Monday, February 9, 2015

SWOT Analysis - நாம் பலவீ னங்களை பலங்களாகவும் , அச்சுறுத்தல்களை வாய்ப்புகளாகவும் மாற்ற முயற்சிப்போம்!


http://tamilentrepreneur.com/wp-content/uploads/2013/06/SWOT-Analysis-picture.jpg
நம் தொழிலின் ஒவ்வொரு கட்டத்தையும் வெற்றி கரமாக எடுத்துச் செல்வதற்கு பல்வேறு ஆய்வுகள்(Researches) மற்றும் பகுப்பாய்வுகள் (Analysis) தேவைப் படுகின்றன . இன்றைய உலகமயமாக்கல் காலக்கட்டத்தில் சிறிய நிறுவனத்தை நடத்தி வந்தாலும்  பல்வேறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளைச்    செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இத்தகைய ஆய்வுகளை செய்யாமல் புது யுக்திகளை புகுத்த முடியாது , புது யுக்திகளை புகுத்தாமல் இன்றைய தொழில் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது
அந்த வகையில் தொழிலுக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒரு பகுப்பாய்வு SWOT Analysis.

      SWOT Analysis இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் , திட்டங்களை தீட்டுவதற்கு தேவையான தகவல்களை அளிக்கவும் , இலக்கை அடைவதற்கான தேவையான சாதக மற்றும் பாதகங்களை ஆராய்வதற்கும்புது தொழிலை தொடங்குவதற்கு தேவையான தகவல்களை அளிப்பதற்கும் SWOT Analysis பயன்படுகிறது .
       SWOT Analysis
 Strengths(பலங்கள்)  Weaknesses(பலவீனங்கள்)Opportunities (வாய்ப்புகள் )Threats (அச்சுறுத்தல்கள்)
http://tamilentrepreneur.com/wp-content/uploads/2013/06/SWOT-SWOT1.jpg
       SWOT Analysis பலங்கள் ,பலவீனங்கள் மற்றும் வாய்ப்புகள் , அச்சுறுத்தல்களை கண்டறிய இந்த பகுப்பாய்வு  பயன்படுகிறது .

      நாம் பலவித கேள்விகளை தொடுத்து அதற்கான பதில்களை அளிப்பதன் மூலம் நமது நிறுவனத்தின்  பலங்கள் ,பலவீனங்கள் மற்றும் வாய்ப்புகள் , அச்சுறுத்தல்களை கண்டறியலாம்.  

  • பலங்கள் (Strengths): நோக்கத்தை எட்டுவதற்கு உதவும் குறிப்பிட்ட நபரின் அல்லது நிறுவனத்தின் தன்மைகள்
  • பலவீனங்கள் (Weaknesses): நோக்கத்தை எட்டுவதற்கு தடையாக இருக்கும் நபரின் அல்லது நிறுவனத்தின் பண்புகள்.
  • வாய்ப்புகள் (Opportunities): நோக்கத்தை எட்டுவதற்கு உதவியாக இருக்கும் புறநிலைமைகள்.
  • அச்சுறுத்தல்கள் (Threats): நோக்கத்தைப் பாதிக்கும் புறநிலைமைகள்.

உள் மற்றும் வெளிப்புற காரணிகள்  (Internal and external Factors):-

             உள்ப்புற காரணிகள் — பலங்கள் மற்றும் பலவீனங்கள் ( நிறுவனத்திற்கு உற்பட்ட காரணிகளை சார்ந்தது- விலை (Price) ,பொருட்கள் (Product) ,சந்தை(Marketting) ,விற்பனை (Sales) ,நிதிகள் (Finance),உற்பத்தி(Production) ,ஊழியர்கள் (Employees) … போன்றவைகள் ).

                  வெளிப்புற காரணிகள்வாய்ப்புகள்  மற்றும்  அச்சுறுத்தல்கள்  (நிறுவனத்திற்கு வெளிப்புற  காரணிகளை சார்ந்தது -தொழில்நுட்ப மாற்றம் (Technological Change), பொருளாதாரம் (Economy) ,அரசாங்கம்(Government), போட்டியாளர்கள் (Competitors), சமூகம் (Social) … போன்றவைகள்).

பலங்கள் (Strength):-
      நிறுவனங்கள் ஒரு திட்டத்தை தீட்டும் முன்பு தங்களது பலங்களை அறிந்து கொள்வது அவசியமாகும். நிறுவனத்திற்கு அனுகூலமாக  உள்ள பல விஷயங்கள்  நிறுவனத்தின் பலங்கள் ஆகும்.

§  நமது நிறுவனத்தில்  மற்ற நிறுவனத்தை விட சிறந்ததாக என்ன விஷயங்கள் உள்ளன ?
§  மற்ற நிறுவனத்தின் பொருட்களை விட நம் நிறுவனத்தின் பொருட்களில் உள்ள தனித்தன்மைகள் (Unique)  என்னென்ன?
§  என்ன வளங்களை மற்றவர்களை விட குறைவான விலையில் கொள்முதல் செய்ய முடியும் ?
§  நமது நிறுவனத்தின் பலங்களாக நுகர்வோர் மற்றும் மக்கள் கருதுவது என்ன ?
§  மற்ற நிறுவனத்தின் ஊழியர்களிடம் இல்லாத என்ன திறமை மற்றும் ஆற்றல் நம் நிறுவனத்தின் ஊழியர்களிடம் உள்ளது ?
§  மற்ற நிறுவனத்தின் பொருட்களை விட நமது நிறுவனத்தின் பொருட்கள் எந்த வகையில் வேறுபட்டது ?
§  நம்மிடம் என்ன   தனித்தன்மையான விற்பனை முறைகள் உள்ளன?
இந்த வகை கேள்விக்கான பதில்கள் நமது  பலங்களே.

         உயர்ந்த தரம்(High quality), மலிவான  விலை ,பிரபலமாக இருக்கும் பிராண்ட் பெயர் (Brand Name) ,நிதி ஆதாரம் (Finance Resources) ,கடன் இல்லாமை (No Debt), திறமையான ஊழியர்கள் ,சிறந்த நிர்வாகம் ,மேம்படுத்தப்பட்ட   தொழில்நுட்பம் , விரைவான உற்பத்தி போன்றவைகள் பலங்களே .

                 நாம் பலங்களாக பார்த்தவையெல்லம் நமது போட்டியாளர்களுடன்தொடர்புபடுத்த வேண்டும் . நம் போட்டியாளரும் உயர்ந்த தரத்தில்(High Quality) பொருட்களை விற்பனை செய்தால் தரம் என்பது நமது பலங்கள்(Strength) அல்ல
பலவீனங்கள் (Weaknesses):
               நமது பலவீனங்களை அடையாளம் காண்பதால் தொழிலை நிர்வகிப்பதற்கும்,மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது. நமது நிறுவனத்திற்கு ஏற்படும்  பாதகங்கள் போன்றவை  நிறுவனத்தின் பலவீனங்கள் ஆகும்.

         பலவீனங்களை நிறுவனத்தின் பார்வையில் இருந்து  மட்டும் பார்க்காமல் , நுகர்வோர் மற்றும் மக்களின் பார்வையிலிருந்தும்  பார்க்க வேண்டும்.

§  நம் விற்பனையை பாதிக்கும் காரணிகள் என்ன ?
§  நாம் மற்றவர்களை விட மேம்படுத்தபட வேண்டியவைகள் என்ன ?
§  எந்த வகையில் நாம் மற்றவர்களை விட பின்தங்கியுள்ளோம் ?
§  என்ன காரணிகள் நம்மை பாதிக்கின்றன ?
§  நமது நிறுவனம் மற்றும் நமது பொருட்களின் பலவீனங்களாக   நுகர்வோர் மற்றும் மக்கள் கருதுவது என்ன ?

        இது போன்ற பல கேள்விகளை எழுப்பும் போது கிடைக்கும் பதில்களே நமது பலவீனங்கள். நம் போட்டியாளர் நம்மை விட செய்யும் சிறந்தது எல்லாம் நம் பலவீனங்களே.

         அதிகமான விலை (High Price), குறைவான தரம் (Low quality),அதிகமான கடன் , போதிய நிதி ஆதாரம் இல்லாமை (Lack of Finance Resources),ஊழியர்களின் திறமையின்மை ,தலைமையின் நிர்வாகதத்  திறமையின்மை , பலவீ னமான மார்க்கெட்டிங் , பழைய தொழில்நுட்பம், உற்பத்திக்கான செலவு அதிகரித்து கொண்டே போகுதல் போன்ற பலவும்  பலவீனங்களே.
வாய்ப்புகள்(Opportunities):
         நிறுவனங்கள் ஒரு திட்டத்தை தீட்டும் முன்பும், இலக்கை நிர்ணயிக்கும்  முன்பும் வாய்ப்புகளை  அறிவது  அவசியமாகும். இந்த வாய்ப்புகளுக்கு  நமது இலக்கையும் ,திட்டமிடுதலையும் முடிவு செய்வதில் பெரும் பங்கு உண்டு.

§  விரிவடைந்து கொண்டே போகும் சந்தை(Broad Market) ,
§  தொழில்நுட்ப மாற்றம் (Changes in Technology ),
§  சந்தையில் ஏற்படும் மாற்றம் ( Changes in Market)
§  அரசாங்க கொள்கையில் மாற்றம் (Changes in Government Policy Related to Our field.) ,
§  பணப் புழக்கம் மக்களிடம் அதிகமாக இருத்தல் ,    
§  இளைஞர்களின் எண்ணிக்கை  அதிகரித்துக்  கொண்டே போகுதல் ,
§  மக்களின் ஊதியத் தொகை அதிகரித்தல ( Salary Hike) ,
§  மக்களின் வாழ்க்கை முறை ,பழக்கவழக்கள் , சமூகம் போன்றவற்றில்  ஏற்படும் மாற்றம் (lifestyle changes, population profiles, Changes in social patterns, and so on.)

       இவை போன்றவையெல்லாம் வாய்ப்புகளே . ஐஸ்க்  கிரீம்(Ice Cream) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கோடைக்காலம் என்பது ஒரு வாய்ப்பு , Pulsar போன்ற இரு சக்கர வாகனங்களுக்கு இளைஞர்களின் எண்ணிக்கை  அதிகரிதல்  என்பது ஒரு வாய்ப்பு. நகைக் கடைகளுக்கு பண்டிகை காலம் என்பது ஒரு வாய்ப்பு .
அச்சுறுத்தல்கள்(Threats) :

        வெளிப்புறச் சுழ்நிலையில் நாம்  சந்திக்கும்  தடைகள் , பாதிப்புகள் எல்லாம் நமக்கு அச்சுறுத்தல்களே . இந்த அச்சுறுத்தல்களை நாம் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.


§  மாறிவரும் தொழில்நுட்ப நமக்கு அச்சுறுத்தல்களாக அமையலாம்   (Changes in Technology maybe Threats to Us),
§  மோசமான உள்கட்டமைப்புகள் (Poor Infrastructures-Roads,Ports,Power and so on..),
§  புதிய போட்டியாளர்களின் வரவு ( Entry of New Competitors),
§  பண வீ க்கம் (Inflation),
§  பொருளாதாரம் மந்த நிலை(Economy Recession),
§  பாதகமான அரசாங்கத்தின் கொள்கைகள் (Adverse Government Policies),
§  மக்கள் செலவு செய்வதற்கு தயங்குதல்,
 இவை போன்றவையெல்லாம் அச்சுறுத்தல்களே.

            ஒரு சில பொருட்களுக்கு வாய்ப்புகளாக  உள்ளவை மற்ற நிறுவன பொருட்களுக்கு  அச்சுறுத்தல்களாக அமையலாம் .

         குடை(Umbrella)  தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மழைக் காலங்கள் என்பது வாய்ப்பு,ஆனால் ஐஸ் கிரீம்(Ice Cream) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதுவே அச்சுறுத்தல்கள்.

       SWOT Analysis என்பது இலக்கு நிர்ணயிப்பதற்கு மற்றும் திட்டங்களை தீட்டுவதற்கு தொழிலுக்கு SWOT Analysis பயன்படுவது போலவே  நமது சுய வாழ்க்கைக்கும் இலக்கு நிர்ணயிப்பதற்கு பயன்படுகிறது .

     நாம் பலவீ னங்களை பலங்களாகவும் , அச்சுறுத்தல்களை வாய்ப்புகளாகவும்  மாற்ற முயற்சிப்போம்!      

For More Details 
Call us - 9790044225
web -www.v4all.org 



No comments:

Post a Comment