உனது வாழ்வை ஒரு காலை நேர உலாவலாக மாற்றிக் கொள்.
அதிக விளையாட்டுத்தன்மையுள்ளவனாக மாறு.
வாழ்க்கை ஒரு விளையாட்டு.
வாழ்வை விளையாட்டாக கடுகடுப்பின்றி பார்.
வித்தியாசம் மிகவும் பிரமாண்டமானதாக இருக்கும்.
உனது அலுவலகத்திற்கு செல்லும் போது முற்றிலும் வேறுபட்ட மனோநிலை இருக்கும்.
பதட்டமாக, குறிக்கோளுடையதாக, கவலையோடு கூடியதாக, மனஅழுத்தம் தருவதாக இருக்கும்.
அதே வழியில் நீ காலைநேர உலாவல் செல்லும் போது –
தெரு அதே தெருதான்,
மரங்கள் அதே மரங்கள்தான்,
பறவைகள் அதே பறவைகள்தான்,
வானம் அதே வானம்தான்,
நீயும் அதே ஆள்தான்,
கடந்து செல்லும் மக்களும் அதே.
ஆனால் நீ காலைநேர உலாவலுக்கு செல்லும்போது உன்னிடம்
எந்த பதட்டமும் இல்லை,
எந்த அழுத்தமும் இல்லை.
ஏனெனில் நீ குறிப்பாக எங்கும் செல்வதில்லை.
அது ஒரு காலைநேர நடை
– நீ அதை அனுபவித்து செய்கிறாய்,
நீ விளையாட்டுத்தன்மையோடு இருக்கிறாய்.
இதே போன்ற மனநிலையோடு உனது
அன்றாட வேலையில்
முயன்று பார்,
மாறுபட்ட தன்மையை உணர்வாய்
மகிழ்ச்சியானவனாக மாறுவாய் ..
No comments:
Post a Comment