பொதுவாக ஆண்களை விட பெண்கள் பலவீனமானவர்கள் என்கின்ற கருத்து பரவலாகவே உள்ளது. உண்மையில் பெண் ஆணை விட பலவீனமானவள் தானா? மேலே படியுங்கள்....
ஒருவரை நாம் எதை வைத்து பலவீனமானவர் என்று சொல்ல முடியும்? இரண்டு காரணிகளை வைத்து ஒருவர் வலுவானவரா இல்லையா என்று சொல்ல முடியும் என்றே நான் நினைக்கின்றேன்.ஒன்று அவரது உடல் வலிமை; மற்றது அவரது மன வலிமை ஆகும்.
பொதுவாக பெண்கள் ஆண்களை விட உடல் வலிமையில் சற்று பலவீனமானவர்கள் என்றே சொல்ல வேண்டும்.ஆனால் மன வலிமையில்? மன வலிமையில் பெண்கள் ஆண்களுக்குசற்றும் சளைத்தவர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் பெண்கள் ஆண்களை விட மன வலிமை அதிகம் உடையவர்கள் என்றே தோன்றுகிறது.
பெண்கள் ஆண்களை விட உடல் வலிகளை எளிதில் தாங்கிக் கொள்கிறார்கள் என்பது நிஜம். 'பிரசவ வலி' தாங்கும் சக்தி ஒன்று போதும், அவர்கள் எவ்வளவு மன வலிமை உடையவர்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்வதற்கு. மேலும் பெண்கள் கடினமான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதில் அதிக பயம் கொள்வதில்லை. பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராகவே செயல் படுகின்றனர்.
பெண்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலும் பெண்கள் தான் உலகம் முழுவதிலும் ஆண்களை விட அதிக வருடங்கள் உயிர் வாழ்கின்றனர்.
கூட்டி, கழித்து , பெருக்கி, வகுத்துப் பார்க்க்கையில் ஆண் = பெண் என்றே விடை வருகிறது.
சில விஷயங்களில் ஆண் தைரியமானவன், வலுவானவன்; சில விஷயங்களில் பெண் வலுவானவள், தைரியமானவள். இருவரும் சேரும் பொழுது ஒருவருக்கொருவர் நிறைவு செய்து முழுமையான பலன்களை ஜோடியாக இருக்கும் போது பெறுகின்றனர்.
என்னே இறைவனது படைப்புத் திறன்? உலகமே ஆண், பெண் என்னும் அற்புத உறவை அச்சாக வைத்தே சுழன்றுக் கொண்டு இருப்பதாகத் தோன்றுகிறது.
பெண் பலவீனமானவள் அல்ல. ஆண், பெண் இருவரும் சமமே. வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment