Wednesday, October 22, 2014

எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக வழிமுறை:-

எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீக வழிமுறை:-


நீங்கள் பொதுத்தொடர்பு சார்ந்த தொழில் அல்லது வேலை பார்க்கிறீர்களா?
இன்சூரன்ஸ், சினிமா, மியூச்சுவல் பண்டு,ரியல் எஸ்டேட், சேல்ஸ் ரெப்,மார்க்கெட்டிங், வக்கீல், ஜோதிடர்,அரசியல்வாதிகள்,பூசாரிகள்,மனோதத்துவநிபுணர்கள்,நடிகர்கள் அல்லது நடிகைகள், இயக்குநர்கள் என எந்த பொதுத்தொடர்புத்துறையில் இருந்தாலும் சரி! எல்லோரையும் வசீகரிக்க ஒரு ஆன்மீகப்பயிற்சி
இந்தப்பயிற்சியை குறைந்தது 90 நாட்கள் செய்ய வேண்டும்.தினமும் காலையிலும்,மாலையிலும் செய்யவேண்டும்.(எதிர்பாராமல் சில நாட்கள்விடுபட்டாலும் பரவாயில்லை.தொடரலாம்)
ஓம் ரீங் வசி வசி = இந்த மந்திரத்தை ஒரு விரிப்பின் மீது நின்று அல்லது அமர்ந்துகொண்டு மனதுக்குள் 108 முறை உதடு அசையாமல் ஜபிக்க வேண்டும்.4 திசைகளையும் நோக்கி தலா 108 முறை ஜபிக்க வேண்டும்.
ஜபிக்க ஆரம்பிக்கும்போது வாயில் ஒரு கிராம்புத்துண்டை வலதுபக்கத்தில் ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.கடிக்கக்கூடாது.ஜெபித்து முடித்ததும் துப்பிவிட வேண்டும்.
துப்பிய பின்பு ஒரு தம்ளர் இளநீர் உடனே குடிக்கவேண்டும்.
(சைவ உணவு உண்பவர்களுக்கு விரைவில் பலன் தெரியும்.அசைவம் சாப்பிடுபவர்கள் அசைவத்தை விட்டுவிட வேண்டும்.விடாவிட்டால் பலன் தெரிய ரொம்ப நாளாகும்.)
91 வது நாளிலிருந்து ரொம்ப பிசியாகிவிடுவீர்கள்.உங்கள் வேலை அல்லது தொழிலில் நீங்கள்தான் முதல்வராகத் திகழ்வீர்கள்.
இது 90 நாளுக்குமேல் தான் செயல்படத்துவங்கும்.
ஆதாரம்:வாத சவுமியசாகரம்,மந்திரவாள்பகுதி,அகத்தியர் எழுதியது

No comments:

Post a Comment