Saturday, July 18, 2015

அசாதரண சக்தி, தெய்வ சக்தி, மாபெரும் சக்தி

ு, ''அசாதரண சக்தி, தெய்வ சக்தி, மாபெரும் சக்தி, இவை எல்லாமே மனிதனின் மனதில் எண்ணங்களின் வடிவில் பதிந்து கிடக்கின்றது. வெளியே கண்களுக்குப் புலப்படாமல் இயங்கும் பிரபஞ்ச மனதின் ஒரு சிறிய பகுதியே மனிதனின் மனமாகும். ஒவ்வொரு மனித மனமும், அது யாரிடத்திலிருந்தாலும், அது வெளி உலகத்தோடு உண்மையாகவே தொடர்பு உடையதே ஆகும்'' என்கிறார். எண்ணங்கள்கட்டுப்பாடற்ற நிலையில் கடல் அலைகளைப் போலக் காரணமின்றி அலைமோதிதன் ஆற்றலை, மனதின் சக்தியை விரையம் செய்கின்றன. அலை பாயும் எண்ணங்களை கட்டுப்படுத்தி ஒரு முனையில் நிலை நிறுத்தும் பொழுது எண்ணங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு சக்தியை பெற்று விடுகின்றன. இதை நன்கு தெரிந்து கொண்டிருந்த நம் முன்னோர்களின் அதற்கான முயற்சிகளே சரியை, கிரியை, யோகம், ஞானம் எல்லாம். அப்படி சக்தி வாய்ந்த எண்ணங்களை எவ்வளவு தொலைவில் வேண்டுமானாலும் செலுத்தி,கற்பனைக்கும் எட்டாத சாதனைகளை, அற்புதங்களைச் செய்யலாம் என்பது உண்மை.உதாரணமாக ஒரு ஏரி ஒன்றில் நாம் ஒரு கல்லைப் போடும் பொழுது, அந்த இடத்திலிருந்து நீரில் அலைகள் கிளம்பி வட்டமாக நாலா திசைகளிலும் பரவி போய்க் கொண்டேயிருக்கும்.கொஞ்ச தூரம் போனதும் அவை மறைந்து விடும். கல்லை எரியும் விசையின் அளவுக்கு அலைகள் போகும். அலை பரவப் பரவ விசை செலவாகி பிறகு முழுவதுமாக விசை தீர்ந்து விடும் பொழுது அலை ஓய்ந்து விடும். ஆனால், ஒரு நீர் நிரம்பிய சிறிய தொட்டியில் ஒரு மிதக்கும் பொருளை போடும் பொழுது, அதிலிருந்து கிளம்பும் அலை பக்க வாட்டில் உள்ள தொட்டியின் சுவரில் மோதி, திரும்பி வந்து மிதக்கும் பொருளை கொஞ்சம் மேலே தூக்குவதைக் காணலாம். எந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதோ, அந்த இடத்திற்கே விசை செலவாகாமல் வலுவுடன் வந்து சேர்கிறது. இது போலவே மனதில் இருந்து கிளம்பும் எண்ணங்களைப் பரவ விடாமல் நாம் தடுத்து விட்டால் மீண்டும் மனதிடமேவந்து மனதிற்கு வலிவு சேர்க்கிறது. அதாவது எண்ணங்கள் எழுந்து பரவுவதினால் மனம் இழந்த சக்தியானது, மீண்டும் மனதிடமே வந்து விடுவதினால் மனம் வலிமை பெறுகிறது. இழந்த சக்தியை மீண்டும் பெற்ற மனதில் வலிமை பெருகுகிறது.மனம் வேறு எண்ணங்கள் வேறு அல்ல. எண்ணங்களின் மொத்தத் தொகுப்பே மனம். மனதிலிருந்துதான் எண்ண அலைகள் கிளம்புகின்றன. ஆனால், எண்ண அலைகளைப் பரவ விடாமல் தடுத்து, அந்த எண்ண அலைகளை ஒரு நிலைப்படுத்தித்தேக்கும் பொழுது, அவ்வெண்ண அலைகளின் வீச்சுக்குத் தக்கவாறு மனமானது வலிவு பெறும். ஒரு மனிதன் தன் ஆசைகளையும், மனதின் அசைவுகளையும் கட்டுப்படுத்தி,ஒருமுகப்படுத்தும் பொழுது மனமானதுபேராற்றல் கொண்ட ஒரு கருவியாக மாறி விடுகிறது. அந்நிலையில் அவன் நினைத்தால் வில்லிருந்து அம்பை செலுத்துவது போல எண்ணத்தை செலுத்தி, குறிப்பிட்ட இலக்கைத் தாக்கி தன் வசப்படுத்த முடியும். எண்ணங்களை ஒருமுகப்படுத்தும் பொழுது அவை அவ்வளவு சக்தி வாய்ந்தவைகளாக ஆகி விடுகின்றன. மின்னல் போன்று பாய்ந்து சொல்லும் ஆற்றலைப் பெற்று விடுகின்றன. எனவே மனிதனுக்குத் தன் மனதை ஆளத் தெரிய வேண்டும். தேவையற்ற விஷயங்களுக்காகஅலட்டிக் கொண்டு மனோ சக்தியை விரையம் செய்யக் கூடாது. மனதை ஒரு குறிக்கோளை நோக்கிச் செலுத்த வேண்டும். தன் இலக்கிலேயே மனதை ஒருமுகப்படுத்திநிலை நிறுத்த வேண்டும்.வேறு எண்ணங்கள் எதுவுமில்லாமல்,ஒரே சிந்தனையோடு செயல்படுபவர்கள்வெற்றியடைவது உறுதியாகும். பலவீனமான மனம் ஆன்மாவிலிருந்துவிலகிக் கிடக்கிறது. வலிமையான மனம் ஆன்மாவை நெருங்கி அதில் லயிக்கிறது.

No comments:

Post a Comment