Thursday, October 23, 2014

தீபாவளி நாள் ! சிந்தனை செய்வோம் ! - வள்ளலார்

வாழவேண்டாமா ! சிந்தனை செய்வோம் அன்பர்களே ! இந்த இருளை நீக்க வள்ளலார் மிக எளிமையான "சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் "என்ற வழியை நமக்கு வகுத்துள்ளார் .அதனை அறிந்து ,உணர்ந்து ,நெகிழ்ந்து அன்பே நிறைந்து எல்லா வல்ல அருட்பெரும்ஜோதி என்ற ஒளி தன்மையை பெறுவோம் என்று ,இன்று நாம் சபதம் ஏற்கும் நாளாக இந்த தீபாவளி நாள் அமையட்டும் என்று கூறி உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் தெரிவிக்கிறேன் நன்றி வணக்கம் .
=========================================================
"இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப் போகத்
தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன் ஆண்டவர் நீரே".
====================
-திரு அருட்பா .
LikeYours Happily
Dr.Star Anand ram
www.v4all.org 

No comments:

Post a Comment