Thursday, February 19, 2015

எதையும் கஷ்டப்பட்டு செய்யாதீர்கள்

     willingness to work                     சாதாரண விசயத்தைக்கூட  நீங்கள் கஷ்டப்பட்டுதான் செய்வீர்கள் என்றால் அதற்குப் பெயர் திறமைக் குறைவு என்பதுதானே அன்றி கடின உழைப்பு  என்பது அல்ல . ஒரு வேலையை கடினம் என்று நீங்கள் நினைக்கின்றபோதே அதை நீங்கள் இஷ்டப்பட்டு செய்யவில்லை என்பதாகதானே  அர்த்தம் . தாங்கள் அனுபவித்துச் செய்கிற எந்த வேலையையும் கஷ்டப்பட்டு செய்ததாய் வெற்றி பெற்றவர்கள் சொல்வதில்லை 
                எழுத்தாளர் சுஜாதாவிடம்  “இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீகளே .. உங்களுக்கு இது கஷ்டமாக இல்லையா “ என்று கேட்டதற்கு ,”இதை வேலையாகச் செய்கிறவனுக்குத்தான் இது கஷ்டம். நான் எனது விருப்பமாக இதைச் செய்கிறேன்” என்றார் . விருப்பத்தோடு செய்கிறயாரும் “மிகக் கடினம் ” என்று அங்கலாய்த்துக் கொள்வதில்லை. 
                “கஷ்டப்பட்டு உங்களை யார் அந்த வேலையைப் பார்க்கச் சொன்னது? இதே வேலையை இஷ்டப்பட்டு செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்களே. அவர்களிடம் அதை விட்டு விடலாமே. 
          ஒரு வேலையை விரும்பி செய்கிறபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை . வருந்தி செய்கிறபோது உங்கள் கஷ்டம் பல மடங்காகிறது . நீங்கள் அழுதாலும்,புரண்டாலும் ஒரு   வேலையை  நீங்கள்தான்  செய்தாக வேண்டும் என்றால் ஏன் அதற்காக அழ வேண்டும். அதை ரசித்து செய்தால் நீங்கள் ஆசைப்படுகிற விஷயம் உங்களுக்கு மிகவும் அருகில் வரும். 

No comments:

Post a Comment