தற்போது பலரும் சேமிப்பு, முதலீடு சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார்கள். தாங்களும் சேமிக்க வேண்டும், சிறிய அளவிலாவது முதலீடு செய்துவர வேண்டும் என்ற எண்ணம் பாராட்டுக்குரியது. ஆனால் இந்தச் சிந்தனையை செய்முறைப்படுத்துவதில்தான் தெளிவு இல்லை.
பலர், நாங்களும் சேமிக்கிறோம் என்று பெயரளவுக்குச் சேமிக்கிறார்கள். பொதுவான விஷயங்களில் நண்பர்கள், உறவினர்களிடம் ஆலோசனை பெற்று அல்லது பெறாமலே ஈடுபடுவதைப் போல தாங்கள் அறிந்த வகையில் நிதித் திட்டமிடலை மேற்கொள்கிறார்கள். இது சரியாகாது. குடும்ப மருத்துவர், குடும்ப வக்கீல் போல குடும்பத்துக்கு என்று ஒரு நிதி ஆலோசகரையும் வைத்துக் கொள்வதே நல்லது.
பொதுவாக நிதி ஆலோசகர்கள் தங்களிடம் ஆலோசனை கேட்டு வருகிற ஒருவருக்கு, அவரது வருமானம் மற்றும் செலவுகள் அடிப்படையிலும், வாழ்க்கைத் தர வசதிகளை முன்வைத்தும் பொதுவான ஒரு திட்டத்தைத்தான் முன்வைப்பார்கள். அப்படி இல்லாமல் ஆறுமாதத்துக்கு ஒருமுறை உங்கள் நிதி நிலைமைக்கு ஏற்ப நிதி ஆலோசனையை மேம்படுத்தும் அக்கறை கொண்ட நிதி ஆலோசகர்களே குடும்ப நிதி ஆலோசகர்கள்.
அதாவது குடும்ப மருத்துவரைப் போல குடும்ப நிதி ஆலோசகர். அப்படிப்பட்ட நிதி ஆலோசகரை எப்படி தேர்வு செய்வது? நிதி விஷயத்தில் நாம் ஒரு முடிவு மேற்கொண்ட காலத்துக்குப் பிறகு நமது வருமானம் அதிகரிக்கலாம், கடன் அதிகரிக்கலாம், அல்லது திட்டமிடாத செலவுகள் அதிகரிக்கலாம். இவற்றை அப்டேட் செய்து அதற்கேற்ப ஆலோசனைகள் கொடுப்பதுதான் முழுமையான நிதி ஆலோசனை.
இந்த வேலையைத்தான் சரியான நிதி ஆலோசகர்கள் செய்வார்கள். தெரிந்த ஒரு நிதி ஆலோசகரை மட்டும் பார்த்துவிட்டு, உடனே அவரிடம் பிளான் பெற்று விடக்கூடாது. குறைந்தபட்சம் மூன்று நிதி ஆலோசகர்களையாவது சந்தித்து, அதற்கு பிறகு நம்பிக்கையான நிதி ஆலோசகரை தேர்வு செய்யலாம்.
நிதி ஆலோசகராகப் பணியாற்ற கல்வித்தகுதி அவசியம். மேலும் முறையாக பதிவு பெற்றவரா, சி.எப்.பி. அல்லது சி.பி.எப்.ஏ. போன்ற நிதி ஆலோசனை சார்ந்த கல்வி கற்றவரா என்று பார்க்க வேண்டும். நிதி ஆலோசனை செய்கிறேன் என்று வருமான வரி ஆலோசனை சொல்கிறவர்கள், காப்பீட்டு முகவர்கள், ஆர்.டி. முகவர்கள் சிலரும் நிதி ஆலோசகர்களாகச் செயல் படுவார்கள்.
இவர்களை நிதி ஆலோசகர்கள் என்று கூற முடியாது. நமது எந்த லாப, நஷ்டத்துக்கும் இவர்களால் துல்லியமாகப் பதில் கூற முடியாது. சில இடங்களில் காப்பீடு, பிக்சட் டெபாசிட் திட்டங்களை விற்கும் ஏஜன்டுகளே நிதி ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். தாங்கள் விற்கும் திட்டங்கள்தான் சிறந்த வருமானத்தைத் தரும் என்று அதையே விற்பதற்கு முயல்வார்கள்.
இவர்களிடம் நல்ல ஆலோசனை கிடைக்கும் என்று கூற முடியாது. ஆலோசனை சொல்வதில் வல்லவராக இருந்தால் மட்டும் போதாது, அதற்கு சரியான வகையில் கணக்கு வழிமுறைகள் சொல்பவராக இருக்க வேண்டும். பின்பற்றுவதற்கு எளிமையான வழிமுறையாக இருக்க வேண்டும்.
தவிர எனக்கு என்ன தேவை என்று நீங்கள் சொன்ன பிறகும், உங்கள் தேவைகள் தாண்டி அவரது கருத்துக்களை உங்கள் மேல் திணிக்கிறாரா என்பதையும் பாருங்கள். அதாவது நமது தேவைக்கு ஏற்ப ஆலோசனை கொடுப்பவர்தான் சிறந்த நிதி ஆலோசகரே தவிர, தன்னுடைய விருப்பத்தை நம் மீது திணிப்பவர் அல்ல.
இந்த விஷயங்களை எல்லாம் மனதில் வைத்து நிதி ஆலோசகரைத் தேர்வு செய்து தொடர் ஆலோசனை பெற்று, நமது பொருளாதார நிலையை வளமைப்படுத்திக்கொள்ளலாம்!
Yours Happily
Dr.Star Anand Ram
Money Attraction consultant
Coimbatotore

No comments:
Post a Comment