் எதற்கு நமக்கு இந்த மனவேதனை.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH9MfEuv05ecXPbMDV0sgGcPF5q53NlbYaLshPYXVPNxdcc2Zidvyte6yXip65ScKidHECbmEWEbquFV-vriYCqX1qjE2VL1qx8miEZpdxUCNtlZyVq8FmSk_QTKtiTqsxg3Js4jLws-sN/s1600/images.jpg
6.யாரும் நம்மை  முந்தி  உயிரோடு  சென்று சொர்க்கத்தின் வாசலில் காத்திருக்கவில்லை.நாம் எல்லோரும் இயற்கையின் ஆக்கினை எனப்படும் அதன் விருப்பத்திற்குட்பட்டு அதனுடைய செயல்களைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.அதற்காக இயற்கை ஒன்றும் நம்மை முதலாளி ,வேலைக்காரன் பாணியில் தனது சுயநலத்திற்காக வேலை வாங்கிக் கொண்டிருக்கவில்லை.இயற்கை தன்னைப் போலவே    மனிதர்களைப் படைத்தும்   இயற்கையாக   தன்னைப் போலவே  தனது   விதிகளின் அடிப்படையில் இயங்க  அதிகாரம் கொடுத்துள்ளது.அதனைப் புரிந்து அதன் போக்கில் இயங்குவதே மனிதனுடைய அறிவின் செயல்.

7.
மன்னிக்கும் மனப்பாண்மை என்பது  எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாண்மை  எனலாம்.குறைகளுக்குள்ளும் நிறைகளைக் காண்பவருக்கே தங்களுக்குக் குறைகளாகத் தெரியும் சூழ்நிலைகளையும்  மனிதர்களையும்  மன்னிக்கும் மனோபாவம் வரும்.அன்பு இருக்கும் இடத்திலேயே மன்னிப்பும் குடி கொண்டிருக்கின்றது .மன்னிப்பு இல்லாமல் அன்பு இல்லை அன்பு இல்லாமல் மன்னிப்புக் கிடையாது.மன்னித்தல் விதியை மறக்காமல் இருப்போம்.அன்பு என்னும் உணர்வின் மேல் நம்பிக்கை உடையவர்களே மன்னித்தல் மூலம் மன வேதனைகளையும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுகின்றார்கள்.

8.
நமக்கு மனக் கலக்கத்தையோ மன வேதனையோ ஏற்படுத்திய நபரை நமது மனக் கண்ணில் கொண்டு வந்து அவர்களுக்குள் நமது அன்பு என்னும் மனநிலையைப் பரவவிடுவது போல் கற்பனை செய்வோம்.அவர்களுக்கு எதிராக கோபத்தையோ நமது இயலாமையையோ நாம் கற்பனை செய்யக்கூடாது.நமக்கு மனக் கலக்கத்தை ஏற்படுத்திய நபர்கள் நன்றாக இருக்க வேண்டும் அவருக்குள்  இயற்கையின் ஆசீர்வாதம் இறங்க வேன்டும் என்று  வேண்டிக் கொள்வோம்.இதனால் சூழ்நிலைகள் உடனடியாக மாறத்தொடங்கும் மந்திரம் போல.

9.
மன்னித்தல் மூலம் நமக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தியவர்களிடம் இருந்து அவர்களது சக்தியைப் பெறுகின்றோம்.ஆகையால் எப்போது யாரை எந்த சூழ்நிலையில் மன்னிக்க வேண்டும் அவர்க்ளிடம் இருந்து எத்தகைய சக்திகளைப் பெற வேண்டும் என்பதற்கான கைகாட்டி  தான் மனக் கலக்கங்களும் மன வேதனைகளும்.நமது வாழ்க்கையில் நாம் ஒருவரிடம் இருந்து சக்தியை எடுக்கின்றோமா அல்லது இழக்கின்றோமா என்பது நமது இந்த மனப்பாண்மையை நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_JGZeWkYeYNUcVrKQA2n5M8mrD1lJyBEZeBMh2LqF6xTh1F0KeRhtNoOofxz-ciCUra1BC4xgN7IijN7GGM50AW-r0wh7ZoxWAI0qNa9p2t_bWtINYhk9lvNt-pkdmpm1Swxck3X75y2Y/s1600/images.jpg

10.எப்போதெல்லாம் நாம் மனக்கலக்கத்திற்கு உள்ளாகின்றோமோ அப்போதெல்லாம் நமது சக்தியை ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு நபரோ சூழ்நிலையோ கவர்ந்து கொண்டிருக்கின்றது என்று  அர்த்தம்.மன்னிப்பு மற்றும் ஆசிர்வாதம் மூலமாக அந்த நபரை நாம் ஏற்கும் போது அவரிடம் இருந்து அவரது சக்தியை நாம் கவர்ந்து கொண்டிருக்கின்றோம் என்று பொருள்.இதனால் நமது சக்தி விரையம் ஆவது தடுக்கப்பட்டும் மற்றவர்களது சக்தியைப் பெற்றும் நாம் வெற்றியுடையவர்கள் ஆகின்றோம்.

11.
மன வேதனை என்னும் டார்ச்சருக்கு இந்தக் கருத்துக்கள்  டார்ச்சராகத்தான் இருக்கும். இந்தப் பதிவைப் படிக்கும் உங்களுக்கு அல்ல.இந்தப் பதிவைப்  படித்து நீங்கள்  மனக்கலக்கத்திற்கு உள்ளானால் நீங்கள் உங்கள் சக்தியை இழக்கின்றீர்கள் மன்னித்து விட்டால் என்னிடம் இருந்து சக்தியை எடுக்கின்றீர்கள்.நானும் தான்.
படங்கள்:நன்றி கூகுள் படங்கள்.