Friday, October 31, 2014

ஜாகுவார் காரை ஊர்வலமாக இழுத்து சென்ற கழுதைகள்!

ஜாகுவார் காரை ஊர்வலமாக இழுத்து சென்ற கழுதைகள்!

கார்களில் ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ ஆகியவை எல்லாம் இப்போது ஓல்டு மாடல் ஃபேஷன். காஸ்ட்லி கார்களில் இப்போது ஜாகுவாருக்குத்தான் செம மவுசு!
‘என் அடுத்த டார்கெட் ஜாகுவார்தான்!’ என்று சின்னச் சின்னத் தொழிலதிபர்களின் பேட்டியில்கூட நிச்சயம் ஜாகுவாரின் பெயர் அடிபடும். ஆனால், குஜராத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் பண்ணிய ரவுசு நடவடிக்கையால், ஜாகுவாரின் மவுசுக்கு இப்போது செம அடி!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராகுல் தக்கார், வெள்ளை நிற ஜாகுவார் XF காரை வாங்கினார். கிட்டத்தட்ட 70 லட்ச ரூபாய் விலை கொண்ட இந்த காரில், அதிகபட்சமாக மணிக்கு 250 கி.மீ வேகம் வரை பயணிக்கலாம்.

ஆனால், ராகுலுக்கு கார் வாங்கிய சில நாட்களிலேயே பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன. ‘‘ஹெட் லைட் எரியவில்லை; பம்பர் ஆடுகிறது; இன்ஜினில் சத்தம் வருகிறது!’’ என்று ஏகப்பட்ட பிரச்னைகளுடன் ஜாகுவார் சர்வீஸ் சென்டரை அணுகினார் ராகுல் தக்கார். ஆனால், பிரச்னைகள் எதுவும் சரி செய்யப்படாமல், சர்வீஸ் சென்டரில் அப்படியே திருப்பித் தந்ததாக உணர்ந்த தக்கார், ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்தார்.
தனது ஜாகுவார் காரின் மேல் வைக்கோல்களை அடுக்கி, கழுதைகளை காரில் கட்டி, பொதி இழுத்துச் செல்வதுபோலசர்வீஸ் சென்டருக்கு இழுத்துச் சென்றார். அதுமட்டுமில்லாமல், காரில், ‘இது ஜாகுவாரா, கழுதையா? ஜாகுவாருக்கு இந்தக் கழுதைகளே மேல்!’ என்கிற ரீதியில் அடங்கிய வாசகங்களை எழுதிவைத்து, தெருத் தெருவாக ஊர்வலமாகச் சென்றார்.
‘‘நாங்கள் உலக அளவில் சிறந்த சேவையை அளித்து வருகிறோம். விரைவில் உங்கள் பிரச்னையைச் சரி செய்து தருகிறோம்!’’ என்று ஜாகுவார் டீலரின் உயரதிகாரி வாக்குக் கொடுத்த பிறகே, அங்கிருந்து திரும்பியிருக்கிறார் ராகுல் தக்கார்.

பிரச்னை தீர்ந்ததா என்பது, ராகுலின் அடுத்த நடவடிக்கையின்போதுதான் தெரியும்!

urs 

முதுகு வலியிலிருந்து விடுபட

முதுகு வலியிலிருந்து விடுபட


முதுகு வலியிலிருந்து விடுபட

தலைவலி, முதுகுவலி இரண்டுமே நம்மை பாடாய்படுத்தும் நோய்களில் முக்கியமானவை. நம்மை அறியாமலேயே இயல்பு நிலையில் இருந்து மாறுபட்ட சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
மருந்து மாத்திரைகள் உடனடித் தீர்வு கொடுக்குமா? இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன? தொடர் மருத்துவ சிகிச்சை தவிர்க்க முடியாததா? இப்படி மனதுக்குள் எழும் கேள்விகளால் நொந்து போவோம்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 20 சதவீதம் பேர் தொடர் முதுகுவலியால் அவதிப்படுவதாக தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. வல்லுனர்களின் அறிவுரைகள் அடங்கிய இந்த அறிக்கையில், முதுகுவலியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள் சிலவும் கூறப்பட்டுள்ளன. முயன்றால் முதுகுவலியை விரட்டி விடலாம்.
ஆய்வறிக்கை தரும் அறிவுறுத்தல்கள் வருமாறு: முதலில் சரியான முறையில் உட்காருவது, படுப்பது போன்ற செய்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். வீடு, அலுவலகம், வெளியிடங்களில் நிமிர்ந்து உட்கார வேண்டியது மிக முக்கியம். தொடர்ந்து ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்வதை தவிர்த்து சிறிய இடைவெளியில் வாக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
அலுவலகத்தில் மேஜைக்கு ஏற்றவாறு நாற்காலியின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். களைப்பாக இருக்கும் நேரத்தில் தலையை மேஜை மீது சாய்த்து ஓய்வெடுப்பது முதுகெலும்பு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இத்தகைய நிலையில் ஓய்வு தவிர்க்கப்பட வேண்டும்.
சுழல் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்கள், சுழன்று வேலை செய்வதை தவிர்த்து எழுந்து சென்று சிறு சிறு வேலைகளை செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமாக முன்புறம் அல்லது பின்புறமாக சாய்வது கூடாது.
கண்கள் பாதிக்காத தூரத்தில் புத்தகத்தை வைத்து படிப்பது, எழுதுவது, தட்டச்சு செய்வது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும் முன்னோக்கி குனிந்து செய்வதை தவிர்த்து முதுகுத் தண்டுவடம் தன்னிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வது அவசியம்.
உடல் எடை சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் முதுகுவலிக்கு எளிய தீர்வு. மணிக்கொருமுறை சில நிமிட நடைபயிற்சி முதுகுத் தண்டுவடத்துக்கு பாதுகாப்பு அளிக்கும்.
மேலும் முதுகுவலி ஏற்பட்ட உடன் தகுந்த மருத்துவ அறிவுரையும் சிகிச்சையும் எடுத்துக் கொள்வதன் மூலம் அதிக பாதிப்பில் இருந்து விடுபடலாம். சத்தான உணவு, உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சை மற்றும் அறிவுரைகளை பின்பற்றுவதன் மூலம் இத்தகைய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

உழைப்பால் வரும் தன்னம்பிக்கை


டா க்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய FORGE YOUR FUTURE ஆங்கில நூலின் பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. கலாமிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள்தான் இந்த நூல். வெளியீடு: ராஜ்பால் அண்ட் சன்ஸ். தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் வெளியிடுகிறது. மொழியாக்கம் மு. சிவலிங்கம். இவர் கலாமின் அக்கினிச் சிறகுகள் நூலை மொழியாக்கம் செய்தவர்.
“உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள், உங்களது சுய ஆற்றல்களில் நியாயமான நம்பிக்கை வைக்காமல் உங்களால் வெற்றிபெறவோ, மகிழ்ச்சியை அனுபவிக்கவோ முடியாது” என நீங்கள் பேசியதைக் கேட்டேன். என் மீது எப்படி நான் நம்பிக்கை கொள்வேன்? குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தத் திறமைகளும் என்னிடம் இல்லை. நான் குழப்பத்தில் இருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், நீங்கள் சொல்வது எனக்குப் பொருந்தாது என நினைக்கிறேன். தயவுசெய்து, எனக்கு வழிகாட்டுங்கள்.
நண்பரே, உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
வாழ்க்கையின் எந்த ஒரு களத்திலும், தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் எடுத்ததற்கெல்லாம் மன்னிப்புக் கோரியவாறும் ஒருவர் முன்வைக்கும் திட்டத்தை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். இதற்கு மாறாக, தெளிவாகப் பேசும் திறனுடன் தலை நிமிர்ந்து, கேள்விகளுக்குத் திட்டவட்டமாகப் பதில் அளித்து, தனக்குத் தெரியாத எதையும் உடனடியாக ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பவர் மற்றவரின் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறார்.
வழிநடத்தும் நம்பிக்கை
தன்னம்பிக்கை கொண்டுள்ளோர் மற்றவர்களிடமும் அவர்கள் தங்கள் ரசிகர்களாக இருந்தாலும், சகாக்கள் அல்லது எஜமானர்கள், வாடிக்கையாளர்கள் அல்லது தங்கள் நண்பர்களாக இருந்தாலும் அனைவரிடமும் நம்பிக்கையைத் தூண்டிவிடுகின்றனர். மற்றவர்களின் நம்பிக்கையைப் பெறுவதை வெற்றியடைவதற்கான ஒரு முக்கிய வழிமுறையாகத் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் வகுத்துக் கொண்டுள்ளனர்.
தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்ள முடியும், வளர்த்துக்கொள்ள முடியும் என்பது நல்ல விஷயம். உங்களது சொந்தத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதிலோ உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலோ நீங்கள் ஈடுபடும்போது, அந்த முனைப்பு நல்ல பலன் தரும்.
சுய ஆற்றல், சுய உழைப்பு ஆகியவைதான் தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்வதற்கான இரண்டு முக்கிய அம்சங்கள். திறன்களில் நாம் நிபுணத்துவம் பெற்று நமக்கு முக்கியமாக உள்ள இந்தத் திறன் தொடர்பான இலக்குகளை அடைவதில் நாம் வெற்றி பெறும்போது, சுய ஆற்றலை நாம் உணர்கிறோம். ஒரு குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெறுவதற்காக நாம் கடுமையாகப் பாடுபட்டால், நம்மால் வெற்றி பெற முடியும் என்ற அறிதலில் நம்பிக்கை பிறக்கிறது. தோல்விகள் குறுக்கிடும்போது துவண்டுவிடாமல், சிக்கலான சவால்களை எதிர்கொண்டு வெற்றி நடை போடுவதில் இப்படிப்பட்ட நம்பிக்கைதான் நம்மை வழிநடத்துகிறது.
சுயமதிப்பு என்றால்..
சுய மதிப்பு குறித்த சிந்தனையுடன் இந்த நம்பிக்கை ஒன்றிணைந்து கொள்கிறது. நமது வாழ்க்கை நிகழ்வுகளை நம்மால் சமாளிக்க முடியும், மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு நமக்கு உரிமை உள்ளது என்ற அறிதல்தான் பொதுவாகச் சுய மதிப்பு எனக் கருதப்படுகிறது. நற்பண்புகளுடன் நாம் நடந்துகொள்கிறோம், நாம் மேற்கொள்ளும் செயல்களுக்கான திறன்படைத்தவர்களாக இருக்கிறோம், நாம் முழு மனதுடன் செயல்படும்போது, நம்மால் போட்டியில் வெல்ல முடியும் என்ற அறிதலிலிருந்தும் சுய மதிப்பு தோன்றுகிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நமக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்ற உணர்வும் நமது சுய மதிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.
1957-ம் ஆண்டு. சென்னை தொழில்நுட்பப் பயிலகத்தில் (Madras Institute of Technology) நான், இறுதியாண்டு பயின்ற நேரம். ஒப்படைக்கப்பட்ட வேலையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றுவதற்கான அவசர உணர்வை எப்படி உருவாக்கிக்கொள்வது என்ற மிகவும் மதிப்புவாய்ந்த பாடத்தை நான் அப்போது கற்றுக்கொண்டேன். ஒரு திட்டத்துக்காக எனது தலைமையில் ஆறு உறுப்பினர் அணியை எனது ஆசான் பேராசிரியர் நிவாசன் அமைத்திருந்தார். தாழ்வாகப் பறந்து தாக்கும் போர் விமானத்தின் ஆரம்பக் கட்ட வடிவமைப்பை உருவாக்கும் பொறுப்பு எங்கள் அணியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. காற்று இயக்கம் மற்றும் கட்டமைப்பு வடிவத்தை உருவாக்குவது எனது பொறுப்பு.
நீண்ட பட்டியல்
எங்கள் அணியின் மற்ற ஐந்து உறுப்பினர்களும் விமானத்தின் உந்துவிசை, கட்டுப்பாடு, வழிகாட்டுதல், ஏவியானிக்ஸ், இன்ஸ்ட்ருமன்டேஷன் ஆகியவற்றுக்கான வடிவமைப்பை உருவாக்கும் பணியை ஏற்றிருந்தார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்த பேராசிரியர் நிவாசன், திட்ட முன்னேற்றம் குறித்து அதிருப்தி அடைந்தார். மிகுந்த ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினார். பல்வேறு வடிவமைப்பாளர்களிடமிருந்து தேவையான தகவல்களை ஒன்றுதிரட்டுவதில் எதிர்கொண்ட சிக்கல்களை நான் நீண்ட பட்டியலிட்டதை எல்லாம் அவர் காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. எனது ஐந்து சகாக்களிடமிருந்தும் உள்ளீடுகளை நான் பெற வேண்டியிருந்தது. அவை இல்லாமல், வடிவமைப்புப் பணியைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில், நான் மேலும் ஒரு மாத அவகாசம் கேட்டேன். பேராசிரியர் நிவாசனோ “இங்கே பார் இளைஞனே, இது வெள்ளிக் கிழமை பிற்பகல் நேரம். கான்ஃபிகரேஷன் வரைபடத்தை (விமானத்தின் அனைத்து அம்சங்களையும் விவரித்துக்காட்டும் வரைபடம்) என்னிடம் காட்டுவதற்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கிறேன். அது எனக்குத் திருப்தியாக இருந்தால், கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் அளிப்பேன். திருப்தியாக இல்லாவிட்டால், உன்னுடைய உதவித்தொகை ரத்து செய்யப்படும்” என்று சொல்லிவிட்டார்.
மன அழுத்தம்
என் வாழ்க்கையின் பேரதிர்ச்சி என்னை இடியாகத் தாக்கியது. எனது உயிரோட்டமே அந்த உதவித் தொகைதான். அது நிறுத்தப்பட்டுவிட்டால், விடுதியில் என் உணவுக்கான பணத்தைக்கூட என்னால் கொடுக்க முடியாமல் போய்விடும். மூன்று நாள் கெடுவுக்குள் அந்த வேலையை முடிப்பதைத் தவிர வேறு எந்த வழியுமே இல்லை. நானும் எனது அணி உறுப்பினர்களும் எங்களால் முடிந்த அளவுக்குத் தீவிர முனைப்புடன் செயல்படுவது என முடிவு செய்தோம். 24 மணி நேரமும் பாடுபட்டோம். இரவு முழுவதும் வரைபலகையிலிருந்து எங்கள் தலைகளை நிமிர்த்தவே இல்லை. உணவையும் உறக்கத்தையும் துறந்தோம். சனிக்கிழமை அன்று ஒரு மணி நேரம் மட்டுமே நான் ஓய்வெடுத்துக்கொண்டேன்.
ஞாயிறு காலை எனது வேலையில் நான் மூழ்கியிருந்தபோது, ஆய்வுக் கூடத்தில் வேறு யாரோ இருப்பதை உணர்ந்தேன். அவர் வேறு யாரும் இல்லை, பேராசிரியர் நிவாசன் தான். அமைதியாக அவர் என்னுடைய முன்னேற்றத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனது வேலையைப் பார்த்த பிறகு, பாசத்துடன் என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார். “ஒரு நெருக்கடியான கெடுவுக்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று சொல்லி உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கினேன் என்பது எனக்குத் தெரியும், ஆனால், இந்தத் திட்டத்தை உங்களை முடிக்க வைப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டார்.
மேலும் ஒரு மாதம் இருட்டில் நாங்கள் துழாவிக் கொண்டிருப்பதற்கு இடம் தராமல், அடுத்த மூன்று நாட்களுக்குள் முடிக்க வேண்டும் எனப் பேராசிரியர் நிவாசன் தெள்ளத் தெளிவாகக் கெடு விதித்தார். இந்தக் காலக்கெடு என்ற நிர்ப்பந்தம்தான், கடந்த சில மாதங்களாக எங்களுக்குப் போக்குக் காட்டி வெற்றியை நோக்கி எங்களை விரைவாகப் பயணிக்க வைத்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய தொடர்கட்டங்களில், நான் பொறுப்பேற்றிருந்த பணியில் அடிப்படைத் தகுதியை மேம்படுத்திக்கொண்டேன். அணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான மென் திறன்களையும் வளர்த்துக்கொண்டேன்.
நான்கு படிநிலைகள்
இந்த அனுபவம் தரும் செய்தி என்ன? பின்வரும் நான்கு படிநிலைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்தச் செய்தி. முதலாவது, உங்களுடைய இலக்கை வரையறுத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது, அந்த இலக்கை எட்டுவதற்குக் களம் இறங்குங்கள். மூன்றாவது, இலக்கை நோக்கி விரைந்து முன்னேறுங்கள். நான்காவது, உழைப்பு; உழைப்பு; உழைப்பு.
உங்களுடைய தன்னம்பிக்கையை மேம்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான செயலாக அமையக்கூடியது, இலக்கை நிர்ணயித்துக்கொள்வதுதான். உங்களை மிகவும் ஈர்க்கும் ஒரு துறையில் உங்களுக்கான இலக்கை முடிவு செய்துகொண்டு, அந்த இலக்கை அடைவதற்காகக் கடுமையாகப் பாடுபடுங்கள். இது, ஆயுட்காலம் முழுவதும் நீங்கள் வெற்றிகளைக் குவிப்பதற்கு உந்துசக்தியாக அமையும். மற்றவர்களுடன் இணைந்து வெற்றிகரமாகச் செயல்படுவதற்கான நம்பிக்கையையும்கூட நீங்கள் பெறுவீர்கள்.

urs

Thursday, October 30, 2014

தாண்டிச்செல் தடைகளை..!

தாண்டிச்செல் தடைகளை..!
ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான். அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான். அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது. குழப்பத்துடன் சீடன், ""ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!'' என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான்.

கண் விழித்த குரு சீடனைக் கண்டார்.
""சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!'' என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார். சீடனுக்கு மனம் கேட்கவில்லை. குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான்.
ஆனால், அந்த பூச்சி பறக்க முடியாமல் தரையில் விழுந்தது.
கண் விழித்த குரு சீடனை நோக்கி, ""சொல்லியும் கேட்கவில்லையே! அதன் சிறகை சேதப்படுத்தி விட்டாயே! பட்டாம்பூச்சி பறக்க வேண்டுமானால், அது தானாகவே கூட்டை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும்'' என்று கடிந்து கொண்டார்.
பட்டாம்பூச்சி மட்டுமல்ல! மனிதனுக்கும் இது பொருந்தும். வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டங்களுக்காக பிறரது உதவியை நாடக்கூடாது. அவனாகவே சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும்.
விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்.


Top 10 Lessons to Learn from Failure

Top 10 Lessons to Learn from Failure


“When you reach an obstacle, turn it into an opportunity. You have the choice. You can overcome and be a winner, or you can allow it to overcome you and be a loser. The choice is yours and yours alone. Refuse to throw in the towel. Go that extra mile that failures refuse to travel. It is far better to be exhausted from success than to be rested from failure.” – Mary Kay Ash
Failure has several assorted interpretations that can be taken as a precious learning experience, source of inspiration and an opportunity to start intelligently. It can be perceived as a worthless obstacle and insurmountable barrier to the way of destination – it is defined according to the interpreter’s matrix of mind. Failures might result into temporary defeats and disappointments but resting on it will instigate ignorance about your dispositions and summon everlasting regrets upon realization in the coming phases of life. Don’t be afraid to fall, it begets courage while taking risks and initiates to come out from your elongated comfort zone to collect virtue, benevolence, wisdom, generosity and honesty, laying on the rough surface of failures.
Patience
You steal a handful of patience, perseverance, and decisiveness from failures.
While enduring and overcoming the process of failures, you develop a rational outlook with a courageous soul that eventually leads you to success. Patience is your focused energy and silent function that accelerates the process of your success.
Note: Don’t extend your patience for prolonged period of time that you become a coward. Don’t justify it as the virtue of waiting; it will make you idle and lazy. Instead, use it as your determination that processes your energy silently, steadily and positively.
Humility

Photo: Matthew Quick
Read about any greatest personality, you will come to know that they all expressed humility. Their principles of living greatly and bravely lie hidden in their ability to face difficulties with humility and accept the truth without being over smart. The course of failures replaces your fool-self, that blindly shouts ‘I’m so amazing’, by humility which silently makes you smart and strong to go the extra mile. If it fails to do so, then you live insecure about your inadequacies and humility has no relationship with insecurities or inadequacies.
So it is your failure that teaches you to embrace humility to feel tranquility of heart.
Pursue your passion

technorati.com
Whoever you are – a student, a businessman, a musician, an athlete – if you are not a man of your passion, you simply are a man of buried force and possibility. Consistent failures don’t always mean you have to be patient, or success will arrive to you one day, it can also be a hint that you are not going for your passion. Recognize it first, then, it does not matter how much struggle you are to undergo or how many times you fail because at the end of the day, you will be the winner.
Greatness lies in pursuing your own dreams, understanding your own plan and walking on your own path; and not by chasing someone else’s dreams or footsteps.
“Without passion man is a mere latent force and possibility, like the flint which awaits the shock of the iron before it can give forth its spark.” Henri Frederic Amiel
Necessity of a proper planning
Time is the most accessible and common thing to be wasted. Failure poses a question ‘Do you have a perfect planning?’ Through prototyping or architecting and researching your plan, you are actually visualizing and experiencing the way to reaching your destination. Planning and speed together breed the momentum, inspire to stay focused, fight the difficulties, embrace failures, endure the pain to win. It is failure that assists you in figuring out the well-planned and thought out vision.
“Our goals can only be reached through a vehicle of a plan, in which we must fervently believe, and upon which we must vigorously act. There is no other route to success.” – Stephen A. Brennan
Faith

motleynews.net
If you are truly familiar with the virtues of failure, then you realize that it does not take your guts and spirit out of your soul; it rather puts strong faith and perseverance in your devotion for passion. Faith, as a result of failures, strengthens your potential, prepares you to go beyond your defined boundary, whispers you for one more try when ‘Give Up’ stands in front of you demanding your courage, lighting up your true knowledge within the heart to lead you to the achievement.
“When you are on the edge of ‘Darkness’ and ‘Despair’ is about to knock you down, don’t give up, your faith will raise you up as the brightest hope to fly you to ocean of possibilities.” Don’t believe only in the facts, lengthen it by having faith in invisible potential in you.
Retain your success
Success is not permanent; it is a consistent process that has to be continued. Failures teach you not to rest on your success to fall again. Keep moving and looking for the process to ensure your success lasts longer. Anyone can be successful for a variety of reasons- for sheer luck, by hard-work, persistence or replicating success of successful persons- but retaining it is the greatest challenge. Failure will always be there to remind you to rest on the process of persistence itself, not on the pause of success. So the lesson learnt is ‘success is fragile and fallible and your greatness is in retaining success and not in one time success’.
Be Creative

Photo: AlicePopkorn
Failure makes you innovative. It cultivates the habit of experimenting, failing, getting up and starting once again with fresh idea and clear vision. It lets you play with various imaginary thoughts and come out with the most viable idea and extend the boundaries of possibilities from well-established facts and together they make you creative.
A series of experiments might go in vain or appear of no significance; nevertheless, don’t ever stop experimenting because that’s how you discover your path, invent things and become creative. The greatest scientist ever Thomas Alva Edison failed thousands of time but he never stopped experimenting.
Be Strong

Photo: dailypicksandflicks.com
It’s failure that builds up your ‘Never Give Up’ attitude. It teaches you to paddle your own way across the ocean of troubles. It motivates you to keep running until you reach the goal, traverse the wild road and desert, and climb up the cliffs of mountain until you reach the pinnacle.
“Failure creates the path to success in return of your little courage, little more strength to endure the temporary pain and loss, and a little bit might to be still and steady.”
Bring value
Failure is an alternative route that lays a foundation of better understanding for a worth-while life; it is instructive that coaches you to make the significant choices of life. While going through lessons of failures, you become a man of value, a man of perseverance, discipline and strong attitude that together make your success more glorious.
Don’t disgrace the value of failure as falling intelligently is one of the greatest arts of life.
Conquer Yourself

Photo: thesaleslion.com
Failures demand your persistence, commitment, consistent actions towards the accomplishment of your dream through which you learn to control your thoughts, know the mighty person dwelling inside, and eliminate jealousy, hatred, and selfishness. It ultimately makes you wise to have a better judgments and choices of life.
“It is better to conquer yourself than to win a thousand battles. Then the victory is yours. It cannot be taken from you, not by angels or by demons, heaven or hell.” Buddha

ur s

நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?

நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?

1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..
2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..
3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..
4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..
5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..
6)பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் . இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன்
7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாகஇருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..
8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..
9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .
இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?
இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்
இடுகையிட்டது கார்த்திக் பரமக்குடி
நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ?

 1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்...
தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே..

2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்...
ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி..

3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்...
கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்பிக்கூடப்பார்க்க மாட்டீர்கள். இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.டாக்டர் விக்ரம் சாராபாய்..

4) உங்கள் கையெழுத்தின் கீழ்புள்ளியோ,கோடோ கிடையாதா ?
உங்கள் வாழ்க்கை உங்கள்கையில்தான் .அடுத்தவர்கள் கருத்து சொன்னால் கண்டுகொள்ளவே மாட்டீர்கள் . இதில் பாரக்ஒபாமா இருப்பார் ..

5) பெயருக்கு சம்பந்தமே இல்லாமல் கையெழுத்துப் போட்டால்...
கமுக்க பார்ட்டி . உங்களிடம் நம்பி ரகசியம்சொல்லலாம் . கொஞ்சம் புத்திசாலியும்கூட . இந்த ஸ்டைலின்கீழ் மர்லின் மன்றோ,கபில்தேவ்..

6)பெயருக்குத் தொடர்புள்ள ஆனால்,கோழி கிண்டிய மாதிரி புரியாத கையெழுத்துப் போட்டால்...
புத்திசாலி பார்ட்டிகள் . ஆனால்,யோசிக்காமல் முடிவெடுப்பீர்கள் .ஒரு வரி பாராட்டுதலுக்கே மயங்கி விடுவீர்கள் . இதில்இந்திரா காந்தி,டாக்டர் ஜாகிர் ஹுசேன் 

7) முழுப் பெயரையும் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டால்...
நல்லவர் . ஆளுக்கும், சூழலுக்கும தகுந்தமாதிரி அட்ஜஸ்ட் செய்வீர்கள் . ஆனால்,உங்கள் கருத்துக்களில் தெளிவாகஇருப்பீர்கள் . பில் கிளிண்ட்டன், மன்மோகன்சிங் இதில் அடங்குவர் ..

8.)வெறுமனே பெயரை எழுதிவைத்தால்...
அம்மாஞ்சி . பாசமாகவும்,உறவுக்கு உயிரையும் கொடுப்பீர்கள் .இந்தவகை வி.ஐ.பி -க்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதர் தெரஸா ..

9) கையெழுத்துக்குக் கீழே தேதி,வருடம் போடுவீர்களா ?
ஓல்டு பார்ட்டிகள் . பாரம்பரியக்கலை பிடிக்கும் . முடிவெடுக்க நின்று நிதானமாக யோசிப்பீர்கள் . இந்த ஸ்டைலில் கையெழுத்திட்ட வி.ஐ.பி .சர்.சி.வி.ராமன் .

இதுல உங்க கையெழுத்து எதுல இருக்கு பாஸ்...?

இதை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள்
இடுகையிட்டது கார்த்திக் பரமக்குடி


கிருமிகளை அழிக்கும் மஞ்சள்

கிருமிகளை அழிக்கும் மஞ்சள்


How to get rid of wrinkles
இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் மஞ்சள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin ) எனும் வேதிப்பொருள் உண்டு. இதுவே மஞ்சளுக்கு நிறத்தை  தருகிறது. மஞ்சள் தனக்குள் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தமிழர் பாரம்பரியத்தில் மஞ்சளுக்கு மகத்தான இடம் உண்டு. வழிபாட்டில்  துவங்கி, உணவு, மருந்து, அழகுசாதனப் பொருள், கிருமிநாசினி என தமிழர் வாழ்வில் மஞ்சளையும் மருத்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சித்த  மருத்துவத்தில் முக்கியப் பயன்பாட்டுப் பொருளாகவும் மஞ்சள் இருந்துள்ளது.

மஞ்சள் அழகு சாதனப் பொருளாக பெண்களால் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் முகத்திற்கு ஒருவித மினுமினுப்பையும்,  வசீகரத்தையும் தருகிறது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. சமையல் அறையில் மணக்கும் வசீகரம் விரலி  மஞ்சளுக்கே உரியது. மஞ்சள் தான் இருக்கும் இடத்தில் கிருமிகளை அழிப்பதுடன் நிறத்தால் அழகையும் தருகிறது.

ஒரு காலத்தில் நோய் வராமல் தடுப்பதற்காக வாசற்படிகளில் மஞ்சள் பூசுவது, வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பது போன்ற பழக்கம் இருந்தது. சிறு  உடல் நலப் பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்பட்டது. மூக்கடைப்புக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கின் வழியாக இழுத்தால் குணமாகும். வேனல்  கட்டி, நகச்சுற்றி, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து பாதிப்பு உள்ள இடத்தில் பற்றுப் போட வேண்டும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் உடைந்துவிடும். அம்மை நோய் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப  இலைகளையும் அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம். மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது.

இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, குடற்பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல்  வாய்ந்தது. நீரழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைப்பதோடு, சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தியும் மஞ்சளுக்கு அதிகமாக உண்டு. மஞ்சளை சுட்டு பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும். மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும்  கட்டியாவதையும் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது. கலப்படமில்லாத மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான்.

சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்தும் பயன்படுத்தலாம். மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு,  வயிறு தொடர்பான நோய்களையும் போக்குகிறது. இறைச்சி வகைகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி,  சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி  சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

விரலி மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கடும் தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை  குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சள் பூசிக் குளிப்பதால் உடலில் தோன்றும் துர்நாற்றத்தை விரட்டலாம்.  மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசினால் படைகள், விஷக்கடிகள் நீங்கும். இவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சளை  சமையல், அழகு சாதனம், மருந்து என தேவைக்கு ஏற்பட பயன்படுத்தலாம். வீட்டிலேயே எளிய முறையில் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் இனி மஞ்சளை  மறுப்பாரும் உண்டோ! 

தாயார் மஹா லட்சுமி வழிபாடு !

தாயார் மஹா லட்சுமி வழிபாடு !


தாயார் மஹா லட்சுமி வழிபாடு !



பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்  இதய கமலத்தில் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும்தாயார் மஹா லட்சுமி தேவியை போற்றி இந்த பதிவை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் :  தாயார் மஹா லட்சுமி குடிகொண்டு இருக்கும் இடங்களில் அணைத்து ஐஸ்வர்யமும் , சகல செல்வங்களும் நிச்சயம் குறைவின்றி நிறைந்திருக்கும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , அப்படியெனில் தாயார் மஹா லட்சுமி எங்கு நிரந்தரமாக குடிகொண்டு அருள் புரிந்து நலம் தருகிறாள் , எம்பெருமானின் இதய கமலத்தில் , அந்த இதய கமலம் எதை போன்றது ,பரிசுத்தமான கருணையும் அன்பும் கொண்டது . அதுமட்டுமா  தம்மை மார்பில் எட்டிஉதைத்த பக்தனுக்கும் கருணை தந்த இதயம் அல்லவா அது ? 

  தாயார் 
மஹா லட்சுமி நிரந்தரமாக குடிகொண்டு இருக்கும் எம்பெருமானின் இதயம் குளிர்மை நிறைந்த இடமாகும், என்பே அங்கு தாய்  மஹா லட்சுமி விரும்பி நிரந்தரமாக ஜீவிதம் பெறுகிறாள், தாய்  மஹா லட்சுமி குணம் சிறு குழந்தையின் தன்மையை போன்றது , எங்கு அன்பும் பாசமும் அதிகம் உள்ளதோ அந்த இடத்தில்  தாய்  மஹா லட்சுமி நிறைந்து இருப்பாள், அப்படி பட்ட நிரந்தரமான ஓர் இடம் எம்பெருமானின் இதய கமலமே . 

நமது முன்னோர்கள் இந்த சூட்சம விஷயங்களை கடவுள் வழிபாடுகள் மூலம் நமக்கு தெளிவாக உணர்த்தினார்கள் , நாம்தான் இதை இன்னும் புரிந்து கொள்ள வில்லை, ஒரு குடும்பத்தில் புதிதாக திருமணம் ஆனா தம்பதியருக்கு , முதலில் பிறக்கும் குழந்தை பெண்ணாக அமைந்தால் அந்த குழந்தையை தாயார்
  மஹா லட்சுமி , ஆகவே பாவித்து அதிக பாசத்தையும் , அன்பையும் கொடுத்து செல்லாமாக வளர்த்தனர் , இதானால் குழந்தையின் வடிவில் தெய்வம் வந்து நின்று அந்த குடும்பத்தை காத்து அருள் புரிந்தது என்பது அசைக்க முடியாத முன்னோர்களின் நம்பிக்கை , ஒருவகையில் முதன் முதலாக பெண் குழந்தையை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்களே . 

எப்படி தாயார்
  மஹா லட்சுமி அன்பு , கருணை , பாசம் , குளிர்மை நிறைந்த பகவானின் இதய கமலத்தில் நிரந்தரமாக உள்ளாரோ , அது போல் நமது இல்லங்களிலும் , உள்ளங்களிலும் குடியிருக்க வேண்டுமெனில் நமது இல்லமும் , உள்ளமும் பரிசுத்தமானதாகவும் ,  அன்பு , கருணை , பாசம் , குளிர்மை நிறைந்த இடமாகவும் இருப்பது அவசியம் .


 எவருடைய இல்லங்களிலும் , உள்ளங்களிலும் வெஞ்சினம் , கோபம் , வஞ்சகம் , பொய், கபடம், அமைதியின்மை ,போன்ற நிலைகளில் இதயம் தீ போல் எரிந்து கொண்டு இருக்கிறதோ, 
அங்கு தாயார்
  மஹா லட்சுமி தனது பாத கமலங்களை கூட வைப்பதில்லை, ஒவ்வொரு ஆணும், பெண்ணும்  இதை உணர்வது மிக அவசியம் .


ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகிய எட்டு தேவியரே அஷ்ட லட்சுமிகள் என போற்றப்படுகின்றனர். இவர்களது ஒட்டுமொத்த அம்சமானமகாலட்சுமியை மன சுத்தத்துடனும் பய பக்தியுடனும் விரதமிருந்து வழிபடுவோம். செல்வ செழிப்பு, நில புலன்கள் வாங்கும் யோகம், கல்விச் செல்வம், அடுத்தவர்கள் மீது கருணையும் இரக்கமும் காட்டுகின்றன மன வளம், புகழ், அமைதியான வாழ்வு, மகிழ்ச்சி, தைரியம் ஆகிய அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வோமாக.

நாம் அனைவரும் எம்பெருமானின் இதய கமலம் போல் அன்பு , கருணை , பாசம் , குளிர்மை , மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன்  இனி வரும் காலங்களில்  இருப்போம், தாயார் மஹா லட்சுமி அணைத்து 
ஐஸ்வர்யமும் , 16 வகை  செல்வ வளங்களையும் நம்  அனைவருக்கும் தந்து அருள் புரிவார் . 

மஹா லட்சுமி  / தன ஆகர்ஷன வழிபாட்டினை பிராப்தம் உள்ளவர்கள் நேரில் வந்து பெற்று,  வழிபடும் முறையினை தெரிந்து கொண்டு சகல நலமும் பெறுங்கள் .

வாழ்க வளமுடன் 

இது உண்மை! இது உண்மை! ஏழு நேர்மறை வாசகங்கள்


ஒரு எதிர்மறையான கருத்தை வலிமை இழக்கச் செய்ய ஏழு நேர்மறையான வாசகங்கள் தேவை எனும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வாசகத்தை ரெனி ஹார்ன்பக்கிள் என்பவர் சொன்னார். ஒருகணம் அதைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.
அது உண்மையாக இருக்க முடியுமா? அத்தனை எளிமையாக இருக்க முடியுமா? ஒவ்வொரு எதிர்மறையான வாசகத்தையும் ஏழு நேர்மறையான வாசகங்களால் ரத்துசெய்துவிட்டு ஒருவனோ ஒருத்தியோ தங்களது விதியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட முடியுமா? இது சோதித்துப் பார்க்கக் கூடியதா?
காத்திருப்பு
நிச்சயமாக. இதைச் சோதனை செய்ய முடியும். நான்தான் இதை நம்புவதற்கு மிகவும் கஷ்டப்பட்ட முதல் நபர். இது பொய்யாக இருக்குமோ என்று ஆராயப் புகுந்து இந்தக் கோட்பாட்டை முழுமையாக நம்பும் முதல் நபராக மாறியதும் நான்தான்.
நான் ஒரு யதார்த்தவாதி. எனவே இந்தக் கூற்றில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று நான் ஆராய்ந்தேன். யாராவது என்னிடம் எதிர்மறையான ஒன்றைக் கூற மாட்டார்களா என்று காத்திருக்கத் தொடங்கினேன்.
எந்த எதிர்மறையான செய்தி வந்தாலும் அதை 7 நேர்மறையான செய்திகளால் ரத்துசெய்துவிட வேண்டும் என்று எனது இதயத்தைத் தயார்செய்து வைத்திருந்தேன். நான் யுத்தத்துக்குத் தயாராக இருந்தேன். நான் பசியுடன் இருந்தேன். என்னால் செய்ய முடியாத ஒன்றை ஒருவர் என்னிடம் கூற வேண்டும் என்று விரும்பினேன். நான் அந்த வேலைக்கு லாயக்கில்லை என்று கூறப்படவும், நான் அத்துணை நல்லவன் இல்லை என்று கூறப்படவும் காத்திருந்தேன்.
வந்தது எதிர்மறை வாசகம்
உங்கள் கனவுகளைக் கொன்று உங்களைப் புறமுதுகிட வைக்க எப்போதும் யாராவது விருப்பத்துடன் இருக்கிறார்கள். ஒரு எதிர்மறை வாசகத்துக்காக நான் அதிகம் காத்திருக்க நேரவில்லை.
நான் கட்ட விரும்பிய வீட்டைக் கண்டறிந்தேன். அதீத மகிழ்ச்சியில் நான் இருந்தேன். அப்போது என் வயது 21தான். அதற்கு முன்பு எனக்கு வீடு கிடையாது. நான்கு படுக்கையறை, இரண்டு கார் காரேஜ்கள் மற்றும் இரண்டு குளியலறைகள் கொண்டதாக எனது வீடு இருக்க வேண்டுமென்று விரும்பினேன்.
என் வீடு பற்றிய திட்டத்தை நான் மிகவும் அன்பு செலுத்தும் ஒரு தம்பதியிடம் காண்பித்தேன். அவர்கள் எனது திட்டம் குறித்து மிகுந்த சந்தோஷம் அடையப்போகிறார்கள் என்று நினைத்தேன். நெஞ்சு நிறைந்த பெருமையுடன் அவர்களிடம் திட்டத்தைக் காட்டி, நான் கட்டப்போகும் வீட்டுக்கான வரைபடம் இதுதான் என்று கூறினேன். அவர்கள் வரைபடத்தைப் பார்த்தார்கள். என்னைப் பார்த்து ஏமாற்றத்துடன் உதட்டைச் சுழித்து, “உன்னைப் பொறுத்தவரை இது பெரிய திட்டம். இதை நடைமுறைப்படுத்த முடியாது. உன்னிடம் கடன் தொகையும் இல்லை. ஒரு சின்ன வீடாக உன் திட்டத்தை ஆரம்பிக்கலாம்” என்றார்கள்.
ஏழு வாசகங்கள்
இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். இதுதான் எனக்கு அப்போதைய தேவையாக இருந்தது. யுத்தப் பேரிகைகள் ஒலித்தன. போருக்கான சங்குகள் முழங்கின. போர் தொடங்கியது.
நான் என் காரில் ஏறினேன். எனது கண்ணில் கனலுடன், “இது என் வீடு. இந்த வீட்டைப் பெறுவேன். எதுவும் என்னைத் தடுக்க முடியாது. இந்த நிலம் என்னுடையது. நான் அதைக் கட்டுவேன். எனக்கு அது கிடைக்கும்! என்ற உணர்வோடு நான் தேர்ந்தெடுத்த நிலத்துக்கு வண்டியை ஒட்டினேன்.
அந்த நிலத்தைச் சுற்றிவந்து ஏழு முறை சொன்னேன். “இந்த இடத்தில்தான் நான் என் வீட்டைக் கட்டுவேன்! எனக்கு அது கிடைக்கும்!” ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அந்த வீட்டைப் பெறுவதிலிருந்து எதுவும் என்னைத் தடுக்காது என்று நான் நம்பத் தொடங்கினேன்.
நான் வெல்ல முடியாதவனாகவும், இன்னல்களுக்குத் தயாரானவனாகவும் ஆனேன். நான் இந்த நிலத்தில் வாழ்வதைப் பார்த்தேன். நான் கேட்ட எதிர்மறைக் கருத்துகளை உண்மையிலேயே மறந்தே போய்விட்டேன். நான் இந்த வீட்டைக் கட்டுவதைத் தடுக்க எந்த வழியும் சாத்தியமில்லை என்று நம்பத் தொடங்கினேன்.
பலித்தது
எனது வீட்டைக் கட்டக் குறைந்த வட்டியில் பணம் வழங்கப்பட்டது. பல ஆயிரம் டாலர்கள் ஊக்கத்தொகையும் கிடைத்தது. அது நடந்து பல மாதங்களுக்குப் பிறகும் என்னிடம் எதிர்மறையாகக் கருத்து தெரிவித்தவரை நான் மறந்தே போயிருந்தேன். நேர்மறையான கருத்து மற்றும் செயல்களால் அதை முழுமையாக என் மனதிலிருந்து அகற்றியிருந்தேன். அது வேலையும் செய்தது!
என்னால் அத்தனை பெரிய வீட்டை அடைய முடியாது என்று கூறியவர்கள் என்னைப் புண்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து அதைச் சொன்னார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்கள். அதை ஏற்பது எனக்கு எளிதாகவே இருந்திருக்கும்.
அவர்களது கருத்து தவறு என்று சொல்வதற்கு நான் யார்? நான் அதற்கு முன்பு ஒரு வீட்டை வாங்கியதில்லை; அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். அப்போதைய நிலையைத் திரும்பிப் பார்க்கும் போது அவர்களது ஞானத்துக்கு நான் பணிந்து போவதே புத்திசாலித்தனமாகத் தெரிந்திருக்கும். ஏனெனில் முன்பே நான் சொன்னதுபோல, அவர்கள் தங்களது அனுபவத்திலிருந்து பேசினார்கள்.
ஏழு நேர்மறை வாசகங்கள்
இருந்தாலும் நான் என் இதயத்தை எதிர்மறையான ஒரு கருத்துக்குத் தயாராக வைத்திருந்தேன். எப்படியான கூற்றுக்கும் நேர்மாறாகச் செயல்படுவது என்றும் ஏழு நேர்மறை வாசகங்களால் அதை ரத்து செய்யவும் மனரீதியாக என்னைத் தயார்படுத்தியிருந்தேன். சூழ்நிலை இத்தனை எதிர்மறையாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி இருந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.
ஏழு என்ற எண் முழுமையின் எண்ணாகும். உங்களால் முடியாது என்று ஒருவர் ஒருமுறை கூறினால் என்னால் முடியும் என்று ஏழு முறை கூறுவது பற்றி எண்ணிப்பாருங்கள். எவ்வளவு அழகான கருத்து இது! உங்களை யாராலும் தடுக்கவே முடியாது!
யாராவது ஒருவர் இதைப் படித்துவிட்டு, இது வெறும் கட்டுக்கதை, கிறுக்குத்தனமானது, வேலைக்கு ஆகாது, இதெல்லாம் உண்மையல்ல என்று சொல்வார்கள். ஆனால் நான் சொல்கிறேன், இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை!
(அமெரிக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி. விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான், சென்னை வெளியிட்டுள்ள from the HOOO to doing GOOD எனும் நூலிலிருந்து

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்


    பெயர் - நந்தி தேவர்
குரு - சிவன்
சீடர்கள் - திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனி
சமாதி - காசி (பனாரஸ்)

பெயர் - அகஸ்தியர்
குரு - சிவன்
சீடர்கள் - போகர், மச்சமுனி
சமாதி - அனந்தசயனம் (திருவனந்தபுரம்)

பெயர் - திருமூலர்
உத்தேச காலம் - கி.பி. 10ம் நூற்றாண்டு
குரு - நந்தி
சமாதி - சிதம்பரம்

பெயர் - போகர்
உத்தேச காலம் - கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17
குரு - அகஸ்தியர், காளங்கி நாதர்
சீடர்கள் - கொங்கனவர், கருவூரார், இடைக்காடர்
சமாதி - பழனி

பெயர் - கொங்கனவர்
உத்தேச காலம் - கி.பி. 14ம் நூற்றாண்டு
குரு - போகர்
சமாதி - திருப்பதி

பெயர் - மச்சமுனி
குரு - அகஸ்தியர், புன்னக்கீசர், பாசுந்தர்
சீடர்கள் - கோரக்கர்
சமாதி - திருப்பரங்குன்றம்

பெயர் - கோரக்கர்
குரு - தத்தாத்ரேயர், மச்சமுனி
சீடர்கள் - நாகார்ஜுனர்
சமாதி - போயூர் (கிர்னார், குஜராத்)

பெயர் - சட்டமுனி
உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
குரு - நந்தி, தக்ஷிணாமூர்த்தி
சீடர்கள் - சுந்தரானந்தர்
சமாதி - ஸ்ரீரங்கம்

பெயர் - சுந்தரானந்தர்
குரு - சட்டமுனி, கொங்கனவர்
சமாதி - கூடல் (மதுரை)

பெயர் - ராம தேவர் (Yakub / Jacob)
உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
குரு - புலஸ்தியர், கருவூரார்
சமாதி - அழகர் மலை

பெயர் - குதம்பை
உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
குரு - இடைக்காடர், அழுக்காணி சித்தர்
சமாதி - மாயவரம்

பெயர் - கருவூரார்
குரு - போகர்
சீடர்கள் - இடைக்காடர்
சமாதி - கருவை (கரூர்)

பெயர் - இடைக்காடர்
குரு - போகர், கருவூரார்
சீடர்கள் - குதம்பை, அழுக்காணி சித்தர்
சமாதி - திருவண்ணாமலை

பெயர் - கமலமுனி
சமாதி - திருவாரூர்

பெயர் - பதஞ்சலி
குரு - நந்தி
சமாதி - ராமேஸ்வரம்

பெயர் - தன்வந்தரி
சமாதி - வைத்தீஸ்வரன் கோவில்

பெயர் - பாம்பாட்டி
குரு - சட்டமுனி
சமாதி - சங்கரன் கோவில்

பெயர் - வால்மீகி
குரு - நாரதர்
சமாதி - எட்டிக்குடி

இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது. பதினெட்டு சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர், பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல என்பதை அறியலாம்.

பதினெட்டு சித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில் பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல் நூலுக்கு நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன.

உயர்ந்த மகான்கள் நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம். சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இங்கு குறிக்கப்பட்டுள்ளது.

மனத்தை வெற்றிடமாக்கினால் வெற்றி உன் வசமாகும்.

மனத்தை வெற்றிடமாக்கினால் வெற்றி உன் வசமாகும்.

நாம் வாழ்வில் சாதிக்க வேண்டுமென்றால் அதற்க்கு ஆற்றல் வேண்டும். ஆற்றல் வேண்டும் என்றால் மன அமைதி வேண்டும். இவ்வாறு நாம் வேண்டுவன அனைத்தையும் தருவது தியானம். மனத்தை மந்திர சாவி என்பார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. பல ரகசியங்களை, நன்மை, தீமை என பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ள ஒரு பெரிய கருவூலமே நமது மனம். அந்த மனம் என்னும் கருவூலத்தை திறக்க உதவும் மந்திர சாவி தான் தியானம். தியானம் என்றால் என்ன? மனத்தை ஒருமுக படுத்துவது. கண்களை மூடி அமர்வது மட்டுமல்ல தியானம். ஓவியம், கால் பந்து, கூடை பந்து, இசை, ஸிநிமா என்று நமது மனத்தை பலமணி நேரம். இல்லை ஒரு சில நிமிடங்கள் ஏதேனும் குறிப்பிட்ட ஒன்றில் நிலை நிறுத்தி கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்தினால் அதன் பெயர் தியானம். தியானம் செய்வதால் கிடைக்கும் அதே பலன் கால் பந்து ஆடுவதாலும் கிடைக்கும் என்று புரட்சிகரமாக பேசியவர் ஸ்வாமி விவேகானந்தர்.
கவனங்களை சிதற விடாமல் குறிப்பிட்ட ஒரு நபர், பொருள் மீது மனதை ஒருமுகப்படுத்துதல் ஒரு வித தியானம் என்றால், மனத்தில் எதையுமே நினைக்காமல் எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருப்பது இன்னொரு வகை தியானம். சாந்தி, ஆஞ்யா, துரியம், துரியாதீதம் என்று தியானத்தில் பல முறைகள், பல வகைகள் இருந்தாலும் மனத்தில் எதையுமே நினைக்காமல் சும்மா எவ்ளவு நிமிடங்கள், நேரங்கள் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கும் தியானமுறை மிகவும் கடினமானது. அதே சமயம் மிகுந்த பலனை தரக்கூடியதும் கூட. மனத்தை அங்கும், இங்கும் அலைபாய விடும் யாராலும் சாதிக்க முடியாது. உணவு கட்டுப்பாடை விட மனக்கட்டுபாடு மிக அவசியம். மனக்கட்டுபாடு நமது மனம் மட்டும் அல்லாது உடலையும் காக்கும். பல வியாதிகளின் மூல கூர் மன அழுத்தமே.
நாம் மனத்தை பீட்டா என்னும் நிலையிலிருந்து ஆல்ஃபா நிலைக்கு கொண்டு வந்தாலே வெற்றிக்கான பல சூத்திரங்கள் நமக்கு தெரிய ஆரம்பிக்கும்.
மனத்தை வெற்றிடமாக்கினால் வெற்றி உன் வசமாகும்.

urs

வில்வத்தின் மகிமைகள் -



வில்வத்தின் மகிமைகள் -
மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள்.
ஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை.
**
**
*வில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம். *
**
*சாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.*
* *
**
*மேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும். *
**
*ரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும். *
**
*அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ குணம் உள்ளது.வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வில்வ இல்லை அர்ச்சனை ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் கூட.*

வெற்றி சூத்திரங்களின் நாயகன் நெப்போலியன் ஹில்லின்


வெற்றி சூத்திரங்களின் நாயகன் நெப்போலியன் ஹில்லின். அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

* அமெரிக்காவின் தென் மேற்கு வர்ஜீனியாவில் பிறந்தவர். சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டார். யாருக்கும் அடங்காமல் சுற்றித் திரிந்த சிறுவனை, தந்தையின் 2-வது மனைவிதான் நல்வழிப்படுத்தினார்.
* 15 வயதில் உள்ளூர் பத்திரிகையில் நிருபரானார். அங்கு பணி யாற்றிக்கொண்டே சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். வருமானம் போதாமல் சட்டக் கல்வியை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
* 1908-ல் பிரபல சாதனையாளர்களை பேட்டி கண்டு எழுதினார். பிட்ஸ்பர்க் நகரத்தின் பிரபல எஃகு நிறுவன அதிபர் ஆண்ட்ரூ கார்னகியை பேட்டி கண்டது இவரது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது.
* ஹில்லிடம் ஒரு சவால் விடுத்தார் கார்னகி. ‘‘எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் 20 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றிக்கான கோட்பாடுகளை ஆவணப்படுத்தி பதிவு செய்ய வேண்டும்’’ என்பதுதான் அது. இதன்மூலம் நிறைய சாதனையாளர்களை ஹில்லிடம் அறிமுகப்படுத்தினார் கார்னகி.
* 20 ஆண்டு காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. தியோடர் ரூஸ்வெல்ட், தாமஸ் எடிசன், ஜான் டி. ராக்ஃபெல்லர், ஹென்றி ஃபோர்டு, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் உள்ளிட்டவர்களை சந்தித்து வெற்றிக் கோட்பாடுகளைத் திரட்டினார்.
l‘‘இலக்கில் உறுதியோடு இருப்பது, தனக்கு என்ன தேவை என்பதை மிகச் சரியாக தெரிந்து வைத்திருப்பது.. இந்த இரண்டும் இருந்தால் வெற்றி பெறுவது சிரமமாக இருக்காது’’ என்ற கார்னகியின் கோட்பாடுகள்தான் ஹில்லின் சுய முன்னேற்றப் படைப்புகளுக்கு அடித்தளம்.
* வெற்றிக் கோட்பாடுகளுக்காக ஹில் தொடங்கிய பத்திரிகை பெரும் வெற்றி பெற்றது. கடந்த 50 ஆண்டு காலத்தில் மாபெரும் சாதனையாளர்களின் வெற்றி சூத்திரங்கள் அடங்கிய ‘தி லா ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை 1928-ல் வெளியிட்டார். இந்த புத்தகம் விற்பனையில் சாதனை படைத்தது. இவரது இன்னொரு படைப்பு ‘திங்க் அண்ட் குரோ ரிச்’ 1930-ல் வெளியானது. கோடிக்கணக்கான பிரதிகள் விற்றுள்ளது.
* உட்ரோ வில்சன், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகிய இரு அமெரிக்க அதிபர்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.
lதனி நபர் சாதனைக்கான இவரது தத்துவம் ஆழமானது, விசாலமானது. ஒருவருக்குள் புதைந்துக்கிடக்கும் ஆற்றலை அவரே கண்டறிய உதவுவதுதான் இவரது படைப்புகள் என்கிறார்கள்.
* இவரது வெற்றித் தத்துவங்கள் உலகம் முழுவதும் பல கோடி பேரை வெற்றியாளர்களாக, செல்வந்தர்களாக மாற்றி வருகின்றன. ‘வெற்றி அறிவியலின் தந்தை’ என்று போற்றப்படும் நெப்போலியன் ஹில் 87-ம் வயதில் காலமானார்.

urs

Wednesday, October 29, 2014

பில்கேட்ஸாக உருவெடுத்த பில்


.
'பில்’ என்று அழைக்கப்பட்ட அவன், ஒரு வழக்குரைஞரின் மகன். அம்மா, பள்ளி ஆசிரியை. எப்போதும் தொணதொண என்று பேசுவதனால், பில்லும் வக்கீல் ஆகிவிடுவான் என்றே நினைத்தார்கள். ஆனால், பில் தனது ஐந்தாவது வயதில் வீட்டில் உள்ள வானொலி, எதிர் வீட்டு சோஃபா, பக்கத்து வீட்டு சைக்கிள் என எல்லாவற்றையும் கழற்றிப்போட்டு, பழைய நிலைக்குச் சேர்க்க ஆரம்பித்தான்.
பாடங்களைச் சற்று நேரத்துக்கு மேல் கவனிக்க, படிக்க முடியாதவனாக பில் இருக்கிறான் என்று பள்ளி ஆசிரியர்கள் புகார் செய்தார்கள். கணிதம் என்றாலே, அவனுக்குக் கசந்தது. அந்தப் பாட வேளையில் அவன், நூலகத்தில்தான் இருப்பான். அங்கேயும் புத்தகங்களைப் படிப்பது இல்லை. அவற்றைக் கலைத்துப் போட்டு, வேறுவேறு முறைகளில் அடுக்குவான். ஆறு வயதுச் சிறுவன், ஆயிரக்கணக்கான புத்தகங்களை விதவிதமான முறையில் நேர்த்தியாக அடுக்குவதைக் காணவே, ஒரு கூட்டம் இருந்தது. அட்டவணை முறையில் புத்தகங்கள் எந்த அடுக்கில் உள்ளது என்று சொல்லும் நவீன முறையும் பில்லுக்கு அத்துபடி.
சிறுவன் பில்லுக்கு 13 வயது ஆனபோது, அவனது பள்ளித் தாய்மார்கள் குழு, கம்ப்யூட்டர்களை பள்ளிக்கு வரவழைக்கப் பொருளுதவி செய்தது. அப்போது ஓர் அறையையே அடைத்துக்கொள்ளும் பெரிய வால்வுகள் பொருத்திய, 'டெலிமாடல் 33’ என்கிற ஏஎஸ்ஆர் மின் கணினிதான் பயன்பாட்டில் இருந்தது. அங்கே சென்று, பேஸிக் (Basic) எனும் முறையை முழுமையாகக் கணினி மொழியாக்கும் வேலையில் பில் உதவினான்.
நூலகத்தில் அவன் கற்ற கேட்டலாகிங் முறை ஒரு வகையில் கைகொடுத்தது. அந்த வேலையில் அமர்த்தப்பட்டவர்கள் ஆறு நாட்களில் செய்யும் ஒரு வேலையை, அவன் நான்கு மணி நேரத்தில் முடித்தான்.
பில், தனது கணக்குப் பாட வேளையில் கணிதத்துக்குப் பதில், கணினிப் பாடம் கற்கலாம் என்று பள்ளி நிர்வாகம் அனுமதித்தது.
பில்லும் அவனது நண்பர்களுமாகச் சேர்ந்து, உலகில் முதன்முறையாக டிக்-டேக்-டோ எனும் புதிய வகை புரோகிராமை ஏற்படுத்தினார்கள். அந்த ஆய்வகத்தில் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். பள்ளியின் தலைமை ஆசிரியை, சந்தேகத்தோடு திடீர் சோதனை மேற்கொள்வார். அங்கே, ஊரின் சிறார்களும் சில பெரியவர்களும் கணினியோடு சீட்டாட்டம், செஸ் என்று விளையாடிக் கொண்டிருப்பார்கள். இந்தக் கணினி விளையாட்டு புரோகிராமை பில் கண்டுபிடித்து அறிமுகம் செய்தபோது, அவன் வயது 13.
மிகுந்த போக்குவரத்து நெரிசல்கொண்ட பகுதியில் இருந்த அவர்களது வீட்டின் அருகே இருந்த சிக்னலில், பில்லும் அவனது தந்தையும் காரில் செல்லும்போது அடிக்கடி சிக்கினார்கள். ஒருநாள், ''அந்த சிக்னல் இயங்கும் விதம் பற்றி அறிந்துவருகிறேன்'' என்று சென்றான். இரண்டு நாட்கள் கழித்து அவன் வந்தான். அவனது 14 வயதில் கணினிமயமான முதல் போக்குவரத்து சிக்னல் உருவானது. காவல் அதிகாரிகள் அவனை வீடு தேடிவந்து பாராட்டியபோது அப்பா அசந்துபோனார்.
ஒருநாள் கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷன், அதன் நிர்வாகிகளைப் பள்ளிக்கு அனுப்பியது. பள்ளியில் அவர்கள் சப்ளை செய்திருந்த கணினியில், வித்தியாசமான வைரஸ் தாக்கி இருந்தது. பல மணி நேரம் போராடியும் முடியவில்லை. மதர் போர்டு (பிரதான மின் அமைப்பு) டெக்ஸ் மாற்ற வேண்டும் என 16 வயது பில் பேசுவதை அவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தார்கள். 'இனி, பில் பள்ளியில் கணினி பயன்படுத்தக் கூடாது. ஆனால், நேரம் கிடைக்கும்போது அவர்களது தொழிற்சாலைக்கே வரலாம்’ என்று புதிய உலகை அவனுக்குத் திறந்துவிட்டார்கள்.
பின்னாட்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கி, தனது 'விண்டோஸ்’ மூலம் உலகையே கணினிமயமாக்கிய பில்கேட்ஸாக உருவெடுத்த பில், ஒரு சுட்டி நாயகனாக மிளிர்ந்தான்.
-ஆயிஷா நடராசன்,
ஓவியம்: பாரதிராஜா