ஜிமெயில் பிறந்த கதை
இணைய உலகில் எப்படி ,கூகிள் என்றால் தேடல் என்று ஆகிவிட்டதோ அதே போலவே அதன் ஜிமெயில் சேவையும் இமெயிலுக்கான இன்னொரு பெயராகி இருக்கிறது. யாஹு, அவுட்லுக் என பல இமெயில் சேவைகள் இருந்தாலும் பெரும்பாலான இணையவாசிகளை பொருத்தவரை இமெயில் என்றால் ஜிமெயில் தான். கூகிள் அறிமுகம் செய்த சேவைகளில் தேடலுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலாமனதாக உள்ள ஜிமெயில் சேவை அறிமுகமாகி பத்தாண்டுகளாகிறது. ஜிமெயில் சேவைக்கு பின்னே மிகவும் சுவாரஸ்யமான கதை இருக்கிறது தெரியுமா? ஜிமெயில் சேவை மூன்று ஆண்டு கால உழைப்பின் விளைவாக உருவானது. கூகிளிடம் இருந்து ஒரு இமெயில் சேவையை பலரும் எதிர்பார்த்திராத நிலையில், அந்நிறுவனத்தின் ஊழியர்களில் பலரே கூட அதன் தேவையை கேள்விகுறியாக்கியதை மீறி ஜிமெயில் அறிமுகமாகி இணைய உலகை வென்றது. ஜிமெயிலை அனைவருக்கும் தெரியும் ,ஆனால் அதை உருவாக்கிய பால் புக்கைட் பற்றி எத்தனைப்பேருக்குத்தெரியும்? ஜிமெயில் உருவான கதை திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிறைந்தம் கூட ! இணைய உலகின் மைல்கற்களின் ஒன்றான ஜிமெயிலின் கதை இதோ:
2004 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி ஜிமெயில் சேவை அறிமுகமானது. அப்போது அது உண்மையான சேவை என்று யாருமே நம்பவில்லை. முட்டாள்கள் தினம் என்று வர்ணிக்கப்படும் ஏப்ரல் முதல் தேதியில் அறிமுகம் செய்யப்பட்டது ஒரு காரணம் என்பது மட்டும் அல்ல, அப்போது கூகிள் இமெயில் சேவை ஒன்றை அறிமுகம் செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படவில்லை. 1998 ல் அறிமுகமான கூகிள் அடுத்த சில ஆண்டுகளில் முன்னணி தேடியந்திரமாக உருவாகியது. தேடியந்திரங்கள் எல்லாம் , வலைவாசலாக உருமாறுவதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்த நிலையில் கூகிள் மிக எளிமையான முகப்பு பக்கத்துடன் தூயத்தேடியந்திரமாக தேடல் சேவையை மட்டும் துல்லியமாக வழங்கி இணையவாசிகளை கவ்ர்ந்திருந்தது. தேடலில் இருந்து கவனத்தை திசைத்திருப்புவதில்லை என்று கூகிள் உறுதியாக இருந்ததால் அதனிடம் இருந்து இமெயில் சேவை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படாதது இயல்பானது தான். ஆனால் 2001 ம் ஆண்டில் இருந்தே கூகிள் இமெயில் சேவைக்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
ஜிமெயிலின் பிரம்மா
கூகுளின் 23 வது ஊழியராக சேர்ந்திருந்த பால் புக்கைட் ( Paul Buchheit ) எனும் மென்பொருளாளரிடம் தான் புதிய இமெயில் சேவையை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. புக்கைட் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் இமெயில் உருவாக்க முயற்சியில் ஈடுபட்டு அதை கைவிட்டவர். இந்த முறை பயனுள்ள இமெயில் சேவையை உருவாக்கிவிட வேண்டும் எனும் உறுதியில் இருந்தார். முதல் நிலையில் இருந்தே பயனுள்ள ஒரு சேவையை உருவாக்கி அதை மேலும் மேலும் மேம்படுத்த வேண்டு என்பதை தனக்கான இலக்காகவும் நிர்ணயித்துக்கொண்டார்.
தேடலே முதல் புள்ளி
இப்படி அவர் முதலில் உருவாக்கிய சேவை தனது இமெயிலுக்கான தேடல் வசதி.
அந்த கால கட்டத்தில் கூகிள் ஊழியர்களுக்கு அலுவல் நிமித்தமாக நூற்றுக்கணக்கான மெயில்கள் வந்து கொண்டிருந்தன. புக்கைட் இன்பாக்சிலும் மெயில்கள் குவியவே அவற்றை தேடிப்பார்ப்பதற்கான வசதியை உருவாக்கினார். இந்த தேடல் சேவைக்கு என்று தனியே சர்வர் இல்லாமல் அவரது சர்வரிலேயே செயல்பட்டது. இந்த இமெயில் தேடல் வசதியை அவர் சக ஊழியர்களிடம் காண்பித்து கருத்து கேட்டார். அட பயனுள்ள சேவையாக இருக்கிறதே என்றவர்கள், தங்கள் மெயிலையும் தேடும் வசதி தேவை என்று கேட்டனர். இதனால் தனது சேவையின் பயன்பாடு குறித்து திருப்தி அடைந்த புக்கைட் விரைவிலேயே எல்லா மெயில்களையும் தேடக்கூடியதாக அதை மேம்படுத்தினார்.
தேடலில் இருந்து ஜிமெயில் ( அப்போது ஜிமெயில் என பெயரிடப்படவில்லை, கேரிபோ என்றே சங்கேத பெயர் சூட்டப்பட்டிருந்தது.) பிறந்தது தொடர்ந்து அது உருவான விதத்தை தீர்மானித்ததோடு அதன் வெற்றிக்கும் ஆதாரமாக அமைந்தது. ஹாட்மெயில் மற்றும் யாஹு மெயில் இருந்து ஜிமெயிலை மேம்பட்டதாக அதன் தேடல் வசதியே உதவியது.

கட்டுப்பாடு இல்லா சேவை
ஆனால் இமெயிலில் தேடல் வசதி அத்தனை சுலபம் அல்ல.தேடல் வசதி தேவை என்றால் அதற்கு ஏற்ற கொள்ளலவு வேண்டும். இதன் பொருள் எல்லா மெயில்களையும் டெலிட் செய்யாமல் சேமித்து வைத்திருக்க வேண்டும். உங்கள் இன்பாக்ஸ் நிரம்பி விட்டது, தயவு செய்து பழைய மெயில்களை டெலிட் செய்யவும் எனும் அறிவிப்பு மின்னிய பிளாஷ் பேக் நினைவுக்கு வருகிறதா? படித்து முடித்த மெயில்களை எல்லாம் டெலிட் செய்வது என்பது இமெயில் பயன்பாட்டிற்கான பொது விதியாக இருந்த நிலையில் , எல்லா மெயில்களையும் சேமிப்பது என ஜிமெயில் சேவையில் முடிவானது. எனவே இன்பாக்ஸ் கொள்ளலவில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இ ஜிபி இடவசதி அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
ஜிமெயில் அறிமுகமான போது அது இலவசமாக வழங்கிய ஒரு ஜிபி வசதி நம்பமுடியாத அதிசயமாக பார்க்கப்பட்டது. தங்குவதற்கு சின்னதாக ஒரு அறை எதிர்பார்த்த நிலையில் ஒரு கல்யாண மண்டபமே கொடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் ? அது போன்ற ஆச்சர்யம் தான் இணைவாசிகளுக்கும் ஏற்பட்டது.
சரி, அது வரை வேறு எந்த மெயில் சேவையும் தராத இட வசதியை தருவது என்று முடிவானது. ஆனால் இதற்கு ஆகக்கூடிய செலவை எப்படி ஈடுகட்டுவது. இதற்கு ஒரு வழி கட்டண சேவையாக அறிமுகம் செய்வது. ஆனால் புதிய மெயில் சேவை இலவசமானதாக இருந்தால் தான் பரவலாக அனைவரையும் சென்றடையும் என கூகிள் ஊழியர்கள் பல்ரும் கருதினர். அப்படி என்றால் இமெயில் சேவை விளம்பரத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இதனிடையே சஞ்சீவ் சிங் எனும் பொறியாளரும் ஜிமெயில் குழுவில் இணைந்து கொண்டார். புக்கைட்டும் இவரும் இணைந்து ஜிமெயில் சேவையை முழுமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் சில ஊழியர்களும் இதில் இணைந்து கொண்டனர்.

மெயிலுக்குள் விளம்பரம்
வருவாய்க்காக ஜிமெயில் விளம்பர இணைப்பு கொண்டிருக்கும் என்பது முடிவு செய்யப்பட்டாலும் விளம்பர்த்தை எப்படி இடம்பெறச்செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. அந்த கால கட்டத்தில் இமெயில் சேவை உட்பட பலவற்றில் பேனர் விளம்பரங்களே இடம்பெற்றிருந்தன. இவை வருவாய் தந்தாலும் இணையவாசிகளுக்கு பெரும் இடைஞ்சலாக அமைந்தன. இது போன்ற உறுத்தலான பேனர் விளம்பரங்கள் பக்கம் போகக்கூடாது என புக்கைட் குழு தீர்மானித்தது. இதற்கு பதிலாக இணையவாசிகளுக்கு இடையூறாக இல்லாத வகையில் வரி விளம்பரம் போன்ற விளம்பரங்களை இடம்பெற வைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. பொருத்தமில்லா பேனர் விளம்பர்ம் போல அல்லாமல், மெயில் வாசகத்திற்கு பொருத்தமாக அமையக்கூடிய வரி விளம்பரங்களை தேர்வு செய்வதற்கான வழியும் உருவாக்கப்பட்டது. ஸ்பேம் எனும் குப்பை மெயில்களை கண்டறிய மெயில் வாசகங்களை தேடிபார்ப்பது போது மெயில் வாசகங்களை படித்துப்பார்த்து பொருத்தமான விளம்பரத்தை இணைக்கவும் திட்டமிடப்பட்டது. பயனாளிகளின் மெயில்களை அனுமதி இல்லாமல் படித்துப்பார்க்கும் இந்த முறை ஜிமெயில் அறிமுகமான பின் அந்தரங்க உரிமை மீறலாக பெரும் சர்ச்சையை உண்டாக்கும் என்பதை புக்கைட் எதிர்பார்த்திருக்கவில்லை.
வடிவமைப்பில் புதுமை
இதனிடையே ஜிமெயிலுக்கான வடிவத்தை கொடுக்கும் முயற்சியில் மும்முரமாக இருந்தனர். கெபின் பாக்ஸ் எனும் பொறியாளர் வடிவமைப்பை உருவாக்கு பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். ஜிமெயிலின் முகப்பு கூகிளுக்கான தன்மை கொண்டிருக்க வேண்டும் என அவர் நினைத்தார். ஆனால் கூகிள் தேடல் தவிர பெரிதாக எந்த சேவையையும் வழங்காத நிலையில் இதற்கான ஊக்கத்தைப்பெற அவருக்கு அதிக வழிகள் இருக்கவில்லை. எனவே பாக்ஸ் , ஜிமெயிலின் வடிவமைப்பு குறைந்த பட்சம் மற்ற மெயில்களில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
எனவே இணைதளங்கள் போலவே மெயில் சேவைக்கான பக்கங்களும் வடிவமைக்கப்பட்ட நிலையில் இருந்து விலகி , இணைய செயலிகளுக்கான தன்மையையும் சேர்த்துக்கொண்டார். இதன் பயனாக ஒவ்வொரு முறை புதுபிக்கப்பட்ட போதும் மெயிலில் இருந்த எல்லா பக்கமும் புதுப்பிக்கப்படாமல் தேவையான தகவல் மட்டும் தோன்றுவது சாத்தியமானது. இது ஜிமெலின் பக்கங்கள் விரைவாக தோன்றவும் உதவியது.
ஆக ஜிமெயில் படிப்படியாக உருவாகி கொண்டிருந்த்து. இருப்பினும் அந்த சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகமாவது தொடர்பாக எந்த உறுதியான திட்டமும் இல்லாமலே இருந்தது. கூகிளுக்குள் அது ஒரு ரகசிய சேவையாக இருந்தது. பெரும்பாலான கூகிள் ஊழியர்கள் அதை பயன்படுத்திக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தான் கூகிள் பொதுமக்களுக்கு ஜிமெயிலை அறிமுகம் செய்ய முன்வந்தது. ஜிமெயிலை யாரும் எதிர்பார்க்காத விதமாக முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதல் தேதி அறிவித்தது.

அசத்தல் அறிவிப்பு
இந்த அறிவிப்பு குழப்பத்தையே ஏற்படுத்தியது. ஏப்ரல் முதல் தேதியில் அறிமுகமானதால் இது ஏமாற்று அறிவிப்பாக தான் இருக்க வேண்டும் என்று பலரும் நினைத்தனர். அதிலும் ஒரு ஜிபி இடவசதி என்று அறிவிக்கப்பட்டதால் நிச்சயமாக இது ஏப்பரல் 1 விளையாட்டு தான் என்று நினைத்தனர். பத்திரிகையாளர்களும் கூட இது மெய்யா பொய்யா எனத்தெரியாமல் தடுமாறினர். கூகிள் இந்த பரபரப்பை மவுனமாக ரசித்த்து. மறுநாளும் ஜிமெயில் சேவை தொடரவே அது உண்மையான அறிமுகம் தான் என்ற உறுதி ஏற்பட்டது. உடனே பலரும் அந்த மேம்பட்ட மெயில் சேவையை பயன்படுத்த விரும்பினர். அழைப்பின் பேரிலேயே மெயில் சேவை வழஙக்ப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஜிமெயிலுக்கு மிகப்பெரிய மதிப்பை உண்டாக்கியது. ஜிமெயிலுக்கான அழைப்பை பெற்றவர்கள் இணைய அதிர்ஷ்டசாலியாக கருதப்பட்டனர். ஜிமெயில் அழைப்புகள் இணைய சந்தையில் அதிக விலைக்கு விற்கும் நிலை அதன் செல்வாக்கு அதிகரித்தது. மிக விரைவிலேயே இணைய உலகில் பலரும் விரும்பும் இமெயில் சேவையாக ஜிமெயில் நிலைப்பெற்றது. க்டந்த பத்தாண்டுகளில் ஜிமெயில் தவிர்க்க முடியாத இணைய சேவையாக உருவெடுத்துள்ளது. ஹாட்மெயில் மற்றும் யாஹு மெயில் சேவைகளை பின்னுக்கு தள்ளியதோடு இன்று பெரிய அளவில் பேசப்படும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. அந்த வகையிலும் ஜிமெயில் முன்னோடி சேவையாக விளங்குகிறது.
( ஜிமெயிலை உருவாக்கிய பால் புக்கைட் பின்னர் கூகிளில் இருந்து விலகி பிரண்ட்ஃபீட் இணையசேவையை உருவாக்கினார். இந்த சேவை பின்னர் பேஸ்புக்கால் வாங்கப்பட்டது. தற்போது புதிய இணைய நிறுவன்ங்களில் முதலீடு செய்யும் சேவையை புக்கைட் வழங்கி வருகிறார்.)
yours Happily
Dr.Star anand ram
www.v4all.org

No comments:
Post a Comment