Showing posts with label selling skills trainer in erode. Show all posts
Showing posts with label selling skills trainer in erode. Show all posts

Friday, July 10, 2015

பாம்பன் சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம்.

பாம்பன் சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம்.
(share) செய்யுங்கள்)
நாம் காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.
துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும். இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.
நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அதற்கு பொருள் செலவு அதிகம். செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.
வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.
அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.
அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம்.
அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று கண்டிப்பாக உடலுறவு கூடாது.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
Mantric   மாந்திரீகம்'s photo.

Tuesday, June 23, 2015

HAPPY SELLING workshop

Everyone in business has heard the old saying: 80 percent of our sales are produced by 20 percent of our people. Unfortunately, few seem to know what the 20 percent are doing that the 80 percent are not. 

Here's the TRUTH - The 20 percent are using a system and the 80 percent are not. 

And we've all seen such systems produce 100 percent to 500 percent increases in sales in almost no time! 

HAPPY SELLING -  Sales & Prospecting Persuasion & Influence Program is that system!

Dr.Star Anand  walk you step-by-step through the process he uses to consistently and effortlessly make sale after sale.

This system has been shared with thousands of people all over the india to help them become more persuasive and produce better results. This program will help you to generate more leads, set more appointments, effortlessly handle any objection with confidence and ease.

In this 17-Part Sales & Prospecting Persuasion & Influence Program You will learn:

- How to have the mindset of an influence master
- How to generate unlimited leads
- How to set unlimited appointments
- How to build trust and rapport
- How to identify customer needs
- How to share the benefits of your product or service
- How to close
- How to handle every objection
- How to follow up
- How to break out of a sales slump
- How to expand your comfort zone

Do you want to dramatically increase your results now? 

Are you ready for a sales breakthrough?

Dr.Star Anand Ram  is a Master Sales Trainer who has taught his proven sales systems to thousands of professionals around the India.

In this program, We will teach you what to do, to increase your results and breakthrough to success!

For details visit - www.v4all.org call- 9790044225 

Sunday, April 12, 2015

எண்ணம் ஆராய்தல்

எண்ணம் ஆராய்தல்

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்

எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை – நாமே விரும்பி, முயன்று – மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை – விழிப்புடன் – ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
“எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்”.
எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.
தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள்! வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.
அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.
நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.
நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.

எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.
எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது?
பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.–

யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
urs - www.v4all.org

Monday, November 10, 2014

“உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

“உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?
.
.
ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.
.
அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.
.
எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.
.
“என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?” என ஆசையாகக் கேட்டார். “இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை” என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.
.
சிறிது நேரத்திற்குப் பிறகு, “இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்” என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.
.
அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.
.
மன்னர் மனம் தளராமல், “சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?” என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.
.
“மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை” என்றார் முதியவர். மன்னரும் சரி என்று “ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்” என்று கட்டளை பிறப்பித்தார்.
காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
.
“மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை” என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது !
.
அப்போட்டியில் வெற்றி பெற்றது இவரது ஓவியம்தான் !
.
மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?” என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.
.
“மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்” என்று அந்த முதியவர் கூறினார்.

“உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?
.
.
ஒரு மகாராஜா தன் அரண்மனையில் மிகச் சிறந்த சேவல் ஓவியத்தை வைக்க நினைத்தார். மன்னனின் ஆசை காட்டுத் தீ போல் எல்லா ஊரிலும் பரவியது. ஏத்தனையோ ஓவியங்கள் வந்தும் அவற்றில் மன்னனுக்கு முழுத் திருப்தி ஏற்படவில்லை. மற்ற நாடுகளில் உள்ள ஓவியர்களுக்காக ஒரு போட்டி வைத்தார் மன்னர்.
.
அவரது ஆசை போல், மற்ற நாட்டு ஓவியர்கள் வரைந்த படங்கள் மன்னரின் பார்வைக்காக வைக்கப்பட்டன. மன்னர் தான் குழந்தையாக இருந்த போது தனக்கு ஓவியம் கற்றுக் கொடுத்த அந்த வயதான ஓவிய ஆசிரியரை இப்போட்டியின் நீதிபதியாக நியமித்தார்.
.
எல்லா ஓவியங்களையும் பார்த்த அந்த வயதான ஆசிரியர் மீண்டும் ஒருமுறை ஓவியங்களைப் பார்த்தார். கன்னத்தைத் தடவிய படியே நடந்த அவரிடம், மன்னர்.
.
“என்ன சிறந்த சேவல் ஓவியத்தைத் தேர்வு செய்து விட்டீர்களா?” என ஆசையாகக் கேட்டார். “இந்தப் போட்டிக்கு இதில் எந்த ஓவியமும் தகுதி ஆனது இல்லை” என்றார். ஆசிரியர் அமைதியாக, எல்லோரும் வாயடைத்துப் போனார்கள்.
 .
சிறிது நேரத்திற்குப் பிறகு, “இந்த ஓவியங்கள் வைத்த அறையில், சேவல்களை விடுவோம். ஒரே இனத்தைச் சேர்ந்த மற்ற சேவலைப் பார்த்ததும், சேவலுக்குச் சண்டை போடத் தோன்றும். அப்படி எந்தச் சேவல், எந்த ஓவியத்தைப் பார்த்துச் சண்டை போடத் துவங்குகிறதோ, அந்த ஓவியம்தான் மிகச் சிறந்த ஓவியம் என்று முடிவு செய்வோம்” என்றார் அந்த ஓவிய ஆசிரியர்.
.
அவரது வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாமல், மன்னர் அந்த அறையில் நிறைய சேவல்களைக் கொண்டு வந்து விட கட்டளை பிறப்பித்தார். ஆனால் வந்த சேவல்கள் எந்த ஓவியத்தையும் பார்த்துச் சண்டை போடாமல், நேரே வெளியே வந்தன.
.
மன்னர் மனம் தளராமல், “சேவல்களைச் சண்டை போடத் தூண்டும் அந்த ஓவியத்தை நீங்கள் ஏன் வரையக்கூடாது?” என ஓவிய ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.
.
“மன்னர் உங்கள் சித்தம். ஆனால் எனக்கு ஆறு மாத கால அவகாசம் தேவை” என்றார் முதியவர். மன்னரும் சரி என்று “ஆறு மாதம் கழித்து, இதே அறையில் இப்போட்டி நடக்கட்டும்” என்று கட்டளை பிறப்பித்தார்.
காலம் சுற்றியது. சரியாக ஆறு மாதம் ஆனதும், அதே அறையில் எல்லா ஓவியர்களும் மீண்டும் கூடினார்கள். ஆனால் அந்த முதியவர் கையில் எந்த ஓவியத்தையும் கொண்டு வரவில்லை. மன்னர் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
.
“மன்னா ! இப்போது இங்கேயே அரை மணியில் வரைகிறேன். எனக்கு அதற்கான உபகரணங்கள் தேவை” என்று முதியவர் கூறியதும், அனைத்தும் வந்து சேர்ந்தன. ஓவியர் கடகடவென ஓவியத்தை வரைந்தார். பிறகு அதை மற்ற ஓவியங்களோடு வைத்தார். மீண்டும் அந்த அறைக்குச் சேவல்கள் அனுப்பப்பட்டன. எல்லோரும் மிக ஆவலாகக் காத்திருக்க, அவரது ஓவியத்தைப் பார்த்து ஒரு சேவல் அதில் வரையப்பட்டிருந்த சேவலை நிஜ சேவலாக நினைத்துச் சண்டைக்குப் போனது ! 
.
அப்போட்டியில் வெற்றி பெற்றது இவரது ஓவியம்தான் !
.
மன்னனுக்கு ரொம்ப சந்தோஷம். “உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? ஏன் ஆறு மாத காலம் உங்களுக்குத் தேவைப்பட்டது? இருப்பினும், நீங்கள் அப்போது எதுவும் வரையாமல், கடைசியில் வரைய அரைமணி நேரம் ஏன் கேட்டீர்களா?” என மன்னர் அந்த முதியவரிடம் கேட்டார்.
.
“மன்னா, கடந்த ஆறு மாதமாக நான் கோழி, சேவல்களோடு வாழ்ந்தேன் . அவை எப்படி உணவு உண்கிறதோ, அதுபோன்றே நானும் உணவு உட்கொண்டேன். அவை எப்படி நடக்கிறதோ அது போலவே நானும் நடந்தேன். அவை எப்படி தூங்குகிறதோ அது போலவே நானும் தூங்கினேன். நானே கோழியாக ஒன்றிப்போய் கோழியாகவே மாறி விட்டேன். அதற்குப் பிறகுதான் நான் அந்த சேவல் படத்தை வரைந்தேன்” என்று அந்த முதியவர் கூறினார்.
.
ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.
.
அலுவலக வேலையாக இருந்தாலும், வீட்டு வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் எடுத்த காரியத்தோடு நாம் ஒன்றிப் போனால், வெற்றி நிச்சயம்.
.
ஆகவே ஒரு காரியத்தில் ஒன்றிப் போதல் என்பது மிகவும் அவசியம். வெற்றியின் ரகசியம் ஈடுபட்ட காரியத்தில் ஒன்றிப் போவதுதான். அது எந்தக் காரியமாக இருந்தாலும் முழு ஈடுபாடும், ஒன்றிப் போவதும் முக்கியம்.
.
அலுவலக வேலையாக இருந்தாலும், வீட்டு வேலையாக இருந்தாலும் படிப்பாக இருந்தாலும் எடுத்த காரியத்தோடு நாம் ஒன்றிப் போனால், வெற்றி நிச்சயம்.

உங்கள் பிசினஸ் வளர்சிக்கு அணுகவும் - 9790044225 

Saturday, November 8, 2014

கேட்டதை தருபவன் கடவுள் அல்ல

கேட்டதை தருபவன் கடவுள் அல்ல

மண்டியிட்டேன் அழுதேன் தொழுதேன் கரம்கூப்பி கண்ணீர் மல்கிட என் வேண்டுதலை அவரிடம் தெரிவித்தேன்

ஊரிலுள்ளோர் துயரமெல்லாம் அவருக்குத் தெரிகிறது

என் கஷ்டம் மட்டும் அவர் கண்ணில்பட மாட்டேன் என்கிறது 


என்னைப் பொருத்தவரை கடவுள் செவிடு குருடு இதயமே இல்லாத கற்சிலை

என்று நாமும் நம்மில் பலரும் பல சமயங்களில் விரக்தியின் எல்லைக்கே சென்று அங்கலாய்க்கிறோம்

இது சரியான அனுகு முறையா?

மின்சார சக்தி மனிதனுக்கு பல விதத்திலும் பயன் தருகிறது.

ஒரு இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து விசிறியாக சுத்துகிறது.

வேறொரு இயந்திரத்திலோ நீரை இறைத்து தருகிறது.

தண்ணீரை சூடாக்கவும், காற்றை குளிர வைக்கவும் மின்சாரம் பயன்படுகிறது.

அதே போல தான் கடவுள்.

அறிவை வேண்டும் போது கலைமகளாகவும்,

செல்வத்தை வேண்டும் போது அலைமகளாகவும்,

வீரத்தை வேண்டும் போது மலைமகளாகவும் காட்சி தருகிறாள்.

முக்தி மட்டும் தந்தால் கடவுளின் பேரருளுக்கு இது தான் எல்லை என முடிவு கட்டியது போல ஆகிவிடும்.

கடவுளின் கருணை எல்லையற்றது. அவரிடம் எது வேண்டுமென்றாலும் கேட்பதற்கு மனிதனுக்கு உரிமை உள்ளது.

ஆனால் கேட்டதை எல்லாம் தந்து விட வேண்டுமென்ற அவசியம் கடவுளுக்கு கிடையாது.

காரணம் அவர் கருணை நிரம்பியவர் மட்டுமல்ல அறிவு மயமானவரும் ஆகும்.

எதை எப்போது தரவேண்டுமென்பது அவருக்கு நன்றாக தெரியும்.

ஒரு குழந்தை பனிகாலத்தில் ஐஸ்கீம் கேட்டாலோ வெயில் காலத்தில் கம்பளி சட்டை
கேட்டாலோ பொறுப்பான பெற்றோர்கள் கொடுத்து விட மாட்டார்கள். கடவுளும்
அப்படி தான்.

Thursday, November 6, 2014

கணபதி ஹோமம்: ஏன், எதற்கு, எப்படி?

கணபதி ஹோமம்: ஏன், எதற்கு, எப்படி?


பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.
நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் அநாயாசமாக அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களாக வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா... என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள். அவற்றில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம்.
தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி - நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார். எப்பேற்பட்ட தவறு இது என்று விநாயகரின் எதிரே தலைகுனிந்து மண்டியிட்டார். இது ஈசன் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு உலகிற்குச் சொன்ன பாடமாகும். ஈசனே வணங்கும் கணபதியை வணங்குவது என்பது ராஜபாட்டையில் நடந்துபோவது போல.
கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறாமல் நேர்ப்பாதையில் செல்லவும், பாதையில் இருக்கும் தடைகள் நீங்கவும் செய்யப்படுவதே கணபதி ஹோமமாகும். அஸ்திவாரத்தை பலமாக்குவதுபோல ஆதி சக்தியின் அருளைப் பெறுவதற்கான முறையே இந்த ஹோமம். கணபதி ஹோமத்தை செய்வதாலேயே மற்றெல்லா ஹோமத்தையும் செய்யும் தகுதியை ஒருவன் பெறுகிறான். இதற்கு எல்லாவற்றிற்கும் அடிப்படையாக சிரத்தை என்கிற சக்தி வெண்டும். ஆம், சிரத்தையோடு இருத்தல் என்பதே சக்தியின் குவிப்புதான். எனவே, அதிகூர்மையாக பணிவோடு மாபெரும் சக்தியை வேண்டுகிறோம் என்கிற விநயத்தோடு கூடிய மனப்பாங்கு வேண்டும். ஏதோ சொல்கிறார்கள் நாமும் செய்து வைப்போமே என்கிற அசிரத்தையும் அலட்சியமும் இருப்பின் எதையுமே கிரகிக்க முடியாது. இந்தக் காயமெனும் பாத்திரத்தை காலியாக அகங்காரமில்லாது வைத்துக் கொண்டால் விநாயகன் பீடம் போட்டு உள்ளுக்குள் அமர்வான். பிறகு உங்கள் அகத்தில் அவனொரு ஞான வேள்வி நிகழ்த்துவான்.
மகாகணபதி ஹோம மந்திரங்களை உருவாக்கியவர் கனகரிஷி. ஹோமமாகச் செய்தவர் காஷ்யப மகரிஷி. அருகம்புல்லின் மகத்துவத்தை எல்லோரையும் அறியச் செய்தவர்.
கணபதி ஹோமத்தில் முதலில் அனுக்ஞை. அதாவது பெரியோர்களின் அனுமதி ஆசிகளைப் பெறுவது. அதாவது குடும்பத்துடன் சேர்த்து எனக்கு எல்லாத் தடையூறுகளும் நீங்குவதின் மூலம் நினைத்துள்ள எண்ணம் சித்தித்துப் பயனடையும் பொருட்டு மகாகணபதி ஹோமம் செய்வதற்கு எனக்கு தகுதி சித்திக்கும்படியாக அனுக்கிரகம் செய்ய பிரார்த்திக்கிறேன் என்று தொடங்குகிறது. இதற்குப் பிறகு வைதிகர்களின் வழிகாட்டுதலின்படி மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொன்றாக செய்ய வேண்டும். அதில் முதலில் ஹோமத்தைச் செய்பவர்கள் தங்கள் பெயர், மனைவி, பிள்ளைகள், பேரக் குழந்தைகள் எல்லோரின் பெயரையும் பிறந்த நட்சத்திரங்களோடு சொல்லி ஹோமத்தைச் செய்யும் தகுதியை வழங்க அனுமதி பெற வேண்டும். தர்ப்பைகளை காலுக்குக் கீழ் போட்டுக் கொண்டு, விரலிடுக்குகளில் பவித்ரமாக அணிந்து மனைவியோடு அமர்ந்து மந்திரங்களை சொல்லி மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்துக் கொண்டு விக்னேஸ்வரரை பூஜிக்க வேண்டும்.
அடுத்ததாக சங்கல்பம் அதாவது உறுதிமொழி. இந்த இடத்தில் எங்களுக்காக நடத்தப்படும் இந்த ஹோமத்தின் சகல காரியங்களையும் செய்ய இவர்களை ஆசார்யர்களாக வரித்துக் கொள்கிறேன் என்று ஹோமத்தை நடத்தி வைக்க வந்திருக்கும் அந்தணர்களை வணங்க வேண்டும். சங்கல்பத்தின்போது பகவானின் நாமத்தை அதாவது ராம... ராம... என்று ஆத்மப்பூர்வமாக சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு புண்யாகவாஜனம். சுத்தமான தரையில் பசுஞ் சாணத்தால் மெழுகி நெல்லைப் பரப்பி அதன் மீது வாழை இலை வைத்து அதில் சமமாக அரிசியைப் பரப்ப வேண்டும். அரிசியின் மையத்தில் தாமரைப்பூவை வரைய வேண்டும். பூவின் நுனியில் தர்ப்பைகளை வைத்து பூரண கும்பத்தை நீர் நிரப்பி அதில் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூவை சேர்க்க வேண்டும். அதன் மீது மாவிலைக் கொத்து, மஞ்சள் தடவிய தேங்காயை வைக்க வேண்டும். இதை வைக்கும்போதே அதற்கென்று உள்ள மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
இதையெல்லாம் முடித்த பிறகு ஹோம குண்டம் அமைத்து எல்லா தேவதைகளையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். அதாவது எல்லா தேவதைகளையும் வரவழைத்து உயிரூட்டுவதாகும். இதற்குப் பிறகு மகா கணபதி ஹோமம் ஆரம்பிக்கிறது. அவருக்கான மந்திரங்களைச் சொல்லி பதினாறு வகையான உபசாரங்களை செய்ய வேண்டும். நெய்யை ஹோம அக்னியில் வார்க்க வேண்டும். முதலில் நெய்யினாலும், அஷ்ட திரவியங்களாலும் பிறகு தேங்காய் மூடியில் மூன்று கண்கள் இருக்கும் முடியை முதலில் போட்டு ஹோமம், அருகம்புல்லை இரண்டிரண்டாக நெய்யில் தோய்த்துப் போட்டு ஹோமம் அதைத் தொடர்ந்து நெல்லை விட்டு ஹோமம் என்று செய்யலாம். இதைத்தவிர நூறு, ஆயிரம் என்று பல எண்ணிக்கைகளில் மோதகங்களை செய்ய வேண்டும். பழங்கள், ஆலங்குச்சி, சீந்தில் கொடி என்று பல்வேறு விஷயங்களை ஹோமத்தில் சேர்க்கலாம்.
மேலே சற்றே சுருக்கமாக் கூறிப்பிட்டிருக்கிறேன். ஆனால், அந்தணர்களை வைத்துச் செய்யும்போது மிக மிக விஸ்தாரமாக கூடச் செய்யலாம். செய்ய வேண்டும் என்கிற ஆவலைத் தூண்டவே இக்கட்டுரை.
மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அந்த ஹோம குண்டத்தை யானையின் நான்கு வலிமையான கால்களாக நினைத்துக் கொள்ளுங்கள். கால்களை அசைக்காமல் ஸ்திரமாக நின்று கொண்டு யானை உடலையும், தும்பிக்கையையும், தலையையும், காதுகளையும் அசைப்பதாக பாவனை செய்து கொண்டு அக்னியை பாருங்கள். மந்திரங்களோடு சேர்த்து செய்யப்படும் அக்னியின் அசைவுகள் யானை அசைவது போன்றிருக்கும். மகாகணபதி ஹோமத்தின் மையமே உங்களுக்குள் இருக்கும் மூலாதார சக்தியைத் தூண்டுவதுதான். அசைவற்ற மூலாதாரம் என்கிற கணபதி அசைவிக்கவே இந்த ஹோமம். இல்லையெனில் மனம் தாறுமாறாக அலையும். காற்றில் பறக்கும் தூசு போல இலக்கின்றி என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்கும். ஆனால், மூலாதாரம் விழித்துக் கொண்டால் மனம் ஒருமை பெறும். எண்ணங்களில் நேர்த்தியிருக்கும். தைல தாரை போன்று மனம் தெளிவாக அடுத்தடுத்து யோசிக்கும். வெறும் சிந்தனையோடு நில்லாமல் செயல் திறனிலும் உடல் வழியாக உழைக்க வைக்கும். காரணம் மூலாதாரத்தின் பூரணமான சக்தி அதை பிராண சக்தி என்று விதம் விதமாக கூறலாம். அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும்.
ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஹோமங்களைச் செய்யச் செய்ய சித்தத்தில் தெளிவையும் நம்மையும் அறியாமல் இறைவனை அடையும் ஒரு தாபத்தையும் அதிகரிக்கச் செய்யும். இல்வாழ்க்கையில் உள்ளபோதே பிரம்ம வஸ்துவை அடையும் விவேகத்தையும் அதிகரிக்கும். ஆத்மா யக்ஞேன கல்பதா என்பது ருத்ர வாக்கியம். யக்ஞேனத்தினால் ஆத்மா அடையப்படுகிறது என்பதே இதன் பொருள். இப்போது புரிகிறதா கணபதி சகல விஷயங்களிலும் எப்படி கரமருளி காக்கிறார் என்பது.
மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பார்கள். அத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்தால் சீரும் சிறப்போடும் வாழலாம் என்பது எளிமையான பேருண்மை. எப்போதுமே பேருண்மை சூரியனைப் போன்று பிரகாசமாக தெரியும். அதுபோலத்தான் ஆனைமுகனின் வழிபாடும்.

Thursday, October 30, 2014

கிருமிகளை அழிக்கும் மஞ்சள்

கிருமிகளை அழிக்கும் மஞ்சள்


How to get rid of wrinkles
இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் மஞ்சள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin ) எனும் வேதிப்பொருள் உண்டு. இதுவே மஞ்சளுக்கு நிறத்தை  தருகிறது. மஞ்சள் தனக்குள் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தமிழர் பாரம்பரியத்தில் மஞ்சளுக்கு மகத்தான இடம் உண்டு. வழிபாட்டில்  துவங்கி, உணவு, மருந்து, அழகுசாதனப் பொருள், கிருமிநாசினி என தமிழர் வாழ்வில் மஞ்சளையும் மருத்துவத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சித்த  மருத்துவத்தில் முக்கியப் பயன்பாட்டுப் பொருளாகவும் மஞ்சள் இருந்துள்ளது.

மஞ்சள் அழகு சாதனப் பொருளாக பெண்களால் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் முகத்திற்கு ஒருவித மினுமினுப்பையும்,  வசீகரத்தையும் தருகிறது. வாசனைப் பொடிகளிலும், வாசனைத் தைலங்களிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. சமையல் அறையில் மணக்கும் வசீகரம் விரலி  மஞ்சளுக்கே உரியது. மஞ்சள் தான் இருக்கும் இடத்தில் கிருமிகளை அழிப்பதுடன் நிறத்தால் அழகையும் தருகிறது.

ஒரு காலத்தில் நோய் வராமல் தடுப்பதற்காக வாசற்படிகளில் மஞ்சள் பூசுவது, வீடு முழுவதும் மஞ்சள் கரைத்துத் தெளிப்பது போன்ற பழக்கம் இருந்தது. சிறு  உடல் நலப் பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்பட்டது. மூக்கடைப்புக்கு மஞ்சளை சுட்டு அந்தப் புகையை மூக்கின் வழியாக இழுத்தால் குணமாகும். வேனல்  கட்டி, நகச்சுற்றி, வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு மஞ்சளை அரைத்து மாவுடன் கலந்து பாதிப்பு உள்ள இடத்தில் பற்றுப் போட வேண்டும்.

மஞ்சளையும் துணிக்குப் போடும் சோப்பையும் கலந்து கட்டிகளுக்குப் பூசினால் உடைந்துவிடும். அம்மை நோய் பாதிக்கப்பட்டால் மஞ்சளுடன் வேப்ப  இலைகளையும் அரைத்து பூசுவது வழக்கம். அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம். மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது.

இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, குடற்பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல்  வாய்ந்தது. நீரழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைப்பதோடு, சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தியும் மஞ்சளுக்கு அதிகமாக உண்டு. மஞ்சளை சுட்டு பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும். மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப்பதையும்  கட்டியாவதையும் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது. கலப்படமில்லாத மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான்.

சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்தும் பயன்படுத்தலாம். மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு,  வயிறு தொடர்பான நோய்களையும் போக்குகிறது. இறைச்சி வகைகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி,  சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, கர்ப்பப்பை சிக்கலுக்கு, மஞ்சள் பொடி  சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கிறது.

விரலி மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கடும் தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை  குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.மஞ்சள் பூசிக் குளிப்பதால் உடலில் தோன்றும் துர்நாற்றத்தை விரட்டலாம்.  மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசினால் படைகள், விஷக்கடிகள் நீங்கும். இவ்வளவு மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சளை  சமையல், அழகு சாதனம், மருந்து என தேவைக்கு ஏற்பட பயன்படுத்தலாம். வீட்டிலேயே எளிய முறையில் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் இனி மஞ்சளை  மறுப்பாரும் உண்டோ! 

வில்வத்தின் மகிமைகள் -



வில்வத்தின் மகிமைகள் -
மருத்துவ ரீதியாக பார்க்கப் போனால் ஆண்களின் விந்தணு நீர்த்த தன்மையை போக்கும். விந்தணு நீர்த்த தன்மை பிரச்சினை இருப்பவர்கள் வில்வ இலையை சாப்பிட்டாலே போதும்.அதற்காகத்தான், அந்த காலத்தில் பெருமாள் கோயிலுக்கும், சிவன் கோயிலுக்கும் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று சொல்வார்கள்.
ஏனென்றால் பெருமாள் கோயிலில் கொடுப்பது துளசி, சிவன் கோயிலில் கொடுப்பது வில்வம். இவை இரண்டுக்குமே அதீத சக்தி உண்டு.பிரசாதங்கள் என்று கோயிலில் கொடுப்பவை அனைத்துமே மூலிகைகள்தான். ராஜ ராஜன் காலத்தில் எல்லாம் மூலிகைகளால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் எல்லாம் உண்டு. சில கோயில்களில் எல்லாம் அபிஷேகங்கள் இருக்காது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள லிங்கம் மண்ணால் ஆனது என்றும் சொல்லப்படும். அதாவது மண்ணை மூலிகைச் சாறுகள், வில்வக் குழம்புகளை வைத்து செய்யப்பட்டது. அதனால்தான் அவற்றிற்கு அபிஷேகங்கள் செய்வதில்லை.
**
**
*வில்வத்தின் வடிவத்தைப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். மூன்றாகப் பிரிந்திருக்கும். சூலம் என்று எடுத்துக்கொடுக்கலாம். மூன்று தெய்வங்களை குறிப்பதாகவும், நங்கூரத்தின் வடிவிலும் இருப்பதாக கூறலாம். *
**
*சாதாரணமாக சிவனுக்கு எத்தனை ரத்தினம் அணிவித்தாலும், வில்வத்தால் பூஜை செய்தால் அதீத சக்தி கிட்டும். வில்வத்திற்கு அவ்வளவு மகிமை.*
* *
**
*மேலும் நாம் தினமும் வில்வ பொடியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் கிட்டும். *
**
*ரத்தத்தை சுத்திகரிப்பது, விந்தணு நீர்த்தத் தன்மை போன்ற பல பிரச்சினையை சீர் செய்யும். *
**
*அம்மன் கோயிலில் கொடுக்கப்படும் வேப்பிலைக்கும் அதிக மருத்துவ குணம் உள்ளது.வில்வத்தால் சிவனை அர்சிக்கும்போது, சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும், சிவனின் அருளைப் பெற முடியும் என்று சொல்லப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, வில்வ இல்லை அர்ச்சனை ஏழரை சனிக்கு சரியான பரிகாரம் கூட.*

Saturday, October 25, 2014

எல்லாமே அம்மாதான் !

எல்லாமே அம்மாதான் !



ஆதிபராசக்தியின்
திருவுருவ தோற்றமே சகல தேவர்களின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறதே
அதற்கான விளக்கம் என்ன? என்று சிலருக்கு தெரிவதில்லை

நமது இந்து மதத்தில் ஆறு பெரும் பிரிவுகள் உள்ளன என்று அனைவருக்கும் தெரியும். 










கணபதியை முழுமுதற் கடவுளாக சொல்லும் காணபத்தியம்,  முருகனை கொண்டாடும் கௌமாரம், சூரியனை வழிபடும் சௌரம்  சக்தியை தலைவியாக காட்டும் சாக்தம், சிவனை சரணடையும சைவம், திருமாலை வணங்கும் ஸ்ரீ வைஷ்ணவம் என்பன ஆறு பிவுகளாம்.

இதில் நடுநாயமாக உள்ள சக்தி தேவி திருமாலுக்கு தங்கை. சிவனுக்கோ மனைவி. கணபதிக்கும், கந்தனுக்கும் ஈன்ற தாய்.




சூரியனை உச்சி திலகமாக கொண்டவள் அன்னை ஆதி பராசக்தி எனவே தான் தாய்
தெய்வ வழிபாடு எல்லா வழிபாட்டு முறைக்கும் ஆதாரமாக இருக்கிறது.

சரி இதில் சகல தேவர்கள் எங்கே வருகிறார்கள்? என்று நீங்கள் கேட்கலாம். இதோ அதற்கு பதில்.

சிவபெருமானின் ஒளியிலிருந்து அன்னையின் முகம் உதயமானது.

அவளின் கார் கூந்தலோ எமதர்மனின் ஒளியிலிருந்து தோன்றியது.

உலகெல்லாம் உள்ள ஜீவன்களுக்கு ஞானப் பால் கொடுக்கும் அவளது திருமுலைகள் விஷ்ணுவிடம் இருந்து வந்தது.










தாய் அவளின் கொடியிடை இந்திர ஒளியிலும்,

முழங்கால்கள், தொடைகள் வருண ஒளியிலும்,

பிருஷ்டம் நிறுதியின் ஒளியிலும்,

கால்கள் பிரம்ம ஒளியிலும்,

கை, கால் மற்றும் விரல்கள் சூரிய ஒளியிலும்,

அஷ்டவசுகளின் ஒளி இருபது நககண்களாகவும்

பிரகாபதியின் ஒளி பற்களாகவும்,

அக்னி தேவனின் வெளிச்சம் மூன்று கண்களாகவும்,

சந்தியா தேவதையின் ஒளி புருவங்களாகவும்,

வாயு தேவனின் தேஜஸ் இரு செவிகளாகவும் அன்னை கொண்டுள்ளார்.

அப்படிப்பட்ட தாய் அவள் ஒருத்தியை வணங்கினாலே சகல தேவதைகளையும் வணங்கிய இன்பம் கிடைக்கும் என ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

Thursday, October 23, 2014

உங்கள் வாழ்வில் அடைய முடியாத ஆசைகளை உங்கள் குழந்தைகள் மூலம் அடைய நினைக்கிறீர்களா? உங்களுக்காகக் கலீல் ஜிப்ரானின் கவிதை இதோ :


உங்கள் வாழ்வில் அடைய முடியாத ஆசைகளை உங்கள் குழந்தைகள் மூலம் அடைய நினைக்கிறீர்களா? உங்கள் காலத்தின் சிறந்த படிப்பு அல்லது தொழில் என்ற உங்கள் அறிவின்படி குழந்தைகள் இதைத்தான் படிப்பது நல்லது, இந்த வேலை செய்வது தான் நல்லது என்று வற்புறுத்துகிறீர்களா?
உங்களுக்காகக் கலீல் ஜிப்ரானின் கவிதை இதோ :
‘உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல
அவர்கள் வாழ்க்கை தமக்கென்று வேண்டிய குழந்தைகள்
அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்: உங்களிடமிருந்தல்ல
அவர்கள் உங்களுடன் இருந்தாலும் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல
உங்கள் அன்பை நீங்கள் அவர்களுக்குத் தரலாம்
உங்கள் எண்ணங்களை அல்ல
அவர்களுக்கென்று தனிச் சிந்தனைகள் உண்டு
அவர்களின் உடல்களுத்தான் நீங்கள் பாதுகாப்பு தரமுடியும்
அவர்களின் ஆன்மாக்கள் நாளைய வீட்டில் வாழ்பவை
அங்கே நீங்கள் செல்ல முடியாது
உங்கள் கனவுகளிலும் கூட
அவர்களைப் போலிருக்க நீங்கள் முயலலாம் ஆனால்
அவர்களை உங்களைப் போல ஆக்கிவிடாதீர்கள்.
வாழ்க்கை பின் திரும்பிச் செல்லாது: நேற்றுடன் ஒத்துப் போகாது
நீங்கள் வில்கள் உங்களிடமிருந்து எய்யப்படும் உயிருள்ள அம்புகளே
குழந்தைகள்”
இயல்பான மனநிலை கொண்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மனதில் காயங்களை ஏற்படுத்தும் விதமாகத் திணித்தல், அடித்தல், உதைத்தல், அவமானப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
மனப்புண்கள்
ஆரம்பத்தில் தங்கள் பெற்றோரின் திணிப்பிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபடும் குழந்தைகளில் பலரும் சரணடைந்து விடுகின்றனர்.
இவ்வாறு பெற்றோரின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக வாழத் தொடங்கும் குழந்தைகள் முதலில் கோபத்தைக் காட்டினாலும் மெதுவாகத் தங்கள் வெளிப்படையான எதிர்ப்பைக் கைவிட்டது போன்று தோன்றும். ஆனால் அத்தகைய திணிப்புகள் அவர்களுக்குள் மிகப்பெரிய ஆறாத மனப்புண்களை ஏற்படுத்திவிடுகின்றன.
இந்த மனப்புண்கள் குழந்தைகளின் நிம்மதி ஒழுக்கம், உடல் மன நலங்கள், சந்தோஷம், குடும்ப அமைதி, பொருளாதாரப் பலம் என ஒவ்வொன்றையும் சீர்குலைத்துவிடுகின்றன.
இத்தகைய குழந்தைகளின் மனப்புண்களே எதிர்காலத்தில் அவர்களை அவர்கள் பெற்றோரைப் பராமரிக்கும், அன்பு செலுத்தும் பொறுப்புகளிலிருந்து விலகச்செய்வதாகவும் பல்வேறு ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
டாக்டரா மேலாண்மையா?
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்குத் துணைத்தலைவராக ஆக இருந்த ஒருவர். இன்றைய தன் பணி சார்ந்த வெற்றிகள், குடும்ப வாழ்வு சார்ந்த நன்மைகள், உடல், மன நலம் மற்றும் சமூகம் சார்ந்த அனைத்து வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணம் தன் அப்பாவின் சொல்லைக் கேட்க மறுத்ததுதான் என்று என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
அவருடைய அப்பா எப்படியாவது அவரை டாக்டர் படிப்புக்குப் படிக்க வைக்க வேண்டும்” என்று உறுதியான முடிவில் இருந்துள்ளார்.
+2 க்குப் பின் வணிகவியல் பட்டம் ஏசிஎஸ் படிப்பு இரண்டையும் படிக்க வேண்டும். அதன் பின் ஐ ஐ எம் அகமதாபாத்தில் மேலாண்மை முதுகலை படிப்பைப் படிப்பது என்று இவர் தன் முடிவில் மிகவும் உறுதியாக இருந்துள்ளார்.
அந்த முடிவு வாழ்வில் பல்வேறு சவால்களை ஏற்படுத்திவிட்டது. அவருடைய அப்பாவுக்கும் அவருக்கும் இருந்த நல்லுறவை வெகுவாகப் பாதித்துவிட்டது. அவர் எப்போதும் மற்றவர்களோடு ஒப்பிட்டு மகனை அவமானப்படுத்தி வந்தார்.
வெற்றி
ஆனால் தன் தொழில் வாழ்வு சார்ந்த கனவு திட்டத்தினை நிறைவேற்றுவதில் முழுக் கவனத்தைச் செலுத்தியுள்ளார். வணிகவியல் பட்டம், முதுகலை மேலாண்மைப் படிப்பு என முதல் மாணவனாக வந்து இன்று வாழ்வில் வெற்றி பெற்றுவிட்டார்.
இது அவரது ஆளுமையில் உதித்த அணையா ஆசை . இன்று அவர் மகிழ்ச்சியாகக் காணப்படுவது மட்டுமல்ல அவர் தந்தை எல்லோரிடமும் அவரைப் பற்றி மிகவும் பெருமையாகப் பேசும் சூழல் வந்துவிட்டது.
பெற்றோர் நலம்
என்னுடைய இயல்பின் அடிப்படையிலான உள்ளத்தின் அவாவை உறுதியுடன் நிறைவேற்றியதனால் இன்று நான் மன, உடல்,சமூக மற்றும் பொருளாதாரரீதியில் பலமாக வாழ்கிறேன்.
அந்தப் பலம் இன்று எனக்கு, என் வயதான பெற்றோரை அவர்களுக்குத் தேவையான பாசத்தையும் வழங்கத் தேவையான மனோதிடத்தை வழங்கியுள்ளது என்கிறார் அவர்.
தடுங்கள்
பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என யார் உங்கள் வாழ்க்கையின் முடிவுகளில் தலையிட முயன்றாலும் உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தித் தடுத்து நிறுத்துங்கள்.
ஏனென்றால் நம் ஆளுமையின் இயல்புக்கு ஒவ்வாத முடிவுகளை நம் பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றும் விதமாகவோ அல்லது நம் நண்பர்களின் கருத்துகளின் அடிப்படையிலோ எடுப்போமானால் உளவியல் ரீதியில் உங்களுக்கு உங்கள் மீதும் மற்றவர்கள் மீதும் வெறுப்பு பழிவாங்கும் உணர்வு மற்றும் கோபம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அந்தக் கோபம் நீங்கள் பொருளாதார,தொழில் மற்றும் சமூக ரீதியில் வெற்றியடைந்திருந்தாலும் உங்களை ஆன்ம அளவில் மற்றும் ஆளுமை ரீதியில் படுதோல்வியடையச் செய்துவிடும். அது உங்கள் நிம்மதியை, உங்கள் பெற்றோர், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், உடன் பணிபுரிவோர் ஆகியோரது நிம்மதியையும் சின்னாபின்னமாக்கிவிடும்.
சொந்த முடிவு
பெற்றோருக்காகவும் மற்றோருக்காகவும் வாழ்பவர்கள், வெளி உலகுக்கு வெற்றிபெற்றவர் போன்று தெரிந்தாலும் மது,போதை, புகை, கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம் என்பது போன்ற பல்வேறுவகையில் தங்களைத் தாங்களே சீரழித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆகவே உங்கள் வாழ்வின் கல்வி, வேலை, திருமணம்,வியாபாரம் போன்ற எத்தகைய முடிவுகள் எடுக்கும் போதும் பெற்றோர், ஆசிரியர்கள், ஆலோசகர்கள் உட்படப் பலரோடும் ஆலோசியுங்கள். ஆனால் முடிவுகள் உங்களின் சொந்த முடிவாக இருக்கட்டும்.nanri -இரா. மோகன் குமார்

yours Happily 
www.v4all.org

பாரதத்தின் பெருமை !!! must read - Be Proud - Jai Hind

பாரதத்தின் பெருமை !!!


நம் அன்னைபூமியின் தொன்மையையும் உயர்வையும் எத்தனையோ பாடல்களும், உரை நடைகளும் எடுத்துரைத்துள்ளன.  இந்த தேசத்தின் பெருமை அதன் வீரமும் ஞானமும் மிக்க வரலாறு மட்டுமல்ல, அதன் மைந்தர்களாகிய நம்முடைய உயரிய சிந்தனைகளும், பேணி வளர்த்த கலாச்சாரமும்தான். உண்மையில்   இன்றைக்கு நம் பாரத மாதா தளர்வுற்று இருக்கிறாள். ஏனென்றால், நம்முடைய தேசத்தின் வலி மிகுந்த வரலாறும், பெருமை மிக்க ஆக்கங்களும் இன்றைய இளையவர்களுக்கு தெரிய வைக்கப்படவில்லை. சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமையில் வரவில்லை என்ற மகிழ்ச்சிதான் மிகுந்து வருகிறது. செவி வழிச்செய்திகளாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்த மண்ணின் மரபும் வீரமும் ஏதோ ஒரு கட்டத்தில் நூலறுந்து போய்விட்டது போலும். மனம் கூசாமல் தாய் நாடு தரமிழந்து விட்டதாக பேசுகின்றனர்

இன்றைய நிலையிலிருந்து இன்னும் நிலை பிறழாமல் நம் தேசத்தை உணர்ந்து  மீட்டெடுக்கும் கடமை நமக்கு உள்ளது என்பதை உணர்வோம். இந்த தலைமுறையிலோ அல்லது அதற்கு முந்தைய தலைமுறையிலோ தொடர்பு அற்றுவிட்ட தொன்மை பூமிக்கு ஒரு பந்தம் உண்டாக்குவோம். நினைவுகளாய், சிதிலங்களாய் மாறிக் கொண்டிருக்கும் பெருமை மிக்க வரலாற்றினை மீண்டும் தொடர்வோம். 

 மொழி, இனம், மதம் வேற்றுமைகளை தாண்டி நம் தேசத்தின் பெருமையினையும், பெருமை மிக்க மைந்தர்களையும் மீண்டும் அடையாளம் காட்ட இந்த தொடர் ஆரம்பிக்கிறது.
ஆதி காலத்தில் இருந்து தொடங்குவோம். சில பெருமைமிக்க செய்திகளை தருகிறேன். கி.முக்களிலேயே அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்திருந்த நம் மூதாதையர்களின் சிறப்புமிக்க குறிப்புகள் வேதங்களிலும், சித்தர் பாடல்களிலும் ஓலைச்சுவடிகளாக பதியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.

அறிவியல் :

*சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. அகஸ்த்தியர் – மூலிகை மருத்துவத்திலும்(microbiology), போகர் – கனிம மருத்துவத்திலும்(chemical components), புலிப்பாணி விலங்குகளை (biotechnology) பயன்படுத்திய மருத்துவ முறைகளிலும் சிறப்பான குறிப்புகள் தந்துள்ளனர். கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய ரசவாத குறிப்புகளையும் சுவடிகளின் காணமுடிகிறது கி.மு 3000 அணுவின் அமைப்புகளை மாற்றி வேறு ஒரு கனிமமாக மாற்றும் வித்தையை போகர் குறிபிட்டுள்ளார்.

*இரத்தும் உறிஞ்சும் அட்டைகளை(leach) வைத்து இப்போது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடைபெறுகின்றன. முதல் முதலில் 1020ல்தான் இது பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேதத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவ கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகர்ணங்களுடன் leach உள்ளது.

*அகஸ்திய சம்ஹிதா என்ற நூலில் ஒரு மின்சார பெட்டரியை தயாரிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.

வானவியல்:
ரிக் வேதத்தின் குறிப்புகளை கொண்டு கி.பி 1315ல் சாயனாச்சார்ய என்ற விஜய நகரப்பேரரசின் அறிஞர் ஒளியின் வேகத்தை குறிப்பிட்டுள்ளார். “ஓ, சூரிய கடவுளே அரை நிமிஷாவில் 2022 யோசனைகள் கடந்து வரும் உன்னை வணங்குகிறேன்” ஒரு யோசனை என்பது 9 மைல்கள், நிமிஷா என்பது 8/75 வினாடிகள்.. அவருடைய குறிப்பின்படி ஒலிவேகம் -186,413.22 மைல்/வினாடி. நவீன கணிப்பு 186,300மைல்கள்/வினாடி.

*சூரிய கதிர்களில் ஏழு வர்ணங்கள் உள்ளதை கி.மு.1500லேயே ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே ஏழு குதிரைகளாக தேரில் பூட்டியுள்ளதாக காட்டினர். நவீன கருத்தின்படி 1671ல் நியூட்டன் முதன்முதலில் ஸ்பெக்டரம் என்று குறிப்பிட்டார்.

*வேதங்களின்படி, ஒரு பூஜையினை செய்வதற்குமுன் சங்கல்பமாக கூறப்படுகின்ற வாக்கியத்தில் உலகம் ஆரம்பித்த நாலில் இருந்து இன்றைய நாளினை குறிக்கிறோம்.”த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே” என்று வரும். இதன்படி

ஒரு மகாயுகா = 4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள்
ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்)
ஒரு கல்பம் = 432,00,00,000 (14 மன்வந்திரம்+1 க்ரேதா யுகம்) அல்லது 1000 மகாயுகம்

ஒரு கல்பம், இதுதான் உலகத்தின் வயதும்.
நவீன முறைப்படி 454,00,00,000 ரேடியோமெட்ரிக் முறையில் கணிக்கப்பட்ட வயது. பூமியுடனேயே பிறந்ததாக சொல்லப்படும் நிலவின் மாதிரி கற்களிலும் ஆராய்ச்சி செய்து இது உறுதிபடுத்தப்பட்டது.

கணிதம்:
கி.மு -3000 – நீளம், எடை ஆகியவற்றை குறிக்கும் அளவீடுகள் வரையறுக்கப்பட்டன.
கி.மு 1500 – வேதகாலம் – வானவியல் கொள்கைகள், கணித வரைபாடுகள், எண்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.

கி.மு 200 – பூஜ்யம் குறிப்பிடப்பட்டது. அதுவரை நேர்மறை எண்கள்(+) மட்டுமே குறிப்பிடப்பட்டன, எதிர்மறை எண்களையும்(-) குறிப்பிட முடிந்தது.
கி.பி 400 – 1200- கணித சாஸ்திரத்திற்கான முக்கியமான காலகட்டம். கணிதவியல் வல்லுனர்கள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஸ்ரீதரா ஆகியோரின் காலம்.

ஆர்யபட்டா ஒரு நாள் என்பது 23 மணிகள்,56 நிமிடங்கள், 4 வினாடிகளும் 0.1 விகிதத்தையும் கொண்டது என்று கணித்தார்.
நவீன கணக்குப்படி 23 மணி,56 நிமிடம்,4 வினாடி மற்றும் 0.091 விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆர்யபாட்டியா என்ற நூலில் ஒவ்வொருரு கோள்களின் தொலைவும், அது சூரியனை சுற்றி வரும் நாட்களும் நவீன கணிப்புடன் ஒப்பிடும் அளவிற்கு மிகச்சரியாக கூறப்பட்டுள்ளன.

யோகா:

இன்றைக்கு உலகம் முழுவது கொண்டாடிக் கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டன. இவர் கி.மு 147ல் வாழ்ந்தவர்.
காஷ்யப ரிஷி – முதன்முதலில் அணு என்ற ஒன்றை குறிப்பிட்டார். அணுவையும்(atom) பிளந்து பரம அணு (ந்யூட்ரான்?) என்று ஒன்று உள்ளதையும் குறிப்பிட்டார்.

yours - www.v4all.org 

Monday, October 20, 2014

4 MOTIVATIONAL TIPS from the WORLD'S YOUNGEST CEO, at the age of 8

Youngest CEO in the world..
4 MOTIVATIONAL TIPS from the WORLD'S YOUNGEST CEO, at the age of 8. ( 2008) ... now shez 14
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
It’s time for us to meet the World’s Youngest CEO and Youngest Girl Web designer.You would be awestruck to know that she has so far designed more than 20 websites within a span of 6 years.
Cute little Sreelakshmi has grabbed many accolades from international bodies, including the most prestigious Global web award for excellence in web designing. highest National Child Award for Exceptional Achievement 2008, which is the highest award for Children in India. She now has more than 30 awards to her credit.
She became the Youngest CEO of the world at the age of eight by starting her own web designing company, eDesign Technologies, in 2008.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
There are 4 exceptional lessons to learn from this inspiring story, to achieve success in life :-
1. AGE SHOULDN'T STOP YOU ►
People say that you are too young or too old to achieve success in life. After reading this you would have understood that age is not a criteria for success.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
2. DON'T JUST THINK,ACT ►
All of us have have million dollar ideas. But the million dollar question is that do we have the will to put that into action.
It requires courage, confidence and the willingness to face challenges. So what are you waiting for? This is time to draw your most
preferred caricature.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
3. SELF – DISCIPLINE
Without discipline you can’t reach great heights. You may have the skill, but
you should acquire the discipline to ensure that your skill doesn’t get ruined.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
4. PURSUE YOUR PASSION ►
You might be a great singer or an ultimate dancer, but wasting your time in something that you don’t love.
Embrace the fears that stops you from making that bold move.
Its now or never.
Sreelakshmi Suresh has proved and now its your time..!
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
I would request you to share this story with your friends and relatives, if the world’s youngest CEO has inspired you.

your
www.v4all.org