Sunday, February 1, 2015

ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்...

ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்...

                 சிலப்பதிகாரத்தில் மூன்று விதிகளில் ஒன்று "ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்".நாம் என்ன செய்தோமோ அல்லது செய்கிறோமோ அதுவே  பிறகு நமக்கு வினையாக முடியும் என்பது பொருள். இதைத்தான் நியூட்டன்  விதியும் சொல்கிறது.

 "IF EVERY ACTION THERE IS AN EQUAL AND OPPOSITE REACTION" என்று.
        
        இன்று ஆட்சியில் இருபவர்கள் செய்யும் தவறுகளுக்கும் இதுவே பதில்.
அதற்கும் சிலப்பதிகாரத்தில் ஒரு விதி சொல்லப்பட்டுள்ளது.
"அரசியல் பிழைதோருக்கு அறகூட்றுவன்". 



எந்த கண்ணகி சிலைகாக போராடினார்களோ அந்த 
சிலை வடிவத்தால் வந்த விதியை படிக்கமலேயே சிலைமட்டும் வைக்க போராடினார்கள் போலும்.
சிலைக்கு போராடிய ஆவேசம் வெறும் வேஷம். இதனால் நாடு சர்வ நாசம். ஒரு மன்னன் செய்த பிழைக்கே மதுரை எரிந்தது. அதுவும் அந்த மன்னன் தப்பை ஒப்புக்கொண்ட பின்புதான் மதுரை எரிக்கபட்டது என்பது வரலாறு.  இங்கு எரியபோவது "அண்ணாவின் மன்னனா" அல்லது மக்களா?

 ஏற்றிவைத்த மக்கள் என்னும் ஏணியை எட்டி உதைக்கும் கொடுமை இங்குதான் நடக்கிறது.

இன்னும் என்ன செய்வதாய் உத்தேசம்? இனி  வாய்வலிக்க பொய் பேசித்தான் என்ன பலன்? 

உலகையே தன்வசப்படுத்த நினைத்த அலக்சாண்டர் தி கிரேட் இறக்கும் பொது இரண்டு விசயங்களை 
சொன்னார் 
                     

 1. நான் இறந்த பின்பு என் கைகளை விரித்தபடி வைக்கவேண்டும். எத்தனை நாடுகளை
வென்றாலும் வெற்றி மேல் வெற்றி பெற்றாலும் இறந்தபின்பு நான் எதையும் எடுத்து செல்லவில்லை என்பதற்காக.

2. நான் இறந்த பின்பு எனக்கு வைத்தியம் செய்த மருத்துவர்கள் என் சடலத்தை தூக்க வேண்டும் காரணம்
எந்த ஒரு மருத்துவராலும் போகின்ற உயிரை தடுக்க முடியாது என்பதை உலகிற்கு உணர்த்த.

 இன்னும் உதாரணம் வேண்டுமா ஹிட்லர், முசோலினி,
 செங்குஸ்கான், தைமுர், ஷாஜகான்,ஒசாமா பின்லேடன்  ect...
    
 யாராக இருந்தாலும் காலம் என்னும் எஜமானனுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

No comments:

Post a Comment