உங்கள் மகிழுந்து (CAR) திருடுபோனால் எளிதில் கண்டுபிடிக்க யோசனை, ட்ராக்கிங் கருவிகளுக்காக ஆயிரக்கணக்கில் செலவு அவசியமில்லை!
இன்றைய சூழலில் #மகிழுந்து (CAR) என்பதுவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் “சொந்தமாக வீடு” என்ற கனவு இப்போது “சொந்தமாக ஒரு மகிழுந்து (CAR)” என்றாகிவிட்டது! அதே சமயம் CAR திருட்டுக்களும் அதிகரித்துவிட்டது! மகிழுந்து (CAR) உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தை பாதுகாக்க செக்யூரிட்டி ரிமோட் அலாரம், ஜிபிஎஸ் ட்ராக்கிங் டிவைஸ் போன்றவற்றிற்காக அதிகம் செலவழிக்கும் கட்டாய சூழல் ஏற்ப்பட்டுள்ளது. சந்தையில் “செக்யூரிட்டி ரிமோட் அலாரம்” சுமார் ரூ.3,000/- இருந்து கிடைக்கிறது, ஜிபிஎஸ் ட்ராக்கிங் டிவைஸ் ரூ.4,500/- இருந்து கிடைக்கிறது. இது 25 KMPL கொடுக்கும் ஒரு சிறிய ரக கார் வாங்கி அதற்காக மாத தவணை கட்டிக்கொண்டு, அதற்கு எரிபொருள், பராமரிப்பு செலவுகள் செய்துகொண்டு குடும்ப செலவுகளையும் பார்த்துக்கொண்டு இருக்கும் நடுத்தர குடும்பம் உடனே இதுபோன்ற சாதனங்களை வாங்கி பொருத்துவது என்பது சிறிது சிரமமான காரியம்தான். அதே சமயம் பாதுகாப்பு என்பதுவும் அவசியம்தான்! ஆக செலவு கம்மியாக என்ன செய்யலாம் என்று யோசித்தேன் அப்போது தோன்றியதுதான் இந்த ஐடியா... உங்கள் வீட்டில் உள்ள பழைய நல்ல நிலையில் இயங்கும் ஒரு கைபேசி (MOBILE PHONE) அல்லது நோக்கியா நிறுவன தயாரிப்பில் ரூ.1000/-க்கும் கிடைக்கிறது அதிக நேரம் சார்ஜ் நிக்கும் கைபேசி அதனை வாங்கிக்கொள்ளுங்கள், பிறகு நீங்கள் வசிக்கும்., செல்லும் பகுதிகளில் அதிகம் கவரேஜ் கிடைக்கும் நெட்வொர்க்கின் SIM கார்டு வாங்கி இணைத்திடுங்கள். பிறகு அந்த கைபேசியில் ரிங்டோன் மற்றும் வைபரேசன் ஆகியவற்றை சைலென்ட்டில் வைத்து, கைபேசியை உங்கள் வாகனத்திற்குள் யாருக்கும் தெரியாமல் ஒரு ரகசியாமான இடத்தில் வைத்திடுங்கள். அந்த கைபேசியின் எண்ணை யாருக்கும் கொடுக்க வேண்டாம். அவ்வப்போது அந்த கைபேசியை எடுத்து சார்ஜ் போட்டு மறுபடியும் அதே இடத்தில் வைத்திடுங்கள். கைபேசி இயங்கிக்கொண்டுதான் இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொள்ளுங்கள்.
சரி இதெல்லாம் எதற்கு? இது எப்படி கார் திருடுபோனால் கண்டுபிடிக்க உதவும் என்கிறீர்களா?? ஒரு வேலை உங்கள் வாகனம் திருடுபோனால், உடனே அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று உங்கள் வாகனம் திருடு போனதை புகார் செய்யுங்கள், கூடவே வாகனத்திற்குள் இருக்கும் கைபேசியின் எண், கைபேசியின் IMEI எண் ஆகியவற்றை கூறுங்கள்.. பிறகு உங்கள் வாகனம் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை எளிதில் ட்ராக்கிங் செய்து கண்டுபிடித்திடலாம்...
சரி இதெல்லாம் எதற்கு? இது எப்படி கார் திருடுபோனால் கண்டுபிடிக்க உதவும் என்கிறீர்களா?? ஒரு வேலை உங்கள் வாகனம் திருடுபோனால், உடனே அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று உங்கள் வாகனம் திருடு போனதை புகார் செய்யுங்கள், கூடவே வாகனத்திற்குள் இருக்கும் கைபேசியின் எண், கைபேசியின் IMEI எண் ஆகியவற்றை கூறுங்கள்.. பிறகு உங்கள் வாகனம் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை எளிதில் ட்ராக்கிங் செய்து கண்டுபிடித்திடலாம்...
idea from - தும்பைப்பட்டி.கே.பாலன்பாலாஜி,
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்..
yours Happily
www.v4all.org
No comments:
Post a Comment