Showing posts with label albha dhyanam. Show all posts
Showing posts with label albha dhyanam. Show all posts

Monday, September 10, 2018

பணவளக்கலையின் -- பருவத்தே பணம் செய்

பணவளக்கலையின் -- பருவத்தே பணம் செய்

செலவை குறைக்க வரவை உயர்த்த செல்வதை பெறுக்க

தினசரி நாம் செய்யும் செலவு களைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்குக் கிடையாது. இதனால் என்னதான் நாம் சம்பாதித்தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனை யும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவு செய்தோம் என்று தெரியாமல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது குறித்து வைத்துச் சொன்னால் நன்றாக இருக்குமே! அதனோடு நாம் சேமிக்க வேண்டிய தொகை என்ன, கட்ட வேண்டிய கடன் எவ்வளவு என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?

ஆம் என்றால் உங்களுக்கான கையேடு



உங்கள் பணத்தை கணக்கு எழுதுவது மூலம் 25% பெருக்கலாம்
மேலும் விபரங்கள்



Jc.Dr.Star Anand ram
Money Attraction Coach
call - 98946 24425
www.moneyattraction.in

Friday, March 4, 2016

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்
கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.

ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே 
பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.

“இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?”

“மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல...

இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!”

“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்..,

ஆம்.,நண்பர்களே.,
அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித 
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.

அது ஒரு வாழ்க்கையும் அல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,

“நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,“எனக்கு நேரும்   
மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே…

அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.

அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!

Monday, June 15, 2015

மர்ம குகைகளும் ராஜநாகமும்

மர்ம குகைகளும் ராஜநாகமும்.
==========================
{ தேவ ரகசியம் }
சித்தர்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் வாழ்ந்த
மலைக் குகைகளில், அவர்கள் தவம்
செய்து இறைவனை அடைந்த நிலையும்
அவர்களுக்கு துணையாகவும், காவல்
தெய்வமாகவும் ஒரு ராஜநாகம்
அவர்களோடு பவுர்ணமி நாட்களில் தவம்
இருந்த வரலாறு வேலூர் மலையில்
நடந்துள்ளது.
இன்றும் அந்த ராஜநாகம் தவம்
செய்து வருகிறது என்பதற்கு வேலூர்
மலையையும், அதில் உள்ள நூற்றுக்கணக்கான
குகைகளையும் உதாரணமாக கூறலாம்.
கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம்
அடி உயரத்தில் உள்ள இந்த மலையில்
ஒரே நேரத்தில் 100 விலங்குகள் தங்கும்
விலங்கு உறங்கும் பாறை, ஆயிரம் அகோரிகள்
குடிகொண்டு தவம் செய்யும் அகோரி குகை,
படுத்து தவழ்ந்து செல்லும் தவகுகை,
இப்படி பல குகைகள் உள்ளன.
அதோடு அடர்ந்த காட்டுப்பகுதியாக
அக்காலத்தில் இருந்துள்ளது. சூரிய கதிர்கள்
பூமியை தொடாத சூரியன் புகா காடு என்றும்,
அனைத்து மிருகங்களும் வாழ்ந்த ஒரு வனமாக
இந்த மலை இருந்துள்ளது.
மன்னர்கள் படையெடுப்பில் காடுகளில்
பதுங்கிய வீரர்கள் மலைகுகைகளில் வாழ்ந்த
அகோரிகளை விரட்டி அதில் தங்கி போர்
வியூகங்களை வகுத்துள்ளனர்.
அதோடு அடர்ந்த
காடுகளை வெட்டி அழித்து குடில்கள்
அமைத்துள்ளனர். மேலும் பெரிய
பாறைகளை உடைத்து கோட்டையும்
கட்டியுள்ளனர். இதனால் அடர்ந்த
காடு அழிக்கப்பட்டு பாறைகளும்
உடைக்கப்பட்டு பல குகைகள் அழிக்கப்பட்டுவி
ட்டன.
வேலூர் கோட்டை, விரிஞ்சிபுரம் கோவில்
இன்னும் பிற மன்னர் காலத்தில் கட்டப்பட்ட
அனைத்து கோவில்களுக்கும் இங்கிருந்துதான்
பாறைகள் உடைக்கப்பட்டு கற்கள்
கொண்டு செல்லப்பட்டது.
மலைமீது கட்டப்பட்ட அழகான
ராணிக்கோட்டை பாறைகள்
கொண்டு வடிவமைக்கப்பட்டாலும், தேக்கு,
சந்தனமரங்கள் கொண்டு அழகு சிற்பங்களால்
வடிவமைக்கப்பட்டுள்ளது. ராணி அந்தபுரத்தில்
நின்று இயற்கையை ரசிக்கும்போது தென்றல்
காற்றில் சந்தன வாசனையில்
இயற்கை அழகை ரசித்ததாக
வரலாறு கூறுகிறது.
ராணியை காப்பாற்ற மன்னர்கள்
வீரர்களை மட்டும் நம்பாமல்,
ராணி கோட்டையின் நுழைவு வாயிலில் ஆள்
விழுங்கும் விஷ
மூலிகையை வளர்த்து வந்துள்ளனர். இந்த
விஷ செடி ஆட்களின் வாசனை பட்டவுடன்
அவர்கள் இருக்கும்
பகுதி நோக்கி நகர்ந்து அவர்களை மூடி கொண்டு ரத்தம்
உறிஞ்சி சாகடித்து விடுமாம்.
ஆப்பிரிக்கா காடுகளில் மட்டுமே இருக்கும் இந்த
விஷ கொடி அக் காலத்தில் வேலூர் மலையில்
மன்னர்களால் வளர்க்கப்பட்டுள்ளது. தற்போதும்
இந்த ஆள் விழுங்கும் மூலிகை விஷ
கொடி ராணிக்கோட்டை நுழைவு வாயிலில்
உள்ளது. இதை அறியாத பலர் அந்த கொடியால்
ஈர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அதோடு ராணிக்கோட்டையில் மரங்களால்
வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள், வாசல் கதவுகள்
சன்னல்கள்
தற்போது கொள்ளை அடிக்கப்பட்டுவிட்டன.
அக்காலத்தில் அகோரிகள் நிர்வாணத்துடன் தவம்
கொண்டதால் இவர்களுக்கு துணையாக
ராஜநாகம் ஒன்று பவுர்ணமி நாட்களில்
இவர்களோடு படம் எடுத்து தவம்
கொண்டுள்ளது. அந்த நாட்களில்
மலையை சுற்றிலும் மல்லிகை பூ வாசம்
வீசுவதுடன் அகோரிகள் எலுமிச்சம்பழம் மேல்
கற்பூரம்
வைத்து ராஜநாகத்தை வணங்குவார்களாம்.
அப்போது எலுமிச்சை பழம் விபூதியாக
மாறிவிடுமாம். அந்த விபூதியை நெற்றியில்
பூசி கொள்வதுடன் உடல் எங்கும்
பூசி கொண்டால் உடலில் ஏற்படும்
அனைத்து நோய்களும் குணமாவதாக
கூறப்படுகிறது.
அதோடு காட்டில்
அரியவகை மூலிகைகளை ராஜநாகம்
துணைகொண்டு கண்டுபிடித்ததாகவும்,
அதற்கு சித்தர்கள் சிறப்பு யாகங்கள்
நடத்தி ராஜநாகத்தை வழிபட்டதாக
கூறப்படுகிறது. இன்றும் அகோரிகள் தவம்
செய்த குகைகளில் நிர்வாண சாமியார்கள் தவம்
செய்கின்றனர். பவுர்ணமி நாட்களில்
அவர்களுக்கு துணையாக அந்த ராஜநாகம் தவம்
செய்கிறது. சித்தர்கள் நடமாட்டம் இருந்தாலும்
அவர்கள் மனிதன் கண்களுக்கு தெரிவதில்லை.
ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களில்
உள்ள மர்ம குகைகளில் இன்றும்
மணியோசை கேட்பதுடன், சாம்பிராணி,
விபூதி ஊதுவத்தி மல்லிகை பூ வாசனைகள்
மாறி, மாறி, வீசுவதாகவும், வாசனை வீசும்
குகைகளில் சித்தர்கள் வாழ்வதாகவும்
நம்பப்படுகிறது.
மலையடிவாரத்தில் காசி விஸ்வநாதர் ஆலயம்
உள்ளது. இந்த ஆலயம் சித்தர்களால் கட்டப்பட்ட
ஆலயம். இந்த ஆலயத்தில் அகத்தியர் தவம்
இருந்து வழிபட்டதோடு சித்த மருத்துவம்
குறித்தும் அதன் பயன்பாட்டை குறித்தும்
தனது சீடர்களுக்கு எடுத்து கூறியதோடு அதனால்
நீங்கும் நோய்கள் குறித்தும் விளக்கி உள்ளார்.
அகத்தியர் அருளிய
மூலிகைகளை மக்களுக்கு நோய் தீர்க்கும்
மருந்தாக வழங்கி வந்துள்ளனர் அவரது சீடர்கள்.
மருத்துவமணைகள் இல்லாத நாட்களில்
இவர்கள் கொடுத்த
மூலிகையை அப்போது எல்லா நோய்
களையும் தீர்த்துள்ளது. இந்த காசி விஸ்வநாதர்
ஆலயத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான
அகத்திய சீடர்களின் ஜீவசமாதிகள் உள்ளன.
அதோடு அகத்தியர் தவம் செய்த குகையும்
உள்ளது. அகத்திய முனிவர், அத்திரிமுனிவர்,
ஜனகாதி முனிவர் போன்ற முனிவர்கள் தவம்
செய்த குகைகள் உள்ளன. இந்த குகைகள்
அனைத்தும் செடி, கொடிகளில்
மூடப்பட்டு இருந்தாலும், இதன் அருகில்
செல்லம்போது இப்போதும் தெய்வீக மனம்
வீசுவதாக கூறுகின்றனர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மலைமேல்
உள்ள கருமாரி அம்மன் கோவிலுக்கு அருகில்
உள்ள புற்றுக்கு பால் ஊற்ற பவுர்ணமி தோறும்
சென்று வந்த ஒரு பெண்ணை,
அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் தவறான
எண்ணத்துடன் பின் தொடர்ந்து வந்துள்ளார்.
ஒரு நாள் அதே பெண்
பவுர்ணமி அன்று சாமி தரிசனம்
செய்து புற்றுக்கு பால் உற்றி வரும்
போது அந்த வாலிபர்
வழிமடக்கி தகராறு செய்துள்ளார். அவரிடம்
இருந்து விடுபட்டு ராஜநாகத்தை நினைத்து காப்பாற்று என
கூச்சல் போட்டுள்ளார் அந்தப் பெண். பின்னர்,
பின் தொடர்ந்து வந்த வாலிபர் அந்த பெண்ணின்
கண்களில் தெரியவில்லையாம்.
இரண்டு நாட்கள் கழித்து அந்த வாலிபர் நாகம்
கடித்து இறந்து கிடந்ததை அவ்வழியே சென்றவர்கள
பார்த்து கூறியுள்ளனர்
இந்த அதிசயத்தை இன்னும் அப்பகுதி மக்கள்
வியப்போடு கூறுகின்றனர்.
சித்தர்களுக்கு மட்டும் காவல் தெய்வமாக
இருக்கும் ராஜநாகம் நம்பி வருபவர்களுக்கும்
காப்பாற்றும் தெய்வமாக வேலூர் மலையில்
இருந்து வருகிறது.


காவலிபாளையம் கெந்த வங்குருவா்'s photo.

Sunday, May 24, 2015

வீட்டில் சிவபூசை செய்வது இப்படி!!!

வீட்டில் சிவபூசை செய்வது இப்படி!!! - www.v4all.org 
உண்மையான அன்புடன் சில பூக்களைத் தூவி ஐந்தெழுத்தை உச்சரித்தாலே போதும். அதுவே மிகச் சிறந்த சிவபூசை தான்!
ஆலயங்களில் செய்யப்படும் இறைவழிபாட்டில் பதினாறு வகை உபசாரங்கள் முக்கிய இடம்பெறும். அதை “சோடச உபசாரம்” என்பார்கள்....
நம் வீட்டுக்கு, புகழ்பெற்ற ஒருவர் வந்தால் என்னென்ன உபசாரம் எல்லாம் செய்து வரவேற்று விடைகொடுத்து அனுப்புவோமோ, அதையே உலகனைத்துக்கும் தலைவனான இறைவன், கோயிலுக்கு எழுந்தருள்வதாக நினைந்து செய்வதுதான் இந்தப் பதினாறு உபசாரங்களும்!
சோடச உபசாரம் பலவாறு சொல்லப்படினும், பின்வருவன பொதுவானவை.
1. ஆவாகனம் – பூசையை ஏற்றுக்கொள்ள எழுந்தருளுமாறு இறைவனை வேண்டுதல்
2. ஆசனம் – இலிங்க மூர்த்தத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்குமாறு இறைவனை வேண்டுதல்
3. பாத்தியம் – திருவடிகளை நீரால் கழுவுதல்.
4. அர்க்கியம் – நீர் தெளித்தல்
5. ஆசமனம் – அருந்த நீர் கொடுத்தல்
6. மதுவர்க்கம் – பால் பழங்களை இறைவன் முன் படைத்தல்
7. அபிடேகம் –இறைவனை நீராட்டுதல்.
8. வத்திரம் – ஆடை அணிவித்தல்
9. யஞ்ஞோபவீதம் – பூணூல் அணிவித்தல்
10. கந்தம் – வாசனைத்திரவியம் தெளித்தல்
11. புட்பம் – மலர் சாத்துதல்
12.தூபம் – சாம்பிராணி காட்டுதல்
13. தீபம் – தீபாராதனை செய்தல்
14. நைவேத்தியம் – இறைவனுக்கு உணவு படைத்தல்
15. தாம்பூலம் – வெற்றிலை பாக்கு வழங்குதல்
16. நீராஞ்சனம் – கற்பூரம் காட்டுதல்
ஒவ்வொரு உபசாரத்தையும் செய்யும் போது, “எம்பெருமானே, என் பூசைக்கு எழுந்தருளுவாய்”, “இந்த இலிங்கத்தில் அமர்ந்து அருள்பாலிப்பாய்”, “உன் திருவடிகளை நீரால் கழுவுகிறேன், அருள்புரிவாய்” , “உன்மீது நீர் தெளிக்கிறேன், குளிர்ந்தருள்வாய்”, “”அருந்த நீர் தருகிறேன், ஏற்றுக்கொள்வாய்” என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மனதார வேண்டிக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட பொருள் கிடைக்காதபோது, மானசிகமாக அதை வழங்குவதாகக் கற்பனை பண்ணிக்கொள்ளலாம்.
இவ்வாறு பதினாறு உபசாரம் செய்தபின், தெரிந்த தேவாரம், திருமுறை பாடி, மீண்டும் தீபம் காட்டி, உங்கள் வேண்டுதல்களைக் கூறி, இறைவனை மனதார வேண்டி மலர்தூவுங்கள்.
இவ்வாறு பூசைமுடிந்தபின், பூசைக்கு எழுந்தருளியதற்கு நன்றி கூறி “சென்று வருவாய் அப்பா” என்று கடவுளுக்கு விடைகொடுக்கவேண்டும். இதை “அந்தர்த்தானம்” என்போம். அவ்வளவுதான். பூசை ஆயிற்று. படைத்த பிரசாதத்தை எடுத்து, கோயிலில் செய்வதுபோல், உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கும் அயலவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Friday, March 20, 2015

நினைவாற்றலை அதிகரிக்கும் ஆல்பா தியானம் - www.v4all.org

தூங்காமல் தூங்குவது எக்காலம் என்று சொன்னார் பட்டினத்தார். தூக்கத்துக்கும் தூக்கமின்மைக்கும் இடைப்பட்ட நிலைதான் அது. நமது மூளை செயல்படும் தன்மையை ஆல்பா, பீட்டா, டெல்டா, தீட்டா என வகைப்படுத்துகிறார்கள். இதில், ஆல்பா நிலை மிக முக்கியமானது.
அமைதி ததும்பும் இந்த ஆல்பா நிலையில், நமது ஆழ்மனம் விழித்திருக்கும். ஆழ்மனதின் அளப்பரிய ஆற்றல்களையும், ஆல்பா தியானநிலைப் பயிற்சியையும் பிரபல மனோதத்துவ நிபுணரும், ஆல்பா மைன்ட் பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் விஜயலட்சுமி பந்தையன் விளக்குகிறார்.
“ஆல்பா தியான நிலையில், ஆழ்மனதால் சிந்திக்க முடியும். படிப்படியாகப் பயிற்சி கொடுத்து மனதையும் உடலையும் லகுவாக்கி ஆல்பா தியான நிலைக்கு கொண்டுவந்துவிடுவோம். இந்த நிலையை எட்டும்போது மனம் அமைதியாகிவிடும். உடல் லகுவாகிவிடும்.
நாம் என்னென்ன செய்ய நினைக்கிறோமோ அவற்றை எல்லாம் மனதில் காட்சிப்படுத்திப் பார்க்க வேண்டும். நமது விருப்பம்,ஒரு குறிக்கோளை அடைவதாகவோ, தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதாகவோ அல்லது ஒரு விற்பனை இலக்கை எட்டுவதாகவோ இருக்கலாம்.
எல்லோருக்கும் ஆழ்மனம் உண்டு. ஆனால், அது சரிவர செயல்படாமல் இருக்கும். ஆல்பா தியான பயிற்சியால் ஆழ்மனதை செயல்பட வைக்கிறோம். இதனால், மனம் ஒருமுகப்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். மொத்தத்தில் மனம் லயித்துவிடும்.
ஒருசில மாணவர்கள் நன்றாக படித்திருப்பார்கள். ஆனால், தேர்வு எழுதும் அறைக்குள் சென்றதும், படித்தது எல்லாம் மறந்ததுபோல் தோன்றும். இன்னும் சிலர் விஷயம் தெரிந்தவர்களாக இருப்பார்கள். மேடை பயம் காரணமாக, மைக்கை தொட்டவுடன் பேச திணறுவார்கள். போதியப் பயிற்சி கொடுத்தால் போதும் அவர்களின் படைப்பாற்றல் மேலோங்கும். ஆல்பா தியான நிலையை அடுத்து, செல்லொளி தியானம், சக்கரா தியானம், சித்த குண்டலினி என 9 தியான நிலைகள் இருக்கின்றன.
ஆல்பா தியானம் மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்கக் கூடியது. இதன் காரணமாக, படிப்பில் நன்றாக கவனம் செலுத்த முடியும். நினைவாற்றல் அதிகரிக்கும். பாடங்களை ஆழ்ந்து படிக்கலாம். தேர்வின்போது, படித்த பாடங்களை நன்கு நினைவுபடுத்தி எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, மாணவர்களின் நடத்தை மிக நன்றாக இருக்கும். நண்பர்களுக்கு இடையே மனஸ்தாபங்கள் குறையும்.
வயதுக்கோளாறுகளால் தோன்றும் பிரச்சினைகளில் ஒரு தெளிவு பிறக்கும். இந்த வயதில் படிப்புதான் முக்கியம் என்ற நல்ல சிந்தனை மனதில் மேலோங்கும். மனதில் ஈகோ வராது. கோபப்பட மாட்டார்கள். பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் நன்றாக நடந்துகொள்வார்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
அடிப்படை தியான நிலையான ஆல்பா உள்பட மனதின் பல்வேறு நிலைகள் குறித்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட நகரங்களிலும், புதுச்சேரியிலும், டெல்லியிலும் மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம். பயிற்சி விவரங்களை எங்கள் இணையதளத்தில் (www.alphamindpower.net) தெரிந்துகொள்லாம். தொலைபேசி மூலமாகவோ, இ-மெயில் வழியாகவோ முன்பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்கிறார் விஜயலட்சுமி பந்தையன்.
விஜயலட்சுமி பந்தையன்

Tuesday, March 17, 2015

வரும் சனிக்கிழமை சந்திர கிரகணம் வருகிறது.



அன்பர்களே வரும் 4.4.2015 சனிக்கிழமை சந்திர கிரகணம் வருகிறது.
முக்கியமாக கர்பிணிகள், மதியம் இரண்டு மணி முதல் இரவு எட்டு மணி வரை, ரூமை விட்டு வெளியில் வராமல் இருக்கவும். கிரகணக்கதிர்கள் இந்த பெண்களின் மேல் விழக்கூடாது .அப்படி விழுந்தால் குழந்தைக்கு ஆகாது.
இந்த நேரத்தில் பெண்கள் தலை சொரியக்கூடாது, கை கால்கள் நகத்தை கிள்ளக்கூடாது. இது ரொம்ப முக்கியம்.
அப்பா உள்ளவர்களுக்கு தர்ப்பணம் கிடையாது. அப்பா இல்லாதவர்கள் தர்ப்பணம் அவசியம் செய்யவேண்டும்.
உண்மையாண விஷயத்தை கீழே கொடுத்து இருக்கிறேன். முடிந்தவர்கள் கடை பிடிக்கவும். முடியாதவர்கள் தேவை இல்லாமல் கமெண்ட் செய்யாதீர்கள்.
இன்று காலை எட்டு மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். பிறகு இரவு ஏழு மணிக்கு குளித்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும்.
நடுவில் தண்ணீர் கூட குடிக்ககூடாது.
வீட்டில் காலை ஆறு மணிக்கே, உங்கள் வீட்டில் உள்ள சமையல் ரூமில் இருக்கும் உப்பு,சக்கரை பருப்பு போன்றவைகளில் தர்பையை கில்லி அதில் போடவும். தண்ணீர் தொட்டியிலும் போடவும். குடம் எல்லாதலும் போடவும்.
இந்த நேரத்தில் கடவுளை தியானம் செய்தால் உங்கள் பாவங்கள் போய்விடும்
இன்று ஹஸ்த நட்சத்திரத்தில் பிடிக்கிறது. ஆகவே, திருவோணம், ஹஸ்தம்,ரோகினி, சித்திரை நட்சத்திர காரர்கள் சாந்தி செய்து கொள்ளவும்.
கிரகண ஆரம்பம் - மதியம் 3.35
நிமீலனம் -மாலை 5.25
மத்தியமம் - மாலை 5.30
உன்மீலனம் மாலை 5.35
கிரகண முடிவு - இரவு 7.15
கிரகண புண்ணிய காலம் - மாலை 6.20 முதல் இரவு 7.15
இன்று நீங்கள் தானம் செய்தால் மிகவும் புண்ணியம் ஆகும்.
பச்சரிசி, வாழைக்காய், வெத்தலை பாக்கு,வாழைபழம், வேட்டி துண்டு, பணம் உங்களால் முடிந்தது.பாசிப்பருப்பு உருண்டை வெல்லம் - தானம் செய்வது மிகவும் புண்ணியம் ஆகும்.
from - Astrologer Krishnamoorthi

அடியெடுத்து வைக்க ஒரு நொடி!

அடியெடுத்து வைக்க ஒரு நொடி!



ஒரு செயலைச் செய்யாமல் இருப்பதற்குச் சாக்குபோக்கு தேடுபவன் அவற்றைக் கண்டறிந்துவிடுவான். உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு உங்கள் இறந்தகாலத்தை அனுமதிக்காதீர்கள். உயிர்த்திருத்தல் பற்றிப் பேசுங்கள். மரணத்தைப் பற்றிப் பேசாதீர்கள்.
நீங்கள் என்ன சொன்னாலும் மரணம் வந்தே தீரும். நண்பர் களும் எதிரிகளும் இருப்பார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு பேரையும் பிரித்துணர்வது உங்களுடைய பொறுப்பு. எதிரிகள் உங்களைப் பின்னடைவு அடையச் செய்யாமல் அவர்களிடமிருந்து துண்டித்துக்கொள்வதும் உங்களுடைய பொறுப்பே.
நீங்கள் வெளிப்படுத்தும் செயல் மூலம் உங்கள் விதியைத் தேர்வு செய்யும் கடவுள் கொடுத்த மனோ வலிமை உங்களிடம் உள்ளது. நாளை உங்களை உச்சத்தில் பார்க்க இன்று நீங்கள் வெற்றியைத் தேர்ந்தெடுப்பது அவசியம். வெற்றியாளர் போன்றே யோசியுங்கள். நீங்கள் வெற்றியாளர் என்று நம்புங்கள். நீங்கள் வெற்றியாளர் என்று உங்களுக்கு நீங்களே கூறிக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவீர்கள்! நீங்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழும் ஒவ்வொரு நாளும் சாதிப்பதற்கான இன்னொரு நாள்!
புதியதொரு எதிர்காலத்தை உருவாக்குவதில் கால தாமதம் ஒன்றும் ஆகிவிடவில்லை. எனது இறந்த காலத்தின் சுமைகள் அதிகமாகிவிட்டதால் இனியும் என்னைப் பெரிதாக மாற்ற முடியாது என்று ஒரு காலத்தில் யோசித்திருக்கிறேன். அதற்குப் பிறகுதான் இறந்த காலம் என்று ஏன் அதை அழைக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தது. ஏனெனில் அது உங்கள் பின்னால் உள்ளது.
ஒரு முடிவை எடுக்க ஒரு நொடிதான் ஆகிறது. ஆயிரம் மைல்கள் பயணத்தைத் தொடங்க ஒரு அடிதான் முதலில் தேவைப்படுகிறது. இன்று என்பது உங்களின் முதல் நாள். நீங்கள் முதல் அடியைத் தற்போது எடுத்து வைக்கிறீர்கள். அதை முதலில் நிகழ்த்துங்கள்!
வாழ்வின் அடித்தளத்திலிருந்து நான் உயர்ந்துள்ளேன்.
என்னால் முடியும் என்றால் யாராலும் முடியும்.
அமெரிக்கத் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான் வெளியிட்டுள்ள From the HOOD to doing GOOD எனும் நூலிலிருந்து

Wednesday, March 4, 2015

நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்

நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்


உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது...

ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் ,  ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு  நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார்.  அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது... 

அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று..

உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது  ராகு தசை  உங்களுக்கு நடக்கும். 

 விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் - அவருக்கு உரிய தேவதை முருக கடவுள்..... 
மகம் நட்சத்திரம் - அதிபதி - கேது  - தேவதை  : விநாயக பெருமான். ராசி : சிம்மம். ராசி நாதன் - சூரிய பகவான். 

நடக்கும் தசை - ராகு - அதி தேவதை - துர்க்கை அம்மன். 


 ( அதி தேவதைகள் பற்றிய - நமது முந்தைய கட்டுரைகளை refer செய்ய இங்கே கிளிக்கவும் ) 

நட்சத்திர திருத்தலங்கள் - கட்டுரையை வாசிக்க கிளிக் செய்யவும் 

உங்களுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் .... உடனடி தீர்வு கிடைக்க , வாழ் நாள் முழுவதும் , செவ்வாய் கிழமைகளில்  நீங்கள் முருக கடவுளுக்கு பாலாபிசேகம் , பாத யாத்திரை சென்று வர மலை போல் வரும் பிரச்னை கூட தூள் தூளாகும்.....

தினமும் காலை - சூரிய உதயத்திற்கு முன் எழுங்கள். சூரிய பகவானை நீங்கள் வரவேற்க வேண்டும். அவர் உங்களை வரவேற்க கூடாது..  
அன்றாடம் நீங்கள் விநாயகரை வணங்கி வேலையை தொடங்குவது நல்லது.. 
உங்களால் விநாயகர் கருணையை மனதார உணர முடியும்... 

(அஸ்வினி, மகம். மூலம் நட்சத்திரம் இவற்றில் பிறந்தவர்கள் உங்களை அறியாமல் நீங்கள் , விநாயகரை வணங்கினாலும் உங்களுக்கு விரைவில் பலன்கள் கிடைப்பதை உணர்ந்து இருப்பீர்கள்..  )

இப்போது நடக்கும் தசை ராகு தசை. .. ராகு என்ன செய்யும்? ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை . கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.

ராகு அப்படி என்னதான் செய்யும்..? புலன் ஆய்வுக்கு , கம்ப்யூட்டர் , ஆராய்ச்சி, வெகு ஜன தொடர்பு ( ஹோட்டல் reception , LIC Agent )  என்று அனைத்துக்கும் அதிபதி. ... உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பணவரவு இருக்கும்.. நோகாமே நோன்பு எடுக்கலாம். . நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.. பணம் கொழிக்கும்..( நல்லது தானே..!)

அதே நேரத்தில் பெண்களால் சர்வ சாதாரணமாக பிரச்சினைகள் வரும்... நீங்களே ஒதுங்கி இருந்தாலும் .. உங்களையே தேடி வருவார்கள்... உங்களால் 'பலான' விசயங்களில் இருந்து ஒதுங்க முடியாது.. பெண்களிடம் செல்ல வேண்டி வரும்.. அல்லது குறைந்த பட்சம் .. வீடியோ , கம்ப்யூட்டர்  என்று படம் பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்க வேண்டி வரும்...  இப்படி நீங்கள் இருக்கும் போது ... வரும் பெண்களும் உங்களுக்கு பேரழகியாக தெரிய வரும்.. விட முடியுமா...??  வரை முறை தெரியாத அளவுக்கு விளையாட்டு தொடரும்.. பிறகு என்ன... வீட்டில் தெரிய வர.. அதனால் தொல்லைகள் வர... கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை பூதாகரமாகி வழக்கு, கோர்ட், விவாக ரத்து.. ... ஈஸ்வரா...!! 

கேட்ட நேரம் இருக்கும் வரை ... அந்த ஒண்ட வந்த பிடாரி  தான் உங்களுக்கு அவ்வளவு உசத்தியாக தெரியும்... அவளுக்காக நீங்கள் சகலத்தையும் துறக்க தயார் ஆகி விடுவீர்கள்..  உங்களுக்கு அது  ஒரு சொகுசான வாழ்வு என்று தோன்றும்.. ஆனால் மகா கேவலமான வாழ்வு என்று தோன்றாது.. 

இதில் கோட்சார ரீதியாக ராகு ஜென்மத்தில் வந்தாலோ ... இன்னும் நிலைமை அசிங்கமாகும்.. நீங்கள் இருக்கும் ஊரில், அல்லது தெருவில் அல்லது , உங்கள் குடும்ப வட்டாரத்தில் ... நீங்கள் ஏதாவது ஒரு பெண் விஷயத்தில் அசிங்கப்பட்டு , தலை குனிய வேண்டி வரும்... 

இல்லையா... கோடிகளில் புரள வைத்து விட்டு , திடீர் என்று அதல பாதாளத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்.. 


இது பொதுவான பலன். ஆனால் 10 க்கு  9 பேருக்கு இது பொருந்தும். 

இதைப் போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத் துவம் இருக்கிறது..  அவர்கள் அமர்ந்த வீடு, (நட்பு , பகை) நட்சத்திர சாரம், இணைந்து இருக்கும்  கிரகங்கள், பார்வை பெறும் கிரகங்கள் ,  என பல வகைகளில் பலன்கள் கிடைக்கும்......

எந்த ஒரு மனிதனுக்கும், ராகு, கேது தசை நடக்கும் போது , அவரவர் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்கள் ... அட்சர சுத்தமாக கிடைக்கும்..  
 சில குழந்தைகளுக்கு ராகு தசை நடந்தால், அதன் பலன் மொத்தமும் பெற்றோர்களுக்கு நடக்கும்... 
  

 நல்லதும் உண்டு.. கெட்டதும் உண்டு...   ஐயா.. போன ஜென்மத்திலே எப்படி இருந்தேன் னு தெரியலை.. இந்த ஜென்மத்திலே என்ன பண்றது...? நான் தப்பு பண்ணக் கூடாது.. என்ன வழி..? 


இந்த கேள்வி உங்களுக்கு தோணுவதற்கே   நீங்க பண்ணின ஒரு புண்ணியம் தான் காரணமாக இருக்கும்.. 


ராகுவுக்கு  அதி தேவதை துர்க்கை.  ராகுவுக்கு தனியாக கிழமை கிடையாது..  தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.. ராகு காலம் என்று காலண்டரில் போட்டு இருப்பார்கள்...  இந்த ஒன்றரை மணி நேரத்தில் , நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் சென்று விடுங்கள்.  காளியம்மன், மாரியம்மன் என்றும் இருக்கலாம். தினமும் நாள் தவறாமல் செல்ல வேண்டும். அதனால் தான் அருகில் இருக்கும் ஆலயம் என்று சொன்னேன். ஒரு நூறு வருடமாவது பழைய ஆலயமாக இருந்தால் நல்லது. குறைந்த பட்சம் ராகுகாலம் முடியும் கடைசி அரை மணி நேரத்தில் இருங்கள். 

மனதார வழிபடுங்கள்.

நீங்கள் அன்றாடம் வேலைக்கு போக வேண்டி இருந்தால், செல்ல முடியாதே.. என்ன செய்வது? 

திருமணம் ஆகி இருந்தால் உங்கள் மனைவியோ,  மணம் ஆகா விட்டால் உங்கள் சார்பாக உங்கள் தாயோ செல்லலாம். நீங்கள் வேலைக்கு செல்லாத நாட்களில் கண்டிப்பாக நீங்களே சென்று வர வேண்டும். ஞாயிற்று கிழமை சாயங்காலம் 4 .30 இலிருந்து 6 மணி வரை வரும். Miss பண்ணாதீங்க !!  


உங்களால் முடிந்த வரை அபிசேகத்திற்கோ, தினமும் தீபத்திற்கோ , மாலையோ,... இல்லை ...  ஒன்றும் முடியவில்லை என்றாலும் .. வெறுமனே சென்றாவது வாருங்கள்.. அம்மன் பார்வை உங்கள் மேல் தெளிவாகப் படும்படி அமருங்கள்..  அதன் பிறகு உங்களுக்கு அந்த அம்மனே எப்படி வழி காட்டுகிறாள்  என்று பாருங்கள்... சமயத்தில் ராகு தசை நடப்பவர்களிடம் அம்மன் பேசுவதைக் கூட அவர்களால் உணர முடியும்.. இது எப்பேர்ப்பட்ட  அனுபவம்!!.. உங்கள் அத்தனை கோரிக்கைகளும் அற்புதமாக ஈடேறும். 


இதெல்லாம் பண்ணினா என்ன ஆகும்?  இப்போ, நம்ம சத்யம் க்ரூப் சேர்மன் - ராமலிங்க ராஜு இருந்தாரே... அவர் இந்த fraud லெ மாட்டாமே இருந்தா எப்படி இருந்து இருப்பார்?  எத்தனையோ பேருக்கு வழிகாட்டி... ஆதர்ஷ நாயகன்... லட்சக் கணக்கான ஷேர் ஹோல்டர் க்கு கடவுள்.. இப்படி ஆகிடலாம்.. நீங்களும்.. ஆனா நல்லா விதமா... 
    
வித்தை தெரிஞ்சவருக்கு ராகு தசை ... சந்தனம் ... தெரியாதவங்களுக்கு  சாக்கடை தான். 

என்னுடைய  அனுபவத்தில் - அம்மனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஆலயங்களை, இடங்களைப் பற்றி இன்னொரு சமயம் (விரைவில்) எழுதுகிறேன். 

 http://www.trichy.com/travel/samayapuram.gif

இதைப் போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத் துவம் இருக்கிறது..  அவர்கள் அமர்ந்த வீடு, நட்சத்திர சாரம், இணைந்து இருக்கும்  கிரகங்கள், பார்வை பெறும் கிரகங்கள் ,  என பல வகைகளில் பலன்கள் கிடைக்கும்......

இன்னைக்கு நம்ம நாட்டுலே இருக்கிற அத்தனை அரசியல் வாதிக்கும்,  இந்த வித்தை தெரிஞ்ச ஆஸ்தான ஜோதிடர்கள் உண்டு..  அவங்க சொல்ற படி தெளிவா , எல்லா வேலையும் செஞ்சு கிட்டு .. வெளிலே வேஷம் போட்டுக்கிட்டு போய் கிட்டே இருப்பாங்க .... நம்மள மாதிரி ஆளுங்க ... நாத்திகம் பேசிக்கிட்டு , நமக்கு தோணுற மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டு...  நமக்கு முன்னே வாழ்ந்த அத்தனை பேரும், முனிவர்களும் , முட்டாள்னு நெனைச்சுக் கிட்டே ... இருந்திட வேண்டியது தான்.. 



நம்ம நண்பர் ஒருவர் அனுப்பி வைச்சு இருக்கிற மந்திரங்கள் இது. வேலை இன்றி கஷ்டப்படும் அனைவருக்கும் இது ரொம்ப உபயோகமாக இருக்கும்.  
 இன்னொரு மந்திரம், உங்கள் பண வரவுக்கு ...


வேலை  கிடைக்க  உதவும்  மந்திரம்  :  
ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்,வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும்.
வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலைகிடைக்கும்.

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ//


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOBjbGMX1dUFbHoGWNg9D5ngT15XgCa_JtU0LX3bHeW3RLCYGQRfChsJ00oWQsXPRGB1X2T4_TByegWHmCdsmHa1ChSzmMirxjL7ewOkdDQUOy7wG73Ak9NqLaruJtvB8hzU8VimOYedc/s320/Tirupathi+balaji+venkatachalapathy+cx.jpg 
லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா!
ஹிருதயாதி ந்யாஸ! நிக்விமோக!
 

 இந்த மந்திரத்தை சிரத்தையுடன் ஜெபித்து வந்தால் , நல்ல தன விருத்தி உண்டாகும்... கடன் தொல்லைகளில் இருந்து முழு விடுதலை கிடைக்கும். 
====================================
நமக்கு வரும் ஜோதிட ஆலோசனை கேள்விகளில், நிறைய அன்பர்களுக்கு ராகு தசை நடப்பதால் ,  அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் ராகு தசையை உதாரணமாகக் கொண்டு இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்... 

அதைப் போல  - ஜோதிட பாடங்களை , அரிச்சுவடியில் இருந்து ... அனைவருக்கும் பயன்படும் வகையில் தொடர் கட்டுரைகள் எழுதலாமா என்று எண்ணமும் இருக்கிறது. சில கலைகளை , குருவின் உபதேசம் இருந்தால் தான் கற்றுக் கொள்ள முடியும். ஜோதிடமும் அந்த வகையில் ஒன்று தான். நீங்கள் என்ன தான் புத்தகங்களைப் படித்தாலும், பெரிய ஆராச்சி செய்தாலும், பலன் சொல்ல வராது. தவறுதலாய் சொல்வதற்குப் பதில் சொல்லாமலே இருந்து விடுதல் நல்லது.. 


நான் ஒன்றும் மேதை இல்லை. ஆனால், அருணாசலமும், என் குருவின் அருளும்  எனக்கு நலல வகையில் வழி காட்டும் என்று நம்புகிறேன்...  கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கையைப்  பிடித்து பயணிக்க இயலும்.. நமக்கு இருக்கும் வேலைப் பளுவினால் , பாடங்கள் கொஞ்சம் தாமதம் ஆகலாம்.... ஆனால் நிறைய அன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்...

நடைமுறையில் நமக்கு வரும் ஆலோசனை கேள்விகளுக்கு , பதில் அளிக்க தாமதமாகி வருவதால் , உங்களுக்கே கற்று தருவதில் சௌகரியம்  என்று தோன்றுகிறது. அதே நேரம், தனிப்பட்ட முறையில் E -மெயில்  மூலமும் , சேவை தொடரும். மிக அதிக அளவில் கேள்விகள் வருவதால், சற்று தாமதமாகி வருகிறது. அவ்வளவே. வாசகர்கள் சற்று பொறுத்துக் கொள்ளவும்.  
==========================
மேலும் நமது நண்பர் ஒருவர் நமது இந்த இணைய தளத்தில் வரும் கட்டுரைகளைப் படித்து விட்டு, " இணைய தளம் மூலம் - பணம் சம்பாதிப்பது எப்படி ? ஓய்வு நேரங்களில் வருமானம் பார்க்க என்ன வழிகள் ? என்று எழுத சம்மதித்திருக்கிறார். " இது நமது இணைய தளத்தைப் பார்வையிடும் வாசக / வாசகிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். 
=====================
இன்னொரு நண்பர் - இங்கிலீஷ் ஈஸியா எப்படி பேசுறது?  ஆங்கில இலக்கணம்   எல்லாம் கத்துக் கொடுக்க ரெடி னு சொல்லி இருக்கிறார். அவருக்கும் மனமார வாழ்த்துக்கள்.... மக்களுக்கு பயனுள்ள வகையில் நமது தளம் இன்னும் பீடு நடை போடும் என்பதில் மகிழ்ச்சி... 
 ======================
இது போக நமது வழக்கமான பல்சுவை தொடர்களும் அடிக்கடி இடம் பெறும்.  
இதெல்லாம் பண்றதுனாலே எங்களுக்கு என்ன பிரயோஜனம் னு கேட்குறீங்களா..?  

நமக்கு தெரிஞ்சதை நாலு பேருக்கு ஷேர் பண்ணிக்கலாம் தான்.... வேற ஒன்னும் உள்நோக்கம் இல்லை. எனக்கு ஜோதிடம் கத்துக் கொடுத்த குரு என்கிட்டே சொல்றப்போ, "பரிகாரம் னு எதிலேயும் காசு வாங்கிடாதே , அது உனக்கு மகா பாவம்" னு சொல்லி இருக்கிறார்.... இன்னும் கொஞ்சம் மேலே போய், ஜோதிடம் கத்துக் கொடுக்கிறதுக்கே வாங்க வேண்டாம் னு நெனைக்கிறேன்...... 


காசே இல்லாமே ஏன் இப்படி பண்றோம்..? (உங்க கிட்டே காசு வாங்கி நாங்க என்ன பண்றது.. கடவுள் புண்ணியத்துலே ஏதோ, காசு ... சாப்பாட்டுக்கு  குறை இல்லை..) கொஞ்சம் புகழ் கிடைக்கும்.... ஒரு நாலு பேருக்கு புதுசா அறிமுகம் ஆகிக் கிடலாம்... எல்லா ஊர் லேயும் யாரவது ஒருத்தராவது நம்ம வாசகர் இருப்பாங்க.. 

ஹா ஹா.. அப்படி எல்லாம் இல்லை. கொஞ்சம் பெரிய அளவிலே பின்னாலே உபயோகமா இருக்கும் னு நினைக்கிறோம்,  SITE நல்லா பிரபலம் ஆயிட்டா. எல்லா வழிகளும் பின்னாலே சொல்றோம்....  (ofcourse , ஆரம்பிச்ச குறுகிய காலத்தில் , இப்போவே நல்லா பிரபலம் ஆயிடுச்சு.. உலகம் முழுவதிலும் இருந்து மின்னஞ்சலில் வாழ்த்தி வரும் அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் ... நன்றி.. நன்றி... ) 

Saturday, February 28, 2015

வார்த்தைகள்

வார்த்தைகள்


இந்த வருடம் முடிந்து, அடுத்த வருடம் ஆரம்பிக்கவிருக்கிறது. உங்களில் ஒரு சிலரை , இந்த கட்டுரை புரட்டிப் போட்டு - மா மனிதனாக்க விருக்கிறது. பொறுமையுடன் படித்துப் பாருங்கள்.....! வாழ்த்துக்கள்..! 

தியானம்னு சொல்றாங்களே...?  அப்படினா என்ன? மனசுக்குள்ளே மந்திர ஜெபம் பண்ணிக்கிட்டு , கண்ணைமூடி உட்கார்ந்துக்கிட்டு , மனசுன்னு என்னமோ சொல்றாங்களே , அதை உத்துப் பார்க்குறதா? எதோ ஒரு புள்ளில உத்து உத்து பார்க்கணுமா?  சரி, அப்படிப் பண்ணினா என்ன ஆகும்? 

மந்திர ஜெபம் ஒரு வகை . அதையும் தியானத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஒரு சில கோரிக்கைகளை , இறைவனிடம் வைத்து அதற்குரிய மந்திரங்களை ஜெபம் பண்ணி , அதற்கேற்ப மனதை திடப் படுத்துவது மந்திர ஜெபம். 

வெறுமனே ஜெபம் பண்ணினால் காரியம் சாதிக்க முடியுமா? முடியுமா என்ற கேள்வி வந்தபோதே , முயற்சி செய்தால் சாத்தியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பறக்க முடியுமா என்ற கேள்வி எழுந்து பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு - பறக்க முடியும் என்று சாதித்துக் காட்டி இருக்கிறார்களே....... மந்திர ஜெபங்களால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று அவ நம்பிக்கையோடு இல்லாமல் , முழு நம்பிக்கையோடு செயல் படுத்தி அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். 

மகரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம் பற்றி கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? இந்த மந்திர தியானத்தில் மனதைக் குவிக்க ஒரு எளிய சொல் அல்லது மந்திரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த மந்திரம் ஓரிரு வார்த்தைகளில் இருந்தால் நல்லது. காயத்ரி மந்திரம் போல பல வார்த்தைகள் கொண்டு இருந்தால் , அவற்றில் மனம் குவிவது  கடினம்.  ஓம் சிவ சிவ ஓம் மந்திரம் , அல்லது ஓம் போன்று எளிய மந்திரங்கள் இருந்தால் நலம். இந்த மந்திரம் மிக உயர்வானது என்கிற நம்பிக்கை உங்களுக்கு முதலில் வேண்டும்.  

இதற்க்கு அடுத்து இன்னொரு நிலை இருக்கிறது. எந்த வித மந்திர ஜெபமும் இல்லாமல் நிச்சலனமாக இருப்பது.... அந்த பேரமைதியை அனுபவிப்பது. அதைப் பற்றி வாய்ப்பு கிடைத்தால், தனியே ஒரு கட்டுரை எழுதுகிறேன்...  கொஞ்சம் சுர்க்கமாக பார்க்கலாம். 
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் , நாம் எல்லாவற்றையும் வார்த்தைகளாக்கி மனதில் பதிய வைப்போம். ஒரு அழகான பூவைப் பார்க்கிறோம். இது ரோஜா - நல்ல பிங்க் கலரில் இருக்கிறது. கை கொள்ளும் அளவுக்கு இவ்வளவு பெரியதாக இருக்கிறது என்று மனது உடனடியாக அதை வார்த்தைப் படுத்துகிறது. இப்படி எதையாவது , எதை எடுத்தாலும் மனது அதை வார்த்தைகளாக்கும். அந்த வார்த்தைப் படுத்தும் மனதை அடக்க வேண்டும். "ஒன்னும் பேசாதே அமைதியா இரு". ஆரம்பத்தில் இயலவே இயலாத ஒரு காரியமாக இருக்கும். முயற்சி பண்ணுங்கள்.... 
மனைவி, குழந்தை, நண்பர்கள் , மேஜை , நாற்காலி, மரம், செடி, கோடி என்று நாம் நேரில் பார்க்கும் எல்லாவற்றையும் வார்த்தைப் படுத்தாமல் இருக்கப் பழகுங்கள்.... பேரமைதிக்கு அர்த்தம் புரியும். மனது உங்கள் வசப்படும். 

பிலிம் சுருள் இருக்கிறது , அதை ஒரு சீரான வேகத்தில் ஓட வைத்து - அதை சினிமா வாக்குகிறோம். டப்பிங் சேர்த்தால் குரலும் கேட்கிறது. இதைத் தான் நம் மனதும் செய்கிறது. 

நான் சொல்ல வந்த விஷயம் , ஒரு பிலிமுக்கும், அடுத்த பிலிமுக்கும் இடையில் உள்ள அந்த இடைவெளியில் - மனதை செலுத்துங்கள்... அங்கேயே அடக்குங்கள்... அப்பொழுது கிடைக்கும் அமைதி... அட அடா..... அனுபவித்துப் பாருங்கள்....! ஒரு இரண்டு மாத குழந்தை , எவ்வளவோ விஷயங்களைப் பார்க்கிறது... கூர்ந்து கவனிப்பது போல தோன்றும், அடுத்த நொடி வேறு பக்கம் பார்க்கும்.... காட்சிக்கு தட்டுப் பட்ட எதுவும், அதன் உள்மனதில் வார்த்தைகளாக்கப் படாது , தங்காமல் இருந்து விடுகிறது..... குழந்தையின் நிம்மதி பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

வார்த்தைகள் நமக்கு பழகிய காலத்தில் இருந்து, நாம் எவ்வளவோ விஷயங்களைப் போட்டு மனதை வார்த்தைகளால் நிரப்பி வைத்து இருக்கிறோம்... ஜென்ம ஜென்ம ஞாபகங்கள் உட்பட... இந்த ஆழ் நிலைக்கு சென்ற பிறகு, அந்த பரவச உணர்வுக்குப் பிறகு - மனம் உங்களை பல அற்புதங்கள் நிகழ்த்த தயாராக்கும். நிஜம் என்று இல்லை. கனவிலும் இதே நிலைதான். செய்யும் ஒவ்வொரு செய்கையும் வார்த்தையால் நிரப்பி இருக்கிறோம்...

யார் யாரையோ நம்புறோம்.. அம்மா, அப்பா , மனைவி , நண்பர், குழந்தை , ஆபீஸ் மானேஜர் என்று - வேறு எவரையும் விட உங்களுக்கு சகல உதவியும் செய்து உங்களை சர்வ வல்லமை ஆக்குவது - உங்கள் உள் இருக்கும் நீங்கள் தான். உங்கள் மனம் தான். அதை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதனை தட்டிக் கொடுத்து வலிமை ஆக்குங்கள். அதை சோர்வடைய செய்யாதீர்கள் ..........  தன்னை உணர்ந்த பிறகு , தெய்வமும் நம் வசமாகும். மனம் உங்களை அப்படி வழி நடத்தும்.  

நிச்சயமாக போன பிறவியிலும், இந்த முயற்சியை தொடர்ந்து இருந்து இருப்பீர்கள். இதுவரை இந்த எண்ணம் தோன்றாமல் இருந்து இருக்கலாம். அந்த எண்ணத்தை தூண்டுவதற்கு , இந்த கட்டுரை ஒரு சிறிய தூண்டுகோலாக இருந்தால் கூட , எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.முயற்சி பண்ணுவோமா......? 

மனதை பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவாக தெரிந்து கொள்ள ரமணரைப் பற்றிய ஒரு கட்டுரையை இன்று உங்களுக்கு பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். 
மதிப்பிற்குரிய பாலகுமாரன் அவர்கள் ரமண மகரிஷி பற்றி சக்திவிகடனில் எழுதிய கட்டுரை இது. 

ரமணரின் சரித்திரம் - ஆன்மீக தேடல் உள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள் . எதுவுமே முடிவல்ல. இது ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து பயணிப்போம்...!

இனி, பாலா அவர்களின் கட்டுரை :

இறந்து போதல் என்றால் என்ன?

அப்பாவை எப்படி தகனம் பண்ணியிருப்பார்கள், நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா, ஏன் வலிக்காமல் போயிற்று, எது இருந்தால் வலி, எது இழந்தால் மரணம். எது இருந்தால் என்று தன்னைத்தானே உற்றுப் பார்த்தான். எது இருக்கிறது உள்ளே என்று மெல்ல தேடினான்.இறந்து போதல் என்றால் எது வெளியே போகவேண்டும் என்று மறுபடியும் ஆராய்ந்தான். இப்படி உட்கார்ந்து பார்த்தால் தெரியுமா, இறந்து போனால் தானே தெரியும்.'
இறந்து போனது என்றால் நீட்டி படுக்க வேண்டும். அவன் சட்டென்று கால் நீட்டி படுத்துக் கொண்டான். உடம்பை விறைப்பாக்கினான்.

' இப்ப உடம்பு செத்துவிட்டது. இந்த உடம்புக்கு மரணம் வந்துவிட்டது. நான் இறந்து விட்டேன். இப்பொழுது கொண்டு போய் தகனம் செய்ய போகிறார்கள். அண்ணா தான் மறுபடியும் நெருப்பு சட்டி தூக்கிக் கொண்டு போகவேண்டும். ஆடி ஆடி தூக்கிக் கொண்டு போய், சுடுகாட்டில் வைத்து விறகு அடுக்கி, கொளுத்தி விடுவார்கள். இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புபட்டு சாம்பலாகிவிடும்.. ஒன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய்விடும். எது இருப்பதால் நான் இருக்கிறேன், எது இருப்பதால் நான் படுத்து இருக்கிறேன். எது இல்லாது போனால் நான் இறந்து விடுவேன்.' வேங்கடராமன் உற்று ஆழ்ந்து எது இருக்கிறது என்று பார்த்தான்.

வேங்கடராமனின் மூச்சில் மாறுதல் ஏற்பட்டது. மனம் அடங்க, முச்சும் அடங்கும், மூக்கில் இருந்து ஓரடி தூரம் வெளிவருகின்ற காற்று மெல்ல சுருங்கிற்று. மனதில் உள்ளுக்குள் ஆழ்ந்து எது இருக்கிறதோ என்று பார்க்க, மூச்சு விடுவது மூக்கின் எல்லைவரை இருந்தது. இன்னும் ஆழ்ந்து எது இருக்கிறது, எது இழந்தால் மரணம் என்று உற்று பார்க்க மூச்சானது மேல்மூக்கு வரை நின்றது.

' அட இதோ, இந்த இடத்தில்தான், இந்த இடத்தில்தான் ஏதோ இருக்கிறது. அதனுடைய இருப்பால்தான் உடம்பினுடைய எல்லா விஷயங்களும் ஆடுகின்றன.' இன்னும் உற்று பார்க்க, மூச்சானது வெளியே போகாமல், தொண்டைக் குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று. நுரையீரலிலிருந்து தொண்டைக்குழிக்கு வந்தது. தொண்டைக்குழியில் இருந்து நுரையீரலுக்கு போயிற்று . இன்னும் உற்றுப் ஆழ்ந்து பார்க்க வேங்கடராமன் உடம்பு வேகமாக விறைத்தது. உடம்பினுள்ள மற்ற புலன்களுடைய ஆதிக்கங்கள் தானாய் இழந்தன. இரத்த ஓட்டம் வேறு மாதிரியான கதிக்கு போயிற்று. இறந்த போது உடம்பு விறைக்குமே, அந்த விறைப்புத்தன்மை உடம்பில் சட்டென்று ஏற்பட்டது.

அவன் அந்நியமாய் நின்று வேடிக்கை பார்த்தான். மூச்சானது இப்பொழுது மெல்ல நுரையீரலில் இருந்து சிறிது தூரம் வெளிப்பட்டு மறுபடியும் நுரையீரலுக்கு போயிற்று. மூக்கு அருகே, தொண்டை அருகே வராது, மூச்சு குழாய் அருகே கொஞ்சம் தூரம் போய்விட்டு மறுபடியும் பின் திரும்பியது. மூச்சு இருந்தது. ஆனால் முழுவதுமாக இல்லாது, ஒரு காளை கொம்பு போல அதே அளவோடு சிறிது வளைவோடு மூச்சு எகிறி வெளியே போய் மறுபடியும் நுரையீரலுக்கு வந்தது.

மனம் அடங்க, மூச்சும் அடங்கும். மூச்சு அடங்க, மனமும் அடங்கும். இரண்டு காளை கொம்புகளாய் மூச்சு அசைந்து கொண்டிருந்த பொழுது, சட்டென்று உள்ளுக்குள்ளே ஒரு பேரொளி தோன்றியது. தாங்க முடியாத அதிர்ச்சி வந்தது. இரண்டு மூச்சுக்கு நடுவேயும், இரண்டு காளைக் கொம்புகளுக்கு நடுவேயும், ஏதோ ஒன்று பிரகாசமாக ஆடியும், ஆடாமலும், அசைந்தும், அசையாமலும் மிக பொலிவோடு நின்று கொண்டு இருந்தது. எண்ண ஓட்டங்கள் சில்லென்று நின்றன. அது, அந்த பேரொளி , எண்ணத்தை விழுங்கியது. எண்ணம் விழுங்கப்பட, 'நான்' என்ற அகந்தையும் உள்ளே விழுங்கப்பட்டது.

' நான்' என்கிற எண்ணம் காணாமற் போக , பேரொளியே தானாகி வேங்கடராமன் கிடந்தான். சகல உயிர்களையும் விழுங்கி நிற்பது என்பது தெரிந்தது. இதுவே நிரந்தரம். இதுவே முழுமை. இதுவே இங்கு இருப்பு. இதுவே இங்கு எல்லாமும். இதுவே முதன்மை, இதுவே சுதந்திரம், இதுவே பரமானந்தம், இதுவே பூமி, இதுவே பிரபஞ்சம், இதுவே அன்பு, இதுவே கருணை, இதுவே அறிவு. இதுவே ஆரோக்கியம். அனைத்து இடங்களிலும் நீக்கமற நிற்கின்ற அற்புதம் . இதுவே எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது.

மூடிய கண்களில் பெரிய வெளிச்சம், மூடாத காதுகளில் ரீங்காரம், உடம்பு முழுவதும் புல்லரிக்க வைக்கும் தகதகப்பு, புத்தியில் ஒரு திகைப்பு, உள்ளங்காலில் ஒரு சுகவேதனை, ஆசனவாய் இழுத்து சுருங்கி கொண்டு கழுத்து வரை ஒரு சக்தியை தள்ளி அனுப்புகிறது. முதுகு தண்டில் ஒரு குடையல், நெஞ்சு துடிப்பு நிதானம், இருதயத்தில் அழுத்திய கனம், தொண்டையில் ஒரு சுழல், நெற்றியில் ஒரு குறு குறுப்பு, உச்சி மண்டையில் ஒரு அக்னி, ஆஹா ஆஹா எல்லா இடமும் நீக்கமற நிறைந்திருக்கிறதே. அதுவே அதுவே, வேங்கடராமனின் மனம் மெல்ல விழித்து கொண்டு அலறியது.

திரும்பி எழுந்திருக்க அரைமணி நேரம் ஆயிற்று. வேங்கடராமன் எழுந்து சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். எதிரே இருந்த சுவர் பார்த்து வெறுமே அழுதான். பிறகு காரணமின்றி சிரித்தான். மீண்டும் அழுதான். எழுந்து நின்று சுவர் மூலையில் சாய்ந்து கொண்டான்.

தள்ளாடி வாசல் நோக்கி நகர்ந்தான். வேகமாக தாவி ஏறும் மாடிப்படி அன்று பார்க்க பயமாக இருந்தது. உருண்டு விழுந்து விடுவோமோ என்று தோன்றியது.

' என்ன நடந்தது எனக்கு, என்ன நடந்தது எனக்கு' ஒவ்வொரு படியாய் மெல்ல இறங்கி வந்தான்.

' உள்ளே இருப்பது நான். அதுதான் நான்' ஒருபடி இறங்கினான்.

' இந்த உடம்பு நான் அல்ல, இந்த புத்தி நானல்ல, என் சக்தி நானல்ல, என் மனம் நானல்ல' ஒவ்வொரு படி இறங்கும் போதும் அவனுக்குள் தெள்ளத்தெளிவாய் விஷயம் புரிந்தது.

'உள்ளே பேரொளியாய், சுடராய் இருந்து இருக்கிற அதுவே நான். அதுவே எல்லாருள்ளும். எனக்குள் இருப்பதே எல்லா இடத்திலும் இருக்கிறது. நான் தான் அது, நான் தான் சித்தி, நான் தான் சித்தப்பா, நான் தான் அண்ணா, நான் தான் தெரு நாய், நான் தான் வண்டு, நான் தான் பசுமாடு, நான் தான் மாடப்புறா, நான் தான் எல்லாமும்.

ஒருமை எப்படி பன்மையாகும். இது மிகப் பெரிய தவறு. 'நான்' என்பது எல்லாவிதமாகவும் விளங்கியிருக்கிறபோது, எல்லாமுமாய் பிறந்து இருக்கிற போது, என்னிலும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம். என்ன வேறுபாடு. ஒருமை எப்படி பன்மையாகும்' பத்தாவது படியில் இறங்கி நின்றான். மாடிப்படி திரும்பினான். சிரித்தான்.

' இதை யாரிடம் போய் சொல்வது, இப்படி நடந்தால் என்ன அர்த்தம் என்று விளக்கம் கேட்பது, நான் சரியாக புரிந்து கொண்டு இருக்கிறேனா, எனக்கு ஏதோ நடந்தது, அது சரியாக நிகழ்ந்ததா, தூக்கமா, பிரமையா அல்லது உள்ளுக்குள் இருப்பது தான் வெளிப்பட்டதா'

அவன் இறங்கி நடந்து கோயிலுக்குள் போனான். மதுரை சுந்தரரேஸ்வரரை பார்த்து கைகூப்பினான். அந்த கைகூப்பலில் நன்றி இருந்தது, நெகிழ்வு இருந்தது, சந்தோஷம் இருந்தது, அமைதி இருந்தது, அன்பு இருந்தது, ஒரு ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடிற்று. எல்லாம் கரைந்து மனம் முழுவதும் ஒன்றாகி அவன் மறுபடியும் சுவாமியை நமஸ்கரித்தான். மறுபடியும் போய் அவ்விதமே ஆழ்ந்து உட்கார்ந்து கொள்ள வேண்டும் அல்லது படுத்து அந்த அனுபவத்தை மறுபடியும் அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. மீண்டும் நீங்க வரணும் என்று மதுரை சுந்தரரேஸ்வரரை கைகூப்பி இறைஞ்சினான்.

ஊர் முழுவதும் சுற்றி விட்டு வீடு திரும்பும் போது ஒரு காலியான பாத்திரம் போல வேங்கடராமன் நடந்தான். அந்த பாத்திரத்தை நிரம்ப இறையருள் காத்திருந்தது. தன்னை சுத்தம் செய்து கொள்வது என்பது எல்லோருக்கும் நடப்பது இல்லை, வெகு சிலருக்கே நடக்கிறது. அப்படி நடந்தவர்களுக்குத்தான் ஞானியர் என்றும், மகான் என்றும் பெயர்.

வேங்கடராமன் என்கிற அந்த பதினாறு வயது இளைஞன் பிற்பாடு 
ஸ்ரீ ரமண மகரிஷி என்று அழைக்கப்பட்டார். பகவான் என்று பலர் அவரை வணங்கினார்கள். வேங்கடராமன் பிறந்த ஊர் திருச்சுழி.. இராமனாதபுர சமஸ்தானத்திற்கு அடங்கிய சிறிய ஊர், சுற்றிலும் பொட்டல் காடு. மானம் பார்த்த பூமி. ஆனால் அங்கு அழகான சிவன் கோயில் இருந்தது. உலகில் பிரளயம் ஏற்பட்டபோது சிவன் சூலத்தால் ஒரு பள்ளம் ஏற்படுத்த பிரளயம் அழித்துக்கொண்டு அப்பள்ளத்தில் மறைந்தது. பிரளயம் அழிந்து மறைந்ததால் அது திருச்சுழி.


வெகு காலத்திற்கு பிறகு அந்த சுழியிலிருந்து ஒரு பிரளயம் உண்டாயிற்று. பொங்கி எழுந்து உலகம் எல்லாம் நனைத்தது.