Grooming என்பார்களே... தன்னைத்தானே புடம் போட்டுக்கொள்ளுதல் - இந்த உலகில் திறமையில்லாமல் யாரும் வெற்றிப்பெறமுடியாது என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கும் நிகழ்வு.
தனுஷ் (வெங்கடேஷ் பிரபு கஸ்தூரி ராஜா)
கடந்த மூன்று வருடங்களாக எழுத நினைத்தது. மரியான் டிரைய்லரை பார்த்தபோது எழுந்த ஆசை, இப்போதுதான் எழுத நேரம் வந்திருக்கின்றது காரணம் "ஷமிதாப்" டீசர்.
இந்த உலகில் திறமையில்லாமல் யாரும் வெற்றிப்பெறமுடியாது என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கும் நிகழ்வு. அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தாலும் தனுஷின் அசாத்திய வளர்ச்சிக்கு இது மட்டுமே காரணமாக இருக்க வாய்ப்பில்லை. முதல் படத்தில் நடித்தபோது "இவங்கப்பா டைரக்டர்டா, அதான் இந்த மூஞ்சியெல்லாம் நடிக்குது" என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். தமிழ் சினிமா அகராதிப்படி ஹீரோ இப்படித்தான் இருக்கணும் என்கிற வரைமுறையை மாற்றிவைத்த வெகு சிலரில் தனுஷும் ஒருவர்.
தனது மைனஸ்களை அதாவது உடல் உருவ அமைப்புகளை அப்படியே மாற்றி தனக்கான பிளஸ்ஸாக ஆக்கி இன்று இந்தியாவில் ஒரு முக்கியமான வளரும் இளம் நடிகர். சிம்புவும், தனுஷும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் கதாநாயகர் போட்டியை ஆரம்பித்திருந்தாலும் நாயகனுக்கான எல்லா தகுதிகளையும், பின்புலத்தையும் கொண்ட சிம்புவால் இன்று தனுஷுடன் போட்டியிட முடியவில்லை. அதற்க்கு காரணம் தனுஷின் தீவிர உழைப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதிலும் நடிப்பை அவர் ரசனையுடன் கையாள்கிறார் என்பதுவும் நிஜம்.
சிலருக்கு நடிப்பு என்பது இயற்கையிலேயே வரும். தனுஷுக்கும் அப்படித்தான் தன் தந்தை எதிர்பாராமல் தனுஷை நடிப்புத்துறைக்கு இழுத்துவர, அண்ணன் அவ்வப்போது வாய்ப்பளிக்க இவரும் அதை கெட்டியாகப்படித்து கரையேறிவிட்டார். தமிழ் சினிமாவில் நமக்கே உரித்தான குத்துப்பாடல்களுக்கு தனுஷ் மாதிரி இன்னொருவர் ஆட இனி பிறந்துதான் வரவேண்டும்.
தனுஷின் வாழ்க்கையில் எத்தனையோ ஆச்சர்யங்கள் அவைகளை தனுஷே எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். சூப்பர் ஸ்டாரின் மகளை திருமணம் செய்தது, கொலவெறி பாடல், நேஷ்னல் அவார்டுகள், இந்தி அறிமுகம் என இப்போது ஷமிதாப்பில் அமிதாப்பையே தூக்கி சாப்பிட்டிருக்கிறார். ஆக என்னதான் லக் என்கிற விஷயம் வாழ்க்கையில் நிகழ்ந்தாலும் அந்த லக் அடிக்கடி நமக்கு வரும் அல்லது கிடைக்கும் என்பது நிச்சயமில்லை. அப்படி ஒரு முறை கிடைத்த லக்கை சரியாக யூஸ் செய்கிறவன் கட்டாயம் சாதிப்பான் என்பதற்க்கு தனுஷ் ஒரு உதாரணம்.
"எதேச்சையாக நான்கு நாள் முன் ஷமிதாப் டிரைய்லரை பார்த்தவுடன் தனுஷுக்காக எழுதவேண்டும் என தோன்றியதற்க்கு காரணம் ஷமிதாப் டிரைய்லரில் வரும் அந்த சில நொடி "ஜோக்கர் வேடம்", அதில் தெரியும் அவரின் நடிப்பின் முதிர்ச்சி. சில காட்சிகள் அமிதாப்பையே மிஞ்சியிருக்கிறார் அல்லது அமிதாப்பே தனுஷின் நடிப்பில் மகிழ்ந்து தனுஷுக்காக தன் ஸ்டேட்டஸையும் மறந்து நடித்திருப்பார் என்பது நிச்சயம். இந்த பகிர்வில் தனுஷின் படங்களில் அவரின் நடிப்பைப்பற்றி தனித்தனியாக சொல்லத்தேவையில்லை காரணம் அவரின் எல்லாப் படங்களிலும் அவரின் தனித்திறன் இருக்கும்."
இப்போதைய இளம் நடிகர்களில் தனுஷிடம் தனித்தன்மை இருப்பது உண்மை. இன்னும் வரும் காலங்களில் சரியான கதைகளையும், வித்தியாசமான வேடங்களையும் தேர்ந்தெடுத்தால் தனுஷ் என்கிற நடிகனுக்கு சினிமாவில் ஒரு சிறப்பான இடம் காத்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை. வாழ்த்துக்கள் தனுஷ்!!!
ஆக இந்த உலகில் யாரும் வெல்லலாம், இப்படிப்பட்டவர்கள்தான் வெல்லமுடியும் என்கிற கட்டாயமில்லை. எந்தத்துறையை எடுத்துக்கொண்டாலும் ஆர்வமும், உழைப்பும், நம்பிக்கையுமிருப்பின் அவர்கள் எல்லோருக்கும் தனுஷின் வளர்ச்சி ஒரு உந்துதலாக இருக்கட்ட்டும்from- Gokula Krishnan Bhojan
No comments:
Post a Comment