Wednesday, February 18, 2015

நேரத்தை வீணாக்குபவர்களை இறைவன் மன்னிப்பதேயில்லை - இரும்புத் துண்டு உணர்த்தும் பாடம்

இரும்புத் துண்டு உணர்த்தும் பாடம்

ரோட்டில் நடந்து செல்லும் ஒருவருக்கு ஒரு தரமான இரும்பு துண்டு கிடைக்கிறது. ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி கையில் அது கிடைத்தால் அவன் செருப்பு தைக்கும்போது வைத்து தைக்க அதை ஒரு மேடை போல பயன்படுத்துவான்.
ஒரு கருமாரிடம் அது கிடைத்தால் (இரும்பு வேலை செய்பவர்) அவர் அதை வைத்து ரூ.600/- மதிப்புள்ள 3 குதிரை லாடங்கள் செய்வார்.
அது ஒரு வொர்க்ஷாப் வைத்திருப்பரிடம் கிடைத்தால் அவர் அதை வைத்து ரூ.1000/- மதிப்புள்ள குண்டூசிகள் அவரால் செய்ய முடியும்.
அதையே முகச் சவரம் செய்யும் பிளேடாக செய்தால் ரூ.4000/- மதிப்புள்ள பிளேடுகள் செய்ய முடியும்.
அதையே வாட்ச் ஸ்ப்ரிங் எனப்படும் நுண்ணிய பொருளாக செய்தால் ரூ.2,00,000/- மதிப்புள்ள ஸ்ப்ரிங்குகள் செய்யமுடியும்.
இறைவன் நமக்கு அளித்திருக்கும் நேரமும் அப்படித்தான். அதை பயன்படுத்தவேண்டிய விதத்தில் பயன்படுத்தினால் நம்மைப் போல அதிர்ஷ்டசாலி இந்த உலகில் எவரும் இருக்க முடியாது.


நேரத்தை வீணாக்குபவர்களை இறைவன் மன்னிப்பதேயில்லை[/b]
இறைவன் எவரை மன்னிக்கிறானோ இல்லையோ நேரத்தை வீணாக்குபவர்களை மன்னிப்பதேயில்லை. ஏனெனில் அந்த பரமேஸ்வரனே கால ஸ்வரூபி தான். காலம் தான் இறைவனேயன்றி வேறொன்றுமில்லை.
அப்படிப்பட்ட காலத்தை அனைவரும் பயனுள்ள வகையில் கழிக்கவேண்டியது அவசியம்.
முதலில் காலத்தை வீணடிக்கும் செயல்கள் எது அல்ல என்று தெரிந்துகொள்வோம்.
[b style="margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline;"]இவை நேரத்தை வீணடிக்கும் செயல்கள் அல்ல….[/b]
1) அளவான உறக்கம்
2) நம் குழந்தைகளுடன் நாம் விளையாட, பாடம் சொல்லிக்கொடுக்க செலவழிக்கும் நேரம்.
3) நம் குடும்பத்துடன் நாம் பர்சேசிங், கோவில், பொழுதுபோக்கு பூங்கா முதலியவற்றுக்காக வெளியே செல்வது
4) மாதமொருமுறை அல்லது இருமுறை நண்பர்களுடன் சினிமா பார்க்க தியேட்டர் செல்வது
5) இசை நிகழ்ச்சி, நாடகங்கள் முதலியவற்றை ரசிப்பது
6) ஆன்மீக சமய சொற்பொழிவுகளை கேட்பது
7) புதிய முயற்சிகளில் ஈடுபடுவது; அதற்காக ஏற்படும் அலைச்சல்
8) நண்பர்களுக்கோ உறவினருக்கோ உதவும்பொருட்டு நாம் செலவிடும் நேரம்
9) வீட்டில் உள்ள வயது முதிர்ந்த தாத்தா, பாட்டிகளுடன் நாம் செலவிடும் நேரம்
10) ஷட்டில் காக், கிரிக்கெட், பாட் மிண்டன், செஸ், காரம் உள்ளிட்ட மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கும் விளையாட்டுக்களை நண்பர்களுடன் & குடும்பத்தினருடன் விளையாடுவது.
11) அம்மாவுக்கு, மனைவிக்கு உதவியாக சமையலறையில் இருப்பது மற்றும் அவர்கள் பணிகளில் உதவுவது.
12) செய்தித் தாள்களை, வார, மாத இதழ்களை படிப்பது (ஆன்லைன் மற்றும் அச்சு இரண்டும்)
13) தரமான நூல்களை படிப்பது
14) பாட்டு, நடனம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழித் திறன் வகுப்பு, தேர்வுக்கு தயாராகும் பொருட்டு செல்லும் பயிற்சி வகுப்புகள்

[b style="margin: 0px; padding: 0px; border: 0px; vertical-align: baseline;"]மேற்கூறியவற்றில் பல விஷயங்கள் நேரத்தை வீணடிப்பதோ செலவு செய்வதோ ஆகாது. இவை அனைத்தும் நேரத்தை முதலீடு செய்வதற்கு சமம்.[/b]

No comments:

Post a Comment