Saturday, July 11, 2015

‘உட்கார்ந்தபடியே வேலை செய்பவர்களின் ஆயுள் கணிசமாக குறைகிறது’

‘உட்கார்ந்தபடியே வேலை செய்பவர்களின் ஆயுள் கணிசமாக குறைகிறது’ என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 14 வருடங்களாக செய்த ஆராய்ச்சியில் இது தெரியவந்திருக்கிறதாம்.

நடை பயிற்சி, ஜிம்முக்கு செல்லுதல், ஏரோபிக்ஸ் போன்றவை செய்தால் கூட ‘ரிஸ்க்’ குறைவதில்லையாம். அது வேறு, இது வேறு என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டார்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர்கள்.

‘சிகரெட் பிடிப்பதை நிறுத்தாமல் என்ன சத்துணவு சாப்பிட்டு என்ன பயன்? அதேபோலத்தான் இதுவும்’ என்பது இவர்கள் வாதம்.

‘அதிகம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு கோலோன் ‘புற்றுநோய்’ வரும் அபாயம் உள்ளது’ என்கிறார்கள். இதுதவிர, இவர்களை இதய நோய், டயாபடீஸ் மற்றும் மனஉளைச்சல் ஆகியவை ரொம்ப சுலபமாக தாக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதனால் இப்போது பல அலுவலகங்களில் நின்று கொண்டு வேலை செய்ய ஏதுவாக வசதி செய்திருக்கிறார்கள். மேலும், அலுவலகத்தில் டிரட்மில் இருந்தாலும் நல்லது என்று சிலர் கூறியிருக்கின்றனர்.

No comments:

Post a Comment