Sunday, February 8, 2015

சிக்மன்ட் பிராய்டு - கனவுகளும் விளக்கமும்

சிக்மன்ட் பிராய்டு - கனவுகளும் விளக்கமும்...visit - www.v4all.org 


நாம் அன்றாடம் கனவு காண்கிறோம் அந்த கனவுகள் எப்படி வருகின்றன என்பது பற்றி 
யாருக்கும் தெரியாமல் இருந்தபோது கனவுகள் பற்றிய விழிப்புணர்வு நமக்கு தந்தவர் 
"சிக்மன்ட் பிராய்டு"என்பவராவர். இவர் 1856 ஆம் வருடம் மே மாதம் 6ம் தேதி செக்கோஸ்லாவாகிய நாட்டில் உள்ள வ்ரீபர்க் என்னும் சிற்றூரில் பிறந்தவர். நமக்கு வரும் கனவு பற்றி ஆராய்ந்த  ஒருவரை மக்கள் அதிகமாக வெறுத்தனர். மக்களுக்கு புரியவைக்க எழுதிய புத்தகத்தை மக்கள் புறக்கணித்தனர். அவரது பெயரை கேட்டாலே  ஏதோ கெட்டவார்த்தை காதில் கேட்டது போல் மக்கள் அவரை பார்க்க ஆரம்பித்தார்கள்.அப்படி என்னதான் அவர் கூரியிருக்கிறார் என்பதை பார்ப்போம்.  


நமக்கு வரும் கனவுகள் எதனால் வருகிறது என்பதை முதல் முதலில் சரியான விளக்கம் அளித்தவர் ப்ராயிட் அவர்கள் தான். முன்பெல்லாம் கனவு காண்பது என்பது ஒரு சகுனம் பார்க்கும் அடையாளமாக நினைத்தார்கள். தனக்கு வரும் கனவு தங்களுக்கு நல்லது மற்றும் கேட்டது குறியீடாக இருப்பதாக நினைத்தார்கள். கனவுகளின் பலன்கள் என்றுகூட புத்தகம் வெளியிட்டார்கள். கனவில் கல்யாணம் நடப்பது போல் வந்தால் இந்த பலன். பல் விழுவதுபோல் கனவு வந்தால் இந்த பலன் என்று சகுனம் வைத்து மக்களை ஏமாற்றி வந்தார்கள். ஆனால் ப்ராயிட் அவர்கள் ஒருவருக்கு வரக்கூடிய கனவு என்பது அவரது ஆழ்மனத்தின் கற்பனை. ஒருவர் தான் நிஜவாழ்க்கையில் செய்ய இயலாத ஆசைகளை அல்லது தனது ஆசைகளை செயல்படுத்த பயந்து மனதிற்குள் ஒழித்துவைக்கும் ஆசைகளின் வெளிப்பாடுதான் இந்த கனவு. ஒருவரது கனவிற்கு அவருடையே ஆழ்மனம்தான் காரணமே தவிர அதற்கு வேறு யாரும் பொறுப்பல்ல. ஒருவர் நிம்மதியாக எந்த கனவும் இல்லாது ஆழ்ந்த உறக்கம் கொள்கிறார்கள் என்றால் அதற்கு அவரது மனநிலை சீராக உள்ளது என்று அர்த்தம். மற்றபடி ஒருவர்க்கு வரும் கனவிட்க்கும் அதற்கு பலன் பார்பதட்க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஒருவரை அடிக்கவேண்டும் என்கின்ற ஆசை நிஜவாழ்க்கையில் முடியாதபோது அது ஆழ்மனதில் சென்று தங்கிவிடுக்கிறது. அந்த ஆழ்மனத்தின் எண்ணங்கள் அலைவரிசைகலாக, பல ஆசைகள் மற்றும் எண்ணங்களின் கலவையாக ஒரு கற்பனை படத்தை நமது கண்முன்னே காட்டுகிறது. அந்த கனவை பார்த்து மகிழ்சிகொள்கிறோம் அல்லது சோகம்கொள்கிறோம். ஆகா கனவு வருவதற்கு முழு பொறுப்பும் நம்மைச் சார்ந்தது. 


கனவுகளை பற்றி ஆழ்ந்த விசயங்களை கூரிய ப்ராயிட் அவர்கள்தான் பால் உணர்வுகள் பற்றிய விளக்கத்தை தந்தார். அந்த விளக்கம்தான் அவரை மக்கள் வெறுக்க செய்தது அப்படியென்ன விளக்கம் அவர் தந்துவிட்டார் என்பதை பார்ப்போம். அவர் சிறுவயது முதலே தனது தாய் மீது அதிக ஈர்ப்பும்,பாசமும் இருந்தது. அந்த ஈர்ப்பும் அவரது தந்தை மீது இல்லை.அதேபோல் அவரது தந்தையும் ப்ராயிட் உடைய சகோதரிகளிடம் காட்டும் ஈர்ப்பும் அவரது தந்தை தன்னிடம் காட்டுவதில்லை என்பதை உணர்ந்தார். ஆகையால் அதைப்பற்றி ஆராய்ந்தார். அவரது ஆராய்ச்சியின் பலனாக அவர் கூரிய விளக்கம் ஒரு தாய்க்கு தான் பெற்ற மகளிடம் உள்ள பாசத்தைவிட தான் பெற்ற மகனிடம்தான் பாசம் அதிகமாக இருக்கும் அதேபோல் ஒரு தந்தைக்கு தன்னுடைய மகனிடம் உள்ள பாசத்தை விட தான் பெற்ற மகளிடம்தான் பாசம்  அதிகமாக இருக்கும் என்பதை ஆராய்ந்து கூறினார்.
அவர் கூறியது  என்னவெனில் பாலுனர்ச்சிகள் காரணமாக ஒரு தாய் தனது மகனை அதிகம் விரும்புகிறாள் ஒரு தந்தை தனது மகளை அதிகம் விரும்புகிறான். இனக்கவர்ச்சியால்தான் இது நிகழ்கிறது என்கின்ற விளக்கம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது விளக்கத்தை படித்தவர்கள் அவர் எழுதிய புத்தகத்தை கிழித்தனர். அவரது அந்த புத்தகத்தை தடை செய்யவேண்டும் என்று போராட்டம் நடத்தினர். பெண்கள் அவரது பெயரைக்கேட்டாலே ஏதோ தவறான ஒன்றை கேட்டதுபோல் காதுகளைப்பொத்திக்கொண்டனர். அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் தன து ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டார். சிக்மன்ட் பிராய்டு அவரது விளக்கம் அப்போது ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தாலும் இப்போது ஏற்றுக்கொள்ளப்படிருக்கிறது. 

No comments:

Post a Comment