உங்கள் வாடிக்கையாளர் அனுபவத்திற்கு மதிப்பு கூட்ட என்ன செய்ய வேண்டும்?
மந்திரங்கள் இவைதான்:
உண்மையை எல்லா நேரத்திலும் சொல்லுங்கள். உங்கள் தனி நபர் முத்திரை அந்த சேவையில் தெரியும் வண்ணம் இருக்கட்டும். அவர்கள் எதிர்பார்ப்பையும்விட அதிகமாக, விரைவாக செய்யப் பாருங்கள். நகைச்சுவையும் உற்சாகமும் எப்போதும் இருக்கட்டும். எதையும் எளிமைப்படுத்துங்கள். உங்கள் சேவையை தொடர்ந்து மெருகேற்றிக் கொண்டே இருங்கள்.
சுலபமான பாடங்கள்தான். ஆனால் இங்கு வாடிக்கையாளர் சேவை என்பது பெரும்பாலும் கசப்பான அனுபவம்தான். மகிழ்ச்சியும் உற்சாகமும் இல்லாத பணியாளர் என்றும் தன் வாடிக்கையாளருக்கு நல்ல அனுபவம் தர இயலாது. உங்கள் பணியாளர்களை நன்கு பராமரித்தாலே அவர்கள் உங்கள் வாடிக்கையாளரை நன்கு பராமரிக்க வழி செய்வார்கள். தொழில் நுட்பம் எல்லாருக்கும் சமமாகக் கிடைக்கும் பட்சத்தில், ஒரு சேவையை தூக்கிப் பிடிப்பது அதன் பணியாளர்களின் நேர்மையும் உதவும் குணமும் உற்சாகமும் மட்டும் தான்.
urs Happily
Sales Skills Trainer
Coimbatore
www.v4all.org
cell-9790044225
No comments:
Post a Comment