Wednesday, February 25, 2015

பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - சென்னை


சென்னை
1. அருள்மிகு பார்த்தசாரதி கோயில்,
திருவல்லிக்கேணி
அருள்மிகு பார்த்தசாரதி கோயில்
மூலவர்:பார்த்தசாரதி
அம்மன்/தாயார்:ருக்மிணி
இருப்பிடம்:சென்னையின் மிக முக்கிய பகுதி திருவல்லிக்கேணி என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது.மின்சார ரயில் வசதியும் திருவல்லிக்கேணிக்கு உண்டு
போன்:+91- 44 - 2844 2462, 2844 2449.
பிரார்த்தனை:இங்குள்ள நரசிம்மரை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும். தவிர இத்தலத்து பெருமாளை மனமுருக வேண்டினால் கல்யாண வரம், குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை ...
சிறப்பு:பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 61 வது திவ்ய தேசம். 9 அடி உயர மூலவர், சாரதிக்குரிய மீசையோடு இருத்தல் இத்தலத்தில் மட்டுமே என்பது மிக முக்கிய சிறப்பாக ...
2. அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்,
மயிலாப்பூர்
அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்
மூலவர்:கபாலீசுவரர்
அம்மன்/தாயார்:கற்பகாம்பாள்
இருப்பிடம்:சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ளது. சென்னையின் மிக முக்கிய பகுதி மயிலாப்பூர் என்பதால் பேருந்து வசதி நிறைய உள்ளது. மின்சார ரயில் வசதியும் மயிலாப்பூருக்கு உண்டு.
போன்:+91- 44 - 2464 1670.
பிரார்த்தனை:இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது இத்தலத்தின் மிக முக்கிய சிறப்பு. உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் இத்தலத்து அம்பாளை வணங்கினால் விரைவில் ...
சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 257 வது தேவாரத்தலம் ...
3. அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில்,
திருவான்மியூர்
அருள்மிகு மருந்தீஸ்வரர் கோயில்
மூலவர்:மருந்தீஸ்வரர்
அம்மன்/தாயார்:திரிபுரசுந்தரி
இருப்பிடம்:சென்னை திருவான்மியூரில் கிழக்கு கடற்கரை சாலையில் கோயில் அமைந்துள்ளது. திருவான்மியூருக்கு பஸ் வசதி உள்ளது.
போன்:+91 - 44 - 2441 0477.
பிரார்த்தனை:சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் உண்டால் தீராத நோய்கள், பாவங்கள் தீரும், சிவன் காட்சி தந்த வன்னி மரத்தை சுற்றி வணங்கிட முக்தி கிடைக்கும் என்பது ...
சிறப்பு:இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 258 வது ...
4. அருள்மிகு அஷ்டலட்சுமி கோயில்,
பெசன்ட் நகர்
அருள்மிகு அஷ்டலட்சுமி கோயில்
மூலவர்:அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு,
அம்மன்/தாயார்:ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி,கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி
இருப்பிடம்:சென்னை நகரின் மத்தியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது.
போன்:+91- 44-2446 6777, 2491 7777, 2491 1763
பிரார்த்தனை:இங்கு அஷ்ட லட்சுமிகளாக அருள் பாலிக்கும் மகாலட்சுமியை வணங்கினால் சிறப்பு வாய்ந்த வாழ்க்கை அமையப்பெறலாம். தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கும் ஒவ்வொரு தெய்வங்களும் தனித்தனி ...
சிறப்பு:கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோயில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது.இது தஞ்சை பிரகதீஸ்வரர் ...
5. அருள்மிகு கந்தசுவாமி கோயில்,
கந்தக்கோட்டம்
அருள்மிகு கந்தசுவாமி கோயில்
மூலவர்:கந்தசுவாமி
அம்மன்/தாயார்:வள்ளி, தெய்வானை
இருப்பிடம்:சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம்
போன்:+91- 44 -2535 2192
பிரார்த்தனை:பால்குடம், பால்காவடி, முடிகாணிக்கை, திருக்கல்யாண உற்சவம். செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் நடக்கும் நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குடும்பம் சிறக்கும், ஐஸ்வர்யம் ...
சிறப்பு:உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை ...
6. அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோயில்,
வடபழநி
அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோயில்
மூலவர்:வடபழநி ஆண்டவர்
அம்மன்/தாயார்:வள்ளி, தெய்வானை
இருப்பிடம்:சென்னை நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது. சென்னையின் பிற முக்கிய பகுதியிலிருந்து வடபழநிக்கு பஸ் வசதி உள்ளது.
போன்:+91 44 2483 6903
பிரார்த்தனை:இங்குள்ள வடபழநி ஆண்டவரை வழிபட்டால் குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்கும்.புதிய தொழில் தொடங்க , வியாபாரம் விருத்தியடைய இத்தலத்து முருகனை வேண்டிக் கொள்ளலாம். கல்யாண வரம், குழந்தை வரம் ...
சிறப்பு:இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது விசேஷம்அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.இவர் முருகனுக்கு மிகவும் ...
7. அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில்,
திருவேற்காடு
அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில்
மூலவர்:வேதபுரீஸ்வரர்
அம்மன்/தாயார்:பாலாம்பிகை
இருப்பிடம்:சென்னை கோயம்பேட்டிலிருந்து(10 கி.மீ) பூந்தமல்லி செல்லும் வழியில் திருவேற்காடு உள்ளது.
போன்:+91- 44-2627 2430, 2627 2487.
பிரார்த்தனை:இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது ...
சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான ...
8. அருள்மிகு காமாட்சி கோயில்,
மாங்காடு
அருள்மிகு காமாட்சி கோயில்
மூலவர்:காமாட்சி
இருப்பிடம்:சென்னை கோயம்பேட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் இத்தலத்துக்கு பஸ் உண்டு. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சென்னையிலிருந்து - 20 கி.மீ. தாம்பரத்திலிருந்து - 22 கி.மீ
போன்:+91- 44 - 2627 2053, 2649 5883.
பிரார்த்தனை:இத்தலத்தில் ஆறு வார வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. வாரத்தில் ஏதேனும் ஒருநாளில் எலுமிச்சைக் கனியுடன் அம்மனைத் தரிசித்து பின்னர் அதே கிழமைகளில் தொடர்ந்து ஆறு வாரங்கள் ...
சிறப்பு:அம்மன் ஈசனை நோக்கி ஒற்றைக்காலில் அக்னிதவம் இருந்த இடம். இத்தலத்தில் தவம் இருந்து விட்டு பின்புதான் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரரை திருமணம் செய்து கொண்டார். இங்கு ஸ்ரீ சக்ரம்தான் ...
9. அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில்,
சிறுவாபுரி, சின்னம்பேடு
அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோயில்
மூலவர்:பாலசுப்பிரமணியர்
இருப்பிடம்:சென்னை கோயம்பேடு பஸ்ஸ்டாண்டிலிருந்து(30கி.மீ) கும்மிடிபூண்டி, கவரப்பேட்டை பஸ்களில் சிறுவாபுரி புதுரோடு ஸ்டாப்பில் இறங்கி அங்கிருந்து மேற்கே 3 கி.மீ தூரம் சென்றால் சிறுவாபுரியை அடையலாம்.
போன்:+91- 94442 80595, 94441 71529
பிரார்த்தனை:இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, ...
சிறப்பு:முருகனைத்தவிர அனைத்து தெய்வங்களும் மரகதத்தால் ...
10. அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) கோயில்,
செட்டி புண்ணியம்
அருள்மிகு தேவநாதப்பெருமாள் (யோக ஹயக்ரீவர்) கோயில்
மூலவர்:வரதராஜப்பெருமாள்
இருப்பிடம்:சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து வலது புறத்தில் 3 கி.மீ. தூரத்தில் செட்டிப்புண்ணியம் என்ற ஊரில் யோக ஹயக்கிரீவர் கோயில் அமைந்துள்ளது. இது தேவநாதப்பெருமாள் கோயிலாக இருந்தாலும் கூட ஹயக்கிரீவர் கோயில் என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.
போன்:+91 8675127999
பிரார்த்தனை:கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், திருமணத்தடை நீங்கவும், வியாபாரம் செழிக்கவும், வழிபாடு ...
சிறப்பு:யோக ஹயக்ரீவர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரதாரியாக யோக நிலையில் இருப்பது ...

No comments:

Post a Comment