தொழில் தொடங்குவது தொடர்பாக நம் ஒவ்வொருவரிடமும் நூற்றுக்கனக்கான தொழில் எண்ணங்கள் நம் மனதில் இருக்கும். நம் தொழில் எண்ணங்கள் சாலையோரக் கடைகள் அமைப்பதில் தொடங்கி மிகப் பெரிய மென்பொருள் நிறுவனம் (Software Company) அமைப்பது வரை பட்டியல் நீழும். நம் பட்டியலில் புதுப்புது தொழில் எண்ணங்கள் தினந்தோறும் சேர்ந்து கொண்டே இருக்கும்.
நமக்கு புது புது தொழில் எண்ணங்கள் நமது அனுபவத்தின் மூலமாகவும்,அறிவின் மூலமாகவும், நாம் பார்த்த, கேட்ட, படித்தவற்றின் மூலமாகவும், சுற்றுபுறத்திலிருந்தும் பிறக்கின்றன.
நம்மில் பல பேர், தோன்றிய தொழில் எண்ணங்களை நம் மனப் பட்டியலில் சேர்ப்பதோடு நின்று விடுகிறோம். அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல எவ்வித முயற்சியும் எடுப்பதுக்கூட கிடையாது. அடுக்கடுக்கான தொழில் எண்ணங்களை மட்டும் வைத்து கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இல்லை.
நம் தொழில் எண்ணங்களின் அடுத்த கட்ட நகருதலில்தான் நம் வெற்றி இருக்கிறது.Face Book என்ற எண்ணம் பில்லியன் டாலர் தொழில் அல்ல அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் முன்பு வரை !
நம் தொழில் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்போம் .
No comments:
Post a Comment