Tuesday, July 14, 2015

சிறிது சுய நலமாய் இருப்பது ஒன்றும் தப்பில்லை பாஸ்.

பொதுவாக சுயநலமாக இருப்பது தவறு என்பார்கள். ஆனால் சிறிது சுயநலமாக இருப்பது ஒன்றும் தெய்வக் குற்றம் இல்லை. மேலே படியுங்கள்.....
முற்றிலும் சுயநலமின்றி யாராலும் இருக்க முடியாது என்பதே உண்மையாகும். இன்னும் சொல்லப் போனால் பொது நலமே சுய நலத்தில் தான் ஆரம்பிக்கிறது எனலாம்.
நாம் முதலில் நம்மை நேசிக்க வேண்டும். நம் நலத்தைப் பேண வேண்டும். பிறரை நேசிப்பதும் , பிறர் நலத்தில் அக்கறை எடுப்பதும் அதற்குப்பின் தான் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அது சரியாக இருக்கும்.
நீங்கள் பிறருக்கு உதவ நினைத்தால், பிறருக்காக வாழ நினைத்தால் முதலில் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா? உங்களை நீங்கள் நன்றாக கவனித்துக் கொண்டால் தான் நீங்கள் மற்றவர்களுக்காக வாழ முடியும். நீங்கள் வாழ்க்கையில் முன்னேறி நல்ல நிலையில் இருந்தால் தான் நாலு பேருக்கு உதவ முடியும்.
ஆனால் சுய நலம் அதிகமாக இருக்கவே கூடாது. அது பேராசை, பொறாமை, ஏமாற்றுதல் போன்றவற்றிற்கு வித்திட்டு விடும்.
சிறிது சுய நலமாய் இருப்பது ஒன்றும் தப்பில்லை பாஸ்.

urs
www.v4all.org 


No comments:

Post a Comment