Saturday, February 7, 2015

உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த 15 படிப்பினைகள்

      start small finish big40000 த்திற்கும் மேற்பட்ட  உலகின் மிகப் பெரிய சங்கிலி தொடர் உணவகத்தை (World’s Largest restaurant chain) கொண்டுள்ளது Subway Restaurants (சப்வே) Subway Restaurants–ஐ தொடங்கியவர் Fred Deluca (ப்ரெட் டிலூகா) .2012-ல் இந்த நிறுவனம் ஈட்டிய வருமானம் 18.1 பில்லியன் டாலர் .இத்தனை வளர்ச்சிப் பெற்ற நிறுவனம் வெறும் ஆயிரம் டாலர் மட்டுமே முதலீடாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதுதான் வியப்பு!.
                   Fred Deluca(ப்ரெட் டிலூகா) தனது தொழில் அனுபவங்களை கொண்டு தொழில்முனைவோர்களுக்காக START SMALL FINISH BIG  அதாவது  சிறியதாய் தொடங்கி பெரியதாய் முடியுங்கள் என்ற நூலை எழுதியுள்ளார் . அந்த நூலில் தொழில்முனைவோர்கள் வெற்றி பெறுவதற்கான உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த  15 படிப்பினைகள் (15 key Lessons)  என்று அவர் தன் அனுபவங்களைப் படைத்துள்ளார்.

Fred Deluca(ப்ரெட் டிலூகா)-ன் 15 படிப்பினைகள்(15 key lesson to start & run your own successful business :-
1.சிறியதாக ஆரம்பியுங்கள். ஆரம்பிக்காமலே  இருப்பதற்கு சிறியதாகத் தொடங்குவது பரவாயில்லை (Start small. It’s better than never starting at all).
2.சிறிய லாபத்தில் தொடங்குங்கள் .இது மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான  சிறந்த பயிற்சியாகும் (Earn a few pennies . It’s good practice before earn those Dollars).
3.யோசனையோடு  தொடங்குங்கள் (Begin with an Idea).
4. ஒரு தீர்க்கதரசிப் போல் சிந்தியுங்கள்.எப்போதும்  பெரிய கண்ணோட்டத்தோடு பாருங்கள் (Think like a visionary. Always look for the Big Picture).
5 உங்கள்மீதும்  உங்கள் தொழில்மீதும்  நம்பிக்கை  வையுங்கள் (Believe in Yourself and Your business. Keep the faith).
6.தயாரானதுமே சுட்டுவிடுங்கள். தயங்கினீர்கள் என்றால் எப்போதும் சுடமாட்டீர்கள் (Ready,Fire,aim! If You think too much about it, You may never).
7. செலவை குறையுங்கள், விற்பனையை அதிகரியுங்கள் செலவு அதிகரித்தாலும் அல்லது விற்பனை குறைந்தாலும் உங்கள் தொழில் வீழ்ச்சியுறும் (Increase sales,Decrease cost. Anything less  and Your business will perish).
8.நேர்மறை எண்ணங்களோடு இருங்கள். எப்போதும் மனதில் வெற்றி எண்ணங்களே ஆக்கிரமிக்கட்டும்  (Be Positive).
9.தொழிலை தொடர்ச்சியாக உயர்த்திக்கொண்டே இருங்கள். வாடிக்கையாளர்களை ஈர்பதற்கும், விற்பனை மற்றும் லாபம் உருவாவதற்கும் இதுதான் சிறந்த வழி(Continuously improve Your business . It’s the best way to attract customers and generate sales and profits).
10.உங்களிடம் வேலை பார்ப்பவர்களை நம்புங்கள்(Believe in Your people).
11.லாபம் முழுவதையும் செலவழித்து விடாதீர்கள். இதுதான்  நீங்கள் தொழிலில் கற்கவேண்டிய  மிக முக்கியப் பாடம்(Never run out of money. It’s the most important lesson in business).
12 ஒவ்வொரு நாளும் புது வாடிக்கையாளர்களை பிடிக்கவேண்டும் என்று வெறியுடன் உழையுங்கள்(Attract new customers every day).
13. விடாப்பிடியாக இருங்கள். குறிக்கோளை  விட்டுவிடாதீர்கள். விட்டுவிடும்போது நீங்கள்  தோல்வியடைகிறீர்கள் (Be persistent. Don’t give up. You only fail if You Quit).
14. தொழிலின்  முத்திரை குறியீட்டை உருவாக்குங்கள். நற்பெயரை சம்பாதியுங்கள் (Build a Brand Name. Earn Your reputation).
15.வாய்புகள்  யாருக்காகவும் காத்திருக்காது . கிடைத்தவுடன் தாவிப் பிடித்துகொள்ளுங்கள் (Opportunity waits for no one).

Yours Happily 
Dr.Star Anand Ram

No comments:

Post a Comment