வீடுகளில் திருஷ்டி பொம்மை வைப்பது எதற்காக என்று பலருக்கு புரியாமலே செய்து வருகிறார்கள்
கண்ணேறு, கண் திருஷ்டி என்று நம் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி சொல்லுவதை கேட்டு இருக்கிறோம்.
அப்படியென்றால் என்னவாக இருக்கும் என்று சில நேரம் கேள்விகள் நமக்குள் தோன்றியிருக்கும்.
இவைகளை விட பெரிய வேலைகள் வந்தவுடன் அதில் மூழ்கி போய் விடுவோம். இது இயற்கையானது தான்.
ஆனால் வலுவான எண்ணமிருப்பவர்கள் அதை தேடி கண்டுபிடிக்கும் வரை ஓய மாட்டார்கள்
இங்கே வலுவான எண்ணம் என்ற வார்த்தை உபயோகப்படுத்தியதற்கு காரணமிருக்கிறது.
சின்ன பிள்ளைகளாக நாம் இருந்த போது நம்மோடு வேப்ப மரத்தில் ஏறி விளையாடிய நண்பனின் ஞாபகம் திடிரென வரும்.
அந்த எண்ணம் உதயமாகிய ஒன்றிரண்டு நாட்களில் அவனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும். அல்லது அவனே நேரில் வந்து நிற்கலாம்.
இது ஏதேச்சையாகவா நிகழ்கிறது?
சினிமா தியேட்டரில் ஆர்வமாக படம் பார்த்து கொண்டிருப்போம்.
நமக்கு முன் இருக்கையில் இருப்பவரின் உயரமான வழுக்கை தலை ஆடி ஆடி நமது ஆர்வத்திற்கு அவ்வப்போது பிரேக் போடும்.
அவரை கொஞ்சம் குனிந்து கொள்ளுங்கள் என்று சொல்ல நினைப்போம். எதாவது ஒரு தயக்கம் வார்த்தைகளுக்கு தடைபோடும்.
ஆனால் சிறிது நேரத்திற்கு ஆடிய அவர் தலை தொல்லை தராமல் ஒதுங்கி கொள்கிறது.
இதுவும் எதேர்ச்சையாகவா நடக்கிறது?
பல நேரங்களில் நாம் அப்படி தான் நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல.
நமது மனத்திற்குள் தோன்றும் எண்ணம் சில அதிர்வலைகளாக வெளியில் பயணப்படுகிறது. அது சம்பந்தப்பட்ட நபரை பல முறை தாக்கி தன்னை புரிய வைக்க முயற்சிக்கிறது.
இதனால் நாம் வாய் திறக்காமலே இதே மாதியான சந்தர்ப்பங்களில் பல வேலைகள் நடக்கின்றன.
மற்றவர்களின் எண்ண அலைகளை உடனுக்குடன் புரிந்து கொள்ளும் சக்தி ஆண்களை விட பெண்களுக்கு அதிகம்,
சக பெண்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள அவர்கள் தடுமாறுவார்களே தவிர ஒரு ஆணின் எண்ணத்தை உடனடியாக புரிந்து கொள்வார்கள்.
இதற்கு காரணம் பெண்கள் பெண்களை பற்றி நினைப்பதை விட ஆண்களைப் பற்றி நினைப்பது அதிகம்
.
தனது உடல் உறுப்புகளை தவறுதலாக பார்க்கும் ஆண்களின் கண்ணோட்டத்தை உணர்ந்து கொள்ளும் பெண்கள் அதை வைத்தே ஆண்மகனின் தராதரத்தை எடை போடுகிறார்கள்.
இது எப்படி நடக்கிறது என்றால் எண்ணங்களின் பயணத்தால் தான்
ஒருவன் சிந்தனை நமது நெற்றி பொட்டு வழியாக நமது மூளை நரம்புகளை சென்று அடைகிறது.
கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி என்பதாகும்.
ஒரு கட்டிட வேலை நடைபெறும் போது அங்குள்ள கண் திருஷ்டி பொம்மை பார்வையாளின் எண்ணத்தை சிறிது நேரமாவது மாற்றுப்பாதையில் செல்ல வைக்கிறது.
இதனால் தொழிலாளிகளின் வேலைகள் தடையில்லாமல் நடக்கிறது.
வயல்வெளிகளில் சோளக் கொல்லை பொம்மை வைப்பது இதற்காக தான்.
ஆனால் அதில் வேறு ஒரு பயனும் இருக்கிறது.
தூரத்திலிருந்து பார்த்தால் வயல்வெளியில் யாரோ ஒரு மனிதன் நிற்பது போல் இருக்கும்.
இதனால் பயிரை மேய வரும் பறவைகளும், விலங்குகளும் சற்று யோசிக்கும்.
ஆகவே திருஷ்டி பொம்மைகள் எண்ணங்களிலிருந்தும், பொருள் சேதாரத்திலிருந்தும் நம்மை ஓரளவு பாதுகாக்கிறது.
Yours Happily
Dr.Star anand ram
Money Attraction Consultant
www.v4all.org
Yours Happily
Dr.Star anand ram
Money Attraction Consultant
www.v4all.org
No comments:
Post a Comment