Sunday, October 12, 2014

கடவுள் கேட்பதும் கேட்காததும் !!!

கடவுள் கேட்பதும் கேட்காததும் !!!
.
1. நீ எவ்வகையான காரை ஓட்டுகிறாய் என்று கடவுள் கேட்க மாட்டார்; வாகனமில்லாத எவ்வளவு பேரை நீ ஏற்றிக்கொண்டு 
சென்றாய் என அவர் கேட்பார். 
****
2. உன் வீட்டின் பரப்பளவைக் கடவுள் கேட்க மாட்டார்;
நீ எத்தனை பேரை உன் இல்லத்துக்குள் வரவேற்றாய் என்று அவர் கேட்பார்.
****
3. உன் அலமாரியில் நீ வைத்திருக்கும் துணிமணிகளைப் பற்றிக் கடவுள் கேட்க மாட்டார்;
நீ எத்தனை பேர் உடுத்த உதவிபுரிந்தாய் என்றவர் கேட்பார்.
****
4. உன்னுடைய உயர்ந்தபட்ச ஊதியம் எவ்வளவு என்று கடவுள் கேட்க மாட்டார்;
நீ அதை சம்பாதிக்க உன்னுடைய நன்னடத்தையை விட்டுக்கொடுத்தாயா என்று அவர் கேட்பார்.
****
5. உன்னுடைய உத்தியோகப் பதவி என்னவென்று கடவுள் கேட்க மாட்டார்;
உனது மொத்தத் திறமைக்கேற்ப நீ பணியாற்றினாயா என அவர் கேட்பார்.
****
6. உனக்கு எத்தனை நண்பர்கள் உளர் என்று கடவுள் கேட்க மாட்டார்;
நீ எத்தனை பேருக்கு நண்பனாய் இருந்தாய் என்றவர் கேட்பார்.
****
7. நீ எத்தகைய அண்டை வீட்டாருடன் வாழ்கிறாய் எனக் கடவுள் கேட்க மாட்டார்;
உன் அண்டை வீட்டாரை நீ எப்படி நடத்துகிறாய் என்றவர் கேட்பார்.

No comments:

Post a Comment