மந்திர ஜபம் நினைவில் கொள்ள வேண்டியவை
மந்திர ஜபம் நினைவில் கொள்ள வேண்டியவை:-
மந்திரங்கள் ரிஷிகள்,சித்தர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.எனவே அவற்றை ஜெபிக்கும்போது அதற்குண்டான ரிஷி அல்லது சித்தரின் பாதங்களை நம் சிரசின் மீது தியானிக்க வேண்டும்.ஒரே நேரத்தில் பல மந்திரங்களை ஜெபிக்காமல் ,ஓரு மந்திரத்தை குறைந்தது 90 நாட்கள் ஜெபித்து சித்தியான பின் அடுத்த மந்திரத்தை ஜெபிக்கலாம்.முடிந்தால் 90 நாள் ஜெபத்தின் பின் ஹோமம்,தர்ப்பணம்,மார்ஜனம்,அன்னதானம் இவற்றை செய்து முறைப்படி முழு சித்தி பெறுதல் நலம்.சங்கல்பம் ,அங்க கரன்யாசம் மூர்த்தி தியானம் பஞ்சபூஜை ,ஜபசமர்ப்பணம் இவற்றை முறைப்படி கற்று ஜெபித்தால் உயர்ந்த பலன்கள் கிட்டும்.
ஜாதகத்தில் நமக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாளாக பார்த்து ஜெபத்தை ஆரம்பிக்க நன்று.அரசு நேரத்தில் ஜெபம் ஆரம்பிக்க அல்லது தொடர்ந்து அரசு நேரத்தில் ஜெபித்து வர தடையின்றி விரைவில் மந்திரம் சித்தியாகும்.நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து குலதெய்வத்தை வேண்டி ,அந்த மந்திரத்திற்கு உண்டான ரிஷி அல்லது சித்தரை மந்திரம் சித்தியாக வணங்கி வேண்டிக் கொள்ளவும். அதன் பின் மந்திரத்தின் தேவதையை (தெய்வம்) வணங்கி ஜெபத்தை ஆரம்பிக்கவும்.
ஜெபம் செய்து வரும் அந்த 90 நாட்களும் வேறு மந்திரத்தை ஜெபிக்காமல் மந்திரத்திற்குண்டான ரிஷியின் பாதகமலங்களை சிரசின் மேல் (சஹஸ்ராரம்) தியானித்து ,தன்னையே வழிபடும் தேவதையாக பாவித்து வர மந்திரம் சித்தியாவதுடன் உயர்ந்த பலன்களை தரும்.அதிகாலை எழும்போதும்,உறங்கும் போதும் ரிஷியையும் தெய்வத்தையும் வணங்கி ஒரு நாளை தொடங்கவும் முடிக்கவும் செய்ய வேண்டும்.
தன்னை தன் உபாசனா தெய்வமாக அல்லது குருவாக பாவித்து தியானம் செய்து வர அவர்களின் தன்மை,சக்தி நம்மில் உண்டாகும் என தந்திர சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.வேதமும் ''யத் பாவ தத் பவதி'' என்கிறது இதன் பொருள் ''எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்'' என்பதாகும்.
உபதேசம் பெற:
சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரத்தன்று ,கடகம் அல்லது விருச்சிக லக்னத்தன்று உபதேசம் பெற மிக சிறப்பாகும்.
மந்திரங்களைத் தீட்சை பெற்று ஜெபிப்பது நிறைந்த பலன்களைத் தரும். தீக்ஷை பெறக் கீழ்க்கண்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்க.
வாழ்க வையகம்|| வாழ்க வளமுடன் ||

No comments:
Post a Comment