குடும்ப உறவுகள் மேம்பட பரிகாரங்கள் - www.happy4all.org
பெரும்பாலான குடும்பங்களில் தந்தை, மகன் உறவில் ஒற்றுமை இல்லாமல் போகின்றது. அதேபோல உடன்பிறந்த சகோதரர்கள் மத்தியிலும் ஒற்றுமை இல்லாமல் சண்டைகளும் சச்சரவுகளும் வந்து விடுகின்றன.
இதற்கெல்லாம் காரணம் சனி பகவானும் சூரிய பகவானும் தான்.
குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகத்தில் யாருக்காவது சனியும் சூரியனும் ஒரே ராசியில் இருந்தாலும் அல்லது சனி இருக்கும் ராசிக்கு 7ஆவது ராசியில் சூரியன் இருந்தாலும் இரு கிரகங்களின் பார்வை காரணமாக அந்த ஜாதகரால் குடும்பத்திலுள்ள அனைவர் மத்தியிலும் ஒற்றுமைக் குறைவு ஏற்படும்.
இந்த விவரத்தை குடும்பத்திலுள்ள எல்லாரது ஜாதகத்தையும் ஆராய்ந்து யாருடைய ஜாதகத்தால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு வருகிறது என்று நாமே பரிசீலித்துத் தெரிந்து கொள்ளலாம். ஒற்றுமைக் குறைவுள்ள குடும்பத்தில் கீழ் கண்ட எளிய பரிகாரத்தைத் செய்தால் தந்தை, மகன் உறவு கெடாது. பங்காளிச் சண்டையும் வராது.
பரிகாரம் - 1
உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு முன், ஒன்பது வாரங்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய இரண்டு கிழமைகளிலும், பெற்றோர்கள் அல்லது உடன் பிறந்த சகோதர, சகோதரிகளில் யாரேனும் ஒருவர் நெய்விளக்கு போட்டு வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பங்காளிச் சண்டையும் வராது.
பரிகாரம் - 2
வெள்ளம் சேர்த்து பால் கலந்த சுக்கு மல்லி, காப்பியை குடும்பத்தில் உள்ளவர்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களிலும் தவறாமல் காலை நேரத்தில் அருந்தி வருவார்களேயானால் அந்தக் குடும்பங்களில் ஒற்றுமைக் குறைவு வருவதில்லை.
சுக்கும் மல்லியும் மனக்கிலேசத்தை நீக்கி, தெளிந்த மனதைத் தரும் அரிய மூலிகை மருந்தாகும்.
No comments:
Post a Comment