Monday, July 13, 2015

தொழில் புரட்சித் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்!

 தொழில் புரட்சித் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ்! - www.v4all.org 



இருபத்து நூற்றாண்டின் மிகப்பெரும் டெக்னோ ஆளுமைகளில் முக்கியமானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.அவருடைய மரணம் எதிர்பார்த்த ஒன்றுதான். கணையத்தில் புற்றுநோய் அளவுக்கு மீறிப் போய் விட்டதாக ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே தெரிந்து விட்டதால், தன் அத்தனை வேலைகளில் இருந்தும் விலகி, அமைதியாகத் தன் மரணத்துக்காகக் காத்திருந்தார். அந்த தொழில்நுட்ப மன்னர். இத்தனைக்கும் ஸ்டீவ் ஹார்ட்வேர் இன்ஜினீயரோ, புரோக்கராம் எழுதும் சாஃப்வேர் நிபுணரோ அல்ல. அவர் டெக்னாலஜியை ஒருங்கிணைத்த சரியான தலைவர். எல்லா வேலைகளையும் முதலாளியே பார்க்க வேண்டியதில்லை. சரியான ஆட்கள் சரியான முறையில் அவற்றை செய்தாலே போதும்என்கிறத தத்துவத்தில் வெற்றி கண்டவர் ஸ்டீவ்.
சிரியா நாட்டிலிருந்து கலிபஃபோர்னியாவுக்கு வந்த ஒரு முகம்மதியே பேராசிரியருக்கும் அமெரிக்கப் பெண்மணிகளுக்க பிறந்த ஸ்டீவ் தங்களால் வளர்க்க முடியாததால் யாராவது தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்கள் அவர்கள் பால் மற்றும் கிளாரா ஜாப்ஸ் தம்பதி அந்தக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொண்டார்கள் இளம் வயதிலேயே ஸ்டீவின் பார்வை கம்ப்யூட்டரின் பக்கம் விழுந்து விட்டது இசை, சினிமா, தகவல் தொடர்பு இவை கம்ப்யூட்டர் மூலம் பல்வேறு எல்லைகளைக் கடக்கும் என்று அவருக்குத் தோன்றியது. அதை மெல்ல மெல்ல செயல்படுத்தினார். கடைசியில் 83 பில்லியன் டாலர்களை அவர் சம்பாதித்தாக ஓர் குறிப்பு சொல்கிறது. 1976-ம் வருடம் ஒரு கார் ஷெட்டில் தன் நண்பர் ஸ்டீஃபன் வொஸ்நய்க்குடன் சேர்ந்து ""ஆப்பிள்'' கம்பöனியைத் தொடங்கினார். ஆப்பிள்தான் மனித ஆசைக்குக் காரணம் என்பதால் அந்தப் பெயரை வைத்திருக்கலாம். எல்லோரும் எண்களையும் டெக்னாலஜி சம்பந்தப் பட்ட குறியீடுகளையும் தங்கள் நிறுவனப் பெயராக வைத்த போது ஸ்டீவ் வைத்த "" ஆப்பிள்'' அவருடைய கவித்துமான மனதையே காட்டியது. நான்கே வருடங்களில் 600 மில்லியன் டாலர்களை விற்பனையில் எட்டிப் பிடித்த ஆப்பிள் நிறுவனம் புகழ்பெற்ற ஃபார்ச்சூன் பத்திரிகையின் டாப் 500 உலக நிறுவன லிஸ்டில் இடம் பெற்றது தொழில் வரலாற்றில் இத்தனை வேகமான வளர்ச்சியை எந்த நிறுவனமும் பெற்றதில்லை.
ஆப்பிள் ஆரம்பித்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாக்கிண்டோஷ் எளிய வகை கம்ப்யூட்டர்களை அவர் அறிமுகப்படுத்தினார். பழையன கழிதலும், புதியன புகுதலும் அத்தனை சுலபாக நடந்து விடுவதில்லை மாக் (செல்லமாக) கம்ப்யூட்டர்கள் மார்க்கெட்டில் சக்கைபோடு போட்டன . ஆனால் தான் ஆரம்பித்த ஆப்பிள் கம்பெனியின் இருந்தே ஸ்டீவ் வெளியேற வேண்டிய நிலையம் ஏற்பட்டது. அப்போது கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் பக்கம் திரும்பினார் ஸ்டீவ் ஹாலிவுட் ஸ்பெஷல் எஃபெக்ட் மன்ன் ஜார்ஜ் லுகாஸிடமிருந்து ஒரு சின்ன கிராஃபிக்ஸ் கம்பெனியை விலைக்குவாங்கினார். தொழில்நுட்ப ஜீனியணுஞூ இளைஞர்களைத் தேடித் தேடி அதில் சேர்த்தார். "தி டாய் ஸ்டோரி சூப்பர் ஹிட் கிராஃபிக்ஸ் படம் அதிலிருந்து வெளி வந்தது பிக்ஸர் அனிமேஷன் ஸ்டூடியோஸ் என்று தன் கம்பெனிக்குப் பெயிரிட்டார். வரிசையாகப் பல அனிமேஷன் படங்கள் அங்கே பட்டைத் தீட்டப்பட்டு உலகெங்கும் சூப்பர் ஹிட் ஆகின. பல அகாடமி விருதுகளைப் பெற்றது ஸ்டீவின் சேவை தங்களுக்கு அவசியம் என்பதை ஆப்பிள் உணர்ந்து அவரை மிகுந்த மரியாதையுடன் மீண்டும் இணையுமாறு அழைத்தது.
கிட்டத்தட்ட 12 வருட வனவசாத்திற்குப் பிறகு 1997-ம் வருடம் மீண்டும் ஆப்பிளுக்குத்திரும்பினார் ஸ்டீவ். அப்போது தான் செல்ஃபோன் என்னும் கையடக்க புயல் உலகை மையம் கொண்டிருந்தது. ஸ்டீவுக்கு அதன் எதிர்கால சாத்தியங்கள் ஆச்சர்யமாக இருந்தன. அதன் சிறிய திரையும், சிப்புகளும் இணைப்புகளும் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடும் என்பது அவருடைய தீர்க்க தரிசனம் வரிசையாக ஐ பாட் ஜ ஃபோன், ஐ பேட் என்று பிற்பாடு அவர் தான் தூள் கிளப்ப ஆரம்பித்தார். பெப்ஸி கோலாவின் தலைமை நிர்வாக அதிகாரியைப் பார்த்து ஸ்டீவ் ஒரு முறை கேட்டார்.. ""வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை இதைப் போன்ற சர்க்கரைத் தண்ணீரை விற்றே தள்ள போகிறீர்களா? அல்லது உலகையே மாற்றக் கூடிய ஏதாவது ஒரு விஷயத்தில் இறங்கப்போகிறீர்களா? தன் தயாரிப்புகளில் அத்தனை சீக்கிரம் திருப்தியுற மாட்டார் ஸ்டீவ். ஐ பாட் கருவிகள் இரண்டு மாடல்கள் கடைசியாக ஒகே செய்யப்பட்ட நிலையில் கப்பல் ஏற்றும் கடைசி நிமிடத்தில் அந்த ஆர்டரை ரத்து செய்து புது மாடல்களை செய்யும்படி உத்தரவிட்டவர் அவர். வெறும் புதிய டெக்னாலஜி கண்டுபிடிப்புகளால் மட்டும் பயன் இல்லை. சுந்திரமான கலைகளுடன் அந்த தொழில்நுட்பம் திருமணம் செய்ய வேண்டும். மனித நேயத்துடன் திருமணம் செய்து நம் இதயத்தை அந்த தொழில் நுட்பம் பாடச் செய்ய வேண்டும் என்று ஒரு முறை யுனிவர்ஸிட்டி பேச்சில் குறிப்பிட்டார் ஸ்டீவ்.
56வயதில் அவருடைய இதயம் தன் பாடலை நிறுத்திக்கொண்டது. இன்று உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கலாம். அதில் நங்கள் பாட்டு கேட்கலாம். யூ டியூபில் வீடியோ பார்க்கலாம் மெயில் அனுப்பி சாட் செய்யலாம். மொபைல் போனில் இருந்து ஏழாம் அறிவு படக் காட்சி டிக்கெட்டைப் பதிவு செய்யலாம். மின்சாரக் கட்டணத்தை அதன் மூலம் செலுத்தலாம். இவற்றுக்கெல்லாம் பின்னயில் எப்போதும் நீல நிற ஜீன்ஸும் முழுக்கை ஸ்வெட்டரும் அணிந்த ஸ்டீவ் ஜாப்ஸ் இருப்பார்.

மரணம் பற்றி அவர் குறிப்பிட்டவற்றில் சில:
இதுதான் உன்னுடைய கடைசி தினம் என்பது போல் தினமும் நீ வாழ்ந்தால், வாழ்க்கையின் பூரணத்துவத்தை உணரலாம். சிறு வயதில் நான் படித்த இந்த வாக்கியம் என் மனதில் ஆழப்பதிந்து விட்டது: நீங்கள் இறப்பது முன்னாலேயே தெரிந்து விடும்போது இழப்பதற்கு இனி ஒன்றுமே இல்லை என்பது புரிந்து விடுகிறது. நிர்வாணமாக இருப்பதைப் போல் உணர்கிறோம்...
உங்கள் வாழ்க்கை மிகச்சிறியது. உங்களுக்காவே அதை வாழுங்கள். துருப்பிடித்த சித்தாந்தங்களுக்காக வாழ்க்கையை வீணாக்காதீர்க். அடுத்தவர்களின் கருத்துச் சத்தங்கள் உங்கள் உள்ளுணர்வின் சத்தை நீர்த்துப் போகச் செய்ய அனுமதிக்காதீர்கள். முட்டாள்தினத்திலிருந்துதான் புத்திசாலித்தனம் பிறக்கிறது. அதனால் எப்போதும் பசியோடு இருங்கள். எப்போதும் முட்டாளாக இருங்கள். உங்கள் இதயமும் உள்ளுணர்வும்உங்களை வழி நடத்தட்டும்.

No comments:

Post a Comment