கடனை தீர்க்கும் முகூர்த்த நேரம்
ஒவ்வொரு தமிழ் மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரம் மைத்ரமுகூர்த்தமாக மலரும்;அந்த நேரத்தில் நாம் வாங்கிய கடன் தொகையில் அசலில் ஒருபகுதியை திருப்பித் தந்தால்,அதன்பிறகு அந்தக் கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அது விரைவாக தீர்ந்துவிடும்.விஜய வருடத்தின் மைத்ர முகூர்த்தப் பட்டியலை உங்களுக்காக கணித்து வழங்குகிறோம்.
இந்தக் கலியுகத்தில் மனிதர்களாகப் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் மூன்று வித கடன்களை சந்தித்துத் தான் ஆக வேண்டும். அவையே தேவ கடன், பித்ருகடன் மானுஷ கடன், அத்துடன் பெற்ற கடன் என்ற ஒன்றும் மனிதனை வாட்டி எடுத்து விடுகிறது. தேவ கடனை ஹோமங்கள், நித்ய கர்மங்கள், ஆலய வழிபாடுகள் செய்வதால் தீர்த்துக் கொள்ள முடியும்.
இதிகாச புராணங்கள் படிப்பதாலும், கேட்பதாலும் ரிஷி கர்ப்பணம் செய்வதாலும் தீர்த்துக் கொள்ளலாம். பித்ரு கடனை - பெற்றவர்களைக் காத்து வருவதாலும், அவர்கள் காலமான பிறகு அவர்களது திதி நாளில் சிரத்தையுடன் சிரார்த்தம் (திவசம்) செய்வதாலும் தீர்த்து விடலாம்.
பெற்ற கடன் என்பது பிள்ளைகளைப் பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்கி கல்வி கற்க வைத்துத் திருமணம் செய்வித்து வாழ்க்கையை நன்றாக ஆக்கித் தருவதால் சுமை குறையும். ஆனாலும் பெற்றோர்களுக்குப் பிரதி கடனைத் தீர்க்காமல் நன்றி மறந்து விடுகிறார்கள்.
மனித கடனை - மனிதாபிமானத்தோடு ஏழை-எளிய மக்களுக்கு உபகாரம் செய்வதாலும், முடிந்த அளவில் மற்றவர்களுக்கு உதவி செய்வதாலும் தீர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால் மனிதர்கள் மற்ற மனிதர்களிடம் பெற்ற கடனைப் பெற்றுக் கொண்டு திருப்பித்தர முடியாமல் அவஸ்தைப் படுகிறார்களே!
இதற்குத் தீர்வு யாதெனில் கடன் வாங்கியதில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்த நேரத்தில் திருப்பி கொடுத்தால், அந்த கடனை எளிதில் அடைத்து விடலாம் என்ற தேவ ரகசியத்தைக் கடன் பெற்றவர்கள் உணர்ந்து அறிந்து விட்டால் இந்த வகை மனுஷ கடன் பரிதியைக் கண்ட பனிபோல விலகிவிடும்.
கடன் வாங்கியவர்கள், அதைக் கொடுத்துவிட்டு விழிப்போர் கலங்கும் வகையில் நடந்து கொள்வதும், அதைத் திருப்பக் கொடுக்கப் பல பரிகாரங்களைச் செய்வதும் இக்காலக் கட்டத்தில் நடக்கும் நிகழ்வுகளில் காணலாம்.
ஓம் அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸவ:
நமோஸ்துதே மமோசேஷம் ருணமாக விநாயக- என்று பிரதி செவ்வாய்க்கிழமை அன்று அங்காரகனுக்குத் தீபம் ஏற்றுதலும் குணஹர லிங்காஷ்டகம், கடன் தீர்கணபதி அஷ்டகம், கடன் தீர்க்கும் சுதர்ஸனாஷ்டகம், காலபைரவ துதி. என்று பல வழிபாட்டுத் துதிகள் பரிகாரங்களைச் செய்து வருகிறார்கள். மன திருப்திக்காகச் செய்யும் இவை சிலருக்குப் பலனும் தருகின்றன.
ஆனால், காலம் நமக்குத் தோழனாக நின்று வழிகூறும் என்பதை - நாள் செய்வதை நல்வோர் செய்யார் - என்ற பழமொழியின் வழியாக அறிந்து காலத்தைப் பயன்படுத்தலாம். நல்ல நேரத்தையும் நமக்கு நன்மைகள் புரியும் காலத்தையும் தான் முகூர்த்த வேளை என்கிறோம். ஹோமம் முதலிய சுபநிகழ்ச்சிகள் செய்ய பிரம்ம முகூர்த்தத்தை (அதிகாலை 4-6) பயன்படுத்துகிறோம்.
திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம், செய்ய சுபலக்ன முகூர்த்தத்தைப் பயன்படுத்துகிறோம். குட முழுக்குப் பெருஞ்சாந்தி பெருவிழா ஆலய சுப பூஜைகள் செய்ய நேத்ர ஜீவனுடன் கூடிய முகூர்த்த வேளையைப் பயன்படுத்துகிறோம். அரசு அனுகூலம், பதவி உயர்வுக்கு - இந்திர முகூர்த்த வேளையைப் பயன்படுத்துகிறோம்.
லட்சுமி கடாட்சத்துடன் தொழில் வளர, செல்வநிலை உயர லட்சுமிகுபேர வேளையை (வியாழன் மாலை 5-8 மணி) பயன்படுத்துகிறோம். ஆனால், மனிதனைப் படாதபாடுபடுத்துகிற கடன் தொல்லையைத் தீர்த்திட மைத்ர முகூர்த்தம் என்ற மதிய வேளையைப் பயன்படுத்த இதுவரை யாருக்குமே தெரியவில்லை.
இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனில் சிறுதொகையை அடைத்து விட்டால் வாங்கிய கடன் முழுவதும் ஏதாவது ஒரு வழியில் அடைந்து நிம்மதி அடையலாம் என்று சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ளது. மார்பளவுக் கடனையும் தீர்க்கும் மைத்ர முகூர்த்தம் - கால விதானத்தை அடிப்படையாகக் கொண்டு கோள்களின் இயக்க நிலைப்படி கணிக்கப்பட்டுள்ளது.
கடன் தீர்ப்பதற்கு வேண்டிய காலத்திற்கு மித்ர முகூர்த்தம் (மித்ர-நட்பு) நமக்கு சாதகமாகச் செயல்படும் நேரம் என்று பெயர். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்ற பழமொழிக்கேற்ப, மற்றவர்களை விட்டு சிபாரிசும், மற்ற துர்பிரயோக மார்க்கமும் தேடாமல் நேரடியாகக் கடன் கொடுத்தவரிடமே ஒரு சுபவேளையில் நேரில் சென்று வாங்கிய கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை இன்முகத்துடன் திருப்பிக் கொடுத்து வரல் வேண்டும்.
மித்ர முகூர்த்தம் என்று சொல்வழக்கில் இருந்தது மாறி மைத்ர முகூர்த்தம் என்று வந்ததாக வருண பரிகார விளக்க விதி சொல்கிறது. பொதுவாகக் கணக்கிட்டுக் கூறும் மைத்ர முகூர்த்தம் என்றும் தனிநபர்களுக்குக் கணக்கிட்டுக் கூறும் மைத்ரே முகூர்த்தம் என்றும் இருக்கிறது.
இதன்படி இந்திய தேசத்தில், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரா, கேரளா, ஸ்ரீலங்கா, மொரிஷியஸ், அந்தமான், லட்சத்தீவுகள் ஆகியவற்றுக்கு ஒன்றாக இருக்கும். நேர வித்தியாசம் வருவதால் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு சுமார் 2 மணி நேரம் வித்தியாசப்படுவதால், தொலைத் தொடர்பு வழி தொழிலில் கடன் வைத்திருப்போர் இந்திய தேச நேரப்படி கணக்கிடாமல் அந்நாட்டு நேரத்தில் மட்டும் கடன் தீர்க்க வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள ஒரு கம்பெனியிடம் இந்தியா கடன் வாங்கி இருந்தால், அவர்களது பகல் பொழுதில் உள்ள மைத்ர முகூர்த்த நேரத்தில் தான் கடன் அடைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 10.15 மணி முதல் 12.15 மணி வரை இந்த கடன் அடைக்கும் நேரம் வந்தால் சனி இரவு 10.30 மணிக்கு கடன் தொகையை ஆன்லைனில் கட்டி விடலாம்.
பொதுவான மைத்ர முகூர்த்த நேரங்கள்..............
இந்த நேரங்களை குறித்து வைத்துக் கொண்டு அந்த நேரத்தில் மூன்று பேராகச் செல்லாமலும், வெவ்வேறு கம்பெனி, வங்கிகளுக்குச் செலுத்த வேண்டுமாயின் வெவ்வேறு மைத்ர முகூர்த்த நேரங்களைப் பயன்படுத்த வேண்டும். உங்களுக்குப் பயன்படக்கூடிய இந்த ஆண்டின் மைத்ர முகூர்த்த நேரங்கள்.
28. ஜன- திங்கள் காலை 9 மணி முதல் 10.40 மணி வரை.
10.பிப்- ஞாயிறு பகல் 1.40 முதல் 3.40 மணி வரை.
15. பிப்- வெள்ளி காலை 8.30 மணி முதல் 11.45 மணி வரை.
23. பிப்- சனி காலை 9.15 மணி முதல் 11.30 மணி வரை. மதியம் 3.30 மணி முதல் 5.45 மணி வரை.
28. பிப். புதன் காலை 8.40 மணி முதல் 11.45 மணி வரை.
13. மார்ச்- புதன்கிழமை காலை 11.05 மணி முதல் 11.15 மணி வரை.
31. மார்ச்- ஞாயிறு காலை 8.10 மணி முதல் 11.15 மணி வரை. இரவு 9.05 மணி முதல் முதல் 11.10 மணி வரை.
05. ஏப்ரல்- வெள்ளி காலை 9 மணி முதல் 10.35 மணி வரை.
11 ஏப்ரல்- வியாழன் காலை 6.10 முதல் 8.30 வரை, மாலை 3 மணி முதல் 5.10 மணி வரை.
இந்த நேரங்களில் பஞ்சாங்கம் அனுஷ்டிப்போரது கணக்குப்படி. சற்றே நேரங்கள் மாறுபடலாம். மைத்ர முகூர்த்த நேரத்தைக் கணக்கீட்டுக் கொள்பவர்கள் சுமார 6 மாத காலங்களுக்கு பட்டியல் தயார் செய்து கொண்டு அதன்படி கடன்களை அடைக்கத் தொடங்கினால் எப்படிப்பட்ட பெரிய கடனும் 6 மாதங்களிலிருந்து ஒரு வருடத்திற்குள் அடைந்துவிடும்.
தனிநபர்கள் தங்கள் கடனை அடைக்க அணுகூலமான- மைத்ர முகூர்த்தங்கள்...............
வாஸ்து நேரத்திற்கு எப்படி ராகு காலம் எமகண்டம் விதி விலக்கோ அதுபோல மைத்ர முகூர்த்த நேரத்திற்கும் விதிவிலக்கு உண்டு.
மேஷம்- வியாழன் காலை 9 முதல் 10 வரை
ரிஷபம்- வெள்ளி காலை 8 முதல் 10 வரை
மிதுனம்- புதன் காலை 7 முதல் 9 வரை
கடகம்- திங்கள் மாலை 4 முதல் 6 வரை
சிம்மம்- ஞாயிறு காலை 11 முதல் 12.30 வரை
கன்னி- வெள்ளி மாலை 5 முதல் 6 வரை
துலாம்- சனி காலை 10 முதல் 12 வரை
விருச்சிகம்- வியாழன் மாலை 3 முதல் 5 வரை
தனுசு- செவ்வாய் காலை 10 முதல் 12 வரை
மகரம்- சனி காலை 3 முதல் 10 வரை
கும்பம்- திங்கள் மாலை 3 முதல் 5 வரை
மீனம்- வியாழன் காலை 3 முதல் 10 வரை
கடன்களைத் தீர்க்க மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். நேரத்தைப் பயன்படுத்தியே அமெரிக்க கோடீஸ்வரர் ராக்பெல்லர் முன்னுக்கு வந்தார். பிரபல அமெரிக்க கோடீஸ்வரர் கசோகி- சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததால் செல்வந்தராக இருக்கிறேன் என்றார். ஆம்! நேரத்தை வகுத்து எடுத்து சரியான மைத்ர முகூர்த்தத்தை பயன்படுத்துங்கள் வெற்றி காணுங்கள்.
உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் உண்டாகட்டும்.
Yours Happily
Dr.Star Anand ram
Happy money Magnet & Law Attraction Consultant
Coimbatore
Cell -9790044225
No comments:
Post a Comment