தாயார் மஹா லட்சுமி வழிபாடு !
தாயார் மஹா லட்சுமி வழிபாடு !
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இதய கமலத்தில் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும்தாயார் மஹா லட்சுமி தேவியை போற்றி இந்த பதிவை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் : தாயார் மஹா லட்சுமி குடிகொண்டு இருக்கும் இடங்களில் அணைத்து ஐஸ்வர்யமும் , சகல செல்வங்களும் நிச்சயம் குறைவின்றி நிறைந்திருக்கும் இதில் எவ்வித சந்தேகமும் இல்லை , அப்படியெனில் தாயார் மஹா லட்சுமி எங்கு நிரந்தரமாக குடிகொண்டு அருள் புரிந்து நலம் தருகிறாள் , எம்பெருமானின் இதய கமலத்தில் , அந்த இதய கமலம் எதை போன்றது ,பரிசுத்தமான கருணையும் அன்பும் கொண்டது . அதுமட்டுமா தம்மை மார்பில் எட்டிஉதைத்த பக்தனுக்கும் கருணை தந்த இதயம் அல்லவா அது ?
தாயார் மஹா லட்சுமி நிரந்தரமாக குடிகொண்டு இருக்கும் எம்பெருமானின் இதயம் குளிர்மை நிறைந்த இடமாகும், என்பே அங்கு தாய் மஹா லட்சுமி விரும்பி நிரந்தரமாக ஜீவிதம் பெறுகிறாள், தாய் மஹா லட்சுமி குணம் சிறு குழந்தையின் தன்மையை போன்றது , எங்கு அன்பும் பாசமும் அதிகம் உள்ளதோ அந்த இடத்தில் தாய் மஹா லட்சுமி நிறைந்து இருப்பாள், அப்படி பட்ட நிரந்தரமான ஓர் இடம் எம்பெருமானின் இதய கமலமே .
நமது முன்னோர்கள் இந்த சூட்சம விஷயங்களை கடவுள் வழிபாடுகள் மூலம் நமக்கு தெளிவாக உணர்த்தினார்கள் , நாம்தான் இதை இன்னும் புரிந்து கொள்ள வில்லை, ஒரு குடும்பத்தில் புதிதாக திருமணம் ஆனா தம்பதியருக்கு , முதலில் பிறக்கும் குழந்தை பெண்ணாக அமைந்தால் அந்த குழந்தையை தாயார் மஹா லட்சுமி , ஆகவே பாவித்து அதிக பாசத்தையும் , அன்பையும் கொடுத்து செல்லாமாக வளர்த்தனர் , இதானால் குழந்தையின் வடிவில் தெய்வம் வந்து நின்று அந்த குடும்பத்தை காத்து அருள் புரிந்தது என்பது அசைக்க முடியாத முன்னோர்களின் நம்பிக்கை , ஒருவகையில் முதன் முதலாக பெண் குழந்தையை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்களே .
எப்படி தாயார் மஹா லட்சுமி அன்பு , கருணை , பாசம் , குளிர்மை நிறைந்த பகவானின் இதய கமலத்தில் நிரந்தரமாக உள்ளாரோ , அது போல் நமது இல்லங்களிலும் , உள்ளங்களிலும் குடியிருக்க வேண்டுமெனில் நமது இல்லமும் , உள்ளமும் பரிசுத்தமானதாகவும் , அன்பு , கருணை , பாசம் , குளிர்மை நிறைந்த இடமாகவும் இருப்பது அவசியம் .
எவருடைய இல்லங்களிலும் , உள்ளங்களிலும் வெஞ்சினம் , கோபம் , வஞ்சகம் , பொய், கபடம், அமைதியின்மை ,போன்ற நிலைகளில் இதயம் தீ போல் எரிந்து கொண்டு இருக்கிறதோ,
அங்கு தாயார் மஹா லட்சுமி தனது பாத கமலங்களை கூட வைப்பதில்லை, ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இதை உணர்வது மிக அவசியம் .
ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகிய எட்டு தேவியரே அஷ்ட லட்சுமிகள் என போற்றப்படுகின்றனர். இவர்களது ஒட்டுமொத்த அம்சமானமகாலட்சுமியை மன சுத்தத்துடனும் பய பக்தியுடனும் விரதமிருந்து வழிபடுவோம். செல்வ செழிப்பு, நில புலன்கள் வாங்கும் யோகம், கல்விச் செல்வம், அடுத்தவர்கள் மீது கருணையும் இரக்கமும் காட்டுகின்றன மன வளம், புகழ், அமைதியான வாழ்வு, மகிழ்ச்சி, தைரியம் ஆகிய அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வோமாக.
நாம் அனைவரும் எம்பெருமானின் இதய கமலம் போல் அன்பு , கருணை , பாசம் , குளிர்மை , மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் இனி வரும் காலங்களில் இருப்போம், தாயார் மஹா லட்சுமி அணைத்து
ஐஸ்வர்யமும் , 16 வகை செல்வ வளங்களையும் நம் அனைவருக்கும் தந்து அருள் புரிவார் .
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment